கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
00:00

கேள்வி: போட்டோக்கள் அடங்கிய பைல்களை மூடிய பின்னரும், அவற்றின் சிறிய தம்ப் நெய்ல் வடிவங்கள் தெரியும் படி இருக்க விரும்புகிறேன். இதன் மூலம் எந்த படங்கள் எந்த பைல்களில் பதியப்பட்டுள்ளன என்று அறிவது எளிதாக இருக்குமே? இதனை எப்படி அமைப்பது?
என். பிரகாஷ், சென்னை.
பதில்:
பைல்கள், அவற்றில் உள்ளனவற்றைச் சிறிய படங்களாக, தம்ப்நெய்ல்களாக, காட்டும் வகையில் அமைத்திட, கண்ட்ரோல் பேனலில் சில செட்டிங்குகளை அமைக்க வேண்டும். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் சர்ச் பார் கட்டத்தில் control panel என டைப் செய்து, கண்ட்ரோல் பேனல் பெறவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில், Appearance and Personalization என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Folder options என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் மேலாக உள்ள View என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Always show icons, never thumbnails” என்ற இடத்தில் கிடைக்கும் செக் பாக்ஸில், டிக் அடையாளம் இருந்தால் நீக்கி விடவும். அடுத்து, நீங்கள் போல்டர்களைக் காண்கையில், அனைத்திலும் தம்ப்நெய்ல் படங்கள் இருப்பதனைக் காணலாம்.

கேள்வி: விண்டோஸ் இயக்கத்தில், ஒரு விண்டோவினை மூடியபின்னர், அடுத்த விண்டோவினைத் திறக்கையில், அது வழக்கமாக இல்லாமல், சிறியதாக இருக்கிறது. நாமாக, அதனைப் பெரியதாக்க வேண்டியுள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? பெரியதாகவே எப்போதும் இருக்க என்ன செய்திட வேண்டும்?
என்.கவிதா, சிதம்பரம்.
பதில்:
அதாவது, அனைத்து விண்டோக்களும் ஒரே அளவில் திறக்கப்பட வேண்டும் என்பது உங்கள் விருப்பம், இல்லையா? நீங்கள் ஒரு விண்டோவினை எப்படி, எந்த அளவில் மூடுகிறீர்களோ, அதே அளவில் தான், அடுத்து திறக்கப்படும் விண்டோவின் அளவும் இருக்கும். எனவே, நீங்கள் சிறிய விண்டோ ஒன்றிலும், பெரியதான, மேக்ஸிமைஸ் செய்யப் பட்ட விண்டோ ஒன்றிலும் செயல்பட்டு, அவற்றை மூடுகையில், முதலில் சிறிய விண்டோவினை மூடி, பின்னர், மேக்ஸிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினை மூடினால், அடுத்து ஒரு விண்டோ திறக்கப்படுகையில், அது இறுதியாக மூடப்பட்ட மேக்ஸிமைஸ் விண்டோ அளவிலேயே திறக்கப்படும். இதற்குப் பதிலாக, சிறிய, மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினை இறுதியாக மூடினால், அந்த அளவிலேயே, அடுத்த விண்டோ திறக்கப்படும்.

கேள்வி: பப் சாப்ட்வேர் என்பது என்ன? அளவில் சிறியதா? இதன் பயன்பாடு என்ன?
சி.மோனிகா சுந்தர், கோவை.
பதில்
: பப் (PUP (short for Potentially Unwanted Program)) சாப்ட்வேர் என்பது, நாம் ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்கையில், அதனுடன் ஒட்டிக் கொண்டு, நம் சிஸ்டத்தில் பதியப்படும் சாப்ட்வேர் ஆகும். இதனைப் பயனாளர் விரும்ப மாட்டார் என்றாலும், அது பதியப்படும். இதனை நாம் மால்வேர் என்று கூற முடியாது. ஏனென்றால், இது போல ஒரு சாப்ட்வேர் பதியப்படுகிறது என மெயின் புரோகிராம் பதியப்படுகையில், நமக்கு அதன் EULA (end user license agreement) மூலம் தெரிவிக்கப்படும். நாம் பெரும்பாலும் இந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தினை முழுமையாகப் படிக்காமல், நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என வேகமாகச் செல்வதால், இப்படிப்பட்ட ஒரு புரோகிராம் பதிவது தெரியாமலே இருக்கிறோம். இந்த வகை புரோகிராம்களை adware, spyware, crapware போன்ற பெயர்களால் அழைக்கின்றனர். பொதுவாக, இந்த வகை புரோகிராம்கள், நமக்குக் கூடுதல் வசதிகளைத் தருவதாகவே இருக்கும். ஆனாலு, சில கூடுதல் வசதிகள் நமக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். அப்படி இருந்தும், இவை நம் தோளில் அமர்ந்து கொண்டு தொல்லை தரும் சின்னக் குழந்தை போலச் செயல்படும்.

