கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 மார்
2014
00:00

கேள்வி: போல்டர் ஒன்றை உருவாக்க, ரைட் கிளிக் செய்து மெனு செல்லாமல், ஷார்ட் கட் மூலம் உருவாக்க முடியுமா? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.
என். தெய்வேந்திரன், காரைக்கால்.
பதில்:
விண்டோஸ் 7 உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும். போல்டரை எங்கு உருவாக்க வேண்டுமோ அங்குசெல்லவும். அடுத்து, கண்ட்ரோல் + ஷிப்ட் + N கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். தொடர்ந்து அதற்குப் பெயர் சூட்டி, அடையாளம் ஒன்றைத் தரவும். இதே ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் திரையிலும் புதிய போல்டரை உருவாக்கலாம்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில் சிறிய எண்களுடன் பின்னங்கள் அமைய என்ன செய்திட வேண்டும்? என் நண்பரின் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் 2007ல் இது போல் கிடைக்கிறது. நான் வீட்டில் 2003 பயன்படுத்துகிறேன். அலுவலகத்தில் ஆபீஸ் 2010 பயன்படுத்தப்படுகிறது. எனக்குக் கிடைக்கவில்லை. வழி என்ன?
எஸ்.கே. விஜய், கோவை.
பதில்:
வேர்ட் 2003 தொகுப்பிற்குண்டான செட் செய்திடும் வழிகளைத் தருகிறேன். டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு Tools கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Auto Correct Options கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Auto Correct as you type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்றாவதாக, Fractions (1/2) with fraction character என ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதன் தொடக்கத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய வகையில் சிறிய அளவில் பின்னம் கிடைக்கும்.
இந்த ஆப்ஷன் வேர்ட் 2010 தொகுப்பில் மாறா நிலையில் தரப்படுகிறது. எனவே நீங்களாக மாற்றியிருந்தால் தான், பெரிய அளவில் பின்னம் காட்டப்படும். இதனைச் சரி செய்திட என்ன செய்திட வேண்டும் எனப் பார்ப்போம். "File” டேப் கிளிக் செய்திடவும். அங்கு "Options” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், "AutoFormat as You Type” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு "Replace Fractions With Fraction Characters” என்று இருக்கும் வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: இணையத்தில் பிரவுசிங் செய்கையில், குறிப்பிட்ட இணைய தளத்தினை புக் மார்க் செய்திட, அந்த மெனு சென்று தான் அமைக்க வேண்டியதுள்ளது. இதனை நேரடியாக மேற்கொள்ள ஏதேனும் ஷார்ட் கட் கீ உள்ளதா?
என். கோகிலா, திருப்பூர்.
பதில்
: ஷார்ட் கட் கீ இதற்கென உள்ளது. கண்ட்ரோல் + டி (Ctrl+D) அழுத்துங்கள். உடன் உங்களுக்கு புக்மார்க்கிற்கான பெயர் அமைக்கும் கட்டம் கிடைக்கும்.
இது எந்த பிரவுசருக்கு? மற்ற பிரவுசரில் என்ன ஷார்ட் கட் கீ என்று குழப்பம் கொள்ள வேண்டாம்.
ஒவ்வொரு பிரவுசரிலும் என்ன ஷார்ட் கட் கீ எனக் கேட்கிறீர்களா? பயர்பாக்ஸ், குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர் என அனைத்திலும் இதே ஷார்ட் கட் கீ தொகுப்புதான் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில சந்தேகங்களுக்கான விளக்கத்தினையும், கூடுதல் தகவல்களையும் தருகிறேன்.
புக்மார்க் என்பதால் (Bookmark) எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், Ctrl+B இருக்கலாமே என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஷார்ட் கட் கீ Bold அமைக்க அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களில் பயன்படுத்த என ஒதுக்கப்பட்டுவிட்டதால், இங்கு Ctrl+D பயன்படுத்தப்படுகிறது.
குரோம் பிரவுசரில் Ctrl+Shift+D என ஷார்ட்கட் கீ கொடுத்தால், புக்மார்க் அமைப்பதில் இன்னும் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். தளத்தினை புக்மார்க் செய்து, தகவல்களை எடிட் செய்திடலாம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில், இந்த கீகளை அழுத்தினால், திறந்திருக்கும் அனைத்து டேப்களில் உள்ள தளங்களும் புக்மார்க் செய்யப்படும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதில் இணையத்தில் உள்ள படங்களைக் காப்பி செய்திட முயற்சிக்கையில், அவை அனுமதிப்பதில்லை. அதனால், ஸ்கிரீன் பிரிண்ட் எடுத்திட அந்த கீயை அழுத்தினால், பின்னர் அதனை பெயிண்ட் புரோகிராமிற்கு மாற்ற முடியவில்லை. ஏன் இந்தப் பிரச்னை? இதற்கான தீர்வினைத் தரவும்.
கே.எஸ். தயாளன், மதுரை.
