சிறப்பு வசதிகளுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 செப்
2010
00:00

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  9ன் சோதனைப் பதிப்பு சென்ற வாரம் வெளியானது. இது சோதனைப் பதிப்பாக இருந்தாலும், முழுமையான ஒரு புதிய பதிப்பாக, புது அவதாரம் எடுத்து வந்துள்ளது.   மக்களிடையே எப்படியும் இதனை நிலை நிறுத்த வேண்டும் என்ற இலக்குடன் மைக்ரோசாப்ட் இந்த பதிப்பினை வெளியிட்டுள்ளது.  மொஸில்லா மற்றும் குரோம் பிரவுசர்களிடம் தான் இழந்த இடத்தை  மீண்டும் பெற, நிறைய முயற்சிகளை எடுத்து, அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளது.  ஏறத்தாழ ஓராண்டுக்கு முன் மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கான அறிவிப்பை வெளியிட்டது. 2010 மார்ச் மாதத்திற்குப் பின்  டெவலப்பர்களுக்கான  நான்கு முன் சோதனைப் பதிப்புகள் வெளியிடப்பட்டன.  கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாடு முற்றிலும் மாறி வருகிறது.  கம்ப்யூட்டர் செயல்பாடு இணையத்தில் தான் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் இணையத்திலேயே பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. எனவே பிரவுசர் தொகுப்பினையும் ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் போல, மைக்ரோசாப்ட்  தந்துள்ளது.
ஹார்ட்வேர் சாதனங்களின் முழுமையான திறனைப் பயன்படுத்தும் வகையில் இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் திறனுடன் உருவாக்கப்பட்ட, சக்ரா என அழைக்கப்படும்  ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜின் தரப்பட்டு, இயக்கப்படுகிறது. புதியதாக வந்துள்ள இணையத் தொழில் நுட்பமான எச்.டி.எம்.எல். 5 மற்றும் சி.எஸ்.எஸ்.3 யினை முழுமையாக இந்த பதிப்பு பயன்படுத்துகிறது. இதனால், இந்த பிரவுசரில் வழக்கத்திற்கு மாறான  வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப  அம்சங்கள் கிடைக்கின்றன. அவற்றை  இங்கு காணலாம்.
டைட்டில் பாரில் வழக்கமாக இருக்கும் இலச்சினை இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் என்று காட்டும்  என்ற எழுத்தோ அல்லது டெக்ஸ்ட்டோ இல்லை.  பிரவுசரைத் திறந்தவுடன் காட்டப்படும்  இன்டர்பேஸ் மெனு சங்கதிகள் எதுவும் இல்லை. அனைத்தும் மறைத்து வைக்கப் பட்டுள்ளன.  மேலே வலது மூலையில் உள்ள சர்ச் பார், கமாண்ட் பார் மற்றும்  பேவரிட்ஸ் பார் ஆகியன  மறைக்கப் பட்டுள்ளன. கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரும் இல்லை.  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 வெளியிட்ட பின், இயக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கருத்து கேட்பு இயக்கம் (Customer Experience Improvement Program) மூலம் பெறப்பட்ட பல லட்சக்கணக்கான பின்னூட்டுக்களின் அடிப்படையில், இந்த புதிய பதிப்பு 9 அமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது.  பல மெனு பார்கள் மறைக்கப்பட்டுள்ளன.    ஆல்ட் கீ பயன்படுத்துவதன் மூலமே பேஜ், சேப்டி டூல்ஸ் மற்றும் ஹெல்ப் போன்ற மெனுக்கள் கிடைக்கின்றன. அடுத்ததாக பேவரிட்ஸ் மெனு. இதனை 18% பேர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதில் போல்டர்களை உருவாக்கியவர்கள் 1% பேர் மட்டுமே. எனவே இவை ஓரங்கட்டப்பட்டுள்ளன.மேலாக உள்ள ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்களும் வண்ணத்தில் இல்லாமல், கிரே கலரில் பட்டும் படாமல் காட்டப்படுகின்றன. வலதுபுறம் மேலாக, ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் ஆகியவற்றிற்கான பட்டன்களும் வண்ணமிழந்து காட்டப்படுகின்றன.இணையப் பக்கங்களைத் திறந்தால், அவற்றிற்கான டேப்கள் மிகச் சிறியதாக அமைக்கப்படுகின்றன. அட்ரஸ் பாருக்கு வலது புறமாக வரிசையாகக் கிடைக்கின்றன. டேப்களில் குரூப் அமைப்பது அப்படியே தொடர்கிறது. அதாவது ஒரு லிங்க்கில் கண்ட்ரோல் + கிளிக் செய்கையில், அந்த தளம் அதே வண்ணத்தில் குரூப்பாகத் திறக்கப்படுவது, இந்த பிரவுசரிலும் கிடைக்கிறது.
