கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2010
00:00

கேள்வி: Insert என்று ஒரு கீ இருக்கும். அதனை அழுத்தினால் டெக்ஸ்ட் மற்றும் படம் இடையே அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த கீ, கீ போர்டில் எங்குள்ளது? அனைத்து கீ போர்டுகளிலும் இது இருக்குமா?  –சி. மு.காமராஜ், விழுப்புரம்
பதில்: Insert  கீ  Ins  என்ற எழுத்துக்களோடு இருக்கும். Delete  கீயை உங்கள் கீ போர்டில் கண்டுபிடியுங்கள். அதன் மேலாக இந்த கீ இருப்பதனைப் பார்க்கலாம். பொதுவாக ஒரே மாதிரியான அமைப்பையே அனைத்து கீ போர்டுகளிலும் பின்பற்றுகின்றனர். ஒரு சில கீ போர்டுகளில் மட்டும் இது வேறு இடத்தில் இருக்கலாம். லேப்டாப் கீ போர்டுகளில் இதன் இடம் மாறி இருக்கும். மேல் வலது மூலையில் இது இருக்கும். Del  என எழுதப்பட்டுள்ள டெலீட் கீயை அடுத்து இது இடம் பெற்றிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 பதிந்து பயன்படுத்தி வருகிறேன். இதில் வால்யூம் கண்ட்ரோல் எப்படி? மியூசிக் பிளே செய்திடுகையில், கேம்ஸ் விளையாடினால், கேம்ஸ் தரும் ஒலி, மியூசிக்கை மிஞ்சுகிறது. தனியே இதனைத் தடுக்க, குறைக்க முடியுமா? கேம்ஸ் கண்ட்ரோலில் இது இல்லை.–ஆ.பிருத்விராஜ், பழநி
பதில்: நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குவதால், இதற்கான வழியை சிஸ்டமே கொண்டி ருக்கிறது. பொதுவாக, பெரும்பாலான கேம்ஸ் புரோகிராம்களில், அதன் முகப்பு பக்கத்திலேயே வால்யூம் கண்ட்ரோல்களுக்கு எந்த கீயை அழுத்த வேண்டும் எனத் தந்திருப்பார்கள். நீங்கள் அதனைக் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் விண்டோஸ் 7 தரும் வசதியினைப் பார்ப்போம். இதில் விண்டோஸ் சவுண்ட் மிக்சர் விண்டோவினைத் திறக்கவும். டாஸ்க் பாரில் வலது புறம் மூலையில் காணப்படும், ஸ்பீக்கர் ஐகானின் மீது டபுள் கிளிக் செய்து, இந்த வின்டோவைப் பெறவும். இந்த விண்டோவில் அப்போது திறந்திருக்கும் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் தனித்தனியாக வால்யூம் செட் செய்வதற்கான வழி தரப்பட்டிருக்கும். இதன் மூலம் சிஸ்டம் தரும் ஒலி அளவை மட்டுமின்றி, ஒவ்வொரு அப்ளிகேஷனுக்குமான, ஒலி அளவினையும் கட்டுப்படுத்தலாம். இதில் செட் செய்யப்பட்ட ஒலி அளவு, புரோகிராம்களை மூடித் திறந்த பின்னரும் இயங்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் டாஸ் விண்டோ கிடைக்குமா? எங்கு எந்த கட்டத்தில் கட்டளை இதற்கெனத் தர வேண்டும்? டாஸ் கட்டளை மூலம், சில ட்ரைவ்களில்,  சில செயல்பாடுகளை மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதற்காகவே இதனைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். –நா. சிக்கந்தர் பாட்சா,  காரைக்கால்
பதில்: இப்போதெல்லாம், டாஸ் விண்டோ மற்றும் கட்டளைகளை யாரும் அவ்வளவாகப் பயன்படுத்து வதில்லை. இருப்பினும் உங்களின் கேள்விக்கு, விண்டோஸ் 7 அருமையான ஒரு தீர்வினைக் கொண்டிருக்கிறது.  இதன் மூலம்,சில செயல்பாடு களுக்கு,  நாம் பழைய டாஸ் கட்டளைகளை, அதன் அமைப்பை நினைவில் வைத்து, டைப் செய்து இயக்கத் தேவையில்லை.  டாஸ் விண்டோ பெற்று எந்த டைரக்டரிக்குச் செல்ல வேண்டுமோ, அந்த போல்டர் இருக்கும் இடத்திற்கு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் செல்லவும்.  எடுத்துக் காட்டாக, புரோகிராம் பைல்ஸ் என்ற ட்ரைவிற்குச் செல்ல எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம், அந்த போல்டருக்குச் செல்லவும். இப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எந்த போல்டரைத் திறக்க வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் ஆப்ஷன் தரப்படும். டாஸ் கமாண்ட் விண்டோ இங்கு திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்படும். அதில் கிளிக் செய்திடுங்கள். டாஸ் இயக்கத்தின் கமாண்ட் ப்ராம்ப்ட், சரியாக அந்த ட்ரைவில் திறக்கப்படும். டைரக்டரி கட்டளை, பின்னர் அந்த போல்டருக்கான கட்டளை எல்லாம் தேவையில்லை. விண்டோஸ் 7 தரும் அருமையான சுருக்கு வழி இது.

