அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2014
00:00

என் வயது 35; என் மனைவி வயது, 30. எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எங்களுடையது காதல் திருமணம்; என் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர்களே முன்னின்று நடத்தி வைத்தனர்.
திருமணத்திற்கு முன்பே, என் 25வது வயதில், நான், 'ஸ்கிசோபிரினியா' என்ற மனநோயால் பாதிப்புக்குள்ளானேன். என் அம்மா மற்றும் பாட்டிக்கு இந்நோய் உள்ளது. இருந்தும், நான் பாதிக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நோய் உள்ளது என்று, திருமணத்திற்கு முன் வரை, என் மனைவிக்கு தெரியாது.
நான் அவளுடன் பழக ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே, இந்நோய் என்னை பாதித்து விட்டது. ஆனால், திருமணத்திற்கு பின் தான், அவளுக்கு விஷயம் தெரிந்தது. அதை, அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
நான் வசதியான வீட்டு பையன்; அவள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அவள் வேலைக்கு செல்லவில்லை. என் தந்தைதான் குடும்பத்தை நடத்துவதற்கு, பண உதவி செய்து வந்தார். தற்போது, நான் ஓரளவு குணமடைந்து, மாதம்,௦ 20,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால், என்னால் பழையபடி உற்சாகமாக இருக்க முடியவில்லை. அவ்வப்போது மன அழுத்தத்துக்கு ஆளாகிறேன். இதனால், என் மனைவியும், 'அப்செட்' ஆகி, ஏனோதானோவென்று குடும்பம் நடத்துகிறாள்.
மகனை சரியான நேரத்தில் குளிக்க வைத்து, சாப்பிட வைத்து, படிக்க செய்வது போன்ற வேலைகளை கூட செய்யாமல் இருக்கிறாள். இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. எங்கள் இருவரின் பிரச்னையால், என் மகன் வயதுக்கு மீறி சிந்தனை செய்து, எங்களுக்குள் மத்தியஸ்தம் செய்கிறான். அவன் மனநிலையும் பாதிப்படையுமோ என, பயமாக உள்ளது.
தற்போது நான் குணமடைந்து வருவதால், நான் விட்டு கொடுத்து போக நினைத்தாலும், அவளுடைய செயல்கள், என்னை எரிச்சல் அடைய செய்கின்றன. என் குழந்தை எங்கள் இருவரையும் பார்த்து, கத்துவதும், ஆர்வம் இல்லாமலும் இருக்கிறான். என் குழந்தை பாதிப்படையாமல் வளர, நானும், என் மனைவியும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, எழுதுங்கள். அவள், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியை விடாது படிப்பவள். அவளுக்கு புரியும்படியாக எழுதி, என் குழந்தையின் வாழ்வை சிறக்கச் செய்யுங்கள். எப்படியாவது என் குழந்தையை காப்பாற்றுங்கள்.
— உங்கள் பதிலை எதிர்பார்க்கும், அன்புச் சகோதரன்.

அன்பானவர்க்கு —
பிரச்னைகளை உள்ளடக்கிய உன் கடிதத்தை படித்தேன். மிக வெளிப்படையாக கடந்த, 10 ஆண்டுகளாக, 'ஸ்கிசோபிரினியா' (மனச்சிதறல்) என்ற நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்படி, மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு, தற்போது குணமாகி, மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் எழுதியிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
'உன் வியாதி, குடும்ப உறவுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு' போன்ற மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டிருக்கிறாய். முதலில் நீயும், உன் மனைவியும் இந்த மனச்சிதறல் வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* மருந்து மாத்திரைகளை விடாமல் சாப்பிடுவதுடன், அவ்வப்போது மனநல மருத்துவரை அணுகி, மாத்திரையின் அளவுகளை, அவர் ஆலோசனைப்படி கூட்டியோ, குறைத்தோ சாப்பிட வேண்டும்.
* தயவு செய்து, எக்காரணத்தைக் கொண்டும் சாமியார் மற்றும் பூசாரியிடம் போவது, மந்திரிக்கிறது, தாயத்துக் கட்டுவது, மாந்தீரிகம் செய்வது, ஸ்பெஷல் பூஜை செய்வது என்றெல்லாம் செய்ய வேண்டாம். இவர்கள் எல்லாருமே உன் நிலையைப் புரிந்து, உன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கச் செய்து, பணத்தை பிடுங்க முயற்சி செய்வர்.
