கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
00:00

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். டச் ஸ்கிரீன் இல்லை. இதில் விண்டோஸ் 8 தொடங் குபோதே, சில அப்ள்கேஷன் புரோ கிராம்களும் தொடங்கிவிடுகின்றன. இவற்றை என் கட்டுப் பாட்டில் கொண்டு வருவது எப்படி? சிலவற்றை நிறுத்த வேண்டும்.
கா.கதிரேசன், சென்னை.
பதில்:
தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் MSConfig புரோகிராமினைச் சற்று மாற்றியுள்ளது. அதனால் தான், உங்களுக்கு, சிஸ்டத்துடனேயே தொடங்கும் புரோகிராம்களை, உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வழிகள் புரியாமல் இருக்கின்றன. மேலும், இதில் ஸ்டார்ட் அப் புரோகிராம் மாற்றுவதற்குண்டான வழிகளும் எடுக்கப்பட்டுள்ளன. கவலைப் பட வேண் டாம். இவை எங்கு சென்று வைக்கப் பட்டுள்ளன என்று அறிந்து கொள்வோம். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு மூலம், விண்டோஸ் 8 தொடங்கும்போதே, எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும் என நீங்கள் அமைக்கலாம்.
1. Charms menu வினைத் திறக்கவும்.இதற்கு உங்கள் திரையில் மேல் அல்லது கீழாக மவுஸைச் சுழற்றவும்.
2. டாஸ்க் மேனேஜரைத் (Task Manager) தேடித் திறக்கவும்.
3. இங்கு Startup டேப்பினைத் தேர்ந் தெடுக்கவும்.
4. ஸ்டார்ட் அப் மெனுவில், தொடக்கத்தில் இயங்க நீங்கள் விரும்பாத புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Disable என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்தினை புதியதாகப் பயன்படுத்தி வருகிறேன். மிக அருமையாகவும் வசதியாகவும் உள்ளது. எனக்கு, நான் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரின் எந்த திறன்களை எல்லாம் பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்ள விருப்பம். அதற்கான வழி என்ன?
கே.ஆர். அனுராதா, கோவை.
பதில்:
விண்டோஸ் 8ல் இதற்கான வசதியினை நேரடியாகப் பயன்படுத்தும் வகையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ளது. நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷயம் மிகவும் நல்லதுதான். அப்போதுதான், கம்ப்யூட்டர், சில அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகையில், ஏன் மெதுவாக இயங்குகிறது என்பதனைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட முடியும்.
1. Charms menu வினைத் திறக்கவும்.இதற்கு உங்கள் திரையில் மேல் அல்லது கீழாக மவுஸைச் சுழற்றவும்.
2. டாஸ்க் மேனேஜரைத் (Task Manager) தேடித் திறக்கவும்.
3. டாஸ்க் மேனேஜரின் கீழாக More Details என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர் Peformance and App History என்ற டேப்பினைப் பயன்படுத்தி, அப்ளிகேஷன் இயக்கம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளவும்.

கேள்வி:எனக்கு ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளது. எனக்கு வரும் மெயில்களை யாரோ முன்னரே படித்தது போல தோற்றம் அளிக் கின்றன. ஆனால், அழிக்கப்படுவதில்லை. வேறு யாரும் என் அக்கவுண்ட்டில் நுழைந்து பயன்படுத்தினார்களா என்று எப்படி அறிவது?
ஆ. சையது மீரான், காரைக்கால்.
பதில்:
இந்த சந்தேகம் பலருக்கு வந்துள்ளது. ஒரு சிலரின் அக்கவுண்ட் அவர்களின் கவனக் குறைவினால், மற்றவர்களுக்குத் தெரியப் போய் இந்த பிரச்னை ஏற்படுகிறது. உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்ட் வேறு யாராலும் திருடப்படவில்லை அல்லது அறியப்பட வில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மெயில் கணக்கினை மற்றவர்கள் பார்த்தார்களா என்றுஅறிய கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் செல்லவும். பின், அதே பக்கத்தில் கீழ் பகுதிக்கு உருட்டிச் செல்லவும். வலது மூலையில் Details என்று ஒரு பகுதி இருக்கும். அதில் கிளிக் செய்திட வும். இங்கு, அந்த நேரத்தில், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில், வேறு ஒரு இடத்தில் இருந்து, இன்னொருவர் உள்ளே நுழைந்திருக்கிறாரா என்பதனை அறியலாம். இதனுடன், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் எப்போதெல்லாம் லாக் இன் செய்யப்பட்டது என்ற தகவல்களும் கிடைக்கும். அப்படி ஏதேனும் தெரிய வந்தால், உடனடியாகப் பாஸ்வேர்டினை மாற்றவும்.
வழக்கமான கம்ப்யூட்டர் இல்லாமல், வேறு கம்ப்யூட்டர்கள் வழியே, அல்லது இணைய சேவை வழியே, உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டால், உங்களுக்கே ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். உடனடியாக, பாஸ்வேர்டை மாற்றுவதே நல்லது. எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இருமுறை நேர்ந்தது. வெளிநாட்டில் இருந்து ஒருவர் என் ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பார்த்துள்ளார். எச்சரிக்கை கிடைத்தவுடன், நான் பாஸ்வேர்டினை மாற்றி னேன். அடிக்கடி இந்த Details மூலம் நம் ஜிமெயில் பார்வையிட்டதை சோதனை செய்வது நல்லது.

கேள்வி: இணைய இணைப்பில் விடீயோ படங்களைப் பார்க்க முற்படுகையில், அது முறையாகத் தொடங்கும் முன்னர், விளம்பர வீடியோ ஓடுகிறது. இதனைத் தவிர்த்து நம் வீடியோவினை நேரடியாகப் பார்க்க முடியுமா? என்ன வழி?
என்.எஸ். கோகிலா ராணி, விருதுநகர்.
பதில்:
இதற்கு நேரடியாக பதில் ஒன்று தரட்டுமா? இது முடியாது. வீடியோவில் நீங்கள் விரும்பும் காட்சி இயக்கப்படுவதற்கு முன்னால் காட்டப்படுபவை prerolls என அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், அவை குறிப்பிட்ட வீடீயோவுக்கு முன் காட்டப் படுகின்றன. இதன் மூலம் தான், இணைய தளங்களுக்கான கட்டணம் செலுத்தப்படு கிறது. இணைய தளம் ஒன்றை அமைத்து, நிர்வகிப்பதற்குப் பல வல்லுநர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தொடர்நது பராமரிக்க செலவு ஆகிறது. வல்லுநர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் பராமரிப்பு செலவினை இது போன்ற வர்த்தக ரீதியான விளம்பரத்திலிருந்து கிடைக்கும் வருமானத் திலிருந்தே சரிக்கட்ட முடியும்.
சில வீடியோ காட்சிகளில், இது போன்ற விளம்பரங்களை புறந்தள்ளி, நேராக நீங்கள் விரும்பும் காட்சிக்கே செல்வதற்கான ஆப்ஷன் தரப்பட்டு, ஓர் அம்புக் குறி காட்டப்படும். அல்லது பட்டன் தரப்படும். அதில் கிளிக் செய்தால், விளம்பரம் நிறுத்தப்பட்டு, நேரடி யான காட்சிக்குச் செல்லலாம். சில வேளை களில், அந்த வீடியோ உள்ள இணைய முகவரியில் மீண்டும் கிளிக் செய்து, இந்த விளம்பரத்தினை முடக்கலாம். அல்லது F5 கீ அழுத்தலாம். ஆனால், இந்த வழி எப்போதும் பயன் தராது.
இந்த முன் உருளும் விளம்பரங்கள் தான், இது போன்று நீங்கள் ரசிக்கும் வீடியோவினை அமைத்துத் தர உதவுகின்றன. எனவே, அவற்றை ஒதுக்காமல் பார்த்துவிடுங்களேன்.

