கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2014
00:00

கேள்வி: என்னிடம் விண்டோஸ் எக்ஸ்பி புரபஷனல் சிஸ்டம் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டரும் வைத்திருக்கிறேன். இதனை எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். என் பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து இணைய இணைப்பை நீக்கிவிட்டு, அதனை போட்டோ, டாகுமெண்ட் தயாரிப்பு, மியூசிக் பைல்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாமா?
என். சுகவனம், திருபுவனம்.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டர் இணையத்தில் இணைக்காதவரை அதன் இயக்கத்திற்கு எந்த ஆபத்தும் வராது. ஏப்ரல் 8க்குப் பின்னர், மைக்ரோசாப்ட் தன் ஆதரவினை எக்ஸ்பி சிஸ்டத்திற்கு நிறுத்த இருப்பதால், அதன் பின்னர், எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டரை, இணையத்தில் இணைத்தால், சிக்கல்கள் ஏற்படும். இதன் மூலம் மின் அஞ்சல்கள் பெறக் கூடாது. டவுண்லோட் எதுவும் செய்திடக் கூடாது. ஒருமுறை செய்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று விளையாட்டுத்தனமாக, இன்டர்நெட் இணைப்பு கொடுத்து பிரவுஸ் செய்திடக் கூடாது.
போட்டோக்களை கேமராவிலிருந்து எக்ஸ்பி கம்ப்யூட்டருக்கு மாற்றலாம். ஆனால், மற்ற மீடியாக்களிலிருந்து மாற்றும் முன்னர் பலமுறை அந்த மீடியாவினைச் சோதனை செய்திடவும். ஏனென்றால், அதிலிருந்து கூட வைரஸ் பரவும் வாய்ப்பு உண்டு. டாகுமெண்ட்களைத் தயாரிப்பது, அவற்றை அச்செடுப்பது, மியூசிக் பைல்களை இசைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஒரு பிரச்னையும் ஏற்படாது.

கேள்வி: நான் விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் தொடங்குகையில், என் குரல் பதிவு செய்த பைல் இயக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். இது இயலுமா? முடியும் என்றால், வழி காட்டவும். முன்னதாகவே நன்றி.
எஸ். உமா ரஞ்சித், மதுரை.
பதில்:
உங்கள் நன்றிக்கு என் வணக்கங்கள். உமா, உங்கள் கம்ப்யூட்டர் திறன் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற கம்ப்யூட்டர் சிஸ்டம் பைல்களை எடிட் செய்திடும் திறன் தேவை. விண்டோஸ் 8 ரெஜிஸ்ட்ரி அமைப்பில் சிறிய, மிகச் சிறிய அளவில் மாற்றங்கள் செய்திட வேண்டும். இது உங்களால் முடியும் என நினைக்கிறேன். இதோ அந்த தேவைப்படும் மாற்றம்.
விண்டோஸ் கீயுடன் (+) r கீயை அழுத்தவும். கிடைக்கும் பெட்டியில் regedit என டைப் செய்திடவும். அடுத்து கீழ்க்காணும் போல்டருக்குச் செல்லவும். அதன் பெயர்: HKEY_CURRENT_ USER\AppEvents\Event Labels. நிறைய போல்டர்கள் காட்டப்படும். கீழாகச் சென்றால், அங்கு WindowsLogon என்பதான போல்டர் ஒன்று இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். வலது புறம் காட்டப்படும் பிரிவில், ExcludeFrom CPL என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதன் மதிப்பை (Value) 0 (சைபர்)என மாற்றவும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடவும். அடுத்து, கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். அடுத்து Hardware and Sound என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மேலாக உள்ள Sounds என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் கீழாகச் சென்றால், Sound link ஒன்று கிடைக்கும். இதில் ஸ்பீக்கர் ஐகான் காட்டப்படும். உங்களுடைய வாய்ஸ் பைல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு டைரக்டரியில் உள்ள போல்டரில் இருந்தால், இங்கு கிடைக்கும் பிரவுஸ் பட்டனைப் பயன்படுத்தி, அந்த பைல் இருக்கும் இடம் சென்று அதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் பின்னர் அனைத்து விண்டோக்களையும் மூடவும். இனி, நீங்கள் விரும்பியபடி, உங்களுடைய வாய்ஸ் கம்ப்யூட்டர் லாக் ஆன் செய்திடுகையில் ஒலிக்கும்.

கேள்வி: நான் எக்ஸெல் ஒர்க் ஷீட் அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இதில் ஏதேனும் ஒரு செல்லில் சொற்களை அமைக்கையில், வேகமாக முழுவதுமாக அமைத்த பின்னரே, முழுவதும் பெரிய கேபிடல் எழுத்துக்களில் அமைந்து விட்டதனைப் பார்க்க முடிகிறது. என்னையும் அறியாமல், கேப்ஸ் லாக் கீயினை அழுத்திவிடுவதால், இது ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில், இதனை தானாக மாற்றிக் கொள்ள, எக்ஸெல் புரோகிராமில் வழி உள்ளதா?
ஏ. கே. சுகுமார் ராஜ், திருப்பூர்.
பதில்
: உங்கள் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது.இதோ.. எக்ஸெல் இது போன்ற பிழைகளைத் தானாகக் கண்டறிந்து மாற்றி சரியாக அமைக்கும். அதற்கான செட் அப் வழிகள்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். 2. இடது பக்கம் உள்ள Proofing பிரிவில் என்பதில் கிளிக் செய்திடவும்.3. அடுத்து AutoCorrect என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் AutoCorrect டயலாக் பாக்ஸைக் காட்டும். 4. AutoCorrect டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 5. தொடரந்து Correct Accidental Use of CAPS LOCK Key என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். 6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, எக்ஸெல் ஒர்க்ஷீட் செல் ஒன்றில், ஏதேனும் டைப் செய்கையில், முதல் எழுத்து சிறிய எழுத்தாகவும், அடுத்து வருபவை அனைத்தும் கேப்பிடல் எழுத்துக்களாகவும் இருந்தால், உடனே எக்ஸெல் கேப்ஸ் லாக் கீயை அணைத்து, டெக்ஸ்ட்டையும் சரி படுத்தும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதனைத் தொடங்கும்போதே, பிரைவேட் பிரவுசிங் நிலையில் எப்போதும் தொடங்கும்படி அமைக்க முடியுமா?
கே;சந்தீப் குமார், சென்னை.
பதில்:
பயர்பாக்ஸ் பிரவுசரின் ஆப்ஷன்ஸ் விண்டோவில் இதற்கான வழி உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, டூல்ஸ் பிரிவில், ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் எட்டு டேப்கள் அடங்கிய விண்டோவில், பிரைவசி என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில், Always use private browsing mode என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி வெளியேறவும். இனி, பயர்பாக்ஸ் பிரவுசர், நீங்கள் விரும்பியபடியே, பிரைவேட் பிரவுசிங் முறையிலேயே தொடங்கும்.

