அன்புடன் அந்தரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

அன்பு சகோதரிக்கு,
எனக்கு திருமணம் ஆகி, 17 ஆண்டுகள், ஆகிறது. எங்களுடையது காதல் திருமணம். இரு தரப்பையும் எதிர்த்து, திருமணம் முடித்தோம். 15 ஆண்டுகள், எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது.
நான் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவள். கணவரே உலகம் என்று வாழ்ந்தேன். அவர் மேல் வெறித்தனமான அன்பு வைத்திருந்தேன். இந்த சமயத்தில், என் கணவருடைய திடீர் நண்பன் ஒருவன், அடிக்கடி வீட்டிற்கு வருவான். என் கணவரை, அவன் வீட்டிற்கு கூட்டிக் செல்வான். அவன் மேல் ஆரம்பத்தில், எனக்கு சந்தேகம் எழவில்லை. அவனுடைய மனைவி, என் கணவருடன் வேலை பார்க்கிறாள். அவளுக்கும், என் கணவருக்கும், இரண்டு வருடமாக தொடர்பு இருந்திருக்கிறது. இதை, அவளுடைய கணவன் தெரிந்து, என்னுடைய கணவரை, அவனே கூப்பிட்டுப் போய் மனைவியிடம் விட்டு, என் கணவரிடம், ஏகப்பட்ட பணத்தை பறித்துக் கொண்டான்.
சமீபத்தில் தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. என் கணவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். உண்மை என்று ஒத்துக் கொண்டவர், 'அவளுடன் நெருங்கி பழகி விட்டேன். என்னால், அவளை பிரிய முடியாது. அவள் தற்கொலை பண்ணிக் கொள்வாள். அதனால், அவளை நான் ஏற்றுக் கொள்வேன்...' என்று சொன்னார்.
என்னால், இதை ஜீரணிக்க முடியவில்லை. மனம் நொறுங்கிப் போனேன். என் கணவரிடம், 'பிள்ளைகளின் நலன் கருதி, நீங்கள் செய்ததையெல்லாம் மறந்து விடுகிறேன். அவளை தூக்கி எறிந்து விட்டு, என்னுடன் வாழுங்கள். அவள் வேண்டுமானால், அவளை எங்காவது கூப்பிட்டுப் போய் வாழுங்கள்...' என்றேன்.
அவளையும் நேரில் சந்தித்து, 'திருமணம் முடித்த பிறகு பெண்கள் கோவில் கோபுர கலசமாகத் திகழ வேண்டும். தெருப்புழுதியாக மாறினால், கண்டவனும், காலில் மிதித்து விட்டுப் போய் விடுவான். ஒரு பெண்ணே பெண்ணுக்குத் துரோகம் பண்ணலாமா... உன் கணவன், இன்னொருவன் மனைவியோடு தொடர்பு வைத்திருந்தால், உனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்... என் கணவன்தான் வேண்டுமென்றால், உன் கணவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து விட்டு, என் கணவனோடு எங்காவது போய் வாழு. இங்கிருந்து எனக்கும், என் பிள்ளைகளுக்கும் கெட்ட பெயரை உண்டாக்காதே...' என்று சொல்லி விட்டேன்.
என் கணவர் என்னையும் விட முடியாமல், அவளையும் விட முடியாமல் தவிக்கிறார்.
இரட்டை வாழ்க்கை வாழுகிற, என் கணவரோடு வாழ, என் மனம் இடம் கொடுக்கவில்லை. என் கணவர் மிகவும் நல்லவர்; நல்ல வேலையில் இருக்கிறார். எனக்கு இரு பெண் குழந்தைகள்; இரண்டு பேரும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கின்றனர். நானும் நல்ல வேலையில் இருக்கிறேன். என் கணவருடைய இரட்டை வாழ்க்கையை, என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்து, பிள்ளைகளை படிக்க வைத்து, நல்ல உத்தியோகத்தில் அமர்த்தி, வாழ்க்கையை ஓட்டி விடலாமா?
