மாஜிக் மந்த்ரா! (13)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2014
00:00

சென்றவாரம்: மங்காத்தாவின் மாமா பேங்கில் திருடிவிட்டு அவளை சந்திக்க வந்தார். இனி-

""மங்கா நான் ரொம்ப இக்கட்டான நிலையிலே இருக்கேன். உன் மாமாவுக்கு நீதாம்மா உதவணும். உன் சினேகிதிங்களை நம்பலாமா? என்ன போலீசிலே காட்டிக் கொடுத்திட மாட்டாங்களே?'' என்று அழாத குறையாகக் கெஞ்சினான் கைதி மன்னாரு.
""இவ வடிவு. என் உயிர் தோழி. உயிர் போனாலும் வாயைத் திறக்க மாட்டா. அவ மந்த்ரா. புதுப்பொண்ணு அவளும் யாருக் கிட்டயும் ஏதும் சொல்லமாட்டா. இல்லையா மந்த்ரா அப்படித் தானே?'' அவளையும் பலவந்தமாகத் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டாள் மங்காத்தா.
""யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி நான் ஒளிஞ்சுக்க ஒரு இடம் பார்க்கணும். அதுக்கு முன்னால அந்தக் கொள்ளைப் பணத்தை எடுத்து பங்கு பண்ணியாகணும். உனக்குதான் தெரியுமே போலீஸ் என்னைப் பிடிச்சாலும் நான் பதுக்கியுள்ள பணத்தை அவங்களால கண்டுபிடிக்க முடியல்லே. இன்னும் தேடிக் கிட்டிருக்காங்க. எங்கிட்டேர்ந்து உண்மையை வரவழைக்க தலைகீழா நின்று பார்த்தாங்க. நான் சொல்லுவேனா?'' என்று தன் பிரதாபத்தை மேடை நாடக நடிகன் பாணியில் இங்கும், அங்கும் உலாத்தியடி விவரித்தான் மன்னாரு.
""கொள்ளை அடிச்ச பணத்தை எங்கே ஒளிச்சு வச்சிருக்கே?'' என்று கேட்டாள் மங்காத்தா.
""மங்காகிட்ட மறைப்பேனா? இந்த ஸ்கூல்லதான் ஒளிச்சு வைச்சிருக்கேன் மங்கா. அதை எடுக்கத்தான் வந்திருக்கேன்!'' என்றான் மன்னாரு, தன் மொட்டைத் தலையை தடவிக்கொண்டே.
மந்த்ராவுக்கு மூச்சே நின்றுவிட்டது போலிருந்தது.
இவ்வளவையும் அறிந்த மந்த்ரா பயத்தினால் உறைந்து போனாள். என்ன செய்வது, எதைப் பேசுவது என்றே புரிய வில்லை அவளுக்கு. அப்போது மங்காத்தா வின் குரல் மந்த்ராவை உலுப்பிற்று.
""வாங்கடி என் மாமாவுக்கு ஹெல்ப் செய்யலாம்!'' என்றாள் மங்கா.
""இங்கே எங்கே மாமா பணத்தை ஒளிச்சு வச்சிருக்கே?'' என்று முன்னால் நடக்கும் மன்னாரிடம் கேட்டாள்.
""மங்காப் பொண்ணு! உங்க ஸ்கூலை ஒட்டி ஒரு பெரிய தோப்பு இருக்கில்லே?'' அங்கே ஒரு பாழும் கிணறு இருக்கு தெரியுமா உனக்கு?'' என்று தன் பேச்சை நிறுத்தியவன், தானே அதற்கு பதிலும் கூறினான்.
""உனக்கு எங்கே தெரிஞ்சிருக்கப் போவுது! உன் பாடம் உண்டு, பள்ளிக்கூடம் உண்டுன்னு இருக்கிற பொண்ணாச்சே நீ... அந்தப் தோப்புப் பக்கமெல்லாம் நீ வந்திருக்க மாட்டே!'' என்று மங்காத்தாவை படிப்பிலே கவனம் செலுத்தும் நல்ல பெண்ணாக கற்பனை செய்து கொண்டு பேசினான்.
தோப்பை நோக்கி நடந்த அவனை மங்காவும், வடிவும் பின் தொடர்ந்தனர். மந்த்ராவின் கையை மங்கா பிடித்துக் கொண்டிருந்ததால், அவளிடமிருந்து விடுபட முடியாமல் மந்த்ராவும் அவர்களுடன் சென்றாள்.