ஏதேனும் பிரச்னைக்குரிய சிக்கலைச்  சந்திக்கையில், முன்பு போல எழுந்து வரும் பாப் அப் கட்டங்களில் பிழைச் செய்திகள் தரப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, விண்டோவின் கீழாக, பிரச்னைக்கான பட்டன்கள் காட்டப்படுகின்றன. இணையப் பக்க வேலையை முடித்துக் கொண்டு, அல்லது நேரம் கிடைக்கும்போது நாம் அதனைப் பார்க்கலாம். கோப்புகளை தரவிறக்கம் செய்திடுகையிலும், இதே முறை பின்பற்றப்படுகிறது.
டேப்களைப் பிரித்து எடுத்து நாம் விரும்பும் இடத்தில் வைத்துக் கொண்டு செயல்படலாம். அதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறக்கையில், நாம்  அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் தளங்களுக்கான டேப்களைத் தனியே வைத்து இயக்கலாம்.
இந்த புதிய பதிப்பில், சர்ச்பாக்ஸ் மற்றும் அட்ரஸ் பார் இணைக்கப்பட்டு பிரைவேட் ஒன் பாக்ஸ் (Private Onebox) என்ற பெயருடன் தரப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் தேடுதல் தளம் எதிர்பார்த்தபடி பிங் ஆக உள்ளது. அட்ரஸ் பாரில், இணைய முகவரியை அமைக்கும்போதே, இந்த தளம் தேடித் தரும்  முடிவுகளை,   உங்களுடைய ஹிஸ்டரியுடன் இணைத்து பார்த்து, அட்ரஸ் பாரில் நீங்கள் பார்க்க விரும்பும் தளம் இதுதான் எனக் காட்டுகிறது.
இந்த பிரவுசரில் மிகச் சிறப்பான ஒரு அம்சம் இதன்  Pinned Shortcuts  வசதி. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த, அடிக்கடி பயன்படுத்தும் தளத்தினை ஒரு அப்ளிகேஷன் போல அமைத்துக் கொள்ளலாம். அட்ரஸ் பாரிலிருந்து, அந்த தளத்தின் ஐகானை இழுத்து வந்து, கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் போட்டு வைக்கலாம்.  அடுத்து இந்த தளம் செல்ல வேண்டும் என எண்ணினால், இந்த ஐகானில், அப்ளிகேஷனைத் திறப்பது போல, கிளிக் செய்திடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு, இந்த தளம் காட்டப்படும். இதனால், உங்கள் வேர்ட், பேஜ்மேக்கர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவற்றின் ஐகான்களுடன், இந்த தளத்தின் ஐகானும், ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் போல இடம் பெற்றிருக்கும். இது ஏறத்தாழ குரோம் பிரவுசரில் உள்ள அப்ளிகேஷன் ஷார்ட் கட் போலச் செயல்படுகிறது. ஆனால் குரோம் பிரவுசரில் இது போல தளங்களைத் திறக்கையில், அதில் டேப்கள் எதுவும் காட்டப்படாது. இதனால், மற்ற தளங்களை அந்த விண்டோவில் திறக்க முடியாது.  இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கலாம். ஆனால், இன்னொரு சிக்கல் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பதியப்பட்டுள்ள ஆட் ஆன் தொகுப்புகள், பின் (Pin)  செய்யப்பட்ட தளங்களில் இயங்காது.  இதில் இணைய தளம் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், காலியான பக்கம் ஒன்று காட்டப்படாமல், அந்த டேப்பில் நாம் ஏற்கனவே பார்த்த தளங்களின் சிறிய படங்கள் காட்டப் படுகின்றன. கூடுதலாக, திரையின் கீழாக, ஒரு நீள பார் காட்டப்படுகிறது. இதன் நீளம், நீங்கள் எத்தனை முறை ஒரு தளத்தைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதற்கேற்ப அமைகிறது. பிரவுசரின் மேலாக இடது பக்கம், நீங்கள் எந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அதன்   ஐகான் காட்டப்படுகிறது.
