கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2014
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதில் உள்ள ஐகான்களில் ஒன்றின் படத்தை மாற்ற விரும்புகிறேன். ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல மாற்றி இருக்கிறேன். ஆனால், இங்கு அந்த வழிகள் பலனளிக்கவில்லை. எங்கு பிரச்னை உள்ளது? இதற்கான தீர்வு என்ன?
-ஆ.சிவகுமார், மதுரை.
பதில்:
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் அனுமதிக்கிறது என்பதில் அடங்கியுள்ளது. நீங்கள் இதனைக் கவனித்திருக்கலாம். சில ஐகான்கள் பயனாளர்களைத் தாங்களாகவே மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும். சில, இதற்கு அனுமதி அளிப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, விண்டோஸ் 7, போல்டர்கள் மற்றும் ஷார்ட்கட் ஐகான்களை மட்டும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.
இதனால், நீங்கள் விரும்பும் ஐகான்களை மாற்றவே முடியாது என்று அர்த்தமல்ல. அதற்கு சில வேலைகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். முதலில் அதற்கான ஷார்ட்கட்களை உருவாக்க வேண்டும். புதிய புரோகிராம் ஒன்று இன்ஸ்டால் செய்திடும்போது, விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில், ஒரிஜினல் புரோகிராமின் ஐகானை அனுமதிப் பதில்லை. அதற்குப் பதிலாக, அதற்கான ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கிப் பதிக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்திற்காக, இந்த ஷார்ட்கட் இல்லை எனில், அதனை உருவாக்கலாம்.
ஸ்டார்ட் மெனு திறந்து, "Computer” என்பதில் கிளிக் செய்திடவும். எந்த புரோகிராமிற்கு ஷார்ட் கட் உருவாக்க வேண்டுமோ, அந்த போல்டருக்குச் சென்று புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஐகான் மாற்ற வேண்டும் எனில், "C:” ட்ரைவ் சென்று, "Program Files” தேர்ந்தெடுக்கவும். பின் அங்கு "Mozilla Firefox” தேர்ந்தெடுக்கவும். எந்த புரோகிராம் ஐகானை மாற்ற விருப்பமோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். அடுத்து "Create Shortcut.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அப்போது, விண்டோஸ் அந்த இடத்தில் ஷார்ட் கட் உருவாக்க முடியாது என ஓர் எச்சரிக்கை செய்தி காட்டப்படும். இந்த பெட்டிச் செய்தி கிடைத்தால், தானாக ஷார்ட் கட் உருவாக்க்கும் வகையில் "Yes” என்பதில் கிளிக் செய்திடவும். பெட்டிச் செய்தி கிடைக்காவிட்டால், புதிய ஷார்ட்கட் ஐகானில் கிளிக் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பிற்கு இழுத்து வரவும். இந்த விண்டோவினை மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப்பிற்கு மீண்டும் வரவும். புதிய ஷார்ட் கட் மீது ரைட் கிளிக் செய்து "Properties” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். "Shortcut” என்ற டேப் சென்று, "Change Icon” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இந்த ஐகானை மாற்றலாம். ஏற்கனவே இங்கு கிடைக்கும் ஐகானைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஏற்கனவே வேறு ஒரு இடத்தில் ஐகானுக்கான படம் இருந்தால், அங்கு சென்று அதனைத்தேர்ந்தெடுத்துஅமைக்கலாம்.
அப்படியானால், டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin போன்றவற்றிற்கான ஐகானை மாற்ற முடியாதா? என்ற கேள்வி வரலாம். தாராளமாக மாற்றலாம். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Personalize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் விண்டோவின் இடது புறத்தில் "Change Desktop Icons” உள்ள என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எந்த ஐகானை மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து, பின்னர் "Change Icon” என்பதில் கிளிக் செய்திடவும். எந்த படத்தினைக் கொண்டு மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து, பின்னர் "Apply” என்பதில் கிளிக் செய்தால், மாற்றப்பட்டுவிடும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டை எடிட் செய்கையில், அதற்கு செலவான கம்ப்யூட்டர் நேரத்தினை, அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அமைக்க முடியுமா? அதற்கான வழி என்ன?
எச். ஜலாவுதீன், காரைக்கால்.
பதில்:
வேர்ட் பைல் ஒன்றில் எவ்வளவு நேரம் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்பதனைத்தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பதால், நீங்கள் கேட்பதனை அமைக்கலாம். நீங்கள் கம்ப்யூட்டர் நேரம் என்று கேட்டுள்ளீர்கள். வேர்டைப் பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்தது முதல், அதனை எடிட் செய்திடும் நேரமாகவே எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்தினை டாகுமெண்ட்டில், நிமிடங்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
1. எங்கு எடிட் டைம் இடைச் செருகப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனுடைய Insert டேப்பினை டிஸ்பிளே செய்திடவும்.