பதில்:
நல்ல காரணங்களுடன் உங்கள் கேள்வியைத் தந்திருக்கிறீர்கள். நீங்கள் பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்து, ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சிக் கிறீர்கள். ஆனால் அதனை பெயிண்ட் போன்ற புரோகிராமிற்குக் கொண்டு செல்ல இயலவில்லை. இதுதான் உங்கள் பிரச்னை இல்லையா? சரி, இனி விஷயத்திற்கு வருவோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி உங்களுக்காக சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, ஸ்கிரீன் ஷாட் எடுக்க விண்டோஸ் கீயுடன் PrtScn கீயை அழுத்தி, கிளிப் போர்டில் சேவ் செய்யப்படும் இமேஜை, பெயிண்ட் போன்ற படங்களைக் கையாளும் புரோகிராமில் பேஸ்ட் செய்து பைலாக மாற்றி, விருப்பப்படும் பார்மட்டில் சேவ் செய்தீர்கள். தற்போது இந்த வேலையை விண்டோஸ் 8 தானாகவே செய்கிறது. நீங்கள் விண்டோஸ் மற்றும் PrtScn கீயினை அழுத்தினால் போதும். திரைக் காட்சி பைலாக, My Pictures\Screenshot போல்டரில் சேவ் செய்யப்படுகிறது. இது PNG பார்மட்டில் சேவ் செய்யப்படும். உங்களுக்கு வேறு பார்மட்டில் தேவை எனில், பின்னர் மாற்றிக் கொள்ளலாம். கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும் இடத் தையும், இந்த பைலை மாற்றுவதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: இணைய தளம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் யு.ஆர்.எல். இதுதான் என்று கூறுகிறீர்கள். சில வேளைகளில், அதன் முகவரி என்றும் எழுத்துக்களும் எண்களும் அமைந்த நீளமான வரி தரப்படுகிறது. யு.ஆர்.எல். என்பதன் விரிவாக்கமும், இது எப்படி இணைய தளத்தைக் குறிக்கிறது என்பதனையும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். பகவன் தாஸ், மாமல்லபுரம்.
பதில்:
URL: Uniform Resource Locator என்பதுதான் அதன் விரிவாக்கம். ஒவ்வொரு இணைய தளப் பக்கமும் அல்லது பக்கங்களும், ஒரு சர்வர் கம்ப்யூட்டர் ஒன்றில் அமைக்கப்பட்டு நமக்குத் தரப்படுகிறது. இது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டராக எப்போதும் இயங்கும். அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல்.
யு.ஆர்.எல். என்பது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, எழுத்துக்களும், தேவைப்பட்டால் எண்களும் இணைந்து, குறிப்பிட்ட பார்மட்டில் அமைக்கப்பட்ட நீள் கோவையாகும். இதனை வெப் பிரவுசர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் மற்றும் பிற சாப்ட்வேர் புரோகிராம்கள் புரிந்து கொண்டு, அந்த முகவரிக்கான கம்ப்யூட்டரை அடைந்து, சார்ந்த இணையப் பக்கத்தினைப் பெற்று நமக்குத் தருகின்றன. யு.ஆர்.எல். ஒன்றில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை 1. network protocol, (எ.கா. http://, ftp://, and mailto://) 2. host name or address (எ.கா. www.dinamalar.com) மற்றும் 3. file or resource location (எ.கா. election.dinamalar.com/ detail.php ?id=1678) ஆகும்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். தங்களுடைய அறிவுரையின்படி, விண்டோஸ் 8 கொண்ட லேப்டாப் வாங்கப் போகிறேன். விண்டோஸ் 8 சிஸ்டம், புதுமையான முறையில் இருப்பதால், பேஸ்புக், ஜிமெயில் அக்கவுண்ட்கள் புதிதாகத் தொடங்க வேண்டுமா?
என். சந்திரன், சிவகாசி.
பதில்:
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாற்றுவதால், ஜிமெயில், பேஸ்புக், மற்றும் பிற மெயில், சமூக இணைய தள அக்கவுண்ட்களை மாற்ற வேண்டியதில்லை. விண்டோஸ் 8 தரும் டைல்ஸ் இயக்கமுறையைப் பார்த்தவுடன் இந்த சந்தேகம் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். கவலைப்படாமல் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தவும். விண் 8 பயன்படுத்த லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என கம்ப்யூட்டர் மலரில் எழுதவில்லை. உங்களின் தற்போதைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 பதிய இயலவில்லை என்றால், விண் 8 கொண்ட டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்கிக் கொள்ளலாம்.

கேள்வி: என் வீட்டில் மின்சாரம் நின்று போனால், உடனே இன்வர்டர் வேலை செய்து, பவர் போனதையே காட்டாது. அதாவது இடைவெளி இன்றி தொடர்ந்து மின்சாரப் பயன்பாடு கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கிப் பயன்படுத்த வேண்டுமா?
எஸ். சுகன்யா, சென்னை.
பதில்
: அருமையான கேள்வி. மின்சாரம் போனால், அதே பவரைத் தர இன்வர்டர் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து அமைத்திருக்கையில், மீண்டும் ஏன் கம்ப்யூட்டருக்கு எனத் தனியே ஒன்று வாங்க வேண்டும்? நல்ல சந்தேகம். யு.பி.எஸ். ஒன்றில் இன்வர்டர், பேட்டரி மற்றும் பேட்டரி சார்ஜரும் உண்டு. ஒரு சில யு.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகளை வெளியே வைத்தும் பயன்படுத்துகின்றன. ஆனால், யு.பி.எஸ். சாதனங்களைக் கம்ப்யூட்டருடன் இணைக்கையில், அவை மின்சக்தியை இழப்பதற்கு முன், கம்ப்யூட்டருக்குச் செய்தி கொடுத்து காட்டப்படும். இன்வர்டரில் அந்த வசதி இருக்காது. இன்வர்டரை, யு.பி.எஸ். ஆகப் பயன்படுத்துவதாக இருந்தால், சில இன்வர்டர்களில், அதன் கண்ட்ரோல் பெட்டியில், யு.பி.எஸ். ஆகப் பயன்படுத்த ஒரு ஸ்விட்ச் தரப்பட்டிருக்கும். அதனை இயக்க வேண்டும். இல்லை எனில், மின்சாரம் நின்று, இன்வர்டர் தன் வேலையைத் தொடங்குகையில், கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும் வாய்ப்பு ஏற்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X