க்வாக்... க்வாக்...!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஜன
2014
00:00

அதன் கத்தலைக் கேட்ட ஏணி சாக்கு மூட்டைக்குள் இருந்து வெளியே வந்தது. கிணற்றில் சாய்ந்து நின்றது.
அதன் மேல் ஏறிய க்வாக் கிணற்றுக்கு வெளியே வந்தது.
மீண்டும் அரண்மனை வாயிலில் நின்றது க்வாக்.
""அரசே! நான் கொடுத்த கடனைத் திருப்பித் தாருங்கள். என்னை ஏமாற்ற நினைக் காதீர்கள்,'' என்று குரல் கொடுத்தது.
அதன் குரல் அரண்மனை எங்கும் கேட்டது.
கோபம் கொண்ட அரசன், ""வீரர்களே! க்வாக் கிணற்றுக்குள் இருந்து எப்படி வெளியே வந்தது? பெரிய பானைக்குள் அதைப் போட்டுக் கீழே தீ மூட்டுங்கள். வெந்து சாகட்டும்,'' என்று கட்டளை இட்டான்.
அதன்படியே வீரர்கள் க்வாக்கைப் பிடித்துப் பெரிய பானை ஒன்றிற்குள் போட்டனர். அதை அடுப்பின் மேல் வைத்துக் கீழே தீ மூட்டினர்.
பானைக்குள் இருந்த க்வாக்கைத் தீ சுடத் தொடங்கியது.
""ஐயோ! இந்தப் பானைக்குள் வெந்து சாகப் போகிறேனே,'' என்று புலம்பியது.
சாக்கு மூட்டைக்குள் இருந்த ஆற்றின் நினைவு அதற்கு வந்தது. ""ஆறே! என்னைக் காப்பாற்று!'' என்று அலறியது.
அதன் அலறல் ஆற்றிற்குக் கேட்டது. நண்பனுக்கு ஆபத்து என்று சாக்கு மூட்டையைவிட்டு வெளியே வந்தது.பானையின் மேல் வழிந்த தீயை முழுமையாக அணைத்தது.
பானைக்குள் இருந்து வெளியே வந்த க்வாக், மீண்டும் அரண்மனை வாயிலில் வந்து நின்றது.
""என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தாருங்கள். என்னை ஏமாற்ற வேண்டாம்!'' என்று உரத்துக் குரல் கொடுத்தது.
இப்போது அதன் குரல் தலைநகரம் எங்கும் கேட்டது.
கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் அரசன். வீரர்களை அழைத்த அவன், ""உங்களால் என் மானமே போய் விட்டது. இனி உங்களை நம்பிப் பயன் இல்லை. க்வாக்கை இங்கே இழுத்து வாருங்கள். நானே அதற்குத் தண்டனை தருகிறேன்,'' என்று கத்தினான்.
அவர்கள் க்வாக்கை இழுத்து வந்து, அரசனின் முன் நிறுத்தினர்.
அதைக் கோபத்துடன் பார்த்த அவன், ""கொடுத்த கடனை என்னிடமே திருப்பிக் கேட்கிறாயா? உன்னை கொல்லாமல் விட மாட்டேன்,'' என்று அரியணையில் இருந்து கீழே இறங்கினான்.
தன் இரண்டு கைகளாலும் க்வாக்கின் கழுத்தைப் பிடித்து நெருக்கத் தொடங்கி னான். உயிரே போவது போலத் துடித்தது க்வாக்.
தேனீக்களின் நினைவு அதற்கு வந்தது.
""தேனீ நண்பர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று குரல் கொடுத்தது.
சாக்கு மூட்டைக்குள் இருந்த தேனீக்கள் அதன் குரலைக் கேட்டன. கூட்டமாக வெளியே வந்தன. க்வாக்கின் கழுத்தை அரசன் நெருக்குவதைப் பார்த்தன.
நண்பனைக் காப்பாற்ற நினைத்த அவை பறந்து பறந்து அவனைக் கொட்டத் தொடங்கின. வலி தாங்க முடியாத அரசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
தேனீக்களோ அவனை விடாமல் துரத்தின. அவற்றிற்கு அஞ்சிய அவன் எங்கே ஓடினான் என்றே தெரியவில்லை. கொடிய அரசன் ஓடிப்போனதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினர்.
க்வாக்கை வணங்கிய அமைச்சர், ""இந்த அரசனை யாருக்கும் பிடிக்கவில்லை. அவன் கொடுமைக்கு அஞ்சி நடுங்கிய படியே வாழ்ந்து வந்தோம். அவனை விரட்டிய நீங்களே இந்நாட்டிற்கு அரசனாக வேண்டும்,'' என்று வேண்டினர்.
அங்கே இருந்த வீரர்களும் மக்களும், ""நீங்களே அரசராக வேண்டும்,'' என்று முழக்கம் இட்டனர்.
""நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு என்ன கவலை? நான் அரசனாக முடி சூடிக் கொள்கிறேன். மக்களுக்கு என்னாலான நல்லதைச் செய்வேன்,'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னது க்வாக்.
ஒரு நல்ல நாளில் அது அரசனானது. அதற்கு உதவியாக ஏணியும், ஆறும், தேனீக்களும் இருந்தன. அதன் நல்லாட்சி யில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
முற்றும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NAVIN AG - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-201418:53:40 IST Report Abuse
NAVIN AG கேவலமான கதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X