எந்நாளும் திருநாளே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2014
00:00

மே 2 - அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!
தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்...
'முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்... இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்...' என்கிறார் பகவான்.
உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை...
அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.
இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.
சரி...எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.
நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
27-ஏப்-201418:53:11 IST Report Abuse
Natarajan Ramanathan நான் ஒவ்வொரு அக்ஷய திரிதியை அன்றும் வங்கியில் ஒரு புதிய RD கணக்கு ஆரம்பித்து பணம் கட்டுவது வழக்கம். அதனால் என்னிடம் ஏராளமான சேமிப்பு இருக்கிறது. அதேபோல எனது மனைவி ஒவ்வொரு முறை கனகதாரா ஸ்தோத்திரம் சொன்னாலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு விதத்தில் பணமோ நகையோ வருவது அதிசயமான உண்மை.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
27-ஏப்-201409:42:19 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கனகதாரா ஸ்லோகம் ஆதிசங்கரர் இயற்றியது. அந்த நாளே அக்ஷய திருதியை. முடிந்தால் லக்ஷ்மி தேவிய வழிபடுவோம் அதுவே சிறப்பு. உண்மையான பக்தியுடன் பூஜித்தால் அம்மா அருள் என்றும் கிடைக்கும் சகல செல்வங்களும் நிரம்பி இருக்கும் எல்லார் இல்லமும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X