கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
00:00

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில், பலவகையான சார்ட்களை அமைக்கலாம் என்று படித்தேன். ஒரு வகையில் சார்ட் உருவாக்கிய பின்னர், அதே சார்ட்டினை வேறுஒரு வகைக்கு மாற்ற முடியுமா? அதற்கான வழி என்ன?
என். சுப்பிரமணியன், தென்காசி.
பதில்:
தாராளமாக மாற்றி அமைக்கலாம். முதலில் எந்த சார்ட்டினை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். சார்ட்டின் மீது கிளிக் செய்தால், அது தேர்ந்தெடுக்கப்படும். சார்ட்டினைச் சுற்றி, தேர்ந் தெடுக்கப்பட்டதனைச் சுட்டிக் காட்டும் பார்டர் காட்டப்படும். அடுத்து, ரிப்பனில் டேப் காட்டப்பட வேண்டும். இல்லை எனில், அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Type குரூப்பில் Change Chart Type என்ற டூலின் மீது கிளிக் செய்திடவும். எக்ஸெல் இப்போது Change Chart Type என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த பாக்ஸின் இடது பக்கத்தில் காட்டப்படும் சார்ட் வகை ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுக்கையில், டயலாக் பாக்ஸின் வலது பக்கம் உள்ள தகவல்கள் மாற்றப்படுவதனைக் காணலாம். டயலாக் பாக்ஸின் வலது பக்கம் உள்ள சார்ட் வகை ஒன்றினைத் தேர்ந் தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் விரும்பிய வகையில், தேர்ந்தெடுத்த வகையில் சார்ட் மாற்றம் அடைந் திருக்கும்.

கேள்வி: ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்வது குறித்து முன்பு எழுதியிருக்கிறீர்கள். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இவ்வாறு ரீ பார்மட் செய்தால், அதில் ஏற்கனவே இருந்த வைரஸ், கீ லாக்கர் புரோகிராம்கள், மால்வேர், ஸ்பைவேர் ஆகியவை அழிக்கப்படுமா? சுத்தமாக இவை நீக்கப்படுமா?
டி.எஸ். தமிழ்ச் செல்வி, மேட்டுப்பாளையம்.
பதில்:
நல்ல கேள்வி. வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் இன்னும் பல பெயர்களில் வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரை வந்தடைந்த பின்னர், மிக ஆழமாக, சரியான இடத்தில் ஊன்றிக் கொள்ளும். ரெஜிஸ்ட்ரியில் தன்னைப் பதித்துக் கொள்ளும். சில உடனே இயங்கும். சில நீங்கள் சில கீகளை அழுத்துவதற்காக, சில நாளுக்காகக் காத்திருக்கும். அந்த செயல்பாடு அல்லது நாள் வந்தவுடன், குண்டு வெடிப்பது போல தன் வேலையைக் காட்டும். இதற்குப் பல தீர்வுகள் உள்ளன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள், மிக மென்மையான வைரஸ்களை நீக்கிவிடும். ஆனால், வன்மையான வைரஸ் எனில், அவற்றை அடியோடு நீக்கித்தான் ஆக வேண்டும். அதற்கான ஒரே வழி, ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்வதுதான். அவ்வாறு செய்திடுகையில், இந்த வைரஸ்களும், மோசமான புரோகிராம்களும் அடியோடு நீக்கப்படும். அவற்றின் சுவடு கூட இருக்காது. ஆனால், இவை நீங்கள் உருவாக்கிய பைல்களில், டவுண்லோட் செய்த பைல்களில் இருந்தால், மீண்டும் தலை தூக்கலாம். எனவே, ஹார்ட் டிஸ்க்கினை ரீபார்மட் செய்த பின்னர், பழைய பைல்கள் அனைத்தையும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதனையிட்டு, சிறிய அளவில் சந்தேகம் வந்தாலும், அவற்றை அடியோடு அழிப்பதுதான் நல்லது.