கணவனைப் பிரிந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல், பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த சமுதாயத்தில் ஒரு கெட்ட பெயரும் இல்லாமல் வாழ முடியுமா? எனக்கு வயது 36. என் பிள்ளைகளும், 15, 12 வயதுள்ளவர்கள். இவர்களை நினைத்து, என் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்.
எனக்கு, என் உறவினர்களோ, என் கணவர் வழி உறவினர்களோ கிடையாது. இந்த சூழ்நிலையில் தனிமரமாக நிற்கும் எனக்கு, உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். எந்த சூழ்நிலையிலும் சலனத்திற்கு ஆளாகாமல் மனக்கட்டுப்பாடோடு, என்னால் வாழ முடியும்.
எச்சிலையில் சாப்பிட நினைக்கும் ஆண்களுக்கும், பெண்ணே பெண்ணுக்குத் துரோகம் நினைக்கும் பெண்களுக்கும், கணவனே தெய்வம் என்று வாழ்ந்து ஏமாறுகிற பெண்களுக்கும், உங்களுடைய பதில், ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் சகோதரி.


பிரியமான சகோதரிக்கு,
உன் பிரச்னைகளை அழகாக கோர்வையாக எழுதி உள்ளீர்கள். காதல் திருமணம் ஆகி, 15 ஆண்டுகள், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்று, வாழ்க்கையை வெற்றிகரமாகவும் வாழ்ந்திருக்கிறீர்கள். அப்படி இருக்க, உன்னவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏன் திருமணம் ஆன வேறொரு பெண்ணை நாடுகிறார் என்று, * சற்றே தீவிரமாக, மனம் திறந்து, சிந்திக்க வேண்டும்.
* என்ன கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்கும்?
* அவருக்கு பிடிக்காதவைகளை நீ செய்தாயா?
* என்ன எதிர்பார்க்கிறார் உன் கணவர்? அந்த எதிர்பார்ப்பை உன்னால் நிறைவேற்ற முடியுமா?
* வெறித்தனமான அன்பு செலுத்துகிறேன்...' என்ற பெயரில் அவரை நீ அதிகம் காயப்படுத்துகிறாயா?
* அவரை, 'எல்லா வழியிலும்' கவனிக்காமல், உன் குழந்தைகளிடமே அதிக நேரம் செலவழிக்கிறாயா?
* உன்னிடம் இல்லாத ஒன்று அல்லது பல என்ன அப்பெண்ணிடம் இருக்கிறது?
சற்றே யோசித்துப் பார்த்தால் பல நிதர்சனமான உண்மைகள் புலப்படும்.
பதினைந்து வருடங்களுக்கு பின் ஒருவன், மனைவியை விட்டு, இன்னொரு பெண்ணிடம் செல்வது என்றால், நிச்சயமாக, 'செக்ஸ்' மாத்திரம் காரணமாகாது. அப்படி, 'செக்ஸ்' வேண்டும் என்று நினைத்திருந்தால், உன் கணவர், எப்போவோ பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்க முடியும்.
எனவே, மேற்கூறிய கேள்விக்கான பதில்களை தேட ஆரம்பி...
உன் கணவரின் நண்பருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கக் கூடும். மிக ஆணித்தரமாக சொல்கிறேன் தன் மனைவியை, தன் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அனுபவிக்க ஏற்பாடு செய்வது நிச்சயமாக பணத்திற்காக மட்டும் இருக்காது. அந்த நண்பரின் உடல் ரீதியான, மனம் ரீதியான பிரச்னைகள் கூட, காரணமாக இருக்கலாம். எனவே, உன் கணவரின் நண்பரும், அவரது மனைவியும் உடனே நல்ல மனநல ஆலோசகரை சந்தித்து உதவி பெறுவது மிக அவசியம்.
நீ என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சில ஆலோசனைகள்...
* தனிமையில் உட்கார்ந்து, பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடை முறைக்கு ஏற்றாற் போல சிந்திக்க வேண்டும்.
* கோபப்படாமல், உன் கணவரிடம் அன்பாக பேசி, மனதில் என்ன நினைக்கிறார், ஏன் இப்படி செய்கிறார், அவரது திட்டங்கள் என்ன என்பதை, ஆராய வேண்டும்.