3. Text groupல், Quick Parts டூலில் கிளிக் செய்திடவும். பின்னர் Fields என்பதில் கிளிக் செய்திடவும்.வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Date and Time என்பதனை Categories பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து கிடைக்கக் கூடிய பீல்டுகளிலிருந்து EditTime என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் அருகே வலது பக்கத்தில், எண்களாக இருந்தால் என்ன பார்மட்டில் வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம்.
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கேட்டபடி, வேர்ட் டாகுமெண்ட்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட எடிட் டைம் பதியப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். திரையில், டாஸ்க் பார் வலது ஓரமாக, இணைய இணைப்பினைக் காட்டும் வகையில் ஐகான்கள் காட்டப்படும். அவை இப்போது காணப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? எப்படி அவற்றை மீண்டும் பெறுவது?
கே.சுந்தர வள்ளி, திருப்பூர்.
பதில்:
இணைய இணைப்பினைக் காட்டும் கம்ப்யூட்டர் ஐகான்களை நோட்டிபிகேஷன் ஐகான் என அழைப்பார்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால், உங்கள் செயல்பாட்டின் காரணமாக மறைக்கப்பட்டிருக்கலாம். டாஸ்க்பாரில், வலது மூலையில், சில ஐகான்களுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மேல்நோக்கிய அம்புக் குறி இருக்கும். அதனைக் கிளிக் செய்தால், செயல்பாட்டில் இருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் காட்டப்பட்டு, கீழாக customize எனத் தரப் பட்டிருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Network என்பதைக் கவனிக்கவும்.இதன் எதிரே "Show icons and notifications” என்று உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் நெட்வொர்க் ஐகான் காட்டப் படும்.
இப்போதும் அவை காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் சென்று Network Connections என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நெட்வொர்க் இணைப்புகளும் காட்டப்படும். அதில் ஒன்றில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் திரையில் Show icon in notification area when connected என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி, இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், இந்த ஐகான் காட்டப்படும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறியுள்ளேன். இதில் உருவாக்கப்படும் பைல்கள், ஸ்கை ட்ரைவில் தானாக சேவ் செய்யப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், அப்படித் தெரியவில்லையே?
கே. நீரஜா, கோவை.
பதில்:
விண் 8 சிஸ்டத்தில், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் கட்டணம் செலுத்தி வாங்கும்போதே, குறிப்பிட்ட அந்த உரிமத்திற்கு என ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இடம் ஒதுக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் அதில் சேவ் செய்து ஸ்டோர் செய்யப்படுகிறது. தொடர்ந்து நீங்கள் பைல்களைத் திருத்துகையில், அப்டேட் செய்யப்படுகிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உருவாக்கும் பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தும், விண் 8 சிஸ்டம் பயன்படுத்தும் எந்த சாதனத்தின் வழியாகவும் பெற்று பயன்படுத்தலாம். இந்த வழிமுறையை ("Fetching”) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. தமிழில் "தருவித்தல்' என அழைக்கலாம். ஸ்கை ட்ரைவில் நாம் கட்டாயமாக நம் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டியதில்லை. நாம் விரும்பினால் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் இணைய தொடர்பில் இல்லாமல், விண் 8 சிஸ்டத்தில் பணி புரிந்தால், நீங்கள் உருவாக்கும் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேமிக்க முடியாதே. அதுதான், உங்களைப் பொறுத்தவரை நடந்து வருகிறது. நீங்கள் விருப்பப்பட்டால், ஸ்கை ட்ரைவினை இலவச ஸ்டோரேஜ் சிஸ்டமாகப் பயன்படுத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் வாங்கினேன்.இதில் ஏன் டாஸ்க் பார் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்ததைக் காட்டிலும் பெரிதாக உள்ளது. மாற்ற முடியுமா?
என். கல்யாண சுந்தரம், மதுரை.
பதில்:
இதனைத் தாங்கள் விரும்பும் வகையில், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தபடி மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock taskbar என்று இருப்பதில் டிக் அடையாளம் இருந்தால் நீக்கிவிடவும்.இனி, டாஸ்க்பாரின் மேலாக உள்ள கோட்டின் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். கர்சர் இரு அம்புக் குறி கொண்ட அடையாளமாக மாறும் வரை கோட்டின் மீதாக சுழற்றிச் செல்லவும். மாறிய பின்னர், அதனைக் கீழாக அல்லது மேலாக இழுத்து, டாஸ்க்பாரின் அகலத்தைத் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். தேவையான அளவில் வைத்தவுடன், மீண்டும் டாஸ்க்பாரின் மீது ரைட் கிளிக் செய்து, Lock taskbar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Hilal - Shumaysi,இந்தியா
28-ஜன-201415:57:44 IST Report Abuse
Mohammed Hilal toshiba sateiilite கம்ப்யூட்டர் c660 ரெகவர் cd எந்த வெப் அட்ரஸ் இல் கிடைக்கும். please s E mail to mdhilal79@gmail.com
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X