16 அடி தூரத்தில் வயர்லெஸ் சார்ஜ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
16 அடி தூரத்தில் வயர்லெஸ் சார்ஜ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மே
2014
00:00

கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர். கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த (Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் ("Dipole Coil Resonant System” (DCRS))) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது.
வயர் இணைப்பு எதுவும் இன்றி, மின்சக்தியைக் கடத்தும் ஆய்வு தற்போது பல பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில், 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான மாசசுசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology (MIT)) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது. பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. இனி, வீடுகளில் வை-பி வழி இணைய இணைப்பு பயன்படுத்துவது போல, வயர் இணைப்பு இன்றி, ஒரே நேரத்தில் பல மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X