* அவரது பார்வையில் நீயும், மற்றவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக, தெரிந்து கொள்ள வேண்டும்.
* அந்த பெண்ணிடம் இருந்து விலகி, அவரால் வாழ முடியுமா, பழைய மாதிரி உன்னிடமும், உன் குழந்தைகளுடனும் அன்பாக இருக்க முடியுமா, அப்படி முடிந்தால், அதற்கு நீ என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்.
* மிகத் தெளிவாக உன் குழந்தைகளின், எதிர்கால வாழ்க்கைப் பற்றி, உன் கணவரிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்.
* உன் கணவரிடம், உன்னால் பேசி தீர்வு காண முடியாது என்றால், உங்களைப் புரிந்து கொண்ட, உங்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்ட பெரியவர்களின் உதவியை அல்லது திறமையான குடும்ப நல ஆலோசகரை அணுகி அவர்களது உதவியைப் பெறலாம்.
சகோதரியே... உச்சி வெயிலில் நின்றால், நம் நிழல் கூட நமக்கு தெரியாது. அதற்காக, நமக்கு நிழலே இல்லை என்று அர்த்தமாகாது. சிறிது நேரம் சென்றதும், தள்ளி நின்று பார்த்தால், நமது நிழல், நமக்குத் தெரியும். ஒன்றை நன்கு புரிந்து கொள். நம் வாழ்க்கையில் வாழுகிற வரை, பிரச்னைகள் யாவும் நம் நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவைகளை சமாளிக்க நாம் காலம் தாழ்த்தி, சற்றே அவைகளை விட்டு விலகி நின்று புரிந்து கொண்டால், பிரச்னையின் வீச்சு தெரிய வரும். அவைகளுக்கு பதிலும், சமாளிக்கும் முறைகளும் தெளிவாக தெரிய வரும்.
எனவே, உன் கணவர், குழந்தைகளுடன் நன்கு கலந்து ஆலோசனை செய்து, தெளிவாக சிந்தித்து, நல்ல முடிவையே எடுப்பாய் என்ற நம்பிக்கையிருக்கிறது.
உன் மனம் போல வாழ்வு சிறக்க, என் வாழ்த்துகள்!
என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஜன-201410:05:42 IST Report Abuse
Uma கல்யாணம் முடிஞ்சதும் அதான் கட்டிக்கிட்டாச்சே இனி என்னனு எனக்கென்னனுட்டு துணையோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறும் போது இந்த மாதிரி தொடர்புகள் ஏற்படுது. உதாரணமா, புருசனை கவனிக்காம பிள்ளைங்களையே கவனிக்கிறது, எரிஞ்சு விழறது இப்படி. ஆனா இப்படியெல்லாம் செஞ்சா யாரும் வழி மாறி போகலாமின்னு அர்த்தமில்லை. ஆனா இங்க நடந்துடுச்சு. புருசரை கூப்பிட்டு கேளுங்க, எனக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கான், நான் உங்க கூடவும் வாழறேன், அவன் கூடவும் இருக்கேன், உங்களுக்கு சம்மதமானு கேட்டு மனுசரை அரள வச்சுடணும். அப்புறம் ஒரு கற்பனைக்கு சொன்னப்போவே கொதிக்குதுல்ல, இப்படி தானே எனக்கும் இருக்கும். ஒன்னு அவ, இல்லைனா நான், எது வேணும்னு முடிவு பண்ணிக்கோனு கறாரா சொல்லிடணும். நீங்கனு முடிவு பண்ணினா வீடு/ஊரு எல்லாமே மாத்தலாம்(கொஞ்சம் மறக்கடிக்க), ஆனா எச்சரிக்கையா இருக்கனும், ஏமாற கூடாது. அந்த மகராசினு முடிவு பண்ணினா அங்கேயே ஒழியட்டும்னு தலை மொழுகிட்டு நீங்க உங்க