கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
00:00

கேள்வி: இணைய தளத்தில் அனைத்து தரைவழி தொலைபேசி எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எண் கொடுத்தால், பெயர் கொடுத்தால், முகவரி முதற்கொண்டு அனைத்தும் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அதற்கான இணைய தள முகவரி என்ன?
எஸ். புவனேஸ்வரி, திண்டுக்கல்.
பதில்
: நீங்கள் எந்த ஊர் அல்லது மாநிலத் தொலைபேசி எனக் கூறவில்லை. பி.எஸ்.என். எல். எனில், அந்நிறுவன இணைய தளம் சென்று, ஊரினைத் தேர்ந்தெடுத்து எண்ணை அல்லது பெயரைக் கொடுத்துத் தேடி அறியலாம். இந்தியா முழுமைக்குமான தொலைபேசி, முகவரி தேடல் எனில், http://www. phunwa.com/ என்ற முகவரிக்குச் சென்று, மாநிலத்தை, பின்னர் ஊரினைத் தேர்ந்தெடுத்து, எண் கொடுத்து முகவரி அறியலாம்.

கேள்வி: இணையத் தளங்களைக் காண்கையில், அதில் உள்ள படங்களைக் கம்ப்யூட்டரில் பதியும் ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால், அதில் ரைட் கிளிக் செய்து, படத்தைக் காப்பி செய்து, இமேஜ் புரோகிராம் ஒன்றில் பேஸ்ட் செய்து, பைலாகக் காப்பி செய்திடும் முன் பொறுமை போய்விடுகிறது. இதற்கு ஏதாவது சுருக்கு வழி உண்டா?
என். தங்கராஜ், சிவகாசி.
பதில்
: இந்த அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். குறிப்பாக, அச்சுப் பணிகளுக்குப் பெயர் பெற்ற உங்கள் ஊரில் நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதோ அதற்கான சுருக்கு வழி. இது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களில் செயல்படும். முதலில் இணைய தளப் பக்கத்தினை, திரை முழுவதும் இல்லாமல், டெஸ்க்டாப் திரை ஒரு ஓரமாகவோ அல்லது மேலாகவோ, கீழாகவோ தெரியும்படி அமைத்துக் கொள்ளவும். பின்னர், இணைய தளத்தில் காப்பி செய்திட வேண்டிய படத்தைக் கண்டவுடன், அதன் மீது மவுஸின் கர்சரை வைத்து, இழுத்து, டெஸ்க்டாப் திரையில் விட்டுவிடவும். அவ்வளவுதான், படம் உங்கள் கம்ப்யூட்டரில், பின்னர் இதனை வேறு ஒரு போல்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். ரைட் கிளிக், சேவ் அஸ் போன்ற வேலை எல்லாம் தேவை இல்லை.

கேள்வி: யு ட்யூப் தளத்தில் உள்ள விடியோ படங்களை, கம்ப்யூட்டரில் சேவ் செய்திடத் துணை புரியும் இணைய தளங்கள் குறித்து தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. மீனா கண்ணன், செங்கல்பட்டு.
பதில்:
யு ட்யூப் வீடியோ படங்களை காப்பி செய்து பைல்களாக, உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட கீழ்க்காணும் தளங்களை அணுகி, அதில் தந்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
http://www.savefrom.net/
http://www.savevid.com/
http://keepvid.com/

