கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2014
00:00

கேள்வி: நான் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் சேர்த்து, இதற்கும் சப்போர்ட் பைல்கள் தரப்படாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நான் ஆபீஸ் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா?ஆபீஸ் 2003ல் நான் தயாரித்த பைல்கள், ஆபீஸ் 2013ல் இயங்குமா?
-என். கருணாமூர்த்தி, மதுரை.
பதில்:
உங்கள் ஆபீஸ் 2003 புரோகிராம் தொடர்ந்து நன்றாகச் செயல்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இவை பதியப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வழியாக, நீங்கள் இணையத் தொடர்பினை ஏற்படுத்தினால், ஆபத்து உங்களுக்குக் காத்திருக்கிறது. மால்வேர் அனுப்பும் பல ஹேக்கர்கள், வேர்ட் பைல்களைத் தங்கள் செயலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு கவசம் இல்லாமல், ஆபீஸ் 2003 பயன்படுத்துவது, சிக்கலை வரவேற்பதற்குச் சமம். உங்கள் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை, இன்றைய, பாதுகாப்பு கிடைக்கும் தொகுப்பு ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். ஆபீஸ் 2013 க்கு மாறுவது மிகச் சிறந்த வழியாகும். அந்த புரோகிராமில், ஆபீஸ் 2003 பைல்கள் படிக்கப்படும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 வைத்து இயக்கி வருகிறேன். கட்டணம் செலுத்தி இதனைப் பெற்றேன். விண்டோஸ் 8.1க்கு மாற எண்ணியுள்ளேன். அப்டேட் செய்த பின்னர், என் புரோகிராம் மற்றும் சார்ந்த பைல்கள் திரும்பக் கிடைக்குமா? கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
ஆர்.சிந்தியா, கோவை.
பதில்:
கவலைப்பட வேண்டாம், சிந்தியா. விண்டோஸ் 8 லிருந்து விண்டோஸ் 8.1க்கு அப்டேட் செய்தால், எந்த பைல்களும் அல்லது புரோகிராம்களும் பாதிக்கப்படாது. உங்கள் புரோகிராம் மேலாக எதுவும் எழுதப்பட மாட்டாது. உங்கள் டாகுமெண்ட்கள் மற்றும் ஆடியோ, விடீயோ பைல்கள் அப்படியே இருக்கும்.
பழைய விண்டோஸ் இயக்கங்களில் எப்படி சர்வீஸ் பேக் அப்டேட் செய்தோமோ, அதே போல்தான் இதுவும். ஆனால், அவற்றைப் போல இது நிமிடங்களில் முடியும் விஷயமல்ல. ஏறத்தாழ, நல்ல வேகமான இணைய இணைப்பிலேயே மூன்று மணி நேரம் எடுக்கிறது. மிகத் தெளிவான அப்டேட் செயல்முறை வழிகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்.
http://www.worldstart.com/howtodownloadandinstallwindows81upgrade/

கேள்வி: என் நண்பர் எனக்கு ஒரு மெயில் அனுப்பியதாகக் கூறுகிறார். அவருடைய ஜிமெயில் அக்கவுண்ட்டில், அனுப்பிய மெசேஜ் போல்டரிலும் அது காணப்படுகிறது. ஆனால், எனக்கு அது வரவே இல்லை. எப்படி மறைந்திருக்கும்? வாய்ப்பு உண்டா?
என். அல்போன்ஸ், புதுச்சேரி.
பதில்:
மின் அஞ்சல் பல சர்வர்களுக்கு இடையே அமைந்த பாதையில் பயணிக்கிறது. இந்த சர்வர்களில் பரிமாறிக் கொள்ளப்படும் பல கோடிக்கணக்கான அஞ்சல்களில், உங்களுடைய அஞ்சல் தவறி இருக்க வாய்ப்புண்டு. அல்லது, அது ஸ்பாம் மெயில் எனக் கண்டறியப்பட்டு அதற்கென உள்ள போல்டரில் வைக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், நமக்கு வரும் அஞ்சல்களில் பெரும்பாலானவை ஸ்பாம் மெயில்களே. இத்தகைய மெயில்களில் சில, இவ்வாறு அறியப்பட்டவுடனேயே, எந்த அறிவிப்பும் இல்லாமல், அனுமதிக்கப்படாமலே, உங்கள் சர்வருக்குள் அனுமதிக்கப்படாமலே விடப்படும் சூழ்நிலையும் உண்டு. எனவே, உங்கள் மெயில் அக்கவுண்ட்டில் உள்ள ஸ்பாம் போல்டரில், நண்பர் அனுப்பிய மெயில் உள்ளதா எனப் பார்க்கவும்.

