மாஜிக் மந்த்ரா! (15)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2014
00:00

சென்றவாரம்: பத்மாவதி பள்ளி மாணவிகள், மந்த்ரா படிக்கும் பள்ளிக்கு டென்னிஸ் மேட்ச் ஆட வந்தனர். இனி -

""பத்மாவதி ஆசிரியை அவர்களையும், மாணவிகளையும், மகாராஜா பள்ளி ஆசிரியை களும், மாணவிகளும் பெருமையுடன் வரவேற்கிறோம்,'' என்று தன் கைகள் இரண்டையும் நீட்டி வரவேற்றார் தனபாக்கியம். கொழு கொழு என்றிருந்த பத்மாவதி பள்ளித் தலைமை மிஸ், தாம் பெரிய வி.ஐ.பி., என்ற நினைப்பில் அரைக்கண் மூடியபடி கூறினாள்.
""என் பள்ளி மாணவிகள் வெளியிடங்களுக்குச் செல்வதே இல்லை. உங்கள் பள்ளி மாணவிகளிடம் சாமர்த்தியமும் கிடையாது. எங்கள் பள்ளி மாணவிகளின் சந்திப்பும், பழக்கமும் உங்கள் மாணவிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்குமென்று நினைக்கிறேன்!'' என்றார் போலிச் சிரிப்புடன் கர்வம் கலந்தபடி.
புதிய பள்ளியின் மாணவிகள் பேசிக் கொள்ளுவதை கேட்டாள் மந்த்ரா.
""ஏய், இந்தப் பள்ளிக் கூடத்தைப் பார்த்தியா? ஜெயில் போல இருக்குல்லே! மாணவிகளைத்தான் பாரேன் குற்றவாளி களைப் போல, ஒவ்வொண்ணும் நம்மை எப்படி முழிச்சுப் பார்க்கிறார்கள்!'' என்று ஒரு சில மாணவி மற்றவர்களிடம் முணுமுணுப்பதைக் கேட்டாள் மந்த்ரா.
""நாம் பள்ளிக் கூடத்துக்கு வந்திருக்கோமா, இல்லே மிருகக்காட்சி சாலைக்கான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!'' என்று அலட்டிக் கொண்டாள் மற்றொரு பெண். இவர்கள் உரையாடல்களைக் கேட்ட மந்த்ராவுக்கு ரத்தம் சூடாயிற்று.
"விருந்தாளியாக வந்துள்ள இவர்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. தோற்றம் தான் நாகரிகமாக இருக்கு. உள்ளமும், எண்ணமும் அநாகரிகமாக இருக்கே!' இவர்கள் மூக்கை உடைத்து அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்தாள். அதே சமயத்தில் மங்காத்தாவும், வடிவும் அவர்கள் குணத்தின்படி பேசிக் கொண்டனர்.
பத்மாவதி பள்ளியின் கொழு கொழுப் பெண்ணை பார்த்த வடிவு,""மங்காத்தா! அந்த தக்காளி மூஞ்சியிலே ஒரு குத்துவிடணும் போல ஆசையா இருக்கு!'' என்றாள்.
""அதை விடச் சிறப்பான ஒரு திட்டம் போட்டிருக்கேன் வடிவு,'' என்று கண் சிமிட்டினாள் மங்காத்தா.
""இதுகளோட உடைகளையும், பவிசையும் பாத்தியா? எல்லாம் பெரிய இடத்துக் குட்டிங்க. விளையாடு வதற்கு உடைகளை மாற்றிக்கொண்டு இதுகள் கோர்ட்டுக்குப் போனதும், அவர் களுடைய பை களிலும், பாக்கெட் களிலும் கை வைப்போம்...!'' என்றாள்.
""நல்ல யோசனை!'' என்று ஆமோதித்தாள் வடிவு. இவர்கள் பேச்சை, பாவம் மந்த்ரா கேட்கவில்லை.
