"சுகர்' இருந்தால் உடல் எடை கூடுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

எனது மகளின் கணவர் வயது 31. அவர் உடற்பரிசோதனை செய்தபோது, அவரது ரத்த அழுத்தத்தின் அளவு 210 / 120 என்ற அளவில் உள்ளது. அவருக்கு இந்த வயதில் சிகிச்சை தேவையா?
ரத்த அழுத்தம் 210 / 120 என்பது அதிகமான, அபாயகரமான அளவு. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம். இந்த வயதில் இவ்வளவு அதிகமாக ரத்தஅழுத்தம் இருந்தால், அது எதனால் ஏற்பட்டது என கண்டறிவதே, முதல் சிகிச்சை. ஏனெனில், ரத்த அழுத்தத்திற்கு இரண்டாம் நிலை காரணங்கள் பல உள்ளன. இதில் முக்கியமானவை சிறுநீரக கோளாறுகள், தமனியில் சுருக்கம் ஏற்படுவது, சுரப்பியல் கோளாறுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதற்கு ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, வயிற்று ஸ்கேன், இ.சி.ஜி., எக்கோ பரிசோதனை ஆகியவை தேவைப்படும். இவற்றின் முடிவுகளுக்கு ஏற்ப, உடனடியாக உயர்ரத்த அழுத்த மருந்துகளை துவக்கியே ஆக வேண்டும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த தருணத்திலும், ரத்த அழுத்தம் 140 / 90 என்ற அளவுக்கு கீழ் இருந்தாக வேண்டும்.

எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 மாதங்களாகிறது. நான் டூவீலர் ஓட்டலாமா?
பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாள அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தநாளங்களை எடுத்து இருதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சையாகும். பொதுவாக பைபாஸ் சர்ஜரி செய்து, மூன்று மாதங்கள் கழித்து ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இந்த அனைத்து பரிசோதனைகள் முடிவுகளும் நார்மலாக இருந்தால், நீங்கள் தாராளமாக டூவீலர் ஓட்டலாம். டூவீலரை பொறுத்தவரை, அது "கிக் ஸ்டார்ட்டராக' இல்லாமல், "செல்ப் ஸ்டார்ட்டரை' உபயோகிப்பது நல்லது.

எனக்கு இரு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக 3 வகை மருந்துகளை எடுத்து வருகிறேன். தினமும் நடைப்பயிற்சி செய்வதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை சரியான உணவுப் பழக்கம், தினசரி நடை பயிற்சி முதற்கட்ட சிகிச்சையாகும். சர்க்கரை நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் சில, உடல் எடையை அதிகரிக்கும் தன்மை படைத்தவை. எனவே, உடனடியாக நீங்கள் டாக்டரை அணுகி, சர்க்கரை நோய் மருந்துகளை மாற்றி அமைத்தால், இதற்கு தீர்வு காணலாம். சர்க்கரை நோயாளிகள், தங்கள் எடையை உடலுக்கு ஏற்ப பராமரித்துக் கொள்வது அவசியம். எனவே, இதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக உங்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452 - 233 7344

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
18-செப்-201608:52:42 IST Report Abuse
Krishna Sreenivasan சுகர் இருந்தால் உடல் இளைக்கும் னு சொல்றாங்க , சிலருக்கு எடை அதிகம் இருக்கு மெயின் ரேஷன் உணவுக்கட்டுப்பாட்டை மீறுவதுதான் . ரொம்பவே குண்டாக இருந்தால் சுகர் BP வருண் வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லுறாங்க .முடிஞ்சவரை எடையை குறைக்கவேண்டும் , குண்டாக இருப்போர் நடக்கவே மாட்டாங்க இது 100%உண்மை , நெறைய நடந்துண்டே இருந்தாலும் சிலருக்கு எடை அதிகமா இருக்கும் உணவில் கட்டுப்பாடே இருக்காது , சிலர் எடை எகிறும் என்று பயத்தால் பொரிச்ச உணவு துன்றதே இல்லே , ஆனால் எதுவுமே அளவாக இருந்தால் நண்மையே பயக்கும் என்பதுதான் உண்மை , மனத்துளே எப்போதும் தீய எண்ணம் வராமல் இருக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X