மன்னாரு அவர்களை தோப்பிலுள்ள பாழுங்கிணற்றுக்கு அழைத்துப் போனான்.
""இத்தனை நாளா பாங்க் பணம் இங்கேயா இருக்குது? இதிலே எங்கே எப்படி ஒளிச்சு வச்சிருக்கே?'' என்று கேட்டாள் மங்காத்தா.
அது ஒரு பெரிய கிணறு. கைப்பிடி சுவரெல்லாம் இடிந்து கிடந்தது. கிணற்றுக் கட்டையிலும் உள்ளேயும் குத்துக் செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. கிட்டப் போகவே பயமாக இருந்தது மந்தராவுக்கு. ஆனால், அந்தப் பாழும் கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டே, அதன் இடிந்த கட்டைச் சுவரில் உட்கார்ந்த மன்னாரு கூறினான்.
""மங்காத்தா, என்னை போலீஸ் கைது செய்யறதுக்கு முன்னால, இதே மாதிரி நான் உன்னை வந்து சந்திச்சேனே நினைவு இருக்கா? அப்பத்தான் கொள்ளையடிச்ச பணத்தை இங்கே கொணாந்து ஒளிச்சு வைத்தேன். ஒரு பழைய சூட்கேசிலே கட்டுக் கட்டாக நூறு ரூபாய் நோட்டுக்களை வெச்சு இங்கே கொண்டு வந்தேன். கிணத்து சுவத்துலே ஒரு பொந்து இருக்கு. அதை நான் முன்னாடியே பாத்து வெச்சுதான், இந்த வேலையிலே இறங்கினேன். அந்தப் பொந்திலேதான் பாங்கிலே கொள்ளையடிச்ச பணத்தோட சூட்கேஸை பதுக்கி வச்சுட்டுப் போனேன். இதோ பார் எடுத்துக்காட்டறேன்...'' என்று கிணற்றில் எவ்விக் குனிந்து, குறிப்பிட்ட ஒரு இடத்தில் உட்பக்கமாக துழாவினான் மன்னாரு.
இவ்வளவு நேரம் ஏதும் பேசாமல் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந் தாள் மந்த்ரா. சிறையிலிருந்து தப்பி வந்துள்ள திருடன். கொள்ளையடிக்கப்பட்ட பாங்க் பணம் சூட்கேசில். நான் செய்ய வேண்டியது என்ன? என் மாஜிக்கை பயன்படுத்தி, மங்காத்தாவின் மாமா அந்த பணத்தை பாங்கில் ஒப்படைக் கணும். போலீசிலே போய் சரணடைந்து நல்லவனா மாறணும்... நடக்குமா? முடியுமா?
நடக்கணும்... முடியணும்! இனி தாமதிக்க கூடாது. அடுத்த வினாடி மந்த்ரா குட்டிச் சாத்தானை அழைக்கும் மந்திரத்தை கூறினாள். கிணற்றுக்குள் இருந்து பணத்தோடு சூட்கேசை எடுக்கும் இவன் மனம் மாறணும் என்று மந்திரம் போட்டாள். ஆனால், மனம் மாற வில்லை. பணம் மாறி விட்டது. எப்படி?
""ஓ! என்னாச்சு இந்த சூட்கேசுக்கு? ஏகமாகக் கனக்குதே! தூக்க முடியாம... பெட்டி வேற ஒரேடியா உப்பி... ஓ! ஏது ரூபாய் நாணயங் கள்? நான் கட்டுக் கட்டா ரூபாய் நோட்டுக் களைத்தானே வைத்தேன்!'' பெட்டி பிதுங்கித் திறந்து கொண்டு நாணயங்கள் கலகலவென்று கிணற்றுக்குள் கொட்டின. மந்த்ராவின் மாஜிக் ரூபாய் நோட்டுக்களை, நாணயங்களாக மாற்றி விடவே, தாங்க முடியாத கனமாகி, மன்னாரு வினால் அதை மேலே தூக்க முடியவில்லை. அதன் கனம் அவனை உள்ளுக்கு இழுக்க லாயிற்று.
""மங்கா... மங்கா! என்னை அழுத்திப் பிடிச்சு காப்பாத்துங்க. இந்த சூட்கேஸ் என்ன மாயமோ தெரியல்லே...இதிலிருந்து நோட்டெல்லாம் நாணயமா மாறி என்னை கீழே இழுக்குது... என்னை வெளியே இழுங்க!'' என்று கூச்சலிட்டான்.