கேள்வி: நான் பொமரேனியன் நாய்க் குட்டி ஒன்றைப் பரிசாகப் பெற்றுள்ளேன். இதனைப் பிரியத்துடன் கண்ணும் கருத்துமாக வளர்க்க உள்ளேன். பலரும் பல அறிவுரைகளைக் கூறு கிறார்கள். இது குறித்த தகவல் தரும் சிறந்த தளம் ஒன்றைக் கூறுமாறு கேட்டுக் கொள் கிறேன்.
என். சிவனேஷ்வர், திருப்பூர்.
பதில்:
இது போன்ற கேள்வியினை இப்போதுதான் முதன் முதலாகப் பெறுகிறேன். இருந்தாலும், உங்கள் ஆர்வம் என்னை இணையத்தில் தேடுமாறு கேட்டுக் கொண்டது. இதோ பதில். பொமரேனியன் என்றில்லாமல், நாய்க் குட்டிகளைப் பிரியத்துடன் நேசித்து வளர்க்கும் அனைவருக்குமாக ஓர் இணைய தளம் உள்ளது. இதன் முகவரி http://aplacetolovedogs.com/. இதில் நுழைந்தவுடன், நீங்கள் தேர்ந்தெடுத்துப் பார்க்கப் பல பிரிவுகள் உள்ளன. அவை Great Dog Pictures, Your Photos, Dog Breeds, Dog Quotes, Dog Stories, Dog Videos, Funny Dogs, and Newsletter. இவை தவிர, என பிரத்யேகமாக சில பிரிவுகளும் உள்ளன. உங்கள் பொமரேனியன் வகை குட்டிகளுக்கென ஒரு பிரிவு இருப்பதனைக் காணலாம். நீங்கள் மட்டுமல்ல, நாய்க்குட்டிகளை வளர்க்கும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய தளம் இது.

கேள்வி: குக்கீகளில் செஷன் குக்கீ (Session Cookie) என்பது என்ன? இது தீங்கு விளை விக்கக் கூடியதா?
சி. சுதாகர் மணி, புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. குக்கிகள் வேண்டுமா? வேண்டாமா? அவை நல்லவையா? கெட்ட வையா? என்று அனைவரும் பேசிக் கொண்டி ருக்கும் நிலையில், இந்த குக்கி பற்றி கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த செஷன் குக்கியை Transient Cookie எனவும் அழைப்பார்கள். இணையத்தில் உலா வருகையில், பிரவுசர்களில் நம் விருப்பங்கள், நாம் பார்க்கும் தளம் குறித்த தகவல்கள் குக்கி பைல்களாக நம் கம்ப்யூட்டரில் பதியப் படுகின்றன. பின்னர் அதே தளங்களுக்குச் செல்கையில், நம் விருப்பத்திற்கேற்ப தளங்கள் காட்டப்படுவது எளிதாக அமையும். அந்த வகையில் செஷன் குக்கி என்பது, ஒரு தற்காலிகக் குக்கி. இவை அந்த நேரத்தில் பிரவுசர் திறந்திருக்கும் வரையில் மட்டுமே கம்ப்யூட்டரில் இருக்கும். பிரவுசர் மூடப் பட்டவுடன், இதுவும் மறைந்துவிடும். அது அழிக்கப்பட்டுவிடும். மற்ற வகை குக்கிகள் எல்லாம், கம்ப்யூட்டரிலேயே பதியப்பட்டு இருக்கும். சில புரோகிராம்கள் கொண்டே அவை அழிக்கப்பட முடியும். உடனேயே இவை அழிவதால், இவற்றல் எந்த தீங்கும் இல்லை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.R.Krishnan - Bangalore,இந்தியா
18-பிப்-201408:33:22 IST Report Abuse
V.R.Krishnan இணைய தளத்தில் வீடியோ பார்க்கும்போது விளம்பரம் தடை செய்ய வேண்டும் என்றால் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் ப்ரௌசருக்கு AD BLOCK PLUS என்ற எக்ஸ்ட்டேன்சியன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். நான் என்னுடைய ப்ரௌசெரில் உபயோகபடுத்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X