தாரா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2014
00:00

தாராபாய் என்பவர் தோங்க் நாட்டின் இளவரசி. அவளுடைய தந்தை ராய் ஒரு வீரமிக்க ராஜபுத்திர அரசன். அவர் நிர்வாகத் திறமைமிக்கவர். நாட்டு மக்களின் பால் அன்பும், அக்கறையும் கொண்டவர்!
தனது ஒரே மகளான தாராபாயை போர்க் கலைகளில் ஈடுபடுத்தி, அவளைத் திறமை மிக்கவளாக மாற்றினார். தனக்குப் பின், தன்னுடைய நாட்டை ஆள்வதற்குத் தகுதியானதொரு வாரிசாக அவளை உருவாக்கினார்.
தாராபாய்க்கு வயது பன்னிரண்டு இருக்கும்...!
அப்போது...!
ஆப்கானிஸ்தானியர் தோங்க் நாட்டின் மீது முற்றுகையிட்டனர். மன்னர் ராய் சர்தான் தோற்கடிக்கப்பட்டார். தலை நகரத்தை விட்டுப் புறப்பட்டு, பீடோர் என்னுமிடத்தை அடைந்தார். அவ்விடத்தில் தலைநகரை நிறுவினார். தன்னுடைய நாட்டை ஆப்கானிஸ்தானியரிடமிருந்து மீட்பதற்கு உறுதி பூண்டார்.
இவையெல்லாம், சின்னஞ்சிறுமி தாராபாயின் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தின. ஆனால், அவள் சோர்ந்து போய்விடவில்லை. தன் தந்தையின் தேசபக்தி உணர்வு அவளுடைய மனதில் வீரத்தைத் தோற்றுவித்தது.
தன் தந்தையுடன் சேர்ந்துகொண்டு போர்க்களம் சென்று, தாய்நாட்டை மீட்க வேண்டும் என்று தாராபாய் உறுதி பூண்டாள். அதனால், அனைத்துப் போர்த் தந்திரங்களையும் கற்கத் தொடங்கினாள்.
விரைவில் தாராபாய் வில் வித்தை, குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளில் தேறினாள். ஒரு இளவரசனைப் போல் உடை அணிந்து கொண்டாள். தன் தந்தையுடன் வேட்டைக்குச் சென்றாள்! தனது மகளின் உறுதி மற்றும் வீராவேசத்தைக் கண்டு தந்தை ராய் சர்தான் பெருமிதம் அடைந்தார்.
ஆப்கானியரை விரட்டி அடித்து நாட்டை மீட்பதற்கான வழிகளில் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டார் ராய் சர்தான். ஆனால், அவரது முயற்சிகள் வீணாயின.
தாராபாய்க்கு அப்போது வயது பதினாறு இருக்கும். தந்தையுடன் போர் முனைக்குச் சென்றாள். ஆனால், அம்முறையும் தோல்வியே ஏற்பட்டது.
நிலைமை இவ்வாறு இருக்கையில்...!
தாராபாய் வயது பதினெட்டை நெருங்கி விட்டாள்! திருமண வயது அல்லவா? ஆம்! அவளை மணம் புரிந்துகொள்வதற்கு ராஜபுத்திர இளவரசர்கள் எத்தனையோ பேர் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தும், போய்க்கொண்டும் இருந்தனர்.
எனவே, தாராபாயின் தந்தை ஒரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். தன் தாய் நாட்டை மீட்கும் புனிதப் போரில், தனக்கு எந்த இளவரசன் உதவி புரிகிறானோ, அவனையே, தான் மணப்பதாக உறுதியாகக் கூறிவிட்டாள் தாராபாய்!
தாராபாய் கூறியதைக் கேட்டு, சுயம்வரத்திற்கு வந்திருந்த இளவரசர்கள் பலரும் எழுந்து சென்றுவிட்டனர். கடைசியில் ஒரே ஒருவன் மட்டும் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவன் யார்? மேவார் நாட்டு இளவரசன் ராணா பிரிதிவிராஜ்தான்!
இளவரசி தாராபாயின் நிபந்தனையை ஏற்றுப் போர்க்களம் சென்று, தோங்க் நாட்டை மீட்டுத் தருவதாக உறுதியளித்தான், ராணா பிரிதிவிராஜ். தாராபாயும் அவனுடன் போர்க்களத்துக்கு வருவதாகக் கூறினாள்!
ஆப்கானியர்களிடம் மிகப் பெரிய படை உள்ளது என்பது ராணா பிரிதிவிராஜ்க்கு நன்கு தெரியும். அதனால், வேறு வழிகளில் தந்திரங்கள் செய்வதன் மூலம் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்று தீர்மானித்தான்!
வலிமையுள்ள ஒரு படையைத் தயார் செய்தான் ராணா பிரிதிவிராஜ். பகைவன் ஏதாவதொரு விழாவில் கலந்து கொண்டு இருக்கும்போது, அவனைத் தாக்குவது என்று முடிவு செய்தான்.
விரைவில் ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. தோங்க் கோட்டையில் ஆப்கானியர் ஒரு விழாவைக் கொண்டாடுவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுதான் சமயம் என்று கருதிய ராணா பிரிதிவிராஜும், தாராபாயும் மாறு வேடத்தில் கோட்டைக்குள் நுழைந்தனர்!
அப்போது...!
அவர்களைக் கண்ட ஆப்கானிய படைத்தலைவர், அவர்களைப் புதியவர்களாக இருக்கலாம் என்று எண்ணினான்!
""யார் இந்தப் புதியவர்கள்?'' என்று கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கி வந்தான் ஆப்கானிய படைத்தலைவன்.
அடுத்த நிமிடம்...!
படைத் தலைவனின் நெஞ்சில் ராணா பிரிதிவிராஜின் வாள் பாய்ந்தது!
தாராபாயின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு, படைத் தலைவனின் தலையில் பாய்ந்து தாக்கியது!
ஆப்கன் வீரர்கள் தாராபாயையும், ராணா பிரிதிவிராஜையும் பிடிக்க முனைந்தனர். ஆனால், அவர்கள் பிடிபடாமல், கோட்டையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
சில நாட்கள் கடந்தன.
வலுவான படையைத் திரட்டிக்கொண்டு ராணா பிரிதிவிராஜும், தாராபாயும் ஆப்கானியரின் படையுடன் மோதினர். ஆப்கன் படையினரைத் தோற்கடித்து, அவர்களைச் சிறைப் பிடித்தனர். தோங்க் நாடு மீட்கப்பட்டது. ராய் சர்தான் மீண்டும் மன்னரானார்.
ராணா பிரிதிவிராஜ்-தாராபாய் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. மங்கை தாராபாய், "வீரமங்கை' என்று மக்களால் போற்றப்பட்டாள். ஒவ்வொருவரும் தேசபக்த உணர்வும், வீரமும் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு வீரமங்கை தாராபாய் முன்னுதாரணமாக விளங்கினாள்!
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X