அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2014
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

எண்களில் மருத்துவம்!
இன்றைய உலகில் மூளையின் செயல்பாடு, உடலின் உழைப்பை வென்று கொண்டு இருக்கிறது. 20 நிமிட யோகா பயிற்சி மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
* ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு பல வகை சக்திகள் தேவைப்படுகின்றன. நாம் உட்கொள்ளும் 1 கப் சிவப்பு அரிசி, ஒரு நாளைக்கு தேவைப்படும் 80 சதவீத மாங்கனீஸை உடலுக்கு தருகிறது.
* தலை என்று இருந்தால், நிச்சயமாக முடியும், பேனும் முளைத்திருக்கும். 5 கிராம் காட்டுச்சீரகத்தை சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து தலையில் பூசி வந்தால், பேன்கள் தலைதெறிக்க ஓடும்.
* நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது எல்லாரும் வைத்து கொள்ளும் ஆசை. அதை நிறைவேற்ற எண்ணற்ற வழிகள் உண்டு. 2300 மில்லி கிராம் அளவுக்கு உப்பை தினசரி குறைத்து கொள்வது நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும்.
இப்பதான் நீண்ட நாள் வாழ்வது, ஆரோக்கியம் கடைப்பிடிப்பது பற்றி பார்த்தோம். இதோ அதற்கு எதிரான செய்தி. இந்தியாவில் ஒரு நாளைக்கு 2500 பேர் புகைப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

சாவிக்கு சென்ட்டா, பூட்டிற்கா?
மனிதர்கள் வாசனைக்காக சென்ட் போடுவர். சாவியும், பூட்டும் சரியாய் வேலை செய்ய துவாரத்திற்கு சென்ட் அடிக்கணும். சாதாரண பூட்டாக இருந்தாலும், கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டு துவாரமாக இருந்தாலும், சரியாக திறந்து மூட முடியவில்லை என்றால், உங்களிடமுள்ள சென்ட் (பெர்ப்யூம்) பாட்டிலிலிருந்து கொஞ்சம் திரவத்தை துவாரங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இனி சுலபமாக திறக்கலாம். எப்படி?

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!
இது, "கோவா புரி (இனிப்பு)' செய்முறை நேரம்!
படி 1: தேவையான பொருட்கள்: மைதா - கால் கப், கோதுமை மாவு - கால் கப், பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், இவை அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
படி-2: தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் - கால் கப், சர்க்கரை இல்லாத கோவா- கால் கப், ஏலக்காய்த்தூள்- 1 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி துண்டுகள் - கால் கப்.
இந்த நான்கையும் ஒரு கடாயில் போட்டு அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கிளறி பூரணமாக செய்து கொள்ளவும்.
படி-3: தேவையான பொருட்கள்: சர்க்கரை -2 கப், தண்ணீர் - அரை கப், தனி பாத்திரத்தில் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்த்து கம்பி பதத்தில் சர்க்கரை பாகு செய்து கொள்ளவும்.
படி-4: முதலில் செய்த மாவை சின்ன சின்ன பூரிகளாக இட்டு, சிறிதளவு பூரணத்தை அதற்குள் வைத்து மூடி, கொழுக்கட்டைகள் போல செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, செய்து வைத்தவற்றை பொன்னிறமாக பொரித் தெடுக்கவும். இவற்றை 5 நிமிடங்கள் சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுத்து, ஒரு தட்டில், தனித்தனியாக இருக்கும்படி வைக்கவும். (ஒன்றன் மேல் ஒன்று வைத்தால் ஒட்டி கொள்ளும்)
என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோபால் - shanghai  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-201418:02:42 IST Report Abuse
கோபால் இந்த கருத்துக்கள் நன்றாக இருக்கிரது. நன்றி அங்கிராசு அண்ணா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X