கேள்வி: இமெயில் வகைகளில் மைம் (MIME) என்று ஒரு வகை உள்ளதா? இது எதனைக் குறிக்கிறது? எப்படிப் பயன்படுத்துவது?
எஸ். மணிமாலா, திருப்பூர்.
பதில்:
Multipurpose Internet Mail Extensions என்பதன் சுருக்கமே இது. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இமெயில் வகை அல்ல இது. ஆனால், இமெயிலுடன் தொடர்புடையதுதான். இதோ அதற்கான விளக்கம். இது இன்டர்நெட் சார்ந்த ஒரு வரையறை ஆகும். இமெயிலுடன், டெக்ஸ்ட் அல்லாத, ஆஸ்க்கி குறியீட்டில் அல்லாத கேரக்டர் செட்களை இணைக்க வழி செய்திடும் வழிமுறை மைம். மைம் பழக்கத்திற்கு வரும் முன்னர், இமெயிலுடன் டெக்ஸ்ட் அல்லாத ஒன்றை இணைக்க, அதனை பைனரியிலிருந்து மாற்றி, மாற்றியதை இமெயில் டெக்ஸ்ட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும். பின்னர், அதனைப் பெறுபவரும் அதே முறையில் பைனரிக்கு மாற்றி அறிந்து கொள்ள வேண்டும். மைம் முறை வந்த பின்னர், இமெயில் டெக்ஸ்ட்டுடன், படங்கள், வீடியோ போன்றவற்றை இணைத்து அனுப்புவது எளிதானது.

கேள்வி:ஹைபர்னேஷன் மற்றும் ஸ்லீப் மோட் - இவற்றில் எது சிறந்தது? கம்ப்யூட்டரை இவற்றில் ஒன்றில் அமைக்கையில், அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற சாதனங்களின் நிலை எப்படி இருக்கும்? மீண்டும் ஆக்டிவேட் செய்திடுகையில், அனைத்தும் உடனே கிடைக்குமா?
எஸ். கண்ணகி, மதுரை.
பதில்:
ஹைபர்னேஷன் நிலை என்பது, மின்சக்தி கிட்டத்தட்ட எதுவுமின்றி உயிரற்ற நிலையில் கம்ப்யூட்டரை வைப்பதற்குச் சமம் ஆகும். ஸ்லீப் மோடில் கம்ப்யூட்டரை அமைக்கும் போது, அதன் முக்கிய சிஸ்டம் பவர் இயக்க நிலையில் இருக்கும். துணை சாதனங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் பவர் அற்ற நிலையில் இருக்கும். ஆனால், ஹைபர்னேஷன் நிலையில், சிஸ்டம் பவர் இன்றி இருந்தாலும், அதுவரை நாம் மேற்கொள்ளப்பட்ட வேலை தயார் நிலையில் மீட்டுப் பெறும் வகையில் இருக்கும்.
ஹைபர்னேஷன் நிலையில், ராம் நினைவகத்தில் தங்கும் நாம் மேற்கொண்ட வேலை, ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கப்படுகிறது. டிஸ்க்கில் ராம் நினைவகத்தில் இருந்த வேலை பதியப்பட்ட பின்னர், சிஸ்டமானது தன் சக்தியை விட்டுவிடுகிறது. ஏறத்தாழ, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்திவிட்டால், என்ன நிலைக்குச் செல்லுமோ, அந்த நிலைக்குச் சென்றுவிடுகிறது. மீண்டும் பவர் செலுத்தப்படுகையில், உடனே ராம் டிஸ்க்கிலிருந்து சேவ் செய்த அனைத்து தகவல்களும், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து மாற்றப்பட்டு, பயனாளர் எந்த நிலையில் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ, அந்த நிலைக்கு மீண்டும் வந்துவிடும்.
அதிக நேரம் கம்ப்யூட்டரை இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தால், ஹைபர்னேஷன் நிலையே சரியானது. எடுத்துக் காட்டாக, வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், வெளியே சென்று, உணவு சாப்பிட்டுப் பிறகு வந்து, பணியைத் தொடர்வதாக இருந்தால், ஹைபர்னேஷன் நிலைக்குக் கம்ப்யூட்டரை அமைத்துச் செல்லலாம். மிகக் குறுகிய காலத்திற்கு, கம்ப்யூட்டரிலிருந்து விடுதலை பெறுவதாக இருந்தால், ஸ்லீப் மோட் சரியான ஒன்றாக இருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X