அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். இ-மெயில் பெருகி விட்ட இந்தக் காலத்தில், பேப்பரில் எழுதி, அஞ்சல் உறையிலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி இருக்கிறாரே என, ஆச்சரியப்பட்டு, கடிதத்தைப் படித்தேன்...
டியர் அந்துமணி,
நான் பல ஆண்டுகளாக உங்கள் எழுத்துகளின் தீவிர ரசிகை. இப்போது, அமெரிக்கா வந்தும், 'நெட்' மூலமாக, தொடர்ந்து, பா.கே.ப.,வைப் படித்து வருகிறேன். என்னை உங்களுக்குத் தெரியாவிட்டாலும், உங்களை, என் உற்ற தோழனாகவே மதித்து, இக்கடிதத்தை எழுதுகிறேன்.
நான் தமிழ்நாட்டில், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவர் ஒருவர் என்னை காதலித்தார். முதலில் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு, நாளாக நாளாக, எப்படியோ என்னை அறியாமலேயே, அவர் காதலை ஏற்றுக் கொண்டேன். ஆனால், படிப்பில், என் கவனத்தை எப்போதுமே சிதற விட்டதில்லை. அதனால், பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்து, பாராட்டும், பதக்கமும் பெற்றேன்.
மேலும், அமெரிக்காவில் வேலை கிடைத்து, இங்கே வந்தேன். வருவதற்கு முன், எனக்கும், என் காதலருக்கும் திருமணம் நடந்தது. என்னுடனேயே கணவரையும் அமெரிக்கா அழைத்து வந்தேன். திருமணத்திற்கு முன் வரை என்னை, 'கண்ணே, மணியே' என்று கொஞ்சிக் கொண்டிருந்த என் கணவர், இங்கே வந்ததும், வேறு மாதிரி நடக்க ஆரம்பித்தார். 'வேலையில்லாமல் வீட்டில் இருப்பதால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம்; வேலை கிடைத்ததும், சரியாகி விடும்...' என்று நினைத்து, அவருக்கு நானே வேலை தேடினேன்.
வேலையும் கிடைத்தது; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வேலையே எனக்கு பிரச்னையாகவும் அமைந்தது. வேலை கிடைக்கும் வரை, என்னை மனதளவில் துன்புறுத்திய என் கணவர், இப்போது, வேலை கிடைத்ததும் உடல் அளவிலும் துன்புறுத்த ஆரம்பித்து விட்டார். தினமும் அடி, உதை தான்.
காரணம்... சந்தேகம். 'எவன் மூலமாக, எனக்கு வேலை வாங்கினாய்? அதற்காக, நீ என்ன கொடுத்தாய்?' இந்தக் கேள்வியை, அவர் என்னிடம் கேட்காத நாளே கிடையாது.
இது மட்டுமல்ல, அலுவலகம் முடிந்த அடுத்த கணம், வீட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், 'எவனோடு ஊர் சுற்றி விட்டு வருகிறாய்?' என்ற கேள்வி வரும். இன்னும் அசிங்கமாகக் கேட்பார்; எனக்குத்தான் எழுதுவதற்குக் கூச்சமாக உள்ளது.
திருமணம் ஆகிவிட்டால், காதல் காணாமல் போய் விடுமா... திருமணத்திற்கு முன்னும், பின்னும் நான் ஒரே மாதிரி தான் இருக்கிறேன்; ஆனால், அவரிடம் மட்டும் ஏன் இந்த மாற்றம்?
எத்தனையோ முறை, அவரிடம் எடுத்துச் சொல்ல முயற்சி செய்தேன்; அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை; எதற்கெடுத்தாலும் அடி, உதை தான்.
இவ்வளவு பிரச்னைக்கும் இடையில், என் துயரத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றால், என் பெற்றோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுடன் தொலைபேசியில் பேசலாமே என்று நீங்கள் கேட்கலாம்; அது முடியாது! காரணம், நான் சம்பளம் வாங்கியதும், அதை முழுமையாக அவரிடம் கொடுத்து விட வேண்டும்.
சம்பளத்தில் ஒரு டாலர் குறைந்தாலும், 'என்ன செலவு?' என்று கேட்பார். குடும்ப நிர்வாகம் அனைத்தும் அவர் கையில். மேலும், தமிழ்நாட்டில் தனிமையிலுள்ள பெற்றோரிடம், என் வேதனையைக் கூறி, அவர்களை துன்பப்படுத்த என் மனம் இடம் தரவில்லை.
இப்போது நான் உங்களிடம் யோசனை கேட்கிறேன்... என் கணவரை விவாகரத்து செய்து விட்டு, புதியதொரு வாழ்வைத் துவங்கலாமா?
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். என் கணவருக்கு அன்பு செலுத்த தெரியாதது போலவே, செக்ஸ் ரீதியாகவும், 'வீக்!' திருமணம் ஆகியும், நான் கன்னியாகவே வாழ்ந்து வருகிறேன்.