கேள்வி: எனக்கு வரும் இமெயில்களில் உள்ள லிங்க்குகளில் உள்ள இணைய தளம் பார்க்க கிளிக் செய்தால், “locate link browser”  என்று ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கிறது. இதனை எப்படி தடுப்பது? நான் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். –டி. நான்சி, புதுச்சேரி, – எம். சக்திவேல் ராஜா, கோயம்புத்தூர்
பதில்: இந்த கேள்வி மற்றும் சந்தேகத்தினைப் பல வாசகர்கள் கேட்டுள்ளனர். சற்று விரிவாகவே இதற்கான தீர்வினைப் பார்ப்போம்.  விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்களுக்கானது:  Start  கிளிக் செய்து அதில்  My Computer மீது கிளிக் செய்திடவும். இதனை அடுத்து   Tools, Folder Options  எனச் செல்லவும். இதில் கிடைக்கும் விண்டோவில் File Types   என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.  இங்கு வரிசையாக உள்ள வரிகளில் Extensions  என்ற வரிசையில் URL: HyperText Transfer Protocol   என்று இருப்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். இப்போது இது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
 அடுத்து Advanced   பட்டனில் கிளிக் செய்திடுக. பின்னர் Edit  பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் Use DDE  என்று உள்ள இடத்தில் கிடைக்கும் பாக்ஸில் டிக் அடையாளம் இருக்கும். அதனை நீக்கவும். இதில் என்பது செயல்பாட்டில் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதில் பயன்படுத்தும்  அப்ளிகேஷன் என்பதில் உங்கள் பிரவுசர் பெயர் இருக்க வேண்டும். இது ஏற்கனவே அங்கு இருக்கும். இல்லை எனில் அருகே உள்ள பிரவுஸ் பட்டனைக் கிளிக் செய்து, பிரவுசருக்கான பைலைத் தேர்வு செய்திடவும். இருமுறை கிளிக் செய்து வெளியே வரவும். இனி உங்கள் பிரவுசரை மூடிப் பின்னர், இமெயில் கிளையண்ட் புரோகிராமினைத் திறந்து, அதில் உள்ள இமெயில்களில் உள்ள லிங்க் ஒன்றில் கிளிக் செய்து பார்க்கவும். இப்போது “locate link browser”   என்ற பாப் அப் கிடைக்காது.
மேலே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை மேற்கொள்ளவும். ஆனால் இந்த முறை HyperText Transfer Protocol with Privacy and FTP  என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே கூறியபடி மாற்றவும். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் பயன் தராது; மேற் கொள்ளவும் முடியாது. இவர்கள் தங்கள் ரெஜிஸ்ட்ரியில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் மேற்கொள்ளும் படியான செயல்பாடுகளை வாசகர்களுக்கு வழங்குவதில்லை. பல வேளைகளில் இதில் தவறுகள் ஏற்பட்டு, பின்னர் கம்ப்யூட்டர் இயக்கம் முடங்கிப் போகும் அளவிற்கு சென்று விடுகிறது. இருப்பினும் இங்கு இதற்கான தீர்வு நடவடிக்கைகளைத் தருகிறேன்.