கேள்வி: திடீரென என் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்தில் கம்போஸ் எனப்படும் மெயில் எழுதும் பக்கம் மிகப் பெரியதாகத் தெரிகிறது. செட்டிங்ஸ் சென்று பார்த்தேன். எப்படி சிறியதாக்குவது எனத் தெரியவில்லை. வழி காட்டவும்.
கே. சாம்ராஜ் பூபதி, திருப்பூர்.
பதில்
: திடீரென மாற்றப்பட்டிருக்காது. நீங்கள் அல்லது அதனைப் பயன்படுத்திய ஒருவர் மாற்றியிருக்க வேண்டும். இதனை எப்படி சரி செய்வது எனப் பார்க்கலாம். முதலில் ஜிமெயில் விண்டோவை இயக்கி, அதில் கம்போஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திரையின் வலது மூலையில் விண்டோ ஒன்று கிடைக்கும். இந்த விண்டோவில், வலது மேல் மூலையில், மூன்று கட்டங்கள் தப்படுகின்றன. அவை Minimize, Fullscreen, and Close. நடுவில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், முழு விண்டோ கிடைக்கும். இது முழு விண்டோ அல்ல; சற்றுப் பெரிய விண்டோ. பின்புலத்தை இருட்டாக்கி, இதுவே ஸ்கிரீன் முழுமையும் இருப் பதாகக் காட்டும். சரி, இதனையே எப்போதும் மாறா நிலை விண்டோ அளவாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தினை எப்படி அமைப்பது எனப் பார்ப்போம்.
1. Compose கிளிக் செய்த பின்னர், கம்போஸ் விண்டோவில் கீழே வலது மூலையில் சிறிய அம்புக் குறி அடையாளத்தைக் காணலாம்.
2. அந்த அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Default to fullscreen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் கம்போஸ் கிளிக் செய்திடுகையில், இதே பெரிய விண்டோ கிடைக்கும். மீண்டும் சிறிய விண்டோ வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளில் சென்று, மாற்றவும்.

கேள்வி: என் ஜிமெயில் மற்றும் வி.எஸ். என்.எல்.(டாட்டா கம்யூனிகேசன்ஸ்) அஞ்சல் அக்கவுண்ட்டில் ஜங்க் போல்டர் என எதுவும் இல்லை. ஆனால், அப்படி ஒன்று இருப்பதாக சில இதழ்களில் படித்தேன். இது அவசியமா?
கா. சேகர் பாண்டி, தேனி.
பதில்:
ஜங்க் போல்டர் (junk folder) என்பது ஸ்பாம் போல்டர் (spam folder) தான். இது உங்கள் இரண்டு மெயில் அக்கவுண்ட்களிலும் நிச்சயம் இருக்கும். தங்கள் வர்த்தக முன்னேற்ற காரணங்களுக்காக, விளம்பரத்தின் அடிப்படையில், அனுப்பப்படும் மெயில்கள், உங்கள் மின் அஞ்சல் சர்வரால் அடையாளம் காணப்பட்டு, இந்த போல்டரில் வைக்கப்படும். அனுப்புபவர் முகவரியைக் கண்டே இத்தகைