திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2014
00:00

கர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்த காலத்தில், 'வங்கப் பிரிவினை' ஏற்பட்டது. வங்கப் பிரிவினைக்குக் காரண கர்த்தாவாக இருந்தவரே, கர்சன் பிரபு தான்.
பாரதியார், 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது, 'வங்கப் பிரிவினை - கர்சன் பிரபு, அகந்தையின் பேரில், இந்தியர்களுக்குச் செய்து விட்டுப் போன அநீதி...' என்று. ஆணித்தரமாக எழுதியதுடன், கர்சனின் யோக்கியதையைப் பற்றி டி.ஸ்மிட்டன் என்ற ஆங்கிலேயர் எழுதியதையும் வெளியிட்டு, கர்சன் பிரபுவின் முகமூடியைக் கிழித்தவர் பாரதியார்.
ஆனால், லார்டு கர்சனின் மனைவி இறந்த போது, பாரதியார் அனுதாபமடைந்து வருந்தினார்.
அக்காலத்தில், தேசபக்தியின் சின்னமாக விளங்கிய, 'அமிர்த பஜார்' பத்திரிகையோ, கர்சனின் மனைவி இறப்பு குறித்து, மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
இதைக் கண்டு, பாரதியார் உள்ளம் வேதனைப்பட்டு, 'அமிர்த பஜார்' இதழின் செயலை, கண்டிக்கவும் செய்தார். இதுகுறித்து, 'இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதியது:
தேசாபிமானத்திற்கும், நல்லறிவுக்கும் பெயர் பெற்ற கல்கத்தா, 'அமிருத பஜார்' பத்திரிகையைப் பற்றி, கண்டன வார்த்தை எழுதும்படி நேர்ந்ததை எண்ணி வருத்தமடைகிறோம். ஆனால், கூடப் பிறந்த சகோதரனாக இருந்த போதிலும், அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது, முறையாகாது. ஆதலால், எத்தனையோ மதிப்புக்கிடமாகிய, 'அமிருத பஜார்' பத்திரிகை கூட, ஒரு பிழை செய்யும் பட்சத்தில், அதை எடுத்துக்காட்டுவது நம்முடைய கடமையாகிறது.
லேடி கர்சன் சென்ற வாரம் மரணமடைந்ததைப் பற்றி, இப்பத்திரிகை எழுதிய போது, 'இந்தியர்களை லார்டு கர்சன் கஷ்டப்படுத்தியதன் காரணமாகத் தான் அவர், இந்த இளம் வயதிலேயே, மனைவியை, இழந்து விட்டார். இது, சரியான தெய்வ தண்டனை...' என்று கூறுகிறது. இது, கவுரவமற்ற மனிதர்கள் பேச்சைப் போல் உள்ளது.
நம், பரம சத்ருவாக இருந்த போதிலும், அவருக்கு, மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது, நாம், அவன் செய்த தீமைகளை எடுத்துக் காட்டி, சந்தோஷமடைவது, பேடித்தனமான செய்கை. லார்டு கர்சன் நமக்கு செய்த தீமைகளின் பொருட்டு, அவரை வேண்டிய மட்டும் கண்டனம் செய்யலாம். அவரது செயலை கண்டிக்காமல், நம்மை இம்சித்ததின் பொருட்டு, அவருக்கு, மரியாதை செய்யும் பிரிட்டிஷ் அரசை கண்டனம் செய்து பேசலாம். அதை விட்டு விட்டு, 'ஏ... லார்டு கர்சன், நீ என்னைத் தொந்தவு செய்தாயல்லவா... அதற்காகத் தான், உன் மனைவி செத்துப் போனாள்...' என்று குழந்தைத்தனமாக, 'அமிர்த பஜார்' பத்திரிகை பேசுவது, அதன் பெருமைக்கு, இழுக்கானது. உண்மையான ஆசிரியன், தன் விரோதிகளுக்குக் கூட, துக்கமேற்படும் பட்சத்தில், இரக்கம் அடைவானே தவிர, சந்தோஷமடைய மாட்டான்.
— இந்தியா: 28-7-1906.

வல்லபாய் படேலின் தந்தை ஜாவேரி பாய், ஜான்சி ராணி லட்சுமிபாயின் படையில், ஒரு போர் வீரராக இருந்தார். 'வாரிசு இல்லாத ராணி, சுவீகார மகனுக்கு, பட்டம் கட்டக் கூடாது' என்று, கிழக்கிந்திய கம்பெனியார் அறிவித்தனர். இதை எதிர்த்து, ஜான்சி ராணி போரிட்டார்; கொல்லப்பட்டார். படைவீரர்கள் நிலை குலைந்து போயினர்.
பட்டேலின் தந்தை ஜாவேரி பாய், இந்தூர் மன்னர் பல்லாரி ராவிடம் அடைக்கலம் கேட்டு வந்தார். வெள்ளையர்களுக்கு பயந்த மல்லாரிராவ், ஜாவேரி பாயை கைது செய்து, சிறையில் அடைத்தார். பின், மனம் மாறி, தன் மெய்க்காப்பாளராக வைத்துக் கொண்டார்.
ஒருமுறை, அரசர், தன் நண்பருடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்றிருந்த ஜாவேரிபாய் உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அரசர் ஒரு   காயை தவறாக நகர்த்தப் போனார்; நகர்த்தியிருந்தால் தோல்வி நிச்சயம். அந்த சமையத்தில், 'அரசே... அந்த காயை நகர்த்தாதீர்கள்...' என்று, குரல் கொடுத்தார் ஜாவேரி பாய். அரசருக்கும் தன் தவறு புரிந்தது. ஜாவேரிபாய் சொன்ன யோசனையால், அரசர் வெற்றி பெற்றார். ஜாவேரிக்கு பரிசு - விடுதலை. ஜாவேரிபாய், மூன்று ஆண்டுகளுக்கு பின், தன் குடும்பத்துடன் சேர்ந்தார்.
— ஆர்.பி.சாரதி எழுதிய, 'வல்லபாய் படேல்' நூலிலிருந்து.

பிரான்ஸ் - ஸாய்ர் என்பது, பிரான்ஸ் நாட்டில் வெளிவரும், மிகப் பிரபல தினசரி. செய்திகளை வெளியிடும் போது, மகிழ்ச்சி தரும் செய்திகளுக்கு மேல், ஒரு, 'ஸ்பெஷல்' புன்னகை முத்திரையை, வெளியிடுகிறது. கஷ்டப்பட்டு, அலுத்துப் போனவர்கள், அவற்றை மட்டும் படிப்பதற்காக, இந்த ஏற்பாடு.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Swaminathan - chennai,இந்தியா
24-பிப்-201421:33:25 IST Report Abuse
R.Swaminathan பாரதியார் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார். எதிரியாக இருந்தாலும் பேரிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு சராசரி மனிதனாக இல்லாமல் ஒரு பரந்த மனதுடன் தன் எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் தற்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தால் அதுவே சிறப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
23-பிப்-201405:45:31 IST Report Abuse
.Dr.A.Joseph தினமலர் நாளிதழில் "கல்லூரி முதல்வர் கனவுடன் ஆட்டோ ஓட்டும் பெண்" என்கிற கட்டுரையினை வெளியிட்டு இருந்தீர்கள்.தற்போது அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதால் இதனை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். படித்தவர்களை அதிகம் கொண்ட மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு வேண்டிய ஒருவரை நியமனம் செய்ய வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட இரண்டு பெயர் பட்டியலிலும் நிர்வாகம் எதிர்பார்த்த நபரின் பெயர் இல்லாமல் மூன்றாவது பட்டியல் பெற்று அதில் அவரின் பெயரை வரவைத்து நியமனம் செய்த கூத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளது.தற்போது அவர் அவரின் உறவினர் ஒருவரை ஆசிரியராக நியமனம் செய்ய நிர்வாகத்துடன் "உடன்படிக்கை" செய்துள்ளாராம்.அரசு உதவி பெரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு கூலி தொழிலாளியின் பிள்ளை(எந்த இனத்தவராக இருந்தாலும் சரி) ஆசிரியராக முடியாத நிலையில் பணம் விளையாடுகிறது.அரசு உதவி பெரும் கல்லூரிகளில் கல்லூரி நிறுவனரின் "இனத்தவர்" மட்டுமே கல்லூரி முதல்வராக முடிகிறது.Phd (முனைவர்) பட்டங்கள் மீதான நம்பிக்கைகள் குறைந்து பணம் கொடுத்தால் பட்டம் பெறலாம் என்கிற நிலை உள்ளது.இது கல்வியாளர்களுக்கும் நன்கு தெரியும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழு வருடங்களுக்கு மேல் கல்லூரிகளில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் 15 மதிப்பெண்கள் சுளையாக கொடுக்கப் படுகிறது.Phd க்கு 9 மதிப்பெண்கள்,முதுகலையுடன் NET/SLET முடித்திருந்தால் 5 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்துள்ளார்கள்.பலருக்கு வறுமையின் காரணமாக வேறு வேலைகளை செய்யும் நிலை ஏற்பட்டிருக்கலாம் அல்லது கல்லூரிகளில் பணிவாய்ப்பு மறுக்கப் பட்டிருந்தால் அனுபவ மதிப்பெண்கள் எப்படி கிடைக்கும்?பள்ளிகளில் ஆசிரியரை நியமனம் செய்ய எப்படி TET (தகுதி தேர்வு) அவசியமோ அதுபோல கல்லூரி ஆசிரியரை நியமனம் செய்ய NET/SLET அவசியமாகும்.Phd முடித்தவர்களுக்கு NET/SLET அவசியமில்லை என்பதையோ,பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண் வழங்குவதோ அபத்தமானது. பலர் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் அரசு உதவி பெரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி வாய்ப்பை இழந்து , அரசின் தெளிவான தேர்வு முடிவு இன்மையால் வேலையே கிடைக்காமல் தகுதி இருந்தும் ஓய்வு வயதை நெருங்கி கொண்டிருக்கிறார்கள்.முடிந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய மதிப்பெண் பட்டியலை பாருங்கள்.இதில் பலர் NET/SLET முடித்தே 14,15 வருடங்கள் முடிந்து விட்டன.அவர்களுக்கு வேலையும் கொடுக்கவில்லை மதிப்பெண் வெறும் 5 தான். வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கும் மரியாதையும் இல்லை மதிப்பெண்ணும் இல்லை .நேற்று Phd முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்.பணமிருந்தால் இவர்கள் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் வேலை வாங்கிவிடுவார்கள்.பணம் இல்லாதவர்கள் கடைசி வரை தெருவோடுதான் திரிய வேண்டும். அரசு சில வரன்முறைகளை கையாண்டு அனுபவ மதிப்பெண்களையும், Phd யையும் ஒதுக்கிவிட்டு NET/SLET அடிப்படையில் வேலை வாய்ப்பு பதிவு மூப்புடன் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நியமனம் நேரடியாக செய்தால் பலரின் வாழ்வு வளம் பெரும்.ஒரு தனிப்பட்ட நிர்வாகத்திற்கு செல்லும் பணம் தவிர்க்கப்படும்.தயவு செய்து இந்த முரண்பாடுகளை களைய "தினமலர்" அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இப்போது எனது பதிவின் முதல் இரண்டு வரிகளையும் கூட ஒருமுறை படியுங்கள்.நிறைந்த அன்புடன்..........................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X