கேள்வி: ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்திப் பயன்படுத்தினேன். திடீரென என் காண்டாக்ட் அல்லது அட்ரஸ் புக் காணப்படவில்லை. எங்கிருந்து இதனைப் பெறுவது?
ஆர். நரசிம்மன், திண்டிவனம்.
பதில்:
நீங்கள் வெப் பிரவுசர் பயன்படுத்தினால், உங்கள் ஜிமெயில் பக்கத்தில், இன்பாக்ஸ்க்கு மேலாக, இடது மூலையில் Mail என்று இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள ஆரோவினைக் கிளிக் செய்திடவும். மெனு ஒன்று கீழாக விரியும். இதில் Contacts என்பதில் கிளிக் செய்திட, நீங்கள் கேட்பது கிடைக்கும்.

கேள்வி: நான் இப்போது ஸ்கைப் வழி என் மகனுடன் பேசப் பழகிக் கொண்டேன். அப்போது திரையில் தோன்றும் காட்சியினை போட்டாவாக எடுக்கிறேன். ஆனால், அந்த போட்டோக்கள் எங்கு சென்று சேவ் செய்யப்படுகின்றன என்று தெரியவில்லை. மை பிக்சர்ஸ், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ், மை டாகுமெண்ட்ஸ் என அனைத்திலும் தேடிவிட்டேன். வழி காட்டவும். நான் பயன்படுத்துவது விண்டோஸ் 7.
ஆ.கார்த்திகேயன், விருதுநகர்.
பதில்:
உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுதல்கள். ஸ்கைப் பயன்படுத்துவது நம் தொலை தூர சொந்தங்களையும், சொந்த பிள்ளைகளையும் பார்த்து உறவாடத்தான். அப்போது எடுக்கப்படும் படங்கள் நாம் எப்போதும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஸ்கைப் தனக்கென ஒரு டைரக்டரி அமைத்துக் கொண்டு, அதில் நாம் எடுக்கும் படங்களைப் பதிந்து வைக்கிறது. இந்த டைரக்டரிக்கும் போல்டருக்கும் செல்ல C:\Documents and Settings\your user name\Application Data\Skype\Pictures என்ற வழியைப்பயன்படுத்துங்கள். இதில் your user name என்பது கம்ப்யூட்டரில் பயனாளராக நீங்கள் அமைத்துள்ள பெயர்.

கேள்வி: இன்டர்நெட்டிற்கு இணையம் என்ற அருமையான பெயர் உலவிவருகிறது. இது ஏதேனும் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? எங்கள் வகுப்புத் தோழர்கள் ஆளுக்கொன்று சொல்லி வருகின்றனர். தெளிவு படுத்தவும்.
எஸ். ஸ்ரீனிவாஸ், சென்னை.
பதில்:
இது இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதில்லை. இந்த சொல்லை முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர், மலேசியா நாட்டைச் சேர்ந்த ராம் குமார். இவர் அங்கு நயனம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருக்கிறார். பின்னர் இந்த சொல் தமிழ் டாட் நெட் என்ற இணைய தளம் மூலம் பிரபலமாகியது. இவை எல்லாம், தமிழ் இணைய முன்னோடிச் செயல்பாடுகள்.

கேள்வி: இணையத்தில் பல அகராதிகள் உள்ளன. பல மொழி அகராதிகளும் உள்ளன. யாராவது அனைத்து மொழிகளுக்கான அகராதிகளை ஒருங்கிணைத்துள்ளனரா? அதாவது எந்த ஒரு மொழிச் சொல்லுக்கும் இணையான எந்த ஒரு மொழி சொல்லும் கிடைக்க வேண்டும். இது இல்லை என்றால், யாராவது ஒருவர் அல்லது ஒரு குழு அமைக்க வேண்டும்.
கே.என். பிரகாஷ், கோவை.
பதில்:
நல்ல சிந்தனை. டிஜிட்டல் உலகில் மட்டுமே இது சாத்தியமாகும் என்று உங்கள் சீரிய சிந்தனையைப் பரவவிட்டு இந்த கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அதற்கு பாராட்டுதல்கள். உங்கள் கேள்வியின் அடிப்படையில், சில நாட்கள், இணையத்தில் உலா வந்து, நீங்கள் விரும்பிய வகையில் ஓர் அகராதி இருப்பதனைக் கண்டறிந்தேன். இதன் இணைய முகவரி http://www.eudict.com/. இது அகராதிகள் பலவற்றின் அருமையான தொகுப்பு. இது பலரின் உழைப்பில் உருவானது. பலர் ஆர்வ மிகுதியால், அகராதிகளைத் தொகுத்துப் பின்னர், சமுதாயத்திற்கு இலவசமாகப் பயன்படுத்தக் கொடுத்துள்ளனர். அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த அகராதிகள் இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் மொத்தம் 408 மொழி இணைகள் உள்ளன. ஒரு கோடியே 12 லட்சம் சொற்களுக்கு மற்ற மொழி பெயர்ப்பு சொற்கள் கிடைக்கின்றன. ஒரு சில மொழி இணைகளில் சில ஆயிரம் சொற்களே உள்ளன. சிலவற்றில் பல லட்சம் சொல் இணைகள் உள்ளன. இதில் உள்ள அகராதி, 2003 ஆம் ஆண்டு முதலே செயல்பட்டாலும், மாபெரும் ஓர் அகராதித் தொகுதியாக, 2005 ஆம் ஆண்டு மே, 9 முதலே இது இயங்கத் தொடங்கியது. இதில் தமிழும் இடம் பெற்றுள்ளது. படத்தில் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் பல்வேறு பொருள் தரப்படுவதைக் காணலாம்.

