கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்து அவ்வளவாகத் தெரியாது. என் வீட்டில், என் மகன் பயன்படுத்தி விட்டுக் சென்ற மேக் ப்ரோ கம்ப்யூட்டர் ஒன்று உள்ளது. அதனையும் நான் முன்பு இயக்கி உள்ளேன். இப்போது என் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களையும் பைல்களையும் அதற்கு மாற்ற முடியுமா?
எஸ்.கோபால் சர்மா, திருச்சி.
பதில்:
புரோகிராம்களை நிச்சயம் மாற்ற முடியாது. ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குபவை. பைல்களை மாற்றலாம். ஒரு ப்ளாஷ் ட்ரைவ் பயன்படுத்தி மாற்றலாம். அல்லது, மின் அஞ்சல் மூலம் ஒரு முகவரிக்கு அனுப்பி, இன்னொரு கம்ப்யூட்டரை இணையத்தில் இணைத்து, அதில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். என்னுடைய நல்ல பரிந்துரை என்னவென்றால், நீங்கள் பயன்படுத்தும் எக்ஸ்பி கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 பதித்து இயக்க முடியும் என்றால், ஒருவரின் துணையோடு அதனை மேற்கொள்ளவும். அல்லது, புதிய விண்டோஸ் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிக் கொண்டு அதில் பைல்களை மாற்றிக் கொள்ளவும். மேக் ப்ரோ கம்ப்யூட்டரில் உங்களால் செயல்பட முடியும் என்றால், அந்த மாற்றம் குறித்தும் சிந்திக்கலாம்.

கேள்வி:வேர்ட் டாகுமெண்ட்டில், டிப்ஸ்களைப் படிக்கையில், புட் நோட் மற்றும் எண்ட் நோட் என்று தருகிறார்கள். இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு? இதன் பயன்பாடு என்ன?
எஸ். ஹேமலதா, கோவை.
பதில்:
Footnote என்பது, ஆவணம் எனப்படும் டாகுமெண்ட்டில் சொல்லப்பட்ட ஒன்றைப் பற்றிக் கூடுதலான தகவல்களைத் தரும் குறிப்பாகும். இது டெக்ஸ்ட்டுடன் தரப்படாமல், அந்த அந்த பக்கங்களின் கீழாகத் தரப்படும். என்பதுவும் அதே நோக்கத்துடன் அமைக் கப்படுபவையே. ஆனால், அவை பக்கங்களின் கீழாகத் தரப்படாமல், நூல், அல்லது ஆய்வுத் திட்டக் கட்டுரையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தரப்படும். வேர்ட், இந்த இருவகையான குறிப்புகளையும் அமைக்க வசதி தருகிறது. இந்த வசதிகளைப் பயன்படுத்தி அமைக்கலாம். அவை நம் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

கேள்வி: சிக்லெட் கீ போர்ட் என கம்ப்யூட்டருக்கு உண்டா? இது மற்றவற்றிலிருந்து வேறுபட்டதா?
என். வனராணி, போடி.
பதில்:
சிக்லெட் கீ போர்ட் (Chiclet Keyboard அல்லது IslandStyle Keyboard) என்பது நாம் பயன்படுத்தும் வழக்கமான கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் ஒன்று. இதில் தட்டையான, சதுர வடிவத்தில், வளைவான முனைகள் உள்ள தோற்றத்தில் இதன் கீகள் இருக்கும். இவை மிக மெல்லிய அளவில் இருக்கும். வழக்கமான கீ போர்டுகளைக் காட்டிலும், இது குறைவான இடத்தையே எடுத்துக் கொள்ளும். சிக்லெட் சூயிங் கம் வடிவத்தில் இந்த கீகள் இருப்பதால், இதற்கு இப்பெயர் வந்தது. இந்த கீகளின் இடைப்பகுதியை பிளாஸ்டிக் தாள் போன்ற ஒன்று மூடி இருக்கும். இதனால், நீர் உள்ளே செல்லாது. வழக்கமான கீ போர்டில், டீ அல்லது காபி சற்று அதிகமாகச் சிந்திவிட்டால், அது பயன்படாமல் போகும் வாய்ப்பு உண்டு. இதில் அப்படி இல்லை.