கேள்வி: சென்ற வாரம் எச்.பி.லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். நான் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை, ஸ்டார்ட் மெனுவில், விண்டோஸ் 7ல் இருப்பது போல, வைத்துப் பயன்படுத்த முடியுமா? வழி காட்டவும். உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
கா. கிருஷ்ண குமார், கோவை.
பதில்:
இதென்ன நம்பிக்கை வைத்து கேள்வி அனுப்புவது! பலருக்குப் பயன்படும் வகையிலான கேள்வி என்றால், எந்த நம்பிக்கையும் காட்டப்படாமலேயே பதில் கிடைக்கும். இனி, உங்கள் விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள், தானாகவே, விண் 8ல், மூன்றாவது செட் அப்ளிகேஷன் டைல்ஸ்களில் காட்டப்படும். அவை காட்டப்படவில்லை என்றால், அண்மையில் திறந்து இயக்கப்பட்ட புரோகிராம்களைக் காட்டும் வகையில், செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்குக் கீழே தரப்பட்டுள்ள வழிகளைக் கையாளவும். விண் 8 இண்டர்பேஸில், Desktop என்பதில் கிளிக் செய்திடவும். திரையின் கீழ் பகுதியில் உள்ள டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது Properties என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Jump Lists என்ற டேப்பில் கிளிக் செய்து, இங்கு கிடைக்கும் "Store recently opened programs” என்ற பாக்ஸில், டிக் மார்க் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும். தொடர்ந்து Apply என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் அண்மையில் பயன்படுத்திய புரோகிராம்கள் அனைத்தும் காட்டப்படும்.
இந்த வேலை எல்லாம் செய்வதற்குப் பதிலாக, நான் ஒன்றை உங்களுக்குப் பரிந்துரை செய்யட்டுமா? Classic Shell என்ற இலவச புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து பயன்
படுத்துங்கள். இந்த அருமையான, பல பயன்கள் தரும் புரோகிராம் குறித்த விரிவான விளக்கத்தினை http://www.worldstart.com/classicshell turnwindows8intowindows7xp/ என்ற இணைய தளத்தில் பெறலாம்.