நீண்ட கடிதம் என்பதால், உங்களுக்கு இ-மெயிலில் இதை அனுப்பாமல், ரெகுலர் தபாலில், வானஞ்சலில் அனுப்பியுள்ளேன். ஆனால், இதற்கு தங்களின் பதிலை, தபாலில் அனுப்பி விட வேண்டாம் . எனக்கு வரும் தபால்களை பிரித்துப் படிக்கும் பழக்கம் என் கணவருக்கு உள்ளது. எனவே, பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் அல்லது பா.கே.ப.,விலேயே எழுதினால், நான் புரிந்து கொள்வேன்.
- இப்படிப்பட்ட கடிதங்கள், எனக்கு, சமீப காலத்தில், அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளன; பெரும்பாலும், வெளி நாட்டில் வாழும் பெண்களிடமிருந்து சொல்லி வைத்தது போல், எல்லாக் கடிதங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. அவை:
1. கணவர் அடிக்கிறார்.
2. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பணம் இல்லை.
3. கடிதங்களைப் பிரித்துப் படிக்கிறார்.
அமெரிக்காவில், குழந்தையை பெற்றோர் அடித்து, குழந்தை புகார் செய்தால், பெற்றோருக்கு, சிறை; அதே போல் கணவர் அடிக்கிறார் என்று மனைவி புகார் செய்தால், அடுத்த நிமிடம் போலீஸ் வந்து விடும். அப்படிப்பட்ட நாட்டில் தான், நம் தமிழ்ப் பெண்கள் இவ்வாறு அல்லல்படுகின்றனர்.
'தாலி' சென்டிமென்ட், நம் பெண்களை என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்... அதுவும் அமெரிக்காவில், கை நிறைய சம்பாதித்து சுயமாக, தம் காலில் நிற்கும் தகுதி படைத்த பெண்களிடமும்!
*****************

சினிமா நாடக நடிகர் டெல்லி கணேஷ், மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். லென்ஸ் மாமாவும், அவரும் மாலை வேளைகளில் சந்தித்துக் கொண்டனர் என்றால், ஒரே, 'உற்சாகம்' தான்!
அன்றும் அப்படித் தான்...
'ஒயிட் அண்ட் மேக்கே' உற்சாகத்தை தந்து கொண்டிருக்க, ஒரு சம்பவத்தைச் சொன்னார் கணேஷ்...
வெளியூர் ஒன்றில், நாடகம் நடத்திட்டு, நாடகக் கொட்டகையில் இருந்து கிளம்பிக்கிட்டு இருந்தேம்பா... வந்தான், ஒருத்தன்... 'சார்... நீங்க மனோகர் தானே... ஒங்க நாடகம்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய நாடகங்கள் பார்த்து இருக்கேன் சார்...' என்றான்.
எப்படி இருக்கும் எனக்கு... 'ஆமாம்பா... நான் ஆர்.எஸ்.மனோகரே தான்... தலையில் கிரீடம் வச்சு, ராஜா டிரஸ் போட்டு நடிக்கிற அதே மனோகர் தான்... ஆனா, இப்ப என் கையில வாளும் இல்லே, துப்பாக்கியும் இல்லே...'ன்னேன். ஓடியே போயிட்டான் என்றார்.
'கொல்' என சிரித்த நான், 'ஈகோ' பங்சர் ஆனால், மனிதர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என, நினைத்து, வியந்து கொண்டேன்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
23-ஜன-201412:10:31 IST Report Abuse
praven.dr@gmail.com The mental part of abuse is insidious. If your husband is abusive, you don't have to have his permission to get divorced. What you have to do is learn to separate his put-downs and control from reality, be very careful of your own physical and mental safety, and be prepared to give up some security. OR Keeping a marriage fresh and exciting can be challenging amidst the stress of daily life. Thankfully, there are small deeds that you can perform to keep your husband happy and let him know that you love him more and more each day. Share in the responsibilities of marriage and try different approaches to leading a happy, spontaneous life that gratifies you and your spouse both emotionally and sexually. Try some of the ideas below to tug on your husband's heart strings and make your marriage thrive…Spice up your sex life. One of the main aspects of marriage where the excitement can quickly fade is the sexual aspect. You'll both have to work hard to keep your sex life interesting, but thankfully there are several things that you can do….Go on a picnic in the spring and summer. A romantic picnic in a meadow or on a beach is a great way to get outdoors and sp some time alone….Go ice skating in winter. Hold hands with your hubby and glide on the ice…Do something adventurous like an extreme sport. You could go rock climbing, snowboarding, surfing, etc. Sometimes nothing is better than a spontaneous text or voice message from your lover. Call just to say "I love you" or s your hubby a flirty message that contains something for him.. Get some new sexy outfits…Spice up a plain outfit with a sexy blouse or dress.If you're constantly wallowing around the house in sweatpants, it might be time to take a trip to the mall for some new clothes. There's nothing wrong with being comfor in front of your hubby, Have an attractive attitude. Being attractive isn't all about looking sexy, it's about exuding a compassionate attitude as well. Be sure to retain a kind disposition toward your husband and be considerate of his feelings.. Frame a picture of the two of you. A picture is truly worth a thousand words, and framing a picture of you and your husband is a great way to show him how much you care…
Rate this:
babusundar - riyadh,சவுதி அரேபியா
23-ஜன-201417:05:13 IST Report Abuse
babusundarwonderful information's/advice given by Mr. Praveen I think except the first one about divorce. A perfect personal counseling with a perfect person can change the entire scenario of the mentality of the husband in this case. Guys instead of advising about divorce to her why don't you all write back to her some ideas how to become closer to each other. I understand the change in mentality of the guy will take some time but she can try. Also what is the guarantee that she will get a perfect person of her expectation even after divorce . They loved each other very much and they know very well. A small gap is becos of the insecure feeling the guy has which s a very big gap that could be easily closed by proper counseling. I would request all to write some thing to unite the couples not to separate them....
