அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2014
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

உலோகங்கள் இன்னமும் உள்ளன!
தங்கத்தின் விலையை கேட்டால் பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு அதன் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், இந்த தங்கம் நமக்கு கிடைக்க நாம் ஒரு எரி நட்சத்திரத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பூமி 455 கோடி ஆண்டு களுக்கு முன்பு தோன்றியது. பூமி உருண்டு திரண்டு பூகோள உருண்டையாக சூரியனை சுற்றி வந்த போது அதில் இருந்த இரும்பு உலோகம் அதன் மையப்பகுதிக்கு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து பொன்நிற உலோகமான தங்கமும் பூமியின் மையப் பகுதிக்கு சென்று விட்டது. தங்கம் மட்டுமல்ல, தங்கத்தை விட விலை மதிப்பு மிக்க பிளாட்டினம், ஒஸ்மியம் போன்ற உலோகங்களும் பூமியின் மையப்பகுதிக்கு சென்று அழிந்து விட்டன.
பூமியின் மேற்பரப்பில் கல்லும், மண்ணும் மாத்திரமே இருந்தன. பின் எப்படி இந்த உலோகங்கள் பூமியின் மேற்பரப்பிற்கு வந்தன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.
அதற்கு பிரிஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விடையளித்துள்ளனர். சுமார் 390 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது மிகப்பெரிய எரி நட்சத்திரம் ஒன்று வந்து விழுந்தது. பல கோடி அணு குண்டுகள் ஒன்று சேர்ந்து வெடித்தது போல் அதன் மோதல் இருந்தது. இந்த எரி நட்சத்திரம் வெடித்து சிதறியதில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. அப்போது தான் பூமியின் மையப்பகுதியில் இருந்த உலோகங்கள் பல சிதைவுகளுக்கு உள்ளாகி, பூமியின் மேற்பரப்பிற்கு வந்தன. அதன்பிறகுதான் மனிதன் தோண்டி எடுக்கும் ஆழத்தில் உலோகங்கள் வந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மற்ற உலோகங்களோடு சேர்ந்து தங்கமும் பூமியின் மேற்பரப்பிற்கு வந்தது. இப்படி எரி நட்சத்திரம் வந்து தாக்கியதை, "டெர்மினல் பம்பார்ட்மெண்ட்' என்று கூறுகின்றனர். இதனால் பூமியில் பெரிய பெரிய உலோக கட்டிகளிலும், பாறைகளிலும் தங்கம் ஒளிந்திருந்தது என்றும் அதனால் பூமியில் தங்கத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமியை எரி நட்சத்திரம் தாக்கியதால்தான், மையத்தில் இருந்த தங்கம் மேற்பரப்பிற்கு வந்தது. அப்படி ஒரு நட்சத்திர தாக்குதல் இல்லையென்றால், மனிதன் தங்கத்தை பார்த்திருக்கவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
எப்படியோ, தங்கம் வந்தது. அதனால் பலரின் வாழ்க்கை செழிப்பானது. பூமிக்குள் நமக்குத் தெரியாத உலோகங்கள் இன்னும் எத்தனையோ உள்ளனவாம்!

தண்ணீரும் போக்குவரத்தும்!
பெரு நகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீசார் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம் என்று கணக்கிட்டு, முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.
பெரு நகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும். காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் வினாடிகளை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.
உதாரணமாக, ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கிலிருந்து மேற்காக செல்ல வாகனங்கள் "பீக் அவர்' எனப்படும் நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150,120,60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும். சரி போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரம் நிர்ணயிக்கின்றனர்? அங்கே தான் தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த வினாடிகளை நிர்ணயிக்கின்றனர். சாதாரணமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தால் அது பாட்டுற்கு சென்று கொண்டே இருக்கும். இதை "தடையற்ற நீரோட்டக் காலம்' என்கின்றனர். இதில் தேங்கி நிற்பது கிடையாது. தடையின்றி ஓடும். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் காலம். இதை "ரன்னிங் ஸ்டேட்' என்கின்றனர். அந்த நேரத்தில் சிக்னல்களில் மிகக் குறைந்த வினாடிகளை நிர்ணயிக்கின்றனர். அடுத்தது, "ஸ்லோரன்னிங் ஸ்டேட்' போதுமான சரிவு இல்லாத பாதையில் தண்ணீர் செல்லும் போது மிகவும் மெதுவாக செல்லும். இதை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டே இருக்கும் நிலை இது. இந்த நிலை காலை 8 மணி வரை, இரவு 7 மணிக்கு பின்னர் உள்ள நிலை. இந்த நேரத்தில் "பீக் அவர்' நேரத்தில் பாதியை நிர்ணயிக்கின்றனர்.
அடுத்தது "ஸ்லாக்கிங் ஸ்டேட்' அதாவது தேங்கியிருக்கும் நிலை. தண்ணீர் செல்ல முடியாமல், ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கியிருப்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால், போக்குவரத்து தேக்க நிலையை அடை கிறது. அப்போது ஒவ்வொரு திசையில் இருந்தும் ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான், "பீக் அவர்' எனப்படும் காலை, மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
எனவே, சிக்னலின் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித் தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கின்றனர். சிக்னலில் காத்திருக்கும் போது, இனிமேல், அவர்கள் இஷ்டத்திற்கு நேரத்தை வைத்து விடுகிறார்கள் என்று புலம்ப மாட்டீர்கள் தானே!

ஊசி போட்டுக்கலாம் - வலிக்காது!
ஊசி போடுவது என்றால் சிலருக்கு மிகவும் அலர்ஜியாக இருக்கும். இதற்கு நிவாரணியாக வலி தெரியாமல் ஊசி மூலம் உடலில் மருந்து செலுத்தும், "லேசர்' அடிப்படையிலான நவீன முறையை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கண்களால் பார்க்க முடியாத குப்பியில் (மைக்ரோஸ் கோபிக் ஜெட்) மருந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும். இது ஊசி மூலம் உடலில் செலுத்தும்போது, எந்தவிதமான வலியும் ஏற்படாது.

பண்ணுங்க மெழுகுவர்த்தியை கூல்!
கரண்ட் கட்டாகும் போது நமக்கு நண்பனாய் இருந்து உதவுவது மெழுகு வர்த்திகள். ஏன் ஆலயத்தில் ஆண்டவருக்கு ஏற்றி வழிபடவும் அது உதவுகிறது. மெழுகுவர்த்தி நின்று நிலைத்து ஒளி விட்டால் நன்றாக இருக்கும். மெழுகுவர்த்தியை ஏற்றுவதற்கு முன் சுமார் 3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு அதை ஏற்றி வைத்தால் மெழுகு உருகி பக்கவாட்டில் வழியாமல் இருக்கும்.
கரண்ட் கட் ஆகும்போது தைரியமாக எந்த இடத்திலும் அந்த மெழுகுவர்த்தியை ஏற்றலாம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X