கேள்வி: விண்டோஸ் 8.1க்கு மாறிவிட்டேன். இதில் போட்டோ ஒன்றினை டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட் படமாக அமைப்பது எப்படி? என விளக்கவும்.
என்.கவிதா விநோத், மதுரை.
பதில்:
சரியான கேள்வி. விண்டோஸ் 8ல், போட்டோ ஒன்றில் ரைட் கிளிக் செய்து, அதனை டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். ஆனால், அந்த வசதி விண் 8.1லும் இருக்க வேண்டும். ஆனால், இருப்பதாகத் தெரியவில்லை, அல்லவா? இந்த மர்மத்தை நீக்குவோம்.
நீங்கள் முதலில் டெஸ்க்டாப் மோட் நிலைக்குச் செல்ல வேண்டும். அங்கு இந்த போட்டோவினைத் திறக்க வேண்டும். மெட்ரோ அல்லது மாடர்ன் ஸ்டைல் போட்டோ அப்ளிகேஷன் மூலமாகத் திறக்கக் கூடாது. டெஸ்க்டாப் நிலையில், போட்டோ திறந்த பின்னர், அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் நீங்கள் விரும்பும் setasdesktop பங்சன் கிடைக்கும்.
போட்டோ ஒன்றை, உங்கள் லாக் ஸ்கிரீனின் போட்டோவாக அமைக்க வேண்டும் எனில், மெட்ரோ ஸ்கிரீனில் உள்ள போட்டோ அப்ளிகேஷனுக்குச் செல்லவும். அங்கு நீங்கள் விரும்பும் போட்டோவில் Set as option என்ற ஆப்ஷனைப் பெறலாம். இங்கு இதனை Lock screen image ஆக அமைக்க முடியும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து மாறிவிட்டேன். விண்டோஸ் 7 கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்துகிறேன். டெஸ்க்டாப்பிற்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்பியில், ஐகான் ஒன்று இருந்தது. ஆனால்,விண்டோஸ் 7 தொகுப்பில், இந்த ஐகானை எப்படி, எங்கு அமைத்து, டாஸ்க்பாரில் கொண்டுவந்துவிடுவது எனத் தெரியவில்லை. டெஸ்க்டாப்பிற்கு எளிதாகச் செல்ல முடியுமா?
கே.எல்.நம்மாழ்வார், ஸ்ரீரங்கம்.
பதில்:
நல்ல கேள்வி. விண்டோஸ் 7க்கு வருபவர்கள்,முதலில் பெறும் தடுமாற்றம் டெஸ்க்டாப்பிற்கான வழி குறித்துத்தான். அதற்கான ஷார்ட் கட் வழியை நாம் அமைக்கச் சிரமப்பட வேண்டாம். சிஸ்டம் தானாகவே, அதனை டாஸ்க் பாரின் ஓரத்தில் அமைத்துள்ளது. உங்கள் மவுஸ் கர்சரை, டாஸ்க் பாரின் வலது மூலைக்கு, நேரம் எல்லாம் காட்டப்படுகிறதே, அதனையும் தாண்டி, எடுத்துச் செல்லுங்கள். அப்போது Show Desktop என்று காட்டப்படும். காட்டப்படுகிறதோ, இல்லையோ, இதில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் கிடைக்கும். சரியா!

கேள்வி: எங்கள் பலசரக்குக் கடையில் கணக்கு வழக்கு பயன்படுத்த கம்ப்யூட்டரில் எக்ஸெல் ஒர்க்புக் அமைக்கிறோம். இதில் ரூபாய்க்கான எண்களுக்கு முன்னர் Rs. எனக் குறியீட்டினை அமைப்பது எப்படி? அது டெக்ஸ்ட்டாக இல்லாமல் இருக்க வேண்டும். நான் ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன்.
என்.சிவதாஸ், சென்னை.
பதில்:
நல்ல யோசனை. நீங்கள் அமைத்துள்ள ஒர்க் ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து Format கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் திறந்து கொள்ளுங்கள். பின் கிடைக்கும் Format Cells என்ற விண்டோவில் Category கட்டத்தில் Currency என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதன் வலது புறம் பல்வேறு கரன்சி வடிவங்கள் தரப்படும். அதில் Rs Urudu என இருக்கும்; அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த செல்லில் எண்களுக்கு முன் Rs இருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rangrajan - chennai,இந்தியா
06-பிப்-201417:53:18 IST Report Abuse
s.rangrajan என்னுடைய விண்டோஸ் 7 எம்.எஸ்.வேர்ட் 2007 ல் தட்டச்சு செய்தவை திடீரெண்று ஒவ்வொரு சொற்களுக்கும் இடையே உள்ள இடைவெளி (space) இல்லாமல் போய் வார்த்தைகள் சேர்ந்தற்போல் இருக்கின்றன. கிட்டத்தட்ட 20 பக்கங்கள் இப்படி மாறி இருக்கிறது. இதை பழையபடி சொற்களுக்கும் / வார்த்தைகளுக்கும் இடையே இடைவெளி வர என்ன செய்யவேண்டும்? ஸ்ரீ.ரங்ராஜன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X