கேள்வி: திரை மீது படமாகத் தெரியும் கீ போர்டினைப் பெற பல சுற்று வழிகளில் செல்ல வேண்டியது உள்ளது. இதனைப் பெற சுருக்கு வழி உள்ளதா? அல்லது ஷார்ட் கட் கீ ஒன்று தயார் செய்து, திரை மேலாக வைத்துக் கொள்ளலாமா?
கே.சுமலதா, கோவை.
பதில்:
விண்டோஸ் பட்டன் அருகே கிடைக்கும் தேடல் கட்டத்தில் OSK என டைப் செய்து கிளிக் செய்தால், உடனே ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் எனப்படும் திரை கீ போர்ட் கிடைக்கும். இதில் மவுஸ் கொண்டு கிளிக் செய்து சொற்களை அமைக்கலாம்.
நீங்கள் கேட்டுள்ள அடுத்த தேவை ஒரு ஷார்ட் கட் கீ. இதற்கான வழி இதோ. திரையில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New மற்றும் Shortcut மற்றும் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Create Shortcut டயலாக் பாக்ஸில்,கீழே தரப்பட்டுள்ளதை, டைப் செய்திடுக. C:\Windows\System32\osk.exe தொடர்ந்து கிளிக் செய்த பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, உங்கள் ஷார்ட் கட் கீக்கு, பெயரிடச் சொல்லி விண்டோஸ் கேட்கும். பெயர் கொடுத்தவுடன், ஷார்ட் கட் கீ திரையில் இருக்கும். இதனை எளிமையாகவும், விரைவாகவும் பயன்படுத்த, இந்த ஷார்ட் கட் கீயினை டாஸ்க்பாருக்கு அனுப்பலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். டாகுமெண்ட்களில் எடிட் செய்கையில், மினி டூல் பார் ஒன்று காட்டப்பட்டு, டெக்ஸ்ட்டை திருத்துவதில் பிரச்னை தருகிறது. இதனைக் காட்டவிடாமல் செட் செய்திட எங்கு வழி உள்ளது எனத் தெரியவில்லை. அவ்வாறு தோன்றாமல் இருக்க வைத்திட முடியுமா?
ஆ. பரமேஸ்வரன், திருவில்லிபுத்தூர்.
பதில்:
மேலே மெனு சென்று, டூல் பார் இயக்குவதைக் காட்டிலும், இயங்கும் கர்சர் அருகேயே மினி டூல் பாராக நமக்குக் கிடைப்பது நமக்கு வசதிதான். இருப்பினும் தேவை இல்லை எனத் திட்டமிட்டால், இது தோன்றுவதனை நிறுத்தலாம்.
ஆபீஸ் 2007 தொகுப்பில்
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Options கிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4.இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - cuddalore,இந்தியா
16-பிப்-201420:07:30 IST Report Abuse
karthi இன்னும் புதிய கணினி தொடர்பான செய்திகளை வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன் .......இதனை அடுத்த இதழில் வரும் என நம்பிக்கையுடன் காத்துகொண்டு இருக்கிறேன் ......இப்படிக்கு உங்கள் பாசம் உள்ள வாசகர் ......THANK U...>
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X