அந்துமணி பதில்கள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஏப்
2014
00:00

அ.சுரேஷ், அன்னூர்: இலவசங்களை, நம் எம்.பி.,க்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனரா?
முழுமைக்கு மேலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு நாளுக்கு, 137 போன் கால்கள் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம் இவர்கள். நம்ம எம்.பி.,க்கள் லேசுபட்டவர்களா... சராசரியாக, 274 போன்களை போட்டுத் தள்ளி விடுகின்றனர்,'ஓசி'யிலேயே!

எஸ்.பரமசிவம், வெட்டுவான்கேணி: மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும், முன்னணியில் நின்று, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிடுவது எப்படி?
அரசியல்வாதிகளின் அறிக்கைகளும், மேடைப் பேச்சுகளும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்துகளும் மட்டுமே செய்திகள் எனக் கருதக் கூடாது என்ற நம் ஆசிரியரின் வழிகாட்டுதல் தான், 'தினமலர்' இதழை முன்னணியில் நிற்க வைக்கிறது!

ஷா.முகம்மது இஸ்மாயில், கீழ்கட்டளை: வாசகர்களின் ரசனை அடிக்கடி மாறுவதாக கருதுகிறீர்களா... எதனால்?
வாசகர்களின் ரசனை அடிக்கடி மாறத்தான் செய்கிறது; ஆனால், வாசகியர் அப்படி அல்ல. வாசகர்கள் அலைபாயும் மனம் கொண்டவர்களாக இருப்பதாலேயே இந்த தடுமாற்றம்!

எஸ்.ஜோசப், ஒண்டிபுதூர்: ஆண், பெண்களில் சிலர், 'கல்யாணம் செய்யாமல் வாழ முடியாதா?' என, தர்க்கம் செய்கின்றனரே... இவர்கள், உண்மையிலேயே இப்படி பேசுகின்றனரா இல்லை உதட்டளவில் பேசுகின்றனரா?
உதட்டளவில் மட்டுமே என் பது அனுபவப்பட, அனுபவப்படத்தான் தெரிகிறது. இப்படிப் பட்டவர்கள், 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' எனச் சொல்லி ஓடும் நரிகளாகத் தான் இருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காத குறை தான் இவர்களுக்கு என்பதை, இப்போது உணர முடிகிறது!

ஆர்.முத்துசாமி, இளையான்குடி: பெண்கள் பூப்படையும் விசேஷத்தை முன்பு போல், விசேஷமாகக் கொண்டாடுவது இல்லையே...
கல்யாணத்திற்கு தம் பெண் தகுதி பெற்று விட்டாள் என்பதை, ஊருக்கு தெரிவிக்க, அந்த நாளில் நடந்த கூத்து இது! இந்த நிகழ்ச்சிகளால் வெட்கப்பட்டு, அவமானப்பட்ட இப்போதைய தாய் மார்கள், தம் பெண்களுக்கு அவை நேராமல் பார்த்துக் கொள்கின்றனர். நல்ல விஷயம் தானே!

கி.ரங்கநாதன், விருதுநகர்: 'மனது சரியில்லை' என்று குடிக்கின்றனர் ஆண்கள்... பெண்களுக்கு மனது சரியில்லை என்றால்?
இப்போதெல்லாம் பெண்களில் சிலரும் குடிக்கத் தான் செய்கின்றனர். பத்திரிகைச் செய்தி, 'பீச்' மற்றும் ஸ்டார் ஓட்டல்களிலும் காணும் காட்சிகள் மூலம் அறிந்து கொள்ள
முடிகிறது!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X