நேதாஜி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

மலேசிய தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய, '200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்' என்ற நூலில், நேதாஜி பற்றி எழுதியிருந்த கட்டுரையின் தொகுப்பு இது:
ஜன.,23, 1897ல், மேற்கு வங்காள மாநிலத்தில், பிறந்தவர் நேதாஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ். கோல்கட்டாவில் கல்லூரி படிப்பை முடித்து, இவர், மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து, ஐ.சி.எஸ்., தேர்வில், வெற்றி பெற்றார். மாநில கலெக்டர் பதவிக்கு சமமான பட்டப்படிப்பு அது.
இந்திய விடுதலைக்காக, அப்பட்டத்தையே பிரிட்டிஷ் அரசிடம் திரும்ப கொடுத்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். குஜராத்திலுள்ள ஹாரிபுரா என்ற ஊரில், 1938ல் நடந்த, அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜியின் ஆசியோடு, காங்கிரஸ் தலைவராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 41. பிரிட்டிஷாரிடமிருந்து, இந்தியாவை மீட்க, வன்முறையை நாடவும் தயங்கக் கூடாது என்கிற நேதாஜியின் கருத்துக்கு, காந்திஜி போன்றோர், உடன்படவில்லை.
இரண்டாவது உலகப் போர் துவங்கிய நேரம். நேதாஜியின் இள ரத்தம் சூடேறியது. அமைதியான வழியில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தர முடியாது என உணர்ந்தார். காங்கிரஸ் மேல்மட்டத் தொடர்புகளை அறுத்துக் கொண்டு, ஜெர்மனிக்கு சென்று, ஹிட்லரை சந்தித்தார்.
ஜெர்மனி தலைநகரான பெர்லினில், லட்சியக் கனவுகளோடு உலவிக் கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோசுக்கு, ஜப்பானிய அரசின் அழைப்பு, உத்வேகத்தை கொடுத்தது. ஹிட்லர் உதவியுடன், ஜப்பானுக்கு சென்றார். ஜப்பானிய பிரதமர் தேஜோவையும், மற்ற ராணுவ உயர் அதிகாரிகளையும், சந்தித்தார். பிறகு, அண்டை நாடுகளான பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் பயணம் செய்து, இந்திய சுதந்திரத்திற்காக, அவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடினார். ஜூலை26 1943ல் பாங் காங்குக்கும், ஜூலை 30ம் தேதி பர்மாவிற்கும் சென்று அங்கு, இந்திய தேசிய ராணுவ படையை ஏற்படுத்தினார். ராணுவப் படையில் புதிதாக சேர்ந்தவர்களில், 95 சதவிதத்தினர் தமிழர்கள்.
அக்., 21, 1943ல், மாலை 4.15க்கு சிங்கப்பூர், கத்தே மண்டபத்தில், சுதந்திர இந்திய தற்காலிக அரசு அமைத்திருப்பது பற்றி, பிரகடனப்படுத்தினார் நேதாஜி. இந்தியாவின் காங்கிரஸ் மகா சபையின் கொடியாக உள்ள, மூவர்ண கொடியையே, இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக, பறக்க விட்டார் நேதாஜி.
சிங்கப்பூரில் இயங்கி வந்த தேசிய ராணுவ தலைமையகத்தை, பர்மா தலைநகர் ரங்கூனுக்கு ஜனவரி 7, 1944ல் மாற்றினார். இப்படை, மணிப்பூர் மாநில தலைநகரான இம்பால் வழியாக, இந்தியாவினுள் நுழைய, திட்டம் வகுக்கப்பட்டது.
பிப்.,4, 1944ல், 'டில்லி சலோ...' கோஷத்தை முழங்கிக் கொண்டே, இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், பிரிட்டிஷ் ராணுவத்தினரோடு, போர் புரிந்தவாறு முன்னேறியது. ஆனால், பிரிட்டிஷாரின் படையை எதிர் கொள்ள முடியாமல், திரும்பியது.
ஆகஸ்ட் 6, 1945ல் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவிலும், தொடர்ந்து ஆகஸ்ட்9ல் நாகசாகி நகரிலும், அமெரிக்கா, சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட்டு, அந்நகரங்களை அழித்தவுடன், ஆகஸ்ட்15ல் யுத்தத்தை நிறுத்தி, சரணடைய முன் வந்தார் ஜப்பானிய சக்ரவர்த்தி. அச்சமயம், நேதாஜி சிங்கப்பூரில் இருந்தார். கனவுகள் கை கூடாத நிலையில், ஆகஸ்ட் 16, 1945ல் மிகுந்த துயரத்தோடு, சிங்கப்பூரை விட்டு, வெளியேற முடிவெடுத்தார் நேதாஜி.
சிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என உணர்ந்த நேதாஜி, தன் நண்பர்களுடன், விமானத்தில், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் பயணமானார். ஆகஸ்ட் 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு, தன் சகாக்களுடன் பாங்காக்கிலிருந்து, இந்தோ சீனா தலைநகரான, செய்கோனை நோக்கிப் புறப்பட்டார். செய்கோன் விமான நிலையத்தில் இருந்து நேராக, நண்பர் நாராயணதாஸ் இல்லம் சென்றார். அவரது சகாக்களும் உடன் சென்றிருந்தனர். அங்கு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.
செய்கோனிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருப்பதாக, தொலைபேசி தகவல் கிடைத்தது. தன்னுடைய மெய்காப்பாளர் கர்னல் ஹபிபுர் ரஹ்மானை மட்டும் அழைத்துக் கொண்டு, தன் சகாக்களிடமும், நண்பர்களிடமும் பிரியா விடை பெற்று, மாலை, 5:15 மணிக்கு விமானத்தில் புறப்பட்டார்.