பிள்ளைங்களோட தனியா உழைச்சு வாழுங்க. எந்த சைட் சொந்தங்கள் இல்லைனா என்னங்க, யாதும் ஊரே யாவரும் கேளீர். என்ன பிள்ளைங்க வளர்ந்து கலியாணத்துக்கு நிற்கிற சமயம் கொஞ்சம் அப்பாவை பத்தி பேசி சங்கடப்படுத்தும் பொது சனம். ஆனா உங்க கூடவும் இருந்துக்கிட்டு சைட்ல அவுகளையும் வச்சுக்கிடறேன்னு சொன்னா ஒத்துக்காதீங்க. நல்லா உறைக்கிறாப்ல கேட்டுட்டு தனியா வாங்க. சீரழிஞ்சு வரும் போதும் ஏத்துக்காதீங்க.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
23-ஜன-201402:01:57 IST Report Abuse
தமிழ்நிலா கள்ளத்தொடர்பு என்றெல்லாம் அறிவீனமாக கருத்து பதிக்கக்கூடாது. ஒரு பெண் தகுந்த வயது வந்தவுடன் தனக்கு பிடித்த ஆடவருடன் உறவு வைப்பதில் தவறு இல்லை. திருமணம் கல் ஆனாலும் கணவன் என்பது ஆன் ஆதிக்கத்தின் உச்சக்கட்டம், ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆன் இல்லாத பொழுது பெண் ஏன் ஒருவளுக்கு ஒருத்தன் என்று இருக்கவேண்டும். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் கற்பு, கணவன் பார்க்கவேண்டிய உடலை அடுத்தவன் பார்ப்பது என்று பத்தாம்பசலித்தனமாக பேசுவது நம் நாட்டில்தான். மனதுக்குள் ஆசை இருந்தால் அடுத்தவர்கள் முன் நல்லவராக நடிப்பது நம் நாட்டு பெண்களுக்கும், ஆண்களுக்கும் கைவந்த கலை. வெளிநாட்டில் மனதிற்கு பூட்டு போடுவதில்லை அதனால்தான் நிர்வாண கடற்கரை என்று திரிகிறார்கள். ஒப்பன் ரிலேசன்ஷிப் என்பதெல்லாம் மேலை நாட்டில் சர்வசாதாரணம், நம் நாட்டு பெண்கள்தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
23-ஜன-201422:50:18 IST Report Abuse
HoustonRajaதமிழ்நிலா - நீங்கள் கூறும் மேலை நாடுகளில் கூட Relationship, Marriage என்பவை வேறானவை. இங்கும், திருமணதிற்கு முன் Relationship முறை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், Marriage என்பது அரிது. அதற்கு இருபாலரும் திருமணதிற்கு முன்பே இணக்கத்துடன், கையொப்பமிட்ட உடன்படிக்கையை பரிமாறிக்கொள்வர். இங்கே நடக்கும் பிரச்சனை 15 வருடங்கள் Monogamous ஆக இருந்த "காதல்" கணவன் இப்போது தனது மனைவியை Marriage/Polyamory நோக்கி அழைக்கிறான். காதல் என்பது பொறாமை, இச்சை, வெறுப்பு போன்ற ஒரு அதிதீவிர ஆழமான உணர்வு. அதனைப்பற்றி நாம் (நிதானத்தில்) சிந்திப்பது வேறு, களத்தில் உணர்வது முற்றிலும் வேறு. நன்றி....
Rate this:
Share this comment
Sam Sam - maryland,யூ.எஸ்.ஏ
24-ஜன-201401:13:17 IST Report Abuse
Sam Samஅடடே.. ஓபன் relationship மேலை நாட்டில் சர்வ சாதரணமா..? இத்தனை நாள் இருக்கிறேன் கருமம் எனக்கு தெரியாமல் போய் விட்டதே. அவர்கள் பேசிகொள்வதை வைத்து அப்படி நினைத்து ஏதாவது வம்பில் மாட்டி கொள்ளாதீர்கள். அப்புறம் பொசுக்குன்னு போட்டு தள்ளிரீருவான் சம்மந்த பட்டவன். ஆமாம் நீங்கள் ஆணா பெண்ணா?...