கேள்வி: நேற்று என் கம்ப்யூட்டரில் ஒரு டிவிடியை இயக்கினேன். அதன் பின்னர், அதன் பட்டனை எத்தனை முறை அழுத்தினாலும், சிறிய பச்சை எல்.இ.டி. விளக்கு எரிந்து அணைகிறது. டோர் திறக்கவில்லை. அந்த டிவிடி இன்னொரு நண்பருடையது. அதனை எப்படி திறந்து எடுப்பது?
என். சிராஜுதீன், மதுரை.
பதில்:
உண்மையிலேயே சிக்கல் தான். நண்பருக்கு டிவிடியைத் திருப்பிக் கொடுத்தாக வேண்டுமே. இதற்கான வழிகளை இங்கு பார்ப்போம். ஸ்டார்ட் அழுத்தி, கம்ப்யூட்டர்/மை கம்ப்யூட்டர் என்று செல்லவும். இது நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் இயக்கத்தினைப் பொறுத்தது. கம்ப்யூட்டருக்கான விண்டோவில், உங்கள் டிவிடி ட்ரைவிற்கான பகுதியில், ரைட் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில், "Eject” என்பதில் கிளிக் செய்திடவும்.
இதற்கு டோர் திறக்கவில்லை என்றால், பேப்பர் கிளிப் ஒன்றை (ஜெம் கிளிப்) எடுத்துக் கொண்டு அதன் ஒரு முனையை நீட்டி வைத்துக் கொள்ளவும். பின், அதனை, டிவிடி ட்ரைவின் கதவில் உள்ள ஒரு சிறிய துளையில் மெதுவாகச் செருகவும். மிக மெதுவாகச் சென்றால், தொடர்ந்து செல்ல இயலாமல், பின் நிற்கும். அப்போது அதனைச் சற்று அழுத்தம் கொடுத்து அழுத்தினால், நிச்சயம் கதவு திறக்கும். ஒரு சில ட்ரைவ்களில், இந்த சிறிய துளை இல்லாமல் இருக்கலாம். அவ்வாறெனில், பலமுறை முயற்சித்துப் பார்த்துவிட்டு, தகுந்த டெக்னீஷியன் உதவியுடன், கம்ப்யூட்டரின் கேபின் திறந்து, ட்ரைவினைத் தனியே எடுத்து, ட்ரைவின் உள்ளே இருப்பதனை எடுக்க வேண்டும்.

கேள்வி: நான் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்களில், இணையப் பக்கங்களில் கிடைக்கும் திரைக் காட்சிகளை அப்படியே இணைக்க விரும்புகிறேன். இதனை எப்படி மேற்கொள்வது? நான் பயன்படுத்துவது விண்டோஸ் 7.
டி. தயான் சந்த், கோவை.
பதில்:
இணையப் பக்கத்தில், நீங்கள் டாகுமெண்ட்டில் ஒட்ட விரும்பும் பக்கத்தினைத் திரையில் பார்க்கும் போது, பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தவும். அந்தக் காட்சி அப்படியே கிளிப் போர்டுக்கு வரும். பின்னர், டாகுமெண்ட்டில் நீங்கள் இந்தப் படத்தினை இணைக்க வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து, கண்ட்ரோல் + வி கீகளை அழுத்தினால், திரைக் காட்சி அப்படியே ஒட்டிக் கொள்ளும்.
சில வேளைகளில், முழுமையான பக்கம் அப்படியே தேவை இல்லை என நீங்கள் எண்ணலாம். அந்தப் பக்கத்தில் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஒட்டிவிடத் திட்டமிடலாம். அந்த நோக்கத்தில் செயல்படுகையில், முதலில் கூறியது போல அந்தப் பக்கத்தினை அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் கிளிப் போர்டு செல்லவும். பின்னர், பெயிண்ட் போன்ற இமேஜிங் புரோகிராம் ஒன்றைத் திறந்து, அதில் இதனைப் பேஸ்ட் செய்திடவும். பின்னர், நீங்கள் டாகுமெண்ட்டில் ஒட்ட வேண்டிய பகுதியினை மட்டும் தேர்ந்தெடுக்கவும். அந்தப் பகுதியை கண்ட்ரோல் + சி கீகளை அழுத்திக் காப்பி செய்திடவும். இனி, இதனை, டாகுமெண்ட்டில் தேவைப்படும் இடத்தில் ஒட்டிவிடலாம்.