இதன் முந்தைய பதிப்பு 8 உடன் ஒப்பிடுகையில், இதில் பல புதிய பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த பிரவுசரின் இன்னொரு சிறப்பு அம்சம், இதன் வேகம்.   இணையப் பக்கங்கள் வேகமாக இறங்குகின்றன.  மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. பயர்பாக்ஸைக் காட்டிலும் 21% வேகமாகவும், குரோம் பிரவுசரைக் காட்டிலும் 29% குறைவான வேகத்திலும் இயங்குகிறது.  சபாரி மற்றும் ஆப்பராவின் வேகத்தை இந்த பிரவுசர் இன்னும் அடைய இயலவில்லை.   முழுமையான தொகுப்பில் இதன் வேகம்  இன்னும் அதிகரிக்கலாம். எனவே, வேகத்தைக் காரணம் காட்டி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இனி ஒதுக்கத் தேவையில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா + சர்வீஸ் பேக் 2 உடன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். பல காரணங்களுக்காக விண்டோஸ் எக்ஸ்பியில் இது இயங்காது. நீங்கள் எக்ஸ்பி உள்ள கம்ப்யூட்டரில் இருந்தவாறு இதனை டவுண்லோட் செய்திட முயன்றால், உங்கள் கம்ப்யூட்டருக்கும் இதற்கும் ஒத்துப் போகாது (“you won’t be able to install Internet Explorer 9 unless you upgrade to a more recent version of Windows.”)  என்ற செய்தி தரப்பட்டு, தரவிறக்கம் செய்வது தொடங்காது.  ஆட் ஆன் தொகுப்புகளைப் பொறுத்தவரை, இந்த பிரவுசர் ஒரு புதிய வசதியைக் கொண்டுள்ளது. பொதுவாக இந்த தொகுப்புகள் பிரவுசர் இயங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தும். எனவே  ஆட் ஆன் தொகுப்புகளை இணைத்துப் பயன்படுத்துவதை இந்த பிரவுசர் உணர்ந்தவுடன்,  திரையின் கீழாக ஒரு அறிவிப்பு நீள் கட்டம் ஒன்றைத் திறக்கிறது. அதில் ரைட் கிளிக் செய்தால், எந்த ஆட் ஆன் தொகுப்பு இயக்கத்தில் உள்ளது என்றும், அது எந்த அளவிற்கு பிரவுசரின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது என்றும், அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் எது என்றும் காட்டுகிறது. இவற்றை அறிந்தவுடன், அங்கேயே  எந்த ஒரு ஆட் ஆன் தொகுப்பின் இயக்கத்தினையும் முடக்கலாம். மீண்டும் அவை வேண்டும் என்றால், டூல்ஸ்(Tools)   ஐகான் கிளிக் செய்து, மேனேஜ் ஆட் ஆன் (Manage Add on) தேர்ந்தெடுத்து, அதில் நீங்கள் மீண்டும் இயக்க விரும்பும் ஆட் ஆன் தொகுப்பில் சென்று இயக்குவதற்கு Enable  என்பதனை கிளிக் செய்திடலாம்.
இந்த வசதியை மற்ற பிரவுசர்கள், குறிப்பாக ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ள, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இனி வருங்காலத்தில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்த பிரவுசரில் டவுண்லோட் செய்யப்படும் தளங்களுக்கான வடிகட்டி (Smartscreen Filter)  மேம்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு பைலை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், எத்தனை பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர், அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருந்துள்ளதா, குறைவான டவுண்லோட் எனில், ஏதேனும் கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையதா? என்று சோதனை செய்து, அவ்வாறு இருப்பின் எச்சரிக்கை அளிக்கிறது. இது சோதனைத் தொகுப்புதான். எனவே குறைகள் இருக்கலாம். விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், இப்போதைக்கு இதனை ஒரு பேக் அப் பிரவுசராகப் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த பிரவுசர் தொகுப்பை இலவசமாகப் பெற http://www.beautyoftheweb.com  என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த தளம் தான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் இணைய தளமாகும். 32 பிட் மற்றும் 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த எனத் தனித் தனி பிரவுசர்கள் தரப்படுகின்றன.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X