கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
00:00

கேள்வி: ஈஸ்டர் எக் என்பது என்ன? இது இணைய தளங்களில் மறைந்திருக்கும் புரோகிராம்கள் என என் நண்பர்கள் கூறுகின்றனர். சில எடுத்துக் காட்டுகள் தர முடியுமா?
என். தெய்வேந்திரன், சின்னமனூர்.
பதில்:
புரோகிராம்களை வடிவமைக்கும் கம்ப்யூட்டர் வல்லுநர்கள், தங்கள் ஆசைக்கேற்ப அமைக்கும் சின்ன சின்ன புரோகிராம்களே இவை. இணைய பிரவுசர் மட்டுமின்றி, எம்.எஸ்.ஆபீஸ் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் இவை காணப்படும். இவை இருப்பது குறித்து, ஆதாரபூர்வமான அறிவிப்பு இருக்காது என்றாலும், தகவல்கள் கசிந்து இவை அனைவரும் அறியும் வண்ணம் இணையத்தில் தகவல்களாக சுற்றி வரும்.எடுத்துக் காட்டாக, குரோம் பிரவுசரில் உள்ள சில ஈஸ்டர் எக்ஸ் தருகிறேன். பிரவுசரை இயக்கி, Zerg Rush என அதன் முகவரி கட்டத்தில் டைப் செய்து எண்டர் தட்டவும். தேடுதல் முடிவுகளுடன், ஆங்கில எழுத்து "O” அங்கும் இங்குமாகத் தோன்றும். இதனை நிறுத்த, அந்த எழுத்து, மிக தூரத்தில் செல்லாமல் தடுக்க வேண்டும்.
கூகுள் தளம், 1998 ஆம் ஆண்டில் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? "Google in 1998” என டைப் செய்து தேடவும். இது போல அனைத்து புரோகிராம்களுக்கும் ஈஸ்டர் எக் இருக்கும்.

கேள்வி: புதிய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கி ஓர் ஆண்டுதான் ஆகிறது. ஆனால், இப்போது மிகவும் மெதுவாக இயங்குகிறது. குறிப்பிட்ட சில வேலைகள் தான் இதில் மேற்கொள்கிறேன். இதனை வேகமாக இயங்க வைத்திட என்ன வழி?
ஆ. சுகந்தி தனராஜ், மதுரை.
பதில்:
தங்கள் ஆதங்கம் புரிகிறது. இது அனைவருக்கும் வரும் பிரச்னைதான். கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம். பின்னர் நீக்குகிறோம். பைல்களை டவுண்லோட் செய்து பதிகிறோம். இவை தவிர நம்மை அறியாமலேயேபல புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரில் தங்கி பின்னணியில் இயங்குகின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப் படுத்துகின்றன. மீண்டும் பழையபடி வேகமாக இயங்குவதற்குத் தேவையான சில வழிகளை வரிசை யாகத் தருகிறேன்.
1. உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்து, இல்லையேல் அப்டேட் செய்திடவும். இன்னொரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றையும் இன்ஸ்டால் செய்து, முன்னதை நிறுத்தி இதனை இயக்கிப் பார்க்கவும்.இதனால், மால்வேர் புரோகிராம்கள் இருப்பின் அவை கண்டறியப்பட்டு அழிக்கப்படும்.
2. கேம்ஸ் போன்ற மிகப் பெரிய புரோகிராம்கள் மட்டுமின்றி, சில சிறிய புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குவது, ராம் மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, கூடுதலாக ராம் மெமரியை அதிகரிக்கலாம்.
3.டாஸ்க் மேனேஜரைத் திறந்து, என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பார்க்கவும். அவை எவ்வளவு ராம் மெமரியை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும். உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம்கள் எவையேனும் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால், அவை தேவை இல்லை எனில் நீக்கவும்.
4. மெமரி கிளீனிங் புரோகிராம்கள் சில உங்களுக்கு உதவலாம். இவை ராம் மெமரியை ஒதுக்கிக் கொடுக்கும். ஆனால், மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குகையில், பழையபடி பல புரோகிராம்கள் மெமரியை எடுத்துக் கொள்ளும்.
5. நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை அப்டேட் செய்வது நல்லது. ஆனால், எந்த விதக் கூடுதல் வசதிகளும் இல்லாமல், அப்டேட் செய்வது, இந்த புரோகிராம்கள் அதிக இடத்தை மெமரியில் எடுத்துக் கொள்ள வழி கொடுக்கும். எனவே, தேவைப்பட்டாலே, அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்டேட் செய்திடவும்.
6. நீங்கள் கம்ப்யூட்டரை பூட் செய்தவுடனேயே, சில புரோகிராம்கள் இயங்கி, ராம் மெமரியில் இடத்தை எடுத்துக் கொள்ளும். பின்னணியில் இயங்கியவாறு எந்த பயனும் இன்றி இருக்கும். இவற்றை பூட் செய்கையிலேயே தொடங்கும் செயல்பாட்டினை நிறுத்தலாம். அல்லது நீக்கலாம்.

கேள்வி: என் அலுவலக வேலை முடித்து வீடு திரும்புகையில், என் ஜிமெயில் அக்கவுண்ட்டினை குளோஸ் செய்திடாமல் வந்துவிடுகிறேன்.இதனை வேறு யாரும் பயன்படுத்த முடியாமல் செய்திட முடியுமா? அல்லது, மூடாமல் எழுந்தால், எச்சரிக்கை தரும் வகையில் அமைக்க முடியுமா? மூடாமல் வந்தாலும், வீட்டிலும் ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க முடிகிறது. ஆனால், வேறு ஒரு சிஸ்டத்தில் இது பயன்படுத்தப்படுவதாக செய்தி காட்டப்படுகிறது. தீர்வு ஒன்றைத் தரவும்.
என். மாலதி,சென்னை.
பதில்:
உங்கள் பரிதவிப்பு புரிகிறது. மூடாமல் உள்ள உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில், வேறு யாராவது புகுந்து, உங்கள் ரகசிய அஞ்சல் பரிமாற்றங்களைப் பார்த்துவிடக் கூடாது. மற்றும் ஏடாகூடமாக ஏதேனும் மெயில்களை அனுப்பக்கூடாது. இதற்கு ஒரே தீர்வு, உங்கள் இல்லக் கம்ப்யூட்டரிலிருந்தே, அலுவலகத்தில் திறந்து பார்த்ததனை மூடுவதுதான்.அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
முதலில், வீட்டில் அல்லது வேறு ஒரு இடத்தில், கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு பெற்று, ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். உங்கள் அஞ்சல்கள் உள்ள பெட்டியின் (inbox) கீழாக வலது புறம் வரவும். அங்கு, ஜிமெயில், இறுதியாக எப்போது உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்யப்பட்டது என்பதைக் காட்டும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், எந்த எந்த ஐ.பி. முகவரியிலிருந்து, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் திறக்கப்பட்டது எனக் காட்டப்படும்.
சந்தேகப்படும்படியான கம்ப்யூட்டர், அல்லது ஊரிலிருந்து ஒருவர் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழைகிறார் என ஜிமெயில் உணர்ந்தால், உங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
Details அழுத்திக் கிடைக்கும் திரையில், Sign Out All Other Sessions என்ற ஒரு பட்டன் கிடைக்கும். வேறு ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பார்த்த பின்னர், முறையாக அதனை மூடவில்லை என்றால், இங்கு கிளிக் செய்தால், அது மூடப்படும்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். முன்பு எக்ஸ்பி பயன்படுத்திய போது, என் மவுஸ் பாய்ண்ட்டரை மாற்றிக் கொள்ள வசதி இருந்தது. இந்த சிஸ்டத்தில் ஏன் அது தரப்படவில்லை. தர்ட் பார்ட்டி புரோகிராம் சரியான கர்சரைக் கொண்டிருக்க வில்லை. இதற்கான வழியைக் கூறவும்.
