குடும்ப ஒற்றுமை பேணுவோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2014
00:00

பிப்., 27-மகா சிவராத்திரி

சக்திக்கு நவராத்திரி போல, சிவனுக்கு சிவராத்திரி. இந்த விரதம் மிகவும் எளிமையானது; அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது நன்மை தரும்.
வேடுவன் ஒருவன் வேட்டைக்கு வந்தான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு போனால், குடும்பத்தினர் எதை சாப்பிடுவர் என்று, ஏதேனும் மிருகம் சிக்கும் வரை காட்டிலேயே இருக்க முடிவெடுத்தான் வேடன். அதனால், ஒரு மரத்தின் மீதேறி, விடிய விடிய கண்விழித்து அமர்ந்திருந்தான். அவனது குடுவையில் சிறிது தண்ணீர் இருந்தது. அவனது அசைவில், அவ்வப்போது சிறிது கீழே கொட்டியது. அவன் அமர்ந்திருந்த மரத்தின் இலைகளும் உதிர்ந்து விழுந்தன.
விடிந்து விட்டது. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம்...அதன் மேல், குடுவையில் இருந்து கொட்டிய நீர் வழிந்திருந்தது. அவன் அமர்ந்திருந்த வில்வமரத்தின் இலைகள், லிங்கத்தின் முன் விழுந்து கிடந்தது. கருணை மிக்க சிவபெருமான், இந்த தற்செயல் நிகழ்வைக் கூட, தனக்கு நடந்த அபிஷேகமாகவும், பூஜையாகவும் எடுத்துக் கொண்டார். அந்த வேடன் மரத்தில் அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி. எனவே, அவன் மறுபிறவியில், குகன் என்னும், வேடுவ குலமன்னனாக பிறந்து புகழ் பெற்றான்.
இதனால் தான், சிவராத்திரியன்று கண்விழித்து, வில்வ இலை தூவி, அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டால், சகல பாக்கியங்களையும் அடையலாம் என்கின்றனர். அன்று, சிவன் கோவில்களில், நான்கு ஜாமகால பூஜைகள் நடைபெறும்.
சிவராத்திரி அன்று, அதிகாலையில் நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று. 'நமசிவாய' அல்லது 'சிவாயநம' என, பஞ்சாட்சர மந்திரங்களை ஓத வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது; நோயாளிகள், முடியாதவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். மாலையில், சிவாலயத்திற்கு வில்வ இலை கொண்டு செல்வதுடன், இரவு மற்றும் கடைசி கால பூஜை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும். மறுநாள் காலையில், அன்னதானம் செய்த பின், சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவனுக்கு பல வடிவங்கள் உண்டு. நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள், மனஅமைதியும், ஞானமும் பெறுவர். வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால், முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கி, தைரியம் உண்டாகும். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராக துதித்தால், மனமகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்தால், வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நம் குலதெய்வத்தை மறந்து விடக் கூடாது. ஏனெனில், நம் முன்னோர் வழிவழியாக அந்த தெய்வத்தை நமக்கு அடையாளம் காட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். குலதெய்வத்தை வழிபட மிகச்சிறந்த நாள் மகாசிவராத்திரி. குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதற்கு முன், பக்தர்கள் காப்புக்கட்டி, மகா சிவராத்திரி அன்று, கோவிலுக்குச் சென்று, சிறப்பு பூஜை செய்வர். அன்றைய தினம் குடும்பத்திலுள்ள அத்தனை சகோதர, சகோதரிகளும் ஒன்றுகூடி, பூஜை செய்வர். இதனால், முன்னோரின் ஆசி கிடைக்கிறது. தற்காலத்தில், குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன. கூட்டுக் குடும்பங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. சிவராத்திரி நன்னாளிலாவது, நம் குடும்பத்தாருடன் குலதெய்வம் கோவிலுக்கும், சிவாலயங்களுக்கும் சென்று, குடும்ப ஒற்றுமைக்கு வித்திடுவோம்.

தி.செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா
24-பிப்-201420:22:44 IST Report Abuse
P.Narasimhan எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகணும் சாமி, இப்ப இருக்கற காலகட்டத்தில குடும்ப ஒற்றுமைக்கு காரணம் ஆண்களா? பெண்களா?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
23-பிப்-201405:33:44 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என் வீட்டில் கோவில் செல்வதே இல்லே . ஆனால் பூஜைகல் எல்லாம் செய்வோம் என் கணவருக்கு கோவில்களுக்கு அதுவும் கூட்டம் அதிகமா இருந்தால் போகவே மாட்டாரு . தினம் 3தரம் (காலை மதியம் மாலை)சந்தியாவந்தனம் செய்வார் சுலோகங்கள் சொல்லுவார் , அவ்ளோதான் ஆரவாரமா எதுவும் செய்வது பிடிக்காது . நான் பங்க்கலூர்லெ இருக்கச்ச தினம் கோவில் போவேன் , இப்போ கோவைலே இருக்கோம் ஒரு ஹோம் லே அருகிலே கோவிலே இல்லே ,அது எனக்கு வருத்தம் தரது ஐவரும் கூட்டிண்டு போகமாட்டாரு கில்டா உணருகிறேன் ,அதுவே எனக்கு மனதில் வெறுப்பை ஏற்படுத்துது , இதற்க்கு என்ன செய்றது ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X