கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மார்
2014
00:00

கேள்வி: 32 அங்குலம் அல்லது அதற்கும் மேலான அகலத்தில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றினை வாங்கி, அதில் என்னுடைய கம்ப்யூட்டரை இணைக்கலாமா?
சி.கே. பூமிராஜ், திருப்பூர்.
பதில்:
நீங்கள் கம்ப்யூட்டருக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், டிவியை விடுத்து, கம்ப்யூட்டர் மானிட்டர் ஒன்றை வாங்குவதே நல்லது. கம்ப்யூட்டர் மானிட்டரில் டெஸ்க் டாப் மற்றும் பிற திரைக் காட்சிகள் நன்றாகத் தெளிவாகத் தெரியும். தொலைக் காட்சிப் பெட்டிகள், காற்றின் வழியே ஒளிபரப்பப்படும் அலைக் கற்றைகளைப் பெற்றுக் காட்டும் முதன்மை நோக்கத்துடனே தயாரிக்கப்படுகின்றன. எனவே, கேபிள் அல்லது சாட்டலைட் வழி இணைப்பு, டிவிடி ப்ளேயர் மற்றும் டிஜிட்டல் விளையாட்டு சாதனங்களின் சிக்னல்களை இவை தெளிவாகக் காட்டும்.
டிவி மானிட்டர் என்பது, கம்ப்யூட்டரின் சிக்னல்களைப் பெற்று இயங்குவதற்காகவே தயாரிக்கப்படுவது. தொலைக் காட்சிப் பெட்டியின் திரை பெரிதாக இருப்பதால், கம்ப்யூட்டரிலிருந்து கிடைக்கும் காட்சிகள் மிகப் பெரிதாகக் காட்டப்படலாம். ஆனால் ரெசல்யூசன் அதிகமாக இருக்காது. 32 அங்குல டிவி யில், சில நன்றாகக் காட்டப்பட மாட்டாது. இதற்குப் பதி லாக, அதிக அகலத்தில் தயாரிக்கப்படும் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், காட்சிகளைத் துல்லியமாகக் காட்டும்.

கேள்வி: என்னிடம் பழைய 3.5 அங்குல டிஸ்க் உள்ளது. இதில் உள்ள சில பைல்களில் கிடைக்கக் கூடிய டேட்டா இப்போது தேவைப்படுகிறது. எப்படி இவற்றைப் பெறலாம்?
என். மஞ்சுளா, தேனி.
பதில்:
முடியும் என்றே நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் இந்த பிளாப்பி ட்ரைவ் இணைக்கப்பட்டிருக்கலாம். இவற்றைப் பயன்படுத்தி டேட்டாவினைப் பெறலாம். அல்லது கம்ப்யூட்டர் துணைப் பொருட்கள் விற்பனை செய்திடும் கடைகளில் இதற்கென எக்ஸ்டர்னல் பிளாப்பி ட்ரைவ் சாதனம் ஒன்றை வாங்கி, இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஒரு முக்கிய விஷயம், உங்களுடைய 3.5 அங்குல பிளாப்பி டிஸ்க் இன்னும் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும். இவை எல்லாம், குறிப்பிட்ட காலம் வரைதான் சரியாக இயங்கும். அடுத்த பிரச்னை, நீங்கள் பெற விரும்பும் டேட்டா, இன்றைய பார்மட்டுக்கு ஏற்ற வகையில் படிக்கும் வகையில் இருக்க வேண்டும். அடிப்படை பார்மட்களாக doc, jpg or tiff எனில், பிரச்னை இருக்காது. ஸ்பெஷல் பார்மட் எனில், அதற்கேற்ற சாப்ட்வேர் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். அல்லது, சில நிறுவனங்கள், இது போல பழைய டிஸ்க்குகளில் உள்ள டேட்டாவினை, சிறிது கட்டணம் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு எடுத்துத் தருவார்கள். அவர்களை நீங்கள் நாடலாம். வெற்றிகரமாக, டேட்டாவினைப் பெற என் வாழ்த்துகள்.

கேள்வி: என் நண்பரிடம் விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரை வாங்கி வந்தேன். இதில் கண்ட்ரோல் பேனலின் இயக்கத்திற்குள் செல்வதை தடுத்து வைப்பது எப்படி எனத் தெரியவில்லை. வழி காட்டவும்.
எஸ்.கே. குமரேசன், காரைக்கால்.
பதில்:
விண்டோஸ் 8ல், கண்ட்ரோல் பேனலுக்கான அணுக்கத்தினை மறித்து வைக்கலாம். இது மிக நல்ல யோசனை. அப்போதுதான் கம்ப்யூட்டர் கை மாறும்போது, யாரும் கண்ட்ரோல் பேனல் சென்று, அதில் உள்ள செட்டிங்ஸை மாற்றாமல் இருப்பார்கள். விண்டோஸ் 8ல் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள, கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
1. விண்டோஸ் + ஆர் (Windows+R) கீகளை அழுத்தி ரன் ("Run”) பாக்ஸினைத் திறக்கவும்.
2. பாக்ஸினுள் gpedit.msc என டைப் செய்து எண்டர் தட்டவும்.
3. தொடர்ந்து User Configuration>Administrative Templates>Control Panel எனச் செல்லவும்.
4. Prohibit access to Control Panel and PC settings என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கு ஒரு டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
5. இங்கு Enabled என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
6. அடுத்து File>Exit என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போதிருந்து, அந்த கம்ப்யூட்டரில், கண்ட்ரோல் பேனலை அணுக முடியாது.

கேள்வி: கம்ப்யூட்டர்களில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டவை இருப்பது போல, மொபைல் போனிலும் இதே போல் இயக்க முடியுமா? அப்படி ஒரு போன் உள்ளதா?
என். தினேஷ், சென்னை.
பதில்:
நல்ல சிந்தனையும் எதிர்பார்ப்பும். கேள்வி கேட்ட வேளையும் நல்ல வேளை. ஆம், முடியும். இந்திய நிறுவனமான கார்பன் மொபைல்ஸ் நிறுவனம் முதன் முதலில் இது போல டூயல் பூட்டிங் மொபைல் போன்களைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, விண்டோஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் இந்நிறுவனம் வழங்குகிறது. இவற்றில் சில மாடல் போன்களில், விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் பதிந்து இயக்கப்படும். இது ஒரு டூயல் பூட் போனாக இருக்கும்.
ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த போனை அலுவலகம் செல்வோர் மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளில் செயல்படுவோர் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: நான் விண்டோஸ் விஸ்டா பயன்படுத்தி வருகிறேன்.இந்த சிஸ்டத்தில் மட்டும், இதன் ஏரோ கிராபிக்ஸ் போல்டர்களில் மற்றும் சில அப்ளிகேஷன்களில், தட்டையான பார்டர்களைக் காட்டுகிறது.இது சில வேளைகளில் அளவிற்கு அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது.இதனை எப்படி மாற்றலாம்?
என். துளசி, திருமங்கலம்.
பதில்:
நீங்கள் சொல்வது சரியே. விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ், புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல தட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு என்ற புரோ கிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

கேள்வி: இணைய இணைப்பு தருவதில், மிக அதிகமான வேகத்தில் இணைய இணைப்பு எந்த நாட்டில் கிடைக்கிறது? என் நண்பர் அமெரிக்காதான் என்று அடித்துச் சொல்கிறார். உண்மையா?
எஸ். பார்த்தசாரதி, கோவை.
பதில்
: அவர் கூறுவது சிறிதளவில் மட்டுமே உண்மை. கூகுள் கான்சஸ் நகரத்தில், புதிய தொழில் நுட்பம் மூலம், நொடிக்கு பல கிகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் வசதியைத் தந்து வருகிறது. இது விரைவில் மேலும் 18 நகரங்களுக்கு நீட்டிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஆனால், முழுமையான நாடு என எடுத்துக் கொண்டால், அது ஹாங்காங் தான். இங்கு நொடிக்கு 54.1. மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பு கிடைக்கிறது. பன்னாட்டளவில் அதிகமான வேகத்தில் இணைய இணைப்பு தரும் நாடு இதுதான். மக்கள் பெருக்கம், இணையத்தைப் பயன்படுத்துவோர் அதிகம், இணையத்தில் எந்த பொருள் பற்றியும் பதிவதற்குத் தடையற்ற அரசின் ஆதரவு எனப் பல காரணங்களை இதற்குக் கூறலாம். சாப்ட்வேர் பைரசி எனப்படும் திருட்டு நகல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதிலும், இணையம் வழி வழங்குவதிலும், சிறுவர்கள் சார்ந்த பாலியல் தகவல்களைத் தருவதிலும் இங்குள்ள இணைய தளங்கள் பயன்படுகின்றன. பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட இந்த நாடு, இவை எதனையும் தடுப்பதில்லை. இணைய தளம் அமைத்து செயல்பட எந்த உரிமமும் பெற வேண்டியதில்லை என்பது அதைவிட அதிசயத்தக்க உண்மையாகும். இந்த நாட்டினை அடுத்து தென் கொரியா, ஜப்பான் ஆகியவை வருகின்றன. உங்கள் நண்பர் கூறும் அமெரிக்கா, முதல் பத்து இடங்களில் கூட வரவில்லை.

கேள்வி: ஆடியோ பைல்களைக் கையாள, அடாசிட்டி போல வேறு புரோகிராம்கள் உள்ளனவா? அனைத்து வசதிகளும் தரும் சில புரோகிராம்களைக் கூறவும்.
தா.செந்தாமரை, பொள்ளாச்சி.
பதில்:
நீங்கள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களை மட்டும் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி என்றால், Wavosaur என்ற புரோகிராமினை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இது இலவசமாகக் கிடைக்கிறது. கிடைக்கும் தள முகவரி: http://www.wavosaur. com/. இது அளவிலும் சிறியது. பெரும்பாலான வசதிகள் கிடைக்கும்.
கட்டணம் செலுத்தியும் சில புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பட்டியலிட்டு விடுகிறேன்.
1. Sony Sound Forge: இதனை http://www.sonycreativesoftware.com/soundforge என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2. Adobe Audition CS6: அடோப் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஆடியோ எடிட்டிங் புரோகிராம். இதனை முழுமையாகக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. தேவைப்படும்போது, மாதக் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். கிடைக்கும் தள முகவரி : http://www.adobe.com/products/audition.html
3. NCH WavePad: இதுவும் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்த வேண்டும். கிடைக்கும் தள முகவரி: http://www.nch.com.au/wave pad/index.html

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X