* 'பாட்டி, அம்மாவைத் தொடர்ந்து, எனக்கு வந்திருப்பதைப் போல், என் பையனுக்கும் இந்த வியாதி வருமா, இது பரம்பரை வியாதியா...' என்று கேட்டிருக்கிறாய். இதற்கு பதிலாக, 'இல்லை' என்று தான் கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.
* நோய் கண்டவருக்கு, நோய் வரும் முன்பு உள்ளவர்கள் தான், மனதில் பதிந்து இருப்பர். அதற்குப் பிறகு பழகியவர்கள் யாரும் மனதில் இருக்க மாட்டர் என்ற தவறான எண்ணத்தை, முதலில் கைவிட வேண்டும். ஏன் தெரியுமா?
கடந்த, 10 ஆண்டுகளாக நீ இந்த வியாதியால் அவதியுற்ற போதும், ஐந்தே ஆண்டுகள் ஆன, உன் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டு எழுதியிருக்கிறாய். இதன் மூலம், உனக்கு அனுதினமும் நடப்பவைகள் எல்லாம் மற்றவர்களுக்கு ஞாபகம் இருப்பது போல, உனக்கும் இருந்திருக்கிறது. எனவே, இது பற்றிய கவலை வேண்டாம்.
* இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, சாதாரணமாக செக்ஸ் உணர்வுகளில், உறவுகளில் விருப்பம் இல்லாமல் இருக்கும். அதனால், இவர்களின் வாழ்க்கைத் துணை சற்றே மனவருத்தம் அடையலாம். இருப்பினும், சரியாக, தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் உட்கொண்டால், இது சரியாகி விடும்.
* நீ படித்திருக்கிறாய்; கை நிறைய சம்பாதிக்கிறாய், குடும்பத்தை காப்பாற்ற கடினமாக உழைக்கிறாய்... ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, நீ அறிவுத்திறனில் உயர்ந்த நிலையில் தான் இருக்கிறாய். உன்னால் மிக நிச்சயமாக எது சரி, எது தவறு என்று பாகுபடுத்தி சிந்தித்து செயல்படுத்த முடியும்.
உன் திருமண உறவுகள் பற்றி சில ஆலோசனைகள்...
* உன் மனைவியைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். தன் கணவர் இப்படி ஒரு மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று, மணமான பிறகு தெரிய வந்தால், எந்த மனைவிக்குதான் வருத்தம் இல்லாமல் இருக்கும். நல்லவேளை உன் தந்தை இவ்வளவு ஆண்டுகள் உங்களுக்கு பொருளாதார உதவி செய்திருக்கிறார். உன் மனைவியிடம், உன் தந்தையைப் பற்றி, அவர் செய்த உதவியைப் பற்றி அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொல். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக, சண்டையிடாமல் இருந்தால்தான், இல்லற வாழ்வில், திருப்தியும், சந்தோஷமும் இருக்கும்.
* உன் மனைவியிடம் உன் செக்ஸ் தேவைகளை மனம் திறந்து பேசு. இது அவளின் தேவைகளை உன்னிடம் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவளது விருப்பத்தை நீ புரிந்து, அவளைத் திருப்தி படுத்து. கணவன் - மனைவி இருவரின் ஆரோக்கியமான உடல் உறவு, குடும்பத்தில் உள்ள பல பிரச்னைகளை சமாளிக்கும் நல்மருந்தாக இருந்திருக்கின்றன.
* காதலிக்கும் போது இருக்கும் நிலைமையே வேறு. நடைமுறை, எதார்த்தம் என்று வரும்போது தான், நம்மால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இதை நீ முதலில் உணர வேண்டும். உன் மனைவிக்கும் எடுத்துச் சொல்லி, புரிய வைக்க வேண்டும். காதல் திருமணம் என்பது, புரிந்து கொண்டு திறம்பட வாழ்வது. புரிகிறதா!
உன் மூன்றாவது பிரச்னை உன் மகனைப் பற்றியது...
* பெற்றோர் தான் குழந்தைகளின், 'ரோல் மாடல்கள்' என்பதை, நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
* நீ நினைப்பது போல, 'பரம்பரை' காரணமாக, உன் குழந்தைக்கு இந்த மனவியாதி, வர வாய்ப்புகள் இல்லை. ஆனால், அதிகமாக கோபப்படுவது, சண்டையிடுவது, பேசாமல், 'உம்'மென்று இருப்பது போன்ற உங்களின் நடத்தை காரணமாக, அந்த பிஞ்சு மனது பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, பிற்காலத்தில் குழந்தையும் மனவியாதியால் அவதிக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.
