கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2014
00:00

கேள்வி: என் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே, இமெயில் பார்க்காமல், வெப்சைட்களுக்குச் செல்லாமல், என் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் களுக்கு மட்டும் அப்டேட் செய்திடும் பணியை மேற்கொண்டால், எனக்கு வைரஸ் ஆபத்து இருக்குமா?
எஸ். ஜீவன்ராஜ், மதுரை.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து மாற விரும்பாதவர்கள் பலர் இது போன்ற கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நியாயமான சந்தேகங்கள் பல உள்ளன. இவர்கள் எல்லாரும் விண்டோஸ் 7 மற்றும் பின்னர் வந்த சிஸ்டங்கள் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்து இயக்குபவர்களாகவும், எக்ஸ்பி சிஸ்டம் கொண்ட பழைய கம்ப்யூட்டரை வைத்திருப்பவர்களாகவும் உள்ளனர். அதன் ஹார்ட்வேர் அனுமதிக்காததால், அடுத்த உயர்நிலை சிஸ்டத்திற்கு மாற முடியாதவர்கள். இருப்பினும், அந்த கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்களுக்காக, இணையத்தை நாடுபவர்கள். எனவே தான் இது போன்ற கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் பட்சத்தில், அது எதற்காக இருந்தாலும், வைரஸ் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு. நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் எக்ஸ்பிக்கு அப்டேட் இனிமேல் தரப்போவதில்லை. நீங்கள் இணையத்தில் வேறு வேலைகளை மேற்கொள்ளப் போவதில்லை. எனவே, உங்களுக்கு ப்ளாஷ் ப்ளேயர் மற்றும் ஜாவா போன்றவற்றிற்கு அப்டேட் தேவைப்படாது. இவற்றின் அடிப்படையில் நீங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பினை மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
தர்ட் பார்ட்டி புரோகிராம்களுக்கான சப்போர்ட் பெறுவதற்காக, அப்டேட் பெறுவதற்காக இணையம் சென்றால், அவை மைக் ரோசாப்ட் சப்போர்ட் தராத நிலையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். மைக்ரோசாப்ட் நிலையான சப்போர்ட் தரும் வகையில் குறியீடுகளைத் தராது. எனவே அவையும் பயனில்லாமலே இருக்கும்.

கேள்வி: வீட்டிலும் அலுவலகத்திலும் விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறேன். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் அதிகமான அளவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளதால், புரோகிராம்களுக்கான டைல்ஸ் பெரிதாக அமைக்கப்பட்டு, திரையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உள்ளன. இவற்றைச் சிறியதாக அமைத்தால், அதிக எண்ணிக்கையில் ஒரே திரையில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் காணலாமே. இதற்கான வழி என்ன? நேர்மாறாக, அலுவலகக் கம்ப்யூட்டரில் குறைவான அப்ளிகேஷன் புரோகிராம்களே உள்ளதால், நிறைய இடம் காலியாக உள்ளன. என்ன தீர்வு?
எஸ். ராஜேந்திரன், கோவை.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டர்களில் தோற்றமளிக்கும் டைல்ஸ்களின் அளவை மாற்றி அமைக்க விரும்புகிறீர்கள். இதுதான் உங்கள் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.
1. எந்த புரோகிராமின் டைல் அளவை மாற்ற விரும்புகிறீர்களோ, அதன் டைல் மீது ரைட் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் பாப் அப் மெனுவில், "Resize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்க சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். சில டைல்களுக்கு “Small”, “Medium”, Wide”, மற்றும் "Large” என நான்கு வகையான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். சிலவற்றில் இந்த அளவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
4. ஒரே நேரத்தில், பல டைல்ஸ்களின் அளவை மாற்ற எண்ணினால், அவற்றை கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த டைல்களில் செக் மார்க் அடையாளம் காணப்படும். தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் ஒரு டைல் மீது ரைட் கிளிக் செய்து, மேலே காட்டியவாறு, அளவினைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் அவை அனைத்தும் அளவு மாற்றி அமைக்கப்படும்.

கேள்வி: என் விண்டோஸ் 7 சிஸ்டத்தை அல்டிமேட் ஆக மாற்றி, ரீ இன்ஸ்டால் செய்தேன். அதில் அப்ளிகேஷன் புரோகிராம் பைல்களை அப்படியே முழு போல்டரையும் காப்பி செய்தேன். ஆனால், இயங்க மறுக்கிறது. இதற்கு என்ன காரணம்?
என்.சுரேந்தர், திண்டுக்கல்.
பதில்:
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின்னர், அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்படியே காப்பி செய்திட முடியாது. செய்தால் இயங்காது. ஏனென்றால், அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஒன்று, தனக்கு வேண்டிய பைல்களைப் பிரித்து வெவ்வேறு டைரக்டரிகளில் காப்பி செய்திடும். இதற்கான குறிப்புகளை ரெஜிஸ்ட்ரியில் எழுதி வைக்கும். எனவே, புரோகிராமினை மீண்டும் முதலில் இருந்து ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும். சில கேம்ஸ் வேண்டுமானால், இது போல காப்பி செய்தால் இயங்கலாம்.

