பேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
பேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மே
2014
00:00

பேஸ்புக்கில், என் நண்பர் நான் அனுப்பிய friend request ஒன்றை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் அது போன்ற ஒன்றை அனுப்பவே இல்லை. இது எதனால் ஏற்படுகிறது?” என வாசகர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து கேட்டிருந்தார். வேறு சில வாசகர்களும், பேஸ்புக் குறித்து இதே போன்ற பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.
பேஸ்புக்கில், ஒருவருடன் நட்பு கொண்டால் மட்டுமே, அவரின் கருத்துக்களுக்கு நீங்கள் கமெண்ட் என்னும் பதில் குறிப்பினைப் பதிய முடியும். உங்கள் இருவருக்கிடையே பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஒருவர் அனுப்பும் நட்பு வேண்டும் விண்ணப்பத்தினை இன்னொருவர் ஏற்று சம்மதித்தால் மட்டுமே இது முடியும். ஆனால், ஒருவர் இது போன்ற நட்பு கொள்ள விரும்பும் வேண்டுகோளை அனுப்பாமலேயே, நண்பருக்கு வேண்டுகோள் செல்வதும், அவர் ஏற்றுக் கொள்வதும் எப்படி நிகழ முடியும்?
பேஸ்புக் தளத்தின் உதவிப் பக்கத்தில், (https://www.facebook.com/help/215747858448846) இதற்கான விளக்கத்தினைத் தேடினால், இது போல ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் நமக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், இது போல யாருமே அனுப்பாமல், நட்பு நாடும் விண்ணப்பங்கள் அனுப்பப்படுவது, பெறப்படுவது, பேஸ்புக் தளத்தில் அவ்வப்போது நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று பலர் கருதுகின்றனர்.
உலகில் மிக அதிகான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், நாள் தோறும் 75 கோடி பேர் நுழைந்து பயன்படுத்துகின்றனர். இவ்வளவு பேரைக் கொள்ளும் இணைய தளத்தில், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயற்கையே.
நீங்கள் அனுப்பாத நட்பு வேண்டுகோளை, ஒருவர் பெற்றிருந்தால், நீங்கள் https://www.facebook.com/help/www/186570224871049 என்ற முகவரியில் உங்கள் குற்றச் சாட்டினைப் பதியலாம். மேற்கொண்டு இது போல நடக்காத அளவிற்கு நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். அடுத்ததாக, நீங்கள் நட்பு பாராட்ட விரும்பாதவர் எனக் கருதும் ஒருவரின் நட்பை நீக்கலாம் ("Unfriend”). அவருடைய மனதைப் புண்படுத்த வேண்டாம் என எண்ணினால், அவருடைய தகவல் எதுவும் உங்களுக்கு வராதபடியும் செட் செய்திடலாம். அப்போது நண்பர்களாக நீங்கள் தொடரலாம். "Friends” என்னும் ஐகானில் கிளிக் செய்து, "Get Notifications” என்ற ஆப்ஷனை நீக்கலாம்.
இதன் பின்னரும், உங்கள் தகவல்களின் மேல் அவர்கள் கமெண்ட் அனுப்பும் பட்சத்தில், அவர்களைத் தடை (block) செய்து வைக்கலாம். இவ்வாறு தடை செய்துவிட்டால், எந்த தகவல் பரிமாற்றமும் உங்கள் இருவருக்கிடையே நடைபெறாது. இதற்கு "Report/Block” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அது கேட்கும் தகவல்களைத் தரவும்.
இதன் பின்னரும், உங்களுக்கு நட்பு விண்ணப்பம், உங்களுக்குத் தெரியாமலேயே செல்கிறது என்றால், உங்கள் பேஸ்புக் பாஸ்வேர் டினை மாற்றி அமைக்கவும். உங்கள் கம்ப்யூட்டரில் எதுவும் spyware உள்ளதா என முழுமையாக ஸ்கேன் செய்திடவும். உங்கள் அக்கவுண்ட்டினை வேறு ஒருவர், உங்கள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இந்த தில்லுமுல்லுகளை மேற்கொண்டிருக்கலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X