˜மட்ச் ஆரம்பமாயிற்று. பத்மாவதி பள்ளி மாணவிகளோடு முதல் ஆட்டத்தில் பங்குபெற மந்த்ராவைத் தேர்ந்தெடுத்தார் எலிசபெத் டீச்சர். அவருக்கு மந்த்ராவிடம் எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. மந்த்ராவுக்குச் சங்கடமாக இருந்தது. அவளுக்கு டென்னிஸ் ஆட்டத்தில் அதிக, தேர்ச்சி கிடையாது. "பத்மாவதி பள்ளி தன்னை முதல் ஆட்டத்திலேயே தோற்கடித் தால், தன் பள்ளிக்கு அவமானமாயிற்றே. தான் ஆடத்தொடங்கினாலோ, மறுத்தாலோ இன்னும் கேவலம். இவர்கள் கர்வமாக சிரிப்பார்கள். குட்டிச் சாத்தனை உதவிக்கு அழைப்போம்' என்று துணிவுடன் கோர்ட்டில் இறங்கினாள்.
அது ஒற்றையர் ஆட்டம். எதிர்ப்பக்கம் இருந்த பெண் ரொம்பவும் அலட்டலாக டென்னிஸ் மட்டையை "விர் விர்' என்று காற்றை அடித்து வீசுவதும், குதிப்பதுமாக ஏக ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்தாள்.
மந்த்ரா அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள். தன் டென்னிஸ் மட்டையை உருட்டிக் கொண்டே குட்டிச் சாத்தானை நினைத்துக் கொண்டாள்.
""மாட்ச் விளையாடவா வந்திருக்கே நீ? உன் கர்வத்தை ஒரு மாட்ச் ஸ்டிக்கினால் எரிக்கிறேன் பார்!' என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள். அடுத்த வினாடி, அந்தப் பெண்ணின் கையி லிருந்த டென்னிஸ் மட்டை, பெரிய தீக்குச்சி போல திகு திகு என்று எரிவதைக் கண்டு, அந்தப் பெண் அலறியபடி தன் மட்டையை உதறிவிட்டாள். அதே சமயம் மற்றொரு இடத்திலிருந்தும் வேறு விதமாக அலறல் கேட்டது.
""என் பர்சைக் காணோம்!''
""என் ரிஸ்ட் வாட்ச் மிஸ்சிங்!''
""என் புரூச்சை இங்கே தான் வைத்தேன். எங்கே போயிருக்கும்?''
""ஏய், என் சாக்லேட் பாக்கெட் அத்தனையும் யாரோ அமுக்கிட்டாங்க!''
பத்மாவதி பள்ளி மாணவிகள் விதவிதமான குரல்களில் முறையிட்டுக் கொண்டிருந்தனர். மந்த்ராவின் காதில் இவை விழுந்ததும், அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது. மங்காத்தாவின் கை வரிசைதான் அது என்பதைத் தெரிந்து கொண்டாள். தங்கள் பள்ளிக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் இவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவர்கள் திருடிச் சென்ற பொருள்களை அதனதன் இடத்தில் சேர்க்கும்படி குட்டிச் சாத்தானுக்குக் கட்டளை இடுகிறேன் என்று மந்திரத்தைக் கூறினாள்.
பத்மாவதி பள்ளி மாணவிகளின் உடைமைகளைத் திருடிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த மங்காத்தாவையும், வடிவையும் யாரோ பிடித்து நிறுத்தியது போல சட்டென்று நின்றனர்.