கேள்வி : இணைய தளத்தில் நல்ல தகவல்களைப் பார்க்கையில் அப்படியே டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட விரும்புகிறேன். ஆனால், படங்கள் மட்டும் உடன் வரும் விளம்பரங்களுடன் சேர்த்து பிரிண்ட் ஆகிறது. இதற்கு வேறு வழி உள்ளதா?
கா. மஞ்சுளா, தாம்பரம்.
பதில்:
டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட சில வழிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில், நீங்கள் அச்செடுக்க விரும்பும் இணைய தளத்திலேயே இதற்கான வசதிகள் உள்ளனவா என்று பார்க்கவும். ரைட் கிளிக் செய்தால், அல்லது அச்செடுக்க கட்டளை (Ctrl+P) கொடுத்தால், இந்த ஆப்ஷன் மெனு கிடைக்கலாம். இதில் டெக்ஸ்ட் ஒன்லி என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் செய்திடலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இதற்கான வழி உள்ளது. டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு "Print background colors and images” என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம். இவ்வாறு ஒவ்வொரு பிரவுசரிலும் வழி இருக்கும். தெரிந்து இயக்கவும்.

கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 2007. இதில் எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும்போது, அதில் அமைக்கும் செல்களில் வண்ணங்களில் பார்டர் கோடுகளை அமைக்க விரும்புகிறேன். இதற்கான வழிகளைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இரா. செண்பகச் செல்வி, திருநகர், மதுரை.
பதில்
: நல்ல கேள்வி. வண்ணங்களால், எக்ஸெல் ஒர்க் புக்கில் கோலம் போட்டு எடுப்பாகவும், பொருள் தொனிக்கும் வகையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். இதோ அதற்கான குறிப்புகள்.
1. முதலில் Office பட்டனில் கிளிக் செய்திடவும். 2. தொடர்ந்து Excel Option என்பதில் கிளிக் செய்யவும். இங்கு எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 3. இங்கு இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். 4. இப்போது Show Gridlines என்ற செக் பாக்ஸ் கிடைக்கும் வரை இதில் ஸ்குரோல் செய்து செல்லவும். கிடைத்தவுடன் அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5.இதில் Gridline Color என்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் உங்களுக்குப் பிரியமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வேளையில் Show Gridlines என்பது தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
ஆபீஸ் 2007க்கு முந்தைய தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், வேறு வகையில் செயல்பட வேண்டும். இங்கு Tools மெனுவிலிருந்து Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Options dialog பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அதே கட்டத்தில் Color ட்ராப் டவுண் பேலட்டைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். Gridlines என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: இணையப் பக்கங்கள் நமக்கு அப்படியே வேண்டும் என்றால், பக்கங்கள் மிக நீளமாக, பெரியதாக இருந்தால், பகுதி, பகுதியாக காப்பி செய்திட வேண்டி உள்ளது. ஸ்கிரீன் ஷாட் எனில், ஒவ்வொரு திரையாக எடுத்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக, பக்கம் முழுவதும் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
என். மகேந்திரன், உசிலம்பட்டி.
பதில்:
நல்ல கேள்வி. இதற்கான வழியினை எந்த பிரவுசரும் தருவதாகத் தெரியவில்லை. ஆனால், அதில் செயல்படும் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் சில இதற்கு உதவுகின்றன. ஒவ்வொரு பிரவுசருக்கும் இது கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், Talon குரோம் பிரவுசருக்கும் என புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. கூகுள் தேடல் தளம் சென்று, பெயரினை தேடல் சொற்களாகக் கொடுத்து, இணைய தள முகவரிகளைப் பெற்று, டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

கேள்வி: சீனாவில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம், எக்ஸ்பிக்குத் தொடர்ந்து சப்போர்ட் பைல்களை வழங்கும் என்று செய்தி படித்தேன். உண்மையா? நாம் அதனைப் பயன்படுத்த முடியுமா? இந்தியாவில் இது போல எந்த நிறுவனமாவது அறிவித்துள்ளதா?
எஸ். சுகன்யா, சென்னை.
பதில்
: இந்தியாவில் இது போன்ற முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சீன அரசு தொடர்ந்து எக்ஸ்பிக்கு சப்போர்ட் தருமாறு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேட்டது. அந்நிறுவனம் மறுக்கவே, சீன நிறுவனமே அதனைத் தர முன்வந்துள்ளது. அரசு அதனை அனுமதிக்கிறது. சீன வழி எப்போதும் தனி வழிதான். சென்ற வாரம் இது குறித்து விரிவான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. படித்துப் பார்க்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X