பத்து ஆண்டுகளைக் கடந்த ஜிமெயில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2014
00:00

ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. அதனால் தான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1 அன்று, ஒரு ஜிபி சர்வர் இடத்துடன், இலவச மின் அஞ்சல் சேவையினை அனைவருக்கும் வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்த போது, எல்லாரும் அதனை முட்டாள் தினச் செய்தியாக எடுத்துக் கொண்டனர். அப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ஆம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும். ஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள். ஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நிலை நிறுத்தி வருகிறது. (தற்போது அனைத்து கூகுள் சேவைகளுக்குமாகச் சேர்த்து ஒவ்வொருவருக்கும் 15 ஜிபி இடம் இலவசமாக வழங்கப்படுகிறது)
1998 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனம் வெளியானது. அப்போது பிரபல மாயிருந்த ஹாட்மெயில் மற்றும் யாஹூ மெயில் சேவைகளை கூகுள் ஊதித் தள்ளிவிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகமான ஸ்டோரேஜ் இடம், இடைமுகம், உடனடித் தேடல் மற்றும் பிற வசதிகளுடன், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கியது கூகுள்.
கூகுளின் ஜிமெயில் கூறுகளைப் பார்த்த பின்னர், இணையம் இந்த வழியில் தான் செல்லப் போகிறது என அனைவரும் எண்ணத் தொடங்கினர். அஞ்சல் செய்திகளில் உள்ள சொற்களைத் தேடிப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்கிய போது, கூகுள் தொட்ட விளம்பர அலாவுதீன் பூதத்தின் வர்த்தகத் திறனை அனைவரும் உணர்ந்தனர். கூகுள் இவ்வாறு நம் அஞ்சல் செய்திகளைத் தேடி அலசித் தெரிந்து கொள்ளலாமா? அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா? என்ற கேள்விகள், இன்றைய அளவிலும் கேட்கப்பட்டு விடை காண முடியாத நிலையில், திருடன் போலீஸ் விளையாட்டாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் திடீரென ஜிமெயில் கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. மூன்று ஆண்டுகள், இதற்கென பெரிய வல்லுநர் குழு ஒன்று உழைத்தது. பலமுறை, இது சாத்தியமா, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அந்த குழுவினருக்கு வந்தது. ஆனால், வெளி வந்த போது, இணைய உலகிற்கே அது சாதனைக் கணமாக அமைந்தது.
கூகுள் நிறுவனம் தன் ஊழியர்களை, அவர்களின் வேலை நேரத்தில் 20 சதவீத நேரத்தைத் தாங்கள் புதியதாக முனைய விரும்பும் திட்டங்களில் செலவிட அனுமதித்தது. அப்படிப்பட்ட நேரத்தில், பல வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஜிமெயில். இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் Paul Buchheit ஆகஸ்ட் 2001ல் இதனைத் தொடங்கினார். ஆனால், இதற்கான விதை அவர் மனதில், கூகுள் நிறுவனத்தின் 23 ஆவது ஊழியராகச் சேர்வதற்கு முன்னரே, 1996 ஆம் ஆண்டிலேயே இருந்து வந்ததாக அவர் குறிப்பிடுவார். "பயன் தரத்தக்க ஒன்றை அமைத்துவிடு; பின்னர் அதனைத் தொடர்ந்து மேம்படுத்து என்பதே என் பணித் திட்டத்தின் தாரக மந்திரமாக இருந்தது” என்று அவர் அடிக்கடி கூறுவார்.
ஜிமெயில் திட்டம் முதலில் Caribou என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது. புக்கெயிட் முதலில் தன் மின் அஞ்சல்களுக்கான தேடல் சாதனம் ஒன்றைத் தனக்கென வடிவமைத்தார். பின்னர், அதனையே ஏன் மற்றவர்களுக்கான அஞ்சல் சேவையோடு தரக் கூடாது என்று இலக்கை அமைத்துக் கொண்டு செயலாற்றினார்.
வேறு எந்த மின் அஞ்சல் சேவைத் தளமும், அஞ்சல்களில் தேடும் சாதனத்தைத் தராத நிலையில், புக்கெயிட் அதனைத் தந்தது, உலகைத் திருப்பிப் பார்க்க வைத்தது. அடுத்த இதன் சிறப்பம்சம், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்த இடம் தான். ஹாட் மெயில் போன்றவை, மெகா பைட் அளவில் சிறிய இடத்தைத் தந்து வந்த நிலையில், ஒரு கிகா பைட் என்ற அதிக பட்ச உயரத்தை எட்டியது அனைவரின் ஆச்சரியத்தையும் இழுத்தது. இதுவே, மின் அஞ்சல் சேவையினை மையமாகக் கொண்டு, கூகுள், ஓர் இணையப் பண்பினை வளர்த்துக் கொள்ள உதவியது.