தம்பதிகள் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும், பொறுமையும், சிநேகமும் தான், பிள்ளைகளிடம் எதிரொலித்து, அவர்களை, மன ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகளாக மிளிர வைக்கும். எனவே, குழந்தை வளர்ப்பில், நீங்கள் இருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* இத்தனை ஆண்டுகள் உன் பெற்றோர் உன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து, ஆளாக்கிய மாதிரி, நீயும், உன் மனைவியும் உங்களின் குழந்தையை அன்பாக வளர்ப்பது கடமை.
இவைகளையெல்லாம் உன் மனைவியிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, இருவரும் உங்களின் குழந்தையை, வருங்கால இந்தியாவை வளப்படுத்தும் குழந்தையாக மாற்ற முயலுங்கள்.
என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Chennai,இந்தியா
28-ஏப்-201408:44:33 IST Report Abuse
Raman வழிப்போக்கன் நீளமாக எழுதி இருக்கிறார். என்னை உறுத்தியது (அந்த கணவரின் கடிதத்தில் இருந்து) இதுதான். பழகிய பொழுதே இது தாக்கியது என்ற பொழுதும் (வசதியான குடும்பம், மருத்துவர் ஆலோசனை, இந்த நோயின் வீரியதினை பற்றி சொல்லி இருப்பார், அதுவும் இவர் குடும்பத்தில் இது இருக்கிறது என்பதால் இவருக்கு தெரிந்து இருக்கும்) , கல்யாணத்திற்கு முன்னரே தெரிந்து இருந்த பொழுதும், மனைவியிடம் மறைத்தது ஏன்? காதலியிடம் மணத்திற்கு முன் சொல்லாதது ஏன்? நிச்சயம் அவர் கரு தரித்ததும் சொல்லி இருப்பார். Kind of entrapment. Now that she has a kid, she can not leave him. Moreover she is unemployed, economically depent and comes from a middle class environment. ஒரு விதத்தில் ஏமாற்றி - சிறை பிடித்திருக்கிறார்கள். குழந்தை உண்டாகி விட்டது, வேலை இல்லதாவள் பொருளாதார ரீதியாக தன்னை சார்ந்து இருக்க வேண்டும், சாதாரண குடும்பம், எதிர்ப்பு இருக்காது - என்ற ஆணாதிக்கத்தின் எல்லா முகங்களும் தெரிகிறது. நிச்சயம் நான் அந்த மனைவிக்கு இவரை விவாக ரத்து செய்து விட்டு தனியே போகும் படி சொல்லுவேன். இந்த ஆள் ஒரு ஏமாற்று பேர்வழி. தனக்கு ஒரு அடிமை (தன்னை பார்த்து கொள்ள) தேவை என்று திட்டம் போட்டு செயல்பட்டு இருக்கிறார். 30 வயது பெண், இன்னமும் நிறைய இருக்கு வாழ. துணிவாக மண முறிவு பெற்று, முடிந்தால் மறுமணம் செய்து கொள்ளவும். ஆனால் இந்த ஆளுக்கு சேவகம் என்று பத்தாம் பசலியாக இருக்க வேண்டாம். நீங்கள் தினமலர் படிப்பவர் என்பதால் இதனையும் படிப்பீர்கள், படிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன். என்னை மறுத்து எழுத பலர் துடியாக இருப்பார்கள். எல்லோரும் கல் ஆனாலும் கணவன் என்று பஞ்சாங்கம் படிப்பார்கள். உனக்கு ஏதேனும் ஒன்று என்றால் என்று கேட்பார்கள். நிச்சயம் இது மணத்திற்கு பின்னர் வந்த வியாதி அல்ல - அது அந்த கணவனே சொன்னது. பின்னர் மறைத்தது ஏன்? தவறுதானே. அதுவும் இந்த நோயின் தீவிரம் அறிந்தவர் - அந்த பெண்ணின் வாழ்க்கையில், மகிழ்ச்சியில் விளையாட என்ன உரிமை இருக்கிறது? இதில அவரை காதலித்தவராம், வீட்டை எதிர்த்து திருமணம் செய்தவராம் - எல்லாம் டூப்பு. வீட்டாருக்கு குற்ற உணர்வு, அதான் திருமணதிற்கு தடை சொல்லி இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்கை பாதிக்க கூடாது என்று. பெண்ணே - தயை செய்து இந்த பந்தத்தில் இருந்து வெளியே வா வழிபோக்கன் சொன்னது போல பார்த்தால் இது இன்னமும் மோசமாகும். உன் மகனுக்கும் இதன் தாக்கம் இருக்க வழி உண்டு. இது பரம்பரை நோய் என்று அறிகிறேன். இந்த படுகுழியில் இருந்து வெளிப்பட என் பிரார்தனைகள். அவர் உன்னை காதலிக்க வில்லை, தன்னை கவனித்து கொள்ள ஒரு வேலை காரியை தேடி இருக்கிறார். பாவம் நீ, காதல் என்று மயங்கி விட்டாய்
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
29-ஏப்-201400:31:00 IST Report Abuse
HoustonRajaநீங்கள் இவரின் மனைவியின் நிலையை நுட்பமாக புரிந்து, அதை முன்னிறுத்தி எழுதியதை மிகவும் பாராட்டுகிறேன். இந்த ஆண், தனது குழந்தையின் நலனையே முக்கியமாக கருதி எழுதியதை படித்தால் - அந்த மனைவியை ஒரு சேவகியாகவே நினைகின்றாரோ என்று அஞ்சுகிறேன். "நான் எனது காதல் மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ உதவுங்கள்" என்று கடிதம் எழுதியிருந்தால், அது வேறு மாதிரி இருந்திருக்கும். கல்யாணமானவுடன் இவரின் நோய் பற்றி அவளுக்கு தெரிந்த பின்னும், ஒரு குழந்தையை பெற்ற பின்னும், இவர் வேலைக்கு போக முடியாதபோதும் - அந்த மனைவி உடனிருந்தே இவரையும் குடும்பத்தையும் கவனித்து வந்திருக்கிறார். ஆனபோதும், இந்த மனைவியின் செயல்களில் இந்த ஆண் குறைகள் கண்டு பிடிக்கிறான். தான் "தொடர்ந்து குணமடைந்து" வந்தும், தன்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை, அவளின் செயல்கள் எரிச்சலாக இருக்கிறது என்று புலம்புகிறான். நன்றியுணர்வும், பொறுப்புணர்வும், ஏற்றுக்கொள்ளும் குணமும் இல்லாத இவரை போன்றோருடன் (நோயின் காரணமாகவே என்றாலும்) வாழ்வது மிகவும் கடினம். என்னை பொறுத்தவரையில், இந்த ஆண் குணமாக இன்னும் நிறைய செய்யவேண்டி இருக்கிறது. ஒரு வேளை, அந்த பெண் இவரின் நோயுடன் வாழ தன்னை பழக்கிக் கொண்டு அதில் (ஏதோ ஒருவித) அமைதியுடன் இருக்கமுடிந்தால், இவரை சமாளிக்கவும்/கவனித்துக்கொள்ளவும் திறமைபெற்றிருந்தால், குழந்தையின் வடிவில் தனது கணவனின் மீது தொடர்ந்து அன்பு கொண்டிருந்தால் - (அன்பினால், கடமையால் அல்ல) இவர்களின் உறவு ஆரோக்கத்துடன் தொடரலாம். இதில், ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் நிலைமை மோசம் தான். அப்படி இருக்கும் பட்சத்தில், மணமுறிவு பெற்று தாய் மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வதே "இந்த சூழலில்" சிறந்ததாக இருக்கும். நன்றி....
Rate this:
Share this comment
Cancel
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஏப்-201413:40:21 IST Report Abuse
Balaji Natarajan அனைத்தும் சரி தான் ...நீங்கள் அனைவரும் சொன்னது போல ...பாவம் அந்த சிறுவனின் நிலைமை தான் பரிதாபம் ...ஐந்து வயதில் இந்த நிலைமை ...அந்த தாயார் அந்த சிறுவனிடம் அன்பாக நடக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
27-ஏப்-201413:23:21 IST Report Abuse
S.MAHESH KUMAR இவ்வளவு முற்போக்காக சிந்திக்கும் ஒருவர் அந்த வியாதியை தன் மனதை ஒருநிலைப்படுத்தி முறியடிக்க இயலாதா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X