என்.காயத்ரி, சிவகாசி.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இதற்கு வழி தரப்பட்டுள்ளதே. முதலில் ஸ்டார்ட் பட்டன் அழுத்துங்கள். இங்கு தரப்படும் தேடல் கட்டத்தில் Mouse Pointer என டைப் செய்திடவும். உடன் பல முடிவுகள் தரப்படும். அவற்றில் Change how mouse pointer looks என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இந்த இடத்தில், சிறிய, பெரிய அளவில் நிறைய மவுஸ் பாய்ண்ட்டர்கள் இருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். தேர்ந்தெடுத்தபின், முடிக்கையில் Apply என்பதில் கிளிக் செய்திடவும். இனி, உங்கள் விருப்பத்திற்கேற்ப மவுஸ் பாய்ண்ட்டர் கிடைக்கும்.

கேள்வி: எக்ஸ்பியில் தொடரக் கூடாது என்பதற்காக, விண்டோஸ் 7, அதே கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறேன். புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில், டெஸ்க்டாப் செல்ல, எக்ஸ்பியில் ஐகான் ஒன்று தரப்பட்டது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அதே போல் அமைக்க வேண்டும் எனில், என்ன செய்திட வேண்டும்?
ஆ. சிவக் குமார், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.
பதில்:
விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் அனைவருக்கும் வரும் குழப்பமான நிலை இது. டெஸ்க்டாப் செல்ல, இந்த சிஸ்டத்தில் ஐகான் எதுவும் அமைக்க வேண்டாம். கீழாக உள்ள டாஸ்க்பாரில் வலது ஓரம் பாருங்கள். சிறிய செவ்வக இடம் ஒன்று தனியே வேறுபட்டு, ஷேடட் கட்டமாக, இருக்கும். இதில் கிளிக் செய்தால், நேராக டெஸ்க்டாப் திறக்கப்படும். இது இருப்பதை அறிந்து கொள்ள அந்த இடத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். Show Desktop எனக் காட்டப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் மாறி பயன்படுத்துகிறேன். இந்த சிஸ்டம் இன்ஸ்டால் செய்தவர் எனக்கு எந்த சிஸ்டம் சிடி அல்லது ரிப்பேர் செய்வதற்கான சிடி என எதுவும் கொடுக்கவில்லை. எனக்கு இன்ஸ்டால் செய்தவர், இப்போது ஊரிலேயே இல்லை. எப்படி ஒரு ரிப்பேர் சிடி தயார் செய்து வைத்துக் கொள்வது என்ற டிப்ஸ் தரவும்.
கே.எஸ். புகழேந்தி, திண்டுக்கல்.
பதில்:
நல்ல முயற்சிக்கான கேள்வி. பாராட்டுகிறேன். நீங்கள் கட்டணம் செலுத்தி, மைக்ரோசாப்ட் டீலர் அல்லது சப் டீலரிடம் வாங்கி இருக்க வேண்டும். அவரிடம் சண்டை போட்டு உரிமையுடன் கேட்டு வாங்கலாம். நீங்கள் எப்படி வாங்கினீர்கள் என்று எனக்குச் சொல்லவில்லை. இருப்பினும் ரிப்பேர் சிடி தயார் செய்வது குறித்த குறிப்புகளைத் தருகிறேன்.
Start>> All Programs>> Maintenance>>Create a System Repair Disc எனச் செல்லவும். சிடி ட்ரைவில் சிடி ஒன்றைப் போட்டு வைக்கவும். இது காலியாக எந்த பைலும் இல்லாமல் இருக்க வேண்டும். சிடி ட்ரைவில் உள்ள சிடியைச் செக் செய்த பின்னர், உங்கள் சிஸ்டம், நீங்கள் கேட்டுக் கொண்ட சிடியினைத் தயார் செய்திடும். விண்டோஸ் 7 இயங்காமல் போகும் நிலையில், இதன் மூலம் சிஸ்டம் பூட் அப் செய்து, கம்ப்யூட்டரை இயக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X