மங்காத்தாவும், வடிவுக்கரசியும் மன்னாருவை ஆளுக்கொருவராக பிடித்துக் கொண்டு மூச்சுக் கட்டி இழுத்தனர்.
ஆனால், அவர்களையும் இழுத்தது சூட்கேஸ் நாணயத்தின் கனம். தாங்க முடியாது போகவே, மன்னாரு சூட்கேசை நழுவ விட்டான். அது "பொதீர்' என்று பாழும் கிணற்றில் விழுந்தது.
வியர்வை வழிய-விழிகள் பிதுங்க, தடுமாறியபடி கிணற்றுக் கட்டையில் சாய்ந்த படி நிமிர்ந்த மன்னாரு, ""போச்சு! எல்லாப் பணமும் கிணத்துக்குள்ளே விழுந்து முழு கிட்டுது... காகித நோட்டெல்லாம் நாணய மாக எப்படி மாறிச்சு...'' புரியாமல் குழம்பினான் தலையை சொறிந்தபடி.
"நல்லவேளை குட்டிச்சாத்தான் என் கட்டளையை வழக்கப்படி தவறாகப் புரிந்து கொண்டு குழப்பியது நல்லதுக்கே. பாங்க் பணம் பாழும் கிணற்றில் பத்திரமா இருக்கு. அதை ஒழுங்குபடுத்தி உரிய இடத்தில் சேர்ப்பிக்க, புதிதாக ஏதாவது மந்திரம் போடணும்...' இப்படி மந்த்ரா திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, வேறு இரண்டு பேர் அங்கு வந்தனர். தோற்றமும், பார்வையும் அவர்கள் மன்னாருவின் கூட்டாளிகள் என்பதைக் கூறின. பீடியை வாயோரத்தில் கடித்துக் கொண்டே ஒருவன் கேட்டான்.
""என்ன பிரதர்! எங்க பங்கையும் சுருட்டிக்கிட்டு ஓடிடலாம்னு பிளான் பண்ணிக்கினு தனியா வந்திருக்கியா?''
மன்னாரு அவர்களைக் கண்டதுமே மிரண்டான்.
இப்போது குழறினான். மங்காத்தா தன் மாமாவை வெறுப்போடு பார்த்தாள். அவளைச் சமாளிக்க நிலைமையை விளக்கினான் மன்னாரு.
""மங்கா... இவங்க என் தோஸ்த்துங்க. அந்த பாங்க் விசயத்திலே என்னோட கூட்டாளிங்க. நான் தான் மாட்டிக்கினேன். இவங்க தப்பிச் சுட்டாங்க...'' என்று கூறியவன் தன் கூட்டாளி களை பார்த்து, ""நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. நான் சூட்கேசோடு உங்களை சந்தித்து பங்கு போடலாம்னுதான் இங்கே வந்தேன் அதை எடுக்க. ஆனா, ஒரு சிக்கல் பாரு... சூட்கேசு கிணத்துகுள்ளாற விழுந்துட்டுது. அதுமட்டுமில்லே... காகித நோட்டெல்லாம் காசா மாறியிருக்கு. எப்படின்னே புரியல்லே!'' என்றான்.
கழுத்தில் கருப்பு கர்சீப்பை முடி போட்டிருந்த ரவுடி மன்னாரைப் பார்த்து எகத்தாளமாக சிரித்தான் .
""இதை விட நல்லா ஒரு கதை கற்பனை பண்ணியிருக்கக் கூடாது? ஏண்டா மடையா, இதை நாங்க நம்புவோம்னு நினைச்சியா?'' என்று மன்னாருவின் சட்டையைப் பிடித்து முறுக்கினான்.
மூன்று கேடிகளும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு, தள்ளிக் கொண்டு ஏக ரகளை, கூச்சல்! சங்கடப்பட்டுப் போனாள் மந்த்ரா. சத்தம் கேட்டு பள்ளிக் கூட நிர்வாகிகளும், ஆட்களும் வந்து விட்டால் நிலைமை மோசமாகி விடுமே என்று அவர்கள் சத்தம் போடாமல் வாயை அடைக்க மந்திரம் போட்டாள்.
அடுத்த நிமிடம் மன்னாரின் தோஸ்துகள் இருவரின் கைகளும் அவர்களுடைய வாயில், ஒன்றன் மீது ஒன்றாக இணைந்து தானாக பொத்திக் கொண்டன .
-மாஜிக் தொடரும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X