Rate this:
Share this comment
Sicario - La Jolla,யூ.எஸ்.ஏ
24-ஜன-201401:26:08 IST Report Abuse
Sicarioதமிழ் நிலா: நீங்கள் வெளிநாட்டில் வசித்ததில்லை என நினைக்கிறேன் (அப்படியே வசித்திருந்தாலும் உங்களின் புரிதல் தவறு). வெளிநாட்டில் யாரும் யாருடனும் நினைத்த மாதிரி உறவு கொள்வதில்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களுடன் நான் பணி புரிந்திருக்கிறேன் மற்றும் நண்பரக்ளாகவும் இருக்கிறேன். இங்கு பள்ளி கல்லூரி வயதில் கூட கேர்ள் பிரண்ட் என முடிவு செய்து விட்டால் அவர்களுடன் மட்டுமே இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். சும்மா வாய் புளித்ததோ இல்லை மாங்காய் புளித்ததோ என பேச கூடாது. உங்களுக்கு பலரிடம் போக விருப்பமிருந்தால் போகவும் அதை விடுத்தது எல்லாரும் இப்படிதான் என வர்ணம் பூச வேண்டாம்....
Rate this:
Share this comment
anandhaprasadh - Chennai,இந்தியா
24-ஜன-201418:45:37 IST Report Abuse
anandhaprasadhஹூஸ்டன் ராஜா, சாம் சாம் மற்றும் நான் மடையன் ஆகியோரின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். ராமன், தமிழ்நிலா போன்றோர் உண்மையாகவே தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள அல்லது எதிர்மறை விளாமரம் தேடுவதற்காக இப்படிக் கூறுகிறார்களா என்று புரியவில்லை. ஆனால் இவை உண்மையாகவே இவர்களது கருத்துக்களாக இருந்தால் சிட்டிசன் படத்தில் வருவது போன்று, அவர்களின் குடியுரிமையைப் பறித்து நாடுகடத்தப் படவேண்டியவர்கள்......
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஜன-201409:55:25 IST Report Abuse
Uma//ஒரு பெண் தகுந்த வயது வந்தவுடன் தனக்கு பிடித்த ஆடவருடன் உறவு வைப்பதில் தவறு இல்லை. // இப்படி யாரும் யாரு கூடவும் உறவு வச்சுக்கிட்டா பிள்ளையும் பொறந்தா அவங்க கதி? இந்த அறிவுரையை நீங்க உங்க தங்கை, பிள்ளை, அக்காவுக்கும் சொல்லி நீங்களும் கடைபிடிப்பீங்களா? //திருமணம் கல் ஆனாலும் கணவன் என்பது ஆன் ஆதிக்கத்தின் உச்சக்கட்டம், ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆன் இல்லாத பொழுது பெண் ஏன் ஒருவளுக்கு ஒருத்தன் என்று இருக்கவேண்டும்// சபாஷ். என்ன அருமையான வசனம்.எந்தப் படத்துலயும் கேட்டதே இல்ல. யாரு எப்படி வேணும்னாலும் வாழலாம்னு நினைக்கிற வாழ்க்கை கூடிய சீக்கிரமே அழிஞ்சிடும்பா. //வெளிநாட்டில் மனதிற்கு பூட்டு போடுவதில்லை அதனால்தான் நிர்வாண கடற்கரை என்று திரிகிறார்கள். ஒப்பன் ரிலேசன்ஷிப் என்பதெல்லாம் மேலை நாட்டில் சர்வசாதாரணம், நம் நாட்டு பெண்கள்தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.// தப்பாப் புரிஞ்சிருக்கீங்க, வெளி நாட்டில் யாரும்யாரு கூடவும் போயிடறதில்லைங்க. இங்கேயும் காதலிக்கும் போது ஒருவருக்கு ஒருத்தங்கனு உண்மையா இருக்கணும்னு நினைப்பாங்க. அப்படி உண்மையா இல்லாதப்போ இவங்களுக்கும் கோபம், கண்ணீர்னு எல்லா உணர்ச்சிங்களும் வரும்ங்க. நிஜப்பேரோ புனைப்பேரோ தமிழ் நிலா அழகான பேரை வச்சுருக்கீங்க. இப்படி ஒரு கருத்தா? யாரு எப்படி வேணும்னாலும் இஷ்டத்துக்கும் வாழலாமின்னா அப்புறம் எதுக்கு பண்பாடுனு ஒன்னு இருக்கு. ஏற்கனவே வயசுப்பிள்ளைகளை கெடுக்க பல விசயங்கள் நாட்டுல நடக்குது. புரட்சிகரமா எழுதறதா நினைச்சு இப்படி எழுதாதீங்க. இத வாசிக்கிற இளசுங்க மனசு கெட்டுடப் போகுது....