கேள்வி: நான் அவ்வப்போது அப்டேட் செய்து ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்தி வருகிறேன். இதுவரை வைரஸ் தாக்கியதில்லை. என் எக்ஸ்பி சிஸ்டத்தை நான் மாற்ற வேண்டுமா? இதே ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் நான் எக்ஸ்பி சிஸ்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகையில் காப்பாற்றாதா?
ஆர். மணிமேகலை, விருதுநகர்.
பதில்:
எக்ஸ்பி சிஸ்டம் இயங்குவதற்கான பாதுகாப்பு தரும் சப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனம், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்தப் போவதனைப் பலமுறை இங்கு எழுதி யிருக்கிறோம். சப்போர்ட் நிறுத்துவது என்பது, அதன் பின்னர் வரும் ஆபத்தான வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பிற்கான புதிய புரோகிராம்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று பொருள். எனவே உங்களிடம் இருக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு, ஏப்ரல் 8க்கு முன் வரை இருந்த வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும். அதன் பின்னர், வரும் வைரஸ்கள் தரும் ஆபத்திலிருந்து உங்கள் கம்ப்யூட்டரைக் காப்பாற்றாது. இண்டர்நெட் இணைப்பு மட்டுமின்றி, ப்ளாஷ் ட்ரைவ் வழியாக வரும் புதிய வைரஸ் புரோகிராம்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு கிடைக்காது. மேலும், ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களான, ஏவிஜி, நார்டன், மற்றும் மேக் அபி ஆகியவை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான வைரஸ் எதிர்ப்பிற்கான குறியீடுகளை, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்துதான் பெறுகின்றன. இனிமேல் அவற்றை மைக்ரோசாப்ட் வழங்காது. எனவே, நீங்கள் தொடர்ந்து பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்க வேண்டும் என்றால், கட்டாயம், எக்ஸ்பி சிஸ்டத்தை விட்டுவிட்டு, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற வேண்டும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். தொடர்ந்து விண்டோஸ் 8.1 க்கு அப்டேட் செய்திட எண்ணுகிறேன். ஆனால், விண் 8.1 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்யப்படும் என்றும், அவற்றை அங்கிருந்துதான் எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள். நான் மாதத்தில் பல நாட்கள், சரியாக இன்டர்நெட் இணைப்பு கிடைக்காத கிராமப்புற இடங்களில் சென்று தங்குகிறேன். இந்த சூழ்நிலையில், விண் 8.1க்கு மாற வேண்டுமா? வேறு வழி உள்ளதா?
ஆர். சீத்தாபதி, மதுரை.
பதில்:
விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்பாடுகளில் அவ்வளவாக வித்தியாசம் ஒன்றும் இருக்காது. பெரும்பாலான மாற்றங்கள், இன்டர் பேஸ் அமைப்பில் தான் உள்ளன. க்ளவ்ட் இணைப்பில் எதுவும் மாற்றப்படவில்லை. எனவே விண்டோஸ் 8 சிஸ்டம் போலவே, நீங்கள் இணைய இணைப்புடனும், இணைய இணைப்பு இல்லாமலும், விண் 8.1 சிஸ்டத்திலும் இயங்கலாம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்திட, இணைய இணைப் பில் உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இருக்க வேண்டும். அதன் பின்னர், டாகுமெண்ட்கள் மற்றும் பைல்கள் ஆகியவற்றை ஸ்கை ட்ரைவில் பதிந்து வைத்துக் கொள்வது என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்ததே.

கேள்வி: சென்சார்வேர் என்பது என்ன என்று விளக்கவும். பலவகையான சாப்ட்வேர் குறித்து எழுதும் நீங்கள் இது குறித்தும் தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. செந்தமிழ் ராணி, திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. Censorware என்பதும் ஒரு வகையான சாப்ட்வேர். இணையதளங்களில் நமக்குப் பிடிக்காத, பாலியல் சார்ந்த, சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பான தகவல்கள் உள்ளவற்றை, வடிகட்டி கம்ப்யூட்டரில் தோன்றுவதற்கு அனுமதி மறுக்கும் வகையில் செயல்படும் சாப்ட்வேர் தொகுப்புகளை Censorware என அழைக்கிறோம். Parental controls தரும் சாப்ட்வேர் புரோகிராம்களும் இதில் அடங்கும்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட் தயாரித்து முடித்த பின்னர், சில பாராக்களை, அடுத்த டேப் இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டியுள்ளது. இதனை எளிதாக அமைக்கும் வழி உள்ளதா? நான் வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன்.
என். ஷ்யாமளா சேகர், திருப்பூர்.
பதில்
: ரிப்பனில் உள்ள ஹோம் டேப் மூலம், நீங்கள் விரும்பும் வகையில், டாகுமெண்ட் பாரா ஒன்றின் பாரா மார்ஜினை மாற்றி அமைக்கலாம். நீங்கள் ஏற்கனவே டேப் செட்டிங்ஸ் அமைத்திருந்தால், அடுத்த டேப்பிற்கு பாரா முழுமையாகத் தாவிக் குதித்து அமர்ந்து கொள்ளும். எந்த டேப்பும் குறிக்கப்படாமல் இருந்தால், மாறா நிலையில் உள்ள அடுத்த டேப்பிற்கு நகர்த்தப்படும் (வழக்கமாக இது அரை அங்குலம் இருக்கும்). பாரா ஒன்றை அடுத்த டேப் நிறுத்தத்திற்குக் கொண்டு செல்ல கீழ்க்குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. எந்த பாராவினை அடுத்த டேப் நிறுத்தத்திற்கு அனுப்ப வேண்டுமோ, அந்த பாராவினுள் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப்பினைக் காட்டவும். இங்கு உள்ள குரூப்களில், பாராகிராப் (Paragraph) குரூப் செல்லவும். இப்போது அதன் மேலாக பல ஐகான்கள் இருக்கும். கர்சரை அவற்றின் மீது நகர்த்தினால், Increase Indent டூல் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால், கர்சர் உள்ள பாரா அடுத்த டேப் நிலைக்குச் செல்லும். அதிக டேப்கள் கடந்து விட்டதாக கருதினால், அருகே இடது புறம் உள்ள டூலில் கிளிக் செய்தால், இடது பக்கம் பாரா நகர்ந்து இடம் பிடிக்கும்.

