யார் இவர்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2014
00:00

இப்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இருக்கிறது; நல்ல காற்றோட்டம் இருக்கிறது. நோயாளிகளைக் கவனிக்க நர்ஸுகள் இருக்கின்றனர். அங்கேயே உணவு கொடுக்கின்றனர். இன்னும் பல வசதி களை செய்து கொடுக்கின்றனர். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாதிரி வசதி களையெல்லாம் மருத்துவமனையில் காண முடியாது. இருட்டு அறைகளில் நோயாளிகளைப் போட்டு வைப்பர். சரியாகக் கவனிக்க மாட்டார்கள். மருத்துவமனைக்கு போனாலே, சுடு காட்டுக்குப் போனது போலத்தான்.
அந்தக் காலத்து நர்ஸுகளுக்குப் படிப்பு வாசனை கிடையாது. அவர்களில் அநேகர் மிகவும் கேவலமாக நடந்து கொள்வர். நோயாளிகளிடம் உள்ள பொருள்களைத் திருடிக் கொள்வர். நோயாளிகளைக் கொடுமைப்படுத்துவர். மது அருந்துவர். இப்படிப்பட்ட காலத்தில் யாராவது நர்ஸுகளைக் கண்டாலே, சிலர் நையாண்டி செய்வர். சிலர் தலையில் அடித்துக் கொள்வர்.
நர்ஸுகள் என்றாலே மிகவும் மோசமானவர்கள் என்று நினைக்கும் அந்தக் காலத்தில், ஒரு சிறுமி நர்ஸாக வேண்டுமென்று நினைத்தாள். நினைத்ததோடல்ல... நர்ஸ் போலவே நடித்தும் வந்தாள். அவள் சாதாரணச் சிறுமியல்ல; பணக்காரச் சிறுமி! கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி!
அவள் விளையாட்டுப் பொம்மைகளை வைத்து விளையாடுவதே வேடிக்கையாக இருக்கும். மாப்பிள்ளை, பெண் விளை யாட்டோ, சாமி விளையாட்டோ விளையாட மாட்டாள். அந்தப் பொம்மைகளை நோயாளிகளாக வைத்து விளையாடுவாள். படுக்கைகள் தயாரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றில் படுக்க வைப்பாள். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த நோயாளிகளைக் கவனிப்பாள்.
இந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம் அவளுடைய அக்காளுக்குப் கோபம், கோபமாக வரும். கோபத்தில் அவள் அந்த நோயாளிப் பொம்மைகளைத் தூக்கி வீசி எறிந்து விடுவாள். பாவம், அந்தச் சிறுமி அலறிக் கொண்டே ஓடிப்போய் அந்தப் பொம்மைகளை எடுத்துக்கொண்டு வருவாள்.
"ஐயோ, உனக்கு இந்தக் கையில் அடிபட்டு விட்டதா? அந்தக் காலில் அடிபட்டு விட்டதா?' என்று கேட்டுக் கோண்டே அந்தப் பொம்மைகளுக்குக் கட்டுக் கட்டுவாள்.
இப்படிச் சிறுவயதிலேயே நர்ஸாக நினைத்த அந்தச் சிறுமிதான் பெரியவளானதும் மருத்துவமனைகளும், நர்ஸுகளும் முன்னேறப் பெரும்பாடுபட்டாள். அவள் இல்லாவிட்டால், இப்போது இருக்கும் நிலையில் மருத்துவமனைகளையோ, நர்ஸுகளையோ காண முடியாது.

விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அம்மையார்தான் அந்த சிறுமி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X