Rate this:
Share this comment
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
23-ஜன-201400:19:18 IST Report Abuse
HoustonRaja ஆனந்தபிரசாத் - நறுக்கென்ற கேள்வி, வாழ்த்துக்கள். அவரின் கேள்வியை ராமன்/வழிபோக்கன் போன்றோர், தனிப்பட்ட தாக்காக எடுத்துக்கொள்ளாமல் - பதில் தர முன் வரவேண்டும். வலி என்றால் அது எல்லோருக்கும் பொது தான். பச்சாதாபத்துடன் (Empathy) பதில் சொல்ல முன் வாருங்கள். அதனை விடுத்து, இங்கே கடிதம் எழுதிய பெண் - தனக்கு துரோகத்தால் நேரும் "மெதுவான மரணத்தை" , குழந்தைகளின் "மன வளர்ச்சியை" பாதிக்கும் நிகழ்வுகளை, தனது தினசரி போராட்டங்களை - ஏதோ அவள் இரண்டாம் தாரத்தை மனமார ஏற்றுக்கொண்டால் மாறிவிடும் என்ற ரீதியில் "எளிதாக" சொல்லாதீர்கள். காதல் திருமணத்தில் மனம் ஒன்றிய இருவரில் ஒருவர் தனது உறவின் நெறிகளை மீறும் இடத்தில் தோன்றும் பிரச்சனைகளுக்கு, ஏன் கலாச்சரத்தையும், பொருளாதாரத்தையும் இழுக்கிறீர்கள்? VTV கணேஷ் சொல்வது போல "இங்கே என்ன சொல்லுது?" என்று மட்டும் கேட்டு பாருங்கள், பின் பதில் சொல்லுங்கள். சமூக/குடும்ப நெறிகள் எல்லாமே சுத்த பொய், கண்கட்டு விதை என்றால் - நீங்கள் மனிதத் தன்மையின் பரிணாம வளர்ச்சியை ஆழமாக புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. நெறிகள் இல்லாமல், விருப்பத்தின் பேரில் காதலில்/கலவையில் புகுந்தால் - வெட்டுக்குத்துகளும், விபத்துகளாய் குழந்தைகளும், பெற்றோர் இருந்தும் இல்லாத அநாதை சிறார்களும் தான் உலகத்தில் அதிகமாகும். சமூக/குடும்ப நெறிகள் இல்லாத சூழலே, (ராமன் உட்பட இங்கே பலரும் விழையும்) பெண்களின் முழு சுதந்திரத்திற்கான முன்னேற்றத்தை, அனைவரின் அமைதியையும் இன்னும் பின்னுக்கு தள்ளும். இங்கே நான் எழுதிய பல அவலங்கள், ஏற்கனவே நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றை TV/Internet-ல் நீங்களும் கண்டுவிட்டு, "களவொழுக்கத்தை" நியாயப்படுத்த கிளம்பினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. [பி.கு. சகுந்தலா கோபிநாத், இந்த வாரமும் (கடந்த "சில" வாரங்களைத் தொடர்ந்து) பொறுமையான, ஆழமான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். இவர் இதைப் போலவே ஒருபக்கமாய் சாயாமல், யாரையும் சாடாமல் - தீர்வுகளை நோக்கி பதில்களை வழங்கினால் அனைவருக்குமே உதவியாக இருக்கும்]
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X