முதலில் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்து வேறு ஒரு ட்ரைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சர்ச் பீல்டில் regedit என்று டைப் செய்திடவும்.  என்டர் தட்டினால், கிடைக்கும் விண்டோவில் பைல் அடுத்து எக்ஸ்போர்ட் கிளிக் செய்திடவும். இனி எந்த ட்ரைவில் ரெஜிஸ்ட்ரி பைலை சேவ் செய்திட வேண்டுமோ அந்த ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, பைலுக்கு பெயர் கொடுத்து,  சேவ் அழுத்தவும். ரெஜிஸ்ட்ரி பைல் சேவ் செய்யப்படும். ரெஜிஸ்ட்ரி பைல் கெட்டுப் போனால், இந்த பைலை மீண்டும் உரிய இடத்தில் பதிந்து பயன்படுத்தலாம்.
அடுத்து ஸ்டார்ட், ரன் கொடுத்து பின்னர் regedit  என டைப் செய்திடவும். பின்னர், HKEY_CLASSES_ROOT\ HTTP\shell\open\ddeexec  என்ற வரி இருக்கும் இடத்திற்குச் செல்லவும். இங்கு என்ற ரெஜிஸ்ட்ரி கீயினை டெலீட் செய்திடவும். அடுத்து கீழ்க்காணும் வரிகளிலும், ஒவ்வொன்றாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளவும்.
HKEY_CLASSES_ROOT\HTTPS\shell\ open\ddeexec”
“HKEY_CLASSES_ROOT\FirefoxURL\shell\ open\ddeexec”
“HKEY_CLASSES_ROOT\FirefoxHTML\ shell\open\ddeexec”
பின் சேவ் செய்து வெளியேறவும். இனி பிரச்னை இருக்காது.

கேள்வி:  எனக்கு வந்த ஒரு இமெயிலில் : }  இப்படி ஒரு வித்தியாசமான அடையாளம் உள்ளது. இது எதற்காக? இமெயில் புரோகிராம் சேர்க்கிறதா? நண்பரிடம் இது குறித்து கேட்கவில்லை. தயவு செய்து விளக்கவும்.  –பெயர் தெரிவிக்காத வாசகர்,  திருமங்கலம்
 பதில்: இது வித்தியாசமான  அடையாளம் இல்லை நண்பரே.   இதனை எமோட்டிகான் என்று சொல்வார்கள். எனக்குப் புரியுமோ என்ற எண்ணத்தில் அடைப்புக் குறிக்குள்ளும் என்ன என்ன கேரக்டர் என எழுதியதற்கு நன்றி. ஆனால் பெயரை ஏன் எழுதவில்லை? உங்கள் தோழர் அல்லது தோழி சற்று வித்தியாசமான விஷயத்தை உங்களுக்கு கடிதமாக எழுதியிருக்க வேண்டும். அதனை படமாகத் தெரிவிக்க இந்த படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு என்ன பொருள் தெரியுமா? "ஐயோ ஒரு மாதிரியா வெட்கமா இருக்கு' நான் என்னைச் சொல்லவில்லை. பொருளே அதுதான். இது போல வெவ்வெறு உணர்வுகளை வெளிப்படுத்த பல எமோட்டிகான்கள், கம்ப்யூட்டர் மற்றும் இணைய, இமெயில் உலகில் உள்ளன. 

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DAVID - Dindigul,இந்தியா
01-அக்-201018:34:02 IST Report Abuse
DAVID Plese tell me...மொபலில் பணம் சம்பாதிக்க வலை முகவரி கட்டாயம் தரவும்
Rate this:
Share this comment
Cancel
சேகர் - தேனீ,இந்தியா
29-செப்-201020:53:22 IST Report Abuse
சேகர் வணக்கம் சார் .... உங்களுடைய கம்ப்யூட்டர் மலர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி , இது மேலும் வளர எனது வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
அன்பு - மதுரை,இந்தியா
29-செப்-201012:41:10 IST Report Abuse
அன்பு நான் பி.இ மூன்றாமாண்டு பயிலுகிறேன். எனக்கு பார்ட் டைம் ஜாப் பார்பதற்கு ஒரு வெப்சைட் அட்ரஸ் சொல்லுங்களேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X