யாஹூ, எக்ஸைட், லைகோஸ் மற்றும் பிற தேடல் நிறுவனங்கள், தங்கள் தளங்களை "portals” எனப் பெயரிட்டு அழைத்து, தகவல்கள், செய்திகள், ஸ்போர்ட்ஸ், சீதோஷ்ணநிலை அறிக்கை மற்றும் மின் அஞ்சல் என அனைத்தையும் தருவதாகக் காட்டிக் கொண்டன. இந்தச் சூழ்நிலையில், கூகுள் தன் அஞ்சல் சேவையை மையமாகவும், தேடல் இஞ்சினை முதன்மையாகவும் பல வசதிகளோடு கொண்டு வந்தது, இப்பிரிவில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. கூகுள் நிறுவனர்களான Larry Page மற்றும் Sergey Brin முழு ஒத்துழைப்பு தர, ஜிமெயில் தொடர்ந்து பல வசதிகளை இணைத்துக் கொண்டது. இதன் அடிப்படையாக அமைந்தது, இதில் பணியாற்றியவர்கள் தங்களுடைய மின் அஞ்சல் பணிகளில் எதிர் கொண்ட பிரச்னைகளே. இவை தானே மற்றவர்களும் எதிர்கொள்வார்கள் என்று எண்ணி, அவற்றிற்குச் சிறப்பாகத் தீர்வுகளைக் கொண்டு வந்தனர்.
மற்ற அஞ்சல் தளங்கள் எச்.டி.எம்.எல். மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட போது, கூகுள் தன் ஜிமெயில் இயக்கத்தினை ஜாவா ஸ்கிரிப்ட் கொண்டு அமைத்தது. இதுவே பின் நாளில் Ajax (Asynchronous JavaScript and XML) என அழைக்கப்பட்டது. இதனாலேயே, இந்த பிரவுசருக்குள் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்களை மற்றவர்கள் அமைத்து வெளியிட முடிந்தது. இந்த வசதியினைப் பயன்படுத்தி Sam Schillace மற்றும் Steve Newman ஆகியோர் இதிலேயே வேர்ட் ப்ராசசர் ஒன்றை அமைத்தனர். 2005 ஆம் ஆண்டு Writely என்ற அப்ளிகேஷன் கிடைத்தது. இதுவே, பின் நாளில் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு, Google Docs உருவாக அடித்தளம் அமைத்தது. மின் அஞ்சலில் ஜிமெயில் ஏற்படுத்திய மாற்றம் போல, கூகுள் டாக்ஸ் அப்ளிகேஷனும் மாற்றத் தினை ஏற்படுத்தியது. ஆபீஸ் அப்ளிகேஷன் களில் மேற்கொள்ளப்படும் பணிகள் யாவும் இதில் மேற்கொள்ளப்பட்டன -- எந்தக் கட்டணமும் செலுத்தப்படத் தேவையில்லாத, இந்த சேவையை மக்கள் அதிகம் விரும் பினார்கள்.
கூகுள் நிறுவனத்திலேயே சிலர், ஜிமெயில் சேவையினைக் கட்டணச் சேவையாக மாற்றுமாறு பரிந்துரைத்தனர். ஆனால், புக் கெயிட் அந்த சிந்தனைக்கு இடம் கொடுக்கவே கூடாது. அதற்குப் பதிலாக, விளம்பரங்களுக்கு இடம் தந்து, அதன் மூலம் இதன் செலவினை ஈடு கட்டலாம் என்று உழைத்தார்.
ஜிமெயில் முதலில் ஒருவரின் அழைப்பின் பேரில் தான் மற்றவர் பெறும் வகையில் இயங்கியது. 2004 ஆம் ஆண்டில் ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க அழைப்பு கொடுத்துப் பெறுவது மிகப் பெரிதாகப் பேசப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வரை, இவ்வாறு அழைப்பின் பேரில் தான் அக்கவுண்ட் திறக்க முடியும். பின்னர், இது மாற்றப்பட்டு, யாரும் எப்போதும் ஜிமெயில் அக்கவுண்ட் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது.
ஜிமெயிலைப் பொறுத்தவரை, பத்தாண்டுகள் ஆன பின்னரும், பல புதிய வசதிகளைத் தந்த பின்னரும், அதன் தொடக்க கால அடிப்படைக் கட்டமைப்பு மாறாமலேயே உள்ளது. (அவுட்லுக் டாட் காம் மற்றும் யாஹூ மெயில் போன்றவை, இந்த பத்தாண்டுகளில் நிறையவே மாற்றங்களைப் பெற்றுள்ளன.) இது போல பத்தாண்டுகளாகியும் அதன் தொடக்க வடிவமைப்பிலேயே உள்ள ஓர் அப்ளிகேஷனை டிஜிட்டல் உலகில் காண்பது அரிது. ஜிமெயில், தகவல் போக்கு வரத்தின் புதிய பரிமாணமாக இன்று உள்ளது. முழுமையாக அதனை மாற்றிவிட்டது. அதன் அதிகப்படியான சர்வர் டிஸ்க் இடம், இமெயில் இன்பாக்ஸ் பற்றிக் கவலைப்படுவதனை நிறுத்திவிட்டது.
இன்றைக்கு எண்ணிப் பார்க்கையில், ஜிமெயில், கூகுளுக்கு ஒரு புதிய இடத்தைத் தந்ததை உறுதி செய்திடலாம். அதற்கு முன்னால், சிறிய தேடல் வசதி தரும் தளமாக மட்டுமே இயங்கி வந்தது. ஜிமெயில் மற்றும் அதன் கட்டமைப்பில் அடுத்து உருவானவை, கூகுள் நிறுவனத்தின் நிலையையே மாற்றின. இணையம் வரும் எவரும் கூகுள் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலை இன்று உருவாகி உள்ளது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X