Rate this:
Raman - Chennai,இந்தியா
25-ஜன-201403:11:54 IST Report Abuse
RamanI have worked with domestic abuse victims. The abused mostly have low self-esteem and lack confidence. They are also depent not only financially but emotionally. From what you read from the letter above it shows that the guy seems to be one who believes that abusing is a man's right. The girl further striving to exhibit herself as a sex-kitten, spicing up sex thus attempting to "please" him will merely enhance his "I am powerful than you are" mindset. The actions of the guy do not show indifference but more of exercising/flexing his power. He feels entitled to have this lady as a slave. But for some god-forsaken moral values, making her to sacrifice her future seems wrong, utterly wrong. If there is a clear case for separation this is one of them....
Rate this:
Radhika - Bangalore,இந்தியா
25-ஜன-201415:08:48 IST Report Abuse
RadhikaWell Said Raman. We are all individual human beings we have our own feelings emotions expectations. If the guy really understands his wife's feelings he has to go for counselling and he will try to fix the problem. She is very young and she can easily get married again. But she should be very careful in choosing the second one. Remember the Tamil proverb - "ெரியாத பேயை விட ெரிஞ்ச ூதம் ேல்" . I saw one of my fri who got married the right person in second marriage and another fri who divorced her husband and still not able to find and marry the right person as she has a Kid. So She has to be careful in taking a decision to divorce and marrying another one... Another fri of mine lives in the same situation but her's is better than this girls life. Her husband wont abuse her and wont control her for money and all. So she feels this is better and also she has learned to find the ways to fulfill her other needs. If this girl gets a chance to watch this movie - " Far From the Heaven " or another tamil movie - Satham Podathe - she may feel better. You have to live your life.. Anushka...
Rate this:
Cancel
rajasekar - abbasiya,குவைத்
23-ஜன-201410:34:37 IST Report Abuse
rajasekar பணம் சம்பாதிக்கும் ஆசையினால் ஓடிக்கொண்டே இருக்கும் இளைய தலைமுறையினர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையினை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வேளைப்பளுதான் மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் முக்கிய அம்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது 30 முதல் 40 வயதிற்குட்பட்ட தம்பதியர்தான் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். திருமணமான புதிதில் சுவாரஸ்யமாக தொடங்கும் தாம்பத்ய வாழ்க்கை நாளடைவில் போர் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?’ என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள்.. தெரியவந்தன. தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன். செக்ஸ் ஆர்வம் 30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள். பாதிக்கும் வேளைப்பளு கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்று கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர். மாதம் ஒருமுறை தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் பெண்கள் கூறியுள்ளனர். பெண்களுக்கு அதிகம் 30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார் இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா. ஆண்களுக்கு குறைவு அதற்கு நேர் எதிராக ஆண்களின் செக்ஸ் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கின்றனர் ஆய்வாளர்கள். பணமே பிரதானம் இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் தம்பதியினர் கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஆர்வம் குறைகிறது பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்ஸில் ஆர்வம் குறைந்து விடுகிறது. குடும்ப பொறுப்பு 30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. செக்ஸ் ஹார்மோன்கள் 40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது. வளர்ந்த குழந்தைகள் இளம் வயதில் ஓடி ஆடி திரிந்த பெண்கள் 40 வயதில் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். ஆனால் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை’ என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர். உடல் நல பாதிப்பு இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். எனினும் செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் 40 வயதில் ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. மெனோபாஸ் பருவம் 50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம். இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
Rate this:
Cancel
Krishna Krishna - Tirunelveli,கனடா
23-ஜன-201407:28:09 IST Report Abuse
Krishna Krishna Definitely you can take action and bring him India Divya / E-மெயில் is strong broof / search and make both immediately. If u complaint at Embassy / the contact number people will guide you . I bless and pray you .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X