எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2014
00:00

எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன. இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது. 6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.
இவற்றில் Bitdefender Internet Security 2014, 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை Kaspersky Lab Internet Security 2014 பெற்றுள்ளது. Avira Internet Security 2014, 17.5 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அடுத்ததாக FSecure Internet Security 2014 (16.5), BullGuard Internet Security 14.0 (15.5), Trend Micro Titanium Maximum Security 2014 (15.5), Panda Security Cloud Antivirus FREE 2.3 (15.5), AVG Antivirus Free Edition 2014 (15), Symantec Norton Internet Security 2014 (15), McAfee Internet Security 2014 (14.5), ஆகியவை இடம் பெறுகின்றன.
Bitdefender and Kaspersky ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.
AVTest ஆய்வு நிறுவனம், வேறு சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும். எனவே இங்கு காட்டப்படவில்லை.
இது ஒரு நிறுவனம் நடத்திய சோதனைகளின் முடிவே. பல வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதாக நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் அவற்றுடனே தொடரலாம். அதில் சிக்கல் ஏற்படுகையில், மேலே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்தாலும், அவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமான செயல்பாடாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar - Salem,இந்தியா
30-ஜன-201418:15:33 IST Report Abuse
Sekar இதிலும் நிறைய குறைபாடுகள் உள்ளன. நான் 2007ல் இருந்து உபயோகிக்கின்றேன் . 4 தடவை அது வைரசை உள்ளே விட்டதால் என் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி விட்டது. நமது பைல்களை எக்ஸ்டர்னல் டிஸ்கில் வைத்து வேலை செய்வது நல்லது
Rate this:
Share this comment
Cancel
jagan - chennai  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-201423:17:30 IST Report Abuse
jagan mcafee won't scan all virus. I lost my files because of McAfee
Rate this:
Share this comment
Cancel
Kumaran mk - Sivakasi,இந்தியா
27-ஜன-201407:12:28 IST Report Abuse
Kumaran mk நல்ல தகவல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X