கேள்வி: நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். நிறுவன சர்வருடன், லேப்டாப் கம்ப்யூட்டரை இணைத்து வேலை பார்க்க வேண்டியதுள்ளது. எனக்கு சில வேளைகளில் HTTP 401/403 Error கிடைக்கிறது. இவற்றின் பொருள் என்ன? ஏன் கிடைக்கிறது?
என்.அஹமது, துபாய்.
பதில்:
401 என்ற பிழைச் செய்தி, அத்தாட்சி அற்ற அணுக்கம் என்பதனைக் கூறுகிறது. 403 உங்கள் அணுக்கம் தடை செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இவை இரண்டும், உங்கள் நிறுவன சர்வர், உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற இயலாத நிலையைக் காட்டுகிறது. 401 பிழைச் செய்தி வருகையில், நீங்கள் சர்வரின் பாதுகாப்பு சிஸ்டத்தில், முறையாக அனுமதி பெற்று அணுகவில்லை என்று பொருளாகிறது. குறிப்பிட்ட இணைய தளப் பக்கத்தில் உள்ள டேட்டாவினை மட்டும் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்றாலும், இந்த தவறு சுட்டிக் காட்டும் செய்தி கிடைக்கும். 403 பிழைச் செய்தி, இதற்கு நேர் மாறானது. நீங்கள் முறையான அனுமதியைப் பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் டேட்டாவினை நீங்கள் காண்கின்ற, பயன்படுத்துகின்ற வகையில் அனுமதி பெறவில்லை. எனவே தடுக்கப்படுகிறீர்கள் என்ற பொருள் தருகிறது.

கேள்வி: கம்ப்யூட்டரில் எங்கோ படித்த தகவல் ஒன்றை நினைவிற்குக் கொண்டு வர இயலாத தன்மை ஒரு நோயா? அதனை ஒரு பெயர் இட்டும் அழைப்பதாக என் நண்பர் கூறுகிறார். இது உண்மையானால், அதன் பெயர் என்ன?
கே.நிலா அரசி, திருமங்கலம்.
பதில்
: நல்ல கேள்வி. இணையத்தில் படித்த பின்பு இந்த தகவலைத் தருகிறேன். ஒருவர் உங்களிடம் அவரின் நோய் அல்லது பிற பிரச்னை குறித்து தகவல் ஒன்றைக் கேட்கிறார். நீங்களும் அவரிடம், இது குறித்த தகவல் ஒன்றை எங்கோ படித்தேன். இணைய தளத்திலா, மின் அஞ்சல் குழுவிலா, செய்தித்தாளிலா, பருவ இதழ்களிலா, ரேடியோ அல்லது டிவியா எனப் பலத்த சந்தேகம் வருகிறது. பலமுறை யோசித்த பின்னரும், அந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது, அது என்ன என்பது நினைவிற்கு வரவில்லையா? இந்த நிலைக்குப் பெயர் இன்போநேசியா (Infonesia short for Information Amnesia). இந்த மறதி அனைத்து வகையான மீடியாவினையும் குறிக்கிறது. இண்டர்நெட் சார்ந்து மட்டும் இந்த மறதி வந்தால், அதற்கு Internesia என்று பெயர் சூட்டி உள்ளனர்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X