அவர்கள் கால்கள் முன்னேற மறுத்தன. அடுத்த வினாடி அவ்விருவரும் வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோலத் திரும்பி, மாணவிகளின் உடைகள் உள்ள கூடத்தை நோக்கி ஆகாயத்தில் பறந்தனர். திருடுபோன பொருள்களை அதனதன் இடத்தில் கொண்டு வைக்குமாறு கட்டளை இட்டாளல்லவா மந்த்ரா. குட்டிச் சாத்தானுக்கு! அந்தப் பொருள் கள் மங்காவிடமும், வடிவிடமும் தானே இருந்தன. அதை ஒவ்வொன்றாக அவர்களிட மிருந்து அகற்றிக் கொண்டு போய் சேர்ப்பதற்கு சோம்பல் பட்டுக் கொண்டு, அவர்களையே அலாக்காகத் தூக்கி போய் கூடத்தில் போட்டது. அவர்கள் தொப்பென்று விழுந்தனர். விழுந்தது மட்டுமல்ல... இருவரின் மனமும் மாறியது.
""ஏய்... நாம் எடுத்த பொருள்களையெல்லாம் திரும்ப வைத்து விடலாம் வடிவு. நாம் செய்தது நேர்மையற்ற செயல்!'' என்று கூறியபடி திருடிய பொருள்களை அவரவர் உடைகளில் மறுபடி வைத்தனர் மங்காவும், வடிவும். இதை பத்மாவதி பள்ளி மாணவிகள் பார்த்து விட்டனர்
""பார்த்தியா இந்தப் பள்ளிக் கூடத்திருட்டுப் பெண்களின் காரியத்தை!'' என்றனர்.
மந்திராவுக்கு, "பக்' என்றாயிற்று.
""மங்காவையும், வடிவையும் நேர்மையானவர்களாக மாற்ற நினைத்தேன். ஆனா, அவர்கள் செயலை இவர்கள் கையும் களவுமாகப் பார்த்துத் தவறாக எடை போடுகின்றனர். இருக்கட்டும், இதற்கும் ஒரு வழி பண்றேன்!'' என்று கூறி வேக வேகமாக, தாத்தாவை நினைத்தபடி மந்திரம் போட்டாள்.
""ஆனால், நான் இவர்கள் திருட்டைப் பற்றி யாரிடமும் கூறப்போவதில்லை!'' என்றாள் பத்மாவதி பள்ளி மாணவி ஒருத்தி.
""ஏன்னா, நானே இது போல செஞ்சிருக் கேன். நாம் பள்ளி நடத்தும் மிட்டாய்க் கடையில் கடைக்காரருக்குத் தெரியாமல் சாக்லேட்களைத் திருடிப் போயிருக்கிறேன்!''
""நான் கூடத்தான் பரீட்சையில் துண்டுக் காகிதத்தில் குறிப்பு எழுதிப் போய் காப்பி அடித்தேன்!'' என்று மற்றொரு பத்மாவதிப் பள்ளி மாணவி கூறினாள்.
இப்படி பத்மாவதி பள்ளி மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் உள் மனதின் ரகசியங் களை, அவர்கள் விருப்பமின்றியே கூறலாயினர். பத்மாவதி பள்ளி பிரின்சிபலும்தான்.
""உங்கள் பள்ளியைப் பற்றி நாங்கள் குறைவாக மதிப்பிட்டது முட்டாள்தனம்தான். எங்கள் பள்ளி மாணவிகளிடமிருந்து நான் அந்த நிதி, இந்த நிதி என்று ஏகமாக வசூல் பண்றேன். அநியாயம்தான். நாங்க கர்வப்படவோ, பெருøமைப்படவோ என்ன இருக்கு?'' தொங்கிய தலையுடன் சிறுத்துப் போன முகத்துடன் உண்மையை ஒப்புக் கொண்ட பத்மாவதி பள்ளி பிரின்சிபலை வியப்புடன் பார்த்தாள் மகாராஜா பள்ளி பிரின்சிபல் தனபாக்கியம்.
நீலக் கண்கள் பளபளக்க எட்டிப் பார்த்து, மீசை குலுங்க, "மியாவ்' என்று குரல் கொடுத்த தாத்தாவைப் பார்த்து கண் சிமிட்டினாள் மாஜிக் மந்த்ரா.
- மாஜிக் தொடரும்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X