'ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறதே'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2014
00:00

இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக குறைந்தால், அது இதயத்தை பலவழிகளில் பாதிக்கிறது. உங்கள் டாக்டரை சந்தித்து, உடனடியாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும்

* என் சகோதரருக்கு, 'பைபாஸ் சர்ஜரி' செய்து, இரு ஆண்டுகளாகின்றன; நலமாக உள்ளார். தற்போது மீண்டும் புகைப் பழக்கத்தை துவக்கி விட்டார். இதனால் பாதிப்பு வருமா?
பைபாஸ் சர்ஜரி என்பது, இதய ரத்தநாளத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து, இதயத்தில் பொருத்தும், அறுவை சிகிச்சை ஆகும். பைபாஸ் சர்ஜரி செய்தவருக்கு, புதிதாக பொருத்தப்பட்ட ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்படவும், பழையை அடைப்பு மீண்டும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 'பைபாஸ் சர்ஜரி' செய்தவர்கள், சரியான உணவுப் பழக்கம், தினமும் நடைபயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுதல், நேரத்துக்கு தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வது அவசியமாகும். புகைப் பழக்கத்தை மறுபடி துவக்கினால், மீண்டும் ரத்தநாளத்தில் அடைப்பு, அதனால் மாரடைப்பு வரும் தன்மை, பல மடங்கு அதிகரித்து விடும். புகைப் பழக்கம் இதய நோயின் முதல் எதிரி. அதை அறவே நிறுத்துவது, இதய ஆரோக்கியத்திற்கு, ஒருவர் எடுக்கும் முதற்படி சிகிச்சை ஆகும்.

* எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இரு வகை மருந்துகளை எடுக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பின், அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90 மி.கி., 80 மி.கி., என, குறைந்து விடுகிறது. நான் என்ன செய்வது?
இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளி களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக குறைந்தால், அது இதயத்தை பலவழிகளில் பாதிக்கிறது. உங்கள் டாக்டரை சந்தித்து, உடனடியாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில், 130 மி.கி., என்ற அளவிலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, 180 மி.கி., என்ற அளவிலும் இருப்பது நல்லது. HbA1c என்ற அளவு, 7.0 என்ற அளவில் இருந்தால் போதுமானது. நீங்கள் எடுக்கும் மருந்தின் அளவை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* என் வயது, 42, தினமும் நடைபயிற்சி செய்து வருகிறேன். தினமும் எவ்வளவு நேரம் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?
உடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நடை பயிற்சி போன்ற சிறந்த ஒரு பயிற்சி வேறு எதுவும் இல்லை. தினமும் நடை பயிற்சி செய்தால், பல வழிகளில் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. சில வகை புற்றுநோய்களும் நடை பயிற்சியால் தடுக்கப்படுகிறது என, தெரிய வந்துள்ளது. உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கவும், மனதை நல்லெண்ணத்துடன் ஆரோக்கியமானதாக வைக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் தினமும், 45 நிமிடங்கள், வாரம் 5 நாட்களாவது நடந்தாக வேண்டும். இருப்பினும், தினமும் ஒரு மணி நேரம், வாரத்தின் எல்லா நாட்களும் நடப்பது சிறந்தது.

டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X