இது உங்கள் இடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

மணப்பெண் கேட்ட கேள்வி!
சமீபத்தில், என் பெற்றோருடன் பெண் பார்க்க சென்றிருந்தேன். எனக்கு பெண்ணை பிடித்து போக, மற்ற விஷயங்களைப் பேசி விட்டு, திருப்தியுடன் ஊர் திரும்பினோம். மறுநாள் பெண் வீட்டாரிடம் இருந்து, திருமணத்தில் விருப்பமில்லை எனும் தகவல் வந்தது. திடீரென்று இப்படிச் சொல்லக் காரணம் என்னவென்று அறிந்து கொள்ள, பெண் வீட்டுக்கு சென்றேன்.
'வரதட்சணை விஷயத்தில், நீங்கள் மிகவும் கறாராக நடந்து கொண்டீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, உங்களிடம் சிறிதும் இல்லை. நீங்கள் கேட்பதற்கு எல்லாம், இப்போது, நாங்கள் சரி சொல்லி, பிறகு எங்களால் சொல்லியபடி செய்ய முடியாமல் போனால், அவமானமாகி விடும். எனவே, உங்களுக்கு பெண் தர இயலாது...' என்று கூறினர் பெண் வீட்டார்.
உடனே, நான், 'வரதட்சணை, சீர் எதுவும் செய்ய வேண்டாம்...' என்று கூறினேன். அதற்கு அந்த பெண், 'இதைத் தாங்கள் முன்பே சொல்லி இருக்கலாமே... பெற்றோர் எதிரில் பேசாமல் இருந்து விட்டு, இப்போது சொல்வதால் பயன் ஏதுமில்லை. மேலும், திருமணத்துக்கு முன் நாங்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லி விட்டு, பின், எங்களை பழிவாங்க நினைத்தால் என்ன செய்ய முடியும்? பெண்ணை பெற்றவர்கள், தங்கள் மகளுக்கு, அவர்களால் முடிந்த அளவுக்கு செய்யாமலா விட்டு விடுவர். இதைப் புரிந்து கொள்ளாமல் பேரம் பேசி விட்டீர்களே...' என்று கூறினார்.
அப்படியே ஒரு கணம், ஸ்தம்பித்து நின்று விட்டேன். எனவே, இளைஞர்களே... வாழ்க்கை துணை தேடும் விஷயத்தில், சற்று சுயமாக சிந்திப்பது நல்லது.
— கே.கார்த்திக், சென்னை.

அப்பாவிப் பெண்ணுக்கு கிடைக்க அவப்பெயர்!
என் உறவினர் வசிக்கும் தெருவில், பார்வை இழந்த வாலிபர் ஒருவர் இருக்கிறார். அவரின் எதிர் வீட்டில் திருமணம் ஆகாத பெண் ஒருவரும் இருக்கிறார். ஒருநாள், ரோட்டை கடக்க, அந்த வாலிபர் தடுமாறி கொண்டிருந்திருக்கிறார். எதேச்சையாக, இதைக் கண்ட அப்பெண், அவ்வாலிபர் சாலையை கடக்க, உதவி செய்திருக்கிறார். இதைப் பார்த்த அத்தெருவில் உள்ள இரு அம்மணிகள், 'அந்தப் பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அதனால் தான், இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை...' என்று சத்தமாக பேசியதோடு அல்லாமல், தெரு முழுவதும், இவ்வதந்தியை பரப்பி விட்டனர்.
சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல், தெருவே அப்பெண்ணை பற்றி, இப்போது, 'கிசுகிசு'க்கிறது. இப்போது, அப்பெண் எந்த நேரமும் அழுது கொண்டே இருக்கிறாள்.
பார்வை இழந்த ஒருவருக்கு உதவ முடியாவிட்டாலும், உதவும் மனப்பான்மை உள்ளவர்களை, அவதூறாக பேசாமல் இருக்கலாமே!
— ஆ.செல்வக்குமார், உடுமலைப்பேட்டை.

அமிதாப்பச்சன் தான் கிடைத்தார்!
தனியார் அலுவலகம் ஒன்றில், பணிபுரியும் பெண் நான். பணி முடிந்து, பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ்சில், கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் சென்று கொண்டிருக்கையில், திடீரென்று, 'ஏம்மா, என்னைய இடிச்சுக்கிட்டே வர்றே...' என்று ஒரு ஆண் குரல் கேட்கவே, ஆச்சரியப்பட்டு, குரல் வந்த திசையை நோக்கி, பார்வையை திருப்பினேன். கூட்ட நெரிசலில் ஒரு ஆண், தன் அருகில் நின்றிருந்த பெண்ணை திட்டிக் கொண்டிருந்தார். தினமும், பெண்கள் தான், ஆண்களை திட்டி பார்த்திருக்கிறேன். இது வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், அந்த நபர், 'என்னால இதுக்கு மேல உன் இடியை, தாங்க முடியாதுப்பா...' என சொல்லி, அடுத்து வந்த பஸ் நிறுத்தத்தில், இறங்கி சென்று விட்டார். அனைவரின் கவனமும், அந்த பெண் மீது, திரும்ப, சற்றே கலவரமடைந்திருந்த அந்த பெண், 'பெரிய அமிதாப் பச்சன்னு நினைப்பு...' என்றார்.
உடனே பின்னால் இருந்து ஒரு குரல், 'ஏம்மா உனக்கு தமிழ் நடிகர்களே கெடைக்கலயா... இந்திக்கு போயிட்ட!' என்றதும், பஸ்சே, சிரிப்பால் குலுங்கியது. அனைவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது.
சுபா தியாகராஜன், திருவொற்றியூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Malaisamy - paarai patti,யூ.எஸ்.ஏ
24-ஜன-201400:13:41 IST Report Abuse
R Malaisamy கூறு கேட்ட உலகம் என்று தான் தோன்றுகிறது. பெண்ணை பெற்றவர்கள் எல்லாவற்றையும் சமமாக பாவித்தால் ஏன் வரதட்சணை கேட்கிறார்கள்? அவர்கள் கேட்டு கொடுப்பது பெண்ணை பெற்றவனுக்கு அவமானம். கேட்டும் கொடுக்காமல் இருப்பது சுயநலம் மற்றும் பெண்ணை அவமதிப்பது. எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் ஒரு மகனும் இருக்கிறான். பெண்ணுக்கு மனம் முடித்து வெறுங்கையோடு அனுப்பினால் அதை நான் அவமானமாகவும் ஏமாற்றுவதாகவும் நினைக்கிறன். பையனுக்கு அனைத்தும் பெண்ணுக்கு எதுவுமே இல்லையா? அது சுய நலம் இல்லையா? என் பெண் மனம் முடித்த பின்பும் தலை நிமிர்ந்து அவள் கணவனுடன் சமமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறன். அவள் பெயரிலேயே நான் கொடுக்கும் பணமும் சொத்தும் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
23-ஜன-201402:58:23 IST Report Abuse
தமிழ்நிலா இது உங்கள் இடம் என்பதை மாற்றி, ஒரு பக்க சிறுகதைகள் என்று போட்டுவிடலாம். ஒரு ஆன் ஏன் மேல் இடிக்காதே என்று ஒரு பெண்ணிடம் சொன்னாராம்...ஒருவர் வரதட்சினை கேட்டாராம். பெண் வீட்டுக்கு சென்று ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்று காரணம் கேட்டாராம்... வரதட்சினை கேட்டவன் இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறான். உதவி செய்த பெண்ணை அந்த தெருவில் அம்மணிகள் அவதூறு பேசுகிறார்களாம், செல்வகுமார் தொலைக்காட்சி சீரியல் கதை எழுதலாம் நல்ல எதிர்காலம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
22-ஜன-201417:00:18 IST Report Abuse
LAX 1) கார்த்திக்கின் கடிதத்தைப் படித்துவிட்டு சுயமாக சிந்திக்கிறேன் என்று கோணலாக சிந்தித்துவிடாதீர்கள்.. அதாவது, பெண் பார்க்கும் படலத்தில் பெண் ஓகே ஆனவுடன், பையனைப் பெற்றவர்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை அடுக்கிக்கொண்டே செல்லும்போது, உடனடியாக கேட் போட்டுவிட்டு, வீட்டுக்குபோய் பெற்றோர்களை சமாதானப் படுத்திவிட்டு, திருமணத்துக்கு பிறகு பெற்றோர் மற்றும் கூடப் பிறந்தவர்களுடன் சேர்ந்து வட்டியும் முதலுமாக பெண்ணிடமும், பெண் வீட்டாரிடமும் வசூலிப்பில் ஈடுபட்டு உங்கள் துன்புறுத்தல் கணக்கை ஆரம்பித்துவிடாதீர்கள்.. சுயமாக சிந்தியுங்கள் என்றால், சுயமாக வாழுங்கள் பெண் வீட்டாரிடம் எதுவும் எதிர்பார்த்து பெண்ணை விலை பேசாதீர்கள் என்று அர்த்தம் கொள்ளுங்கள்..// 2) மாற்றுத்திரனாளிக்கு உதவிய அப்பெண் ஏன் அழுகாச்சி காட்ட வேண்டும்? உண்மையிலேயே.. மடியில் கனமில்லாதவளாக இருந்தால், பார்வை கோளாறு தான் உதவி செய்த நபருக்கில்லை, தான் செய்த நற்செயலை, பொடி வைத்துப்பேசும் மற்றவர்களின் பார்வைகளில்தான் கோளாறு என்று நினைத்து அந்த வெட்டி வீணர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட்டு தன் வழியில் சுதந்திரமாக செல்லவேண்டியதுதானே..? // 3) இதுபோன்ற பெண்கள் இடிப்பது 'அது'க்காக' இருக்காது ஒன்று பிக்பாக்கெட்டாக இருக்க வேண்டும், அல்லது தங்களால் இடிக்கப்படுபவன் 'ச்சபலிஸ்டாக' இருந்தால், 'தள்ளிக்கொண்டு' போய், இருப்பதையெல்லாம் பிடுங்கிக்கொண்டு துறத்திவிடும், வழிப்பறிகளாக இருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X