கேள்வி: பைல்களை இடம் மாற்றுகையில், டைரக்டரி ஒன்றிலிருந்து இன்னொரு டைரக்டரிக்கு நேரடியாக இழுத்துச் சென்று மாற்ற முடியுமா?
என். தாமரைச் செலவன், சிதம்பரம்.
பதில்
: தாராளமாகச் செய்திடலாம். எளிய வழியில் மேற்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இரு டைரக்டரிகளையும் திறந்து வைத்துக் கொள்ளவும். இரண்டும் ஸ்கிரீனில் தெரியும் வகையில், சுருக்கி வைக்கப்பட்ட நிலையில் அமைக்க வேண்டும். பின்னர், எந்த பைலை மாற்ற வேண்டுமோ, அந்த டைரக்டரியில், குறிப்பிட்ட பைலைத் தேர்ந் தெடுக்கவும். இதில் மவுஸின் கர்சரை வைத்து, அப்படியே இழுத்துச் சென்று, எந்த டைரக்டரியில் பேஸ்ட் செய்திட வேண்டுமோ, அதில் விடவும். இப்போது அந்த குறிப்பிட்ட பைலை காப்பி செய்திடவா, நகர்த்திடவா என்று சிறிய டயலாக் பாக்ஸ் மூலம் கேட்கப்படுவீர்கள். உங்கள் விருப்பப்படி டிக் செய்து அமைக்கவும்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். பல ஆண்டுகளாகவே என் மவுஸ் கர்சர் சிறியதாகவே உள்ளது.என் நண்பரின் கம்ப்யூட்டரில் அது சற்றுப் பெரியதாக இருப்பதனைப் பார்த்தேன்.அவரிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்டதற்கு, முதலில் இருந்து அப்படி உள்ளது என்று கூறினார். அப்படியானால், என் கம்ப்யூட்டரிலும் இது போல சற்றுப் பெரியதாக மாற்ற முடியுமா? என்ன வழி?
கே. எஸ்.டேவிட் ராஜா, புதுச்சேரி.
பதில்:
தாரளமாக நீங்கள் விரும்பும் வகையில் கர்சரைப் பெரிதாக அமைக்கலாம். கீழே தந்துள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. "Start” கிளிக் செய்துதிடவும். பின்னர் "Control Panel” -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. தொடர்ந்து கிடைக்கும் விண்டோவில், "Mouse” என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
3. இப்போது உங்களுக்கு "Mouse Properties” என்ற பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு "Pointers/Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இதில் "Display pointer trails” என்று இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டறிந்து, அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் அருகில் உள்ள ஸ்லைடரை பெரிய அளவு நோக்கி இழுத்து அமைக்கவும்.
5. நீங்கள் விரும்பினால் "Hide pointer while typing” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது டைப் செய்திடும் போதும் மவுஸ் கர்சர் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும்.
6. அடுத்து, "Show location of pointer when I press the CTRL key” என்று உள்ள இடத்தில் கிளிக் செய்திடவும். இது கண்ட்ரோல் கீயை அழுத்துகையில் உங்கள் மவுஸ் பாய்ண்டரைச் சுற்றி ஒரு மின்னும் வட்டத்தை ஏற்படுத்தும்.
7. ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியே வரவும்.
இனி நீங்கள் விரும்பிய வகையில் கர்சர் கிடைக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X