இந்தோசீனாவிலுள்ள, குரையின் என்ற ஊரில் விமானம் இறங்கியது. அங்கு, அன்றிரவு தங்கினர். மறுநாள் காலை, ஆகஸ்ட்18 விமானம், டோக்கியோவை நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல், 2:00 மணிக்கு, பார்மோசா தீவிலுள்ள ததஹோ என்ற ஊரில் இறங்கியது. சரியாக 35 நிமிடம் கழித்து, மீண்டும் பறக்கத் துவங்கியது. 300 அடி உயரம் கூட பறந்திருக்காது. நேதாஜி பயணம் செய்த அந்த விமானத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, சற்றும் எதிர்பாராத வகையில், கீழே விழுந்ததில், விமானம் தீப்பிடித்துக் கொண்டது.
நேதாஜியும், மெய்க்காப்பாளர் கர்னல் ஹபிபுர் ரஹ்மானும், தீக்காயங்களோடு, ராணுவ மருத்துவமனைக்கு, உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். ஆக.,18ம் தேதி, 1945 இரவு 11:00 மணிக்கு, நேதாஜியின் உயிர் பிரிந்தது.

* நேதாஜி, இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின், தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், படை திரட்டுவதிலும், ராணுவத்திற்கு தேவைப்படும் பொருட்களை சேகரிப்பதிலும், இயக்கத்திற்கு வேண்டிய பணம் திரட்டுவதிலும் ஈடுபட்டார். நேதாஜியின் வசீகர சக்தி, எராளமான பணத்தை திரட்டித் தந்தது. தனி நபர், பெரும் தொகையை திரட்டிக் காட்ட முடியும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் நேதாஜி. ஐ.என்.ஏ., இயக்கம், நேதாஜியின் மறைவுக்கு பின் செயலிழந்தது. நேதாஜி திரட்டியிருந்த நிதியில் ஒரு பகுதி, ஜப்பானிய அரசிடம், நீண்ட காலம் வரை இருந்தது. 1994ல், 140 கோடி ரூபாயை இந்திய அரசுக்கு, ஜப்பானிய அரசு கொடுத்து விட்டதாக, மார்ச் 8, 1994-ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அந்தத் தொகை, நற்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* நேதாஜி தலைமை தாங்கிய இந்திய தேசிய ராணுவத்தில், 'முதல் மாதர் பிரிவும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாதர் பிரிவுக்கு, 'ஜான்சி ராணி ரெஜிமென்ட்' என்று, பெயரிடப்பட்டிருந்தது. ஜான்சிராணி படைக்கு தளபதியாக, டாக்டர் லட்சுமி பொறுப்பேற்றிருந்தார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Kumar - Chennai,இந்தியா
24-ஜன-201413:46:08 IST Report Abuse
Ashok Kumar சமாதானத்தால் மட்டும் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்வது தவறு, வீரத்தால் தொடங்கியதால் தான் சுதந்திரம் பெற்றோம் என்று சொல்வது நன்று. ஜெயிஹின்ட்
Rate this:
Share this comment
Cancel
k.manavalagan - trichy,இந்தியா
23-ஜன-201423:11:45 IST Report Abuse
k.manavalagan இந்தியாவின் உண்மையான வீரனே நீங்கள் என்றும் எங்கள் நெஞ்சில் வாழ்வீர்கள் ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
22-ஜன-201413:42:12 IST Report Abuse
A. Sivakumar. நேதாஜியின் மறைவு குறித்த முதல் விசாரணைக் கமிஷன் (ஷா நவாஸ் கமிட்டி, 1956) இதில் உறுப்பினராக இருந்த நேதாஜியின் அண்ணன் திரு.சுரேஷ் சந்திர போஸ், தன்னிடம் முக்கியமான ஆதாரங்கள் காட்டப்படாமல் மறைக்கப்பட்டன என்று புகார் தெரிவித்தபோதே, அந்த கமிட்டியின் முடிவின் நம்பகத்தன்மை காலியாகிவிட்டது. அதற்குப்பிறகு அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் (1970) என்பது ”ஒரு நபர் கமிஷன்”, இதில் நேதாஜி விமான விபத்தில் காலமானார் என்று சொன்னது என்றாலும், நேதாஜி குறித்த முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன அல்லது மாயமாகிவிட்டன என்று குறிப்பிட்டிருக்கிறது, இதிலிருந்தே தெரிகிறது நேதாஜியின் “மறைவு” ஒரு சிலருக்கு அரசியல் ரீதியாகப் பலனளித்திருக்கிறது என்று. பிறகு, 1999ல் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷன், 1945ஆம் ஆண்டு நடந்தாகச் சொல்லப்பட்ட விமான விபத்தில் நேதாஜி மரணமடையவில்லை, ஜப்பானில் டோக்கியோவின் ரெங்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் அஸ்தி ”இச்சிரோ ஒகுரா” என்று அழைக்கப்பட்ட ஒரு தைவான் நாட்டு இராணுவ அதிகாரியினுடையதுதானே தவிர, அது நேதாஜியின் அஸ்தி அல்ல என்று சொல்லியிருக்கிறது. 1945ல் அந்த விமான விபத்தே நடக்கவில்லை என்று அமெரிக்கா சொன்னதும், 1946ல் ரஷ்யாவில் நேதாஜி காணப்பட்டதான தகவல்களும், நம் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜியை நேரில் கண்டதாகச் சொன்ன தகவல்களும் நிறையவே இருக்கின்றன. நேதாஜியின் மறைவு குறித்த மர்மங்களுக்கு இந்தக் கேடு கெட்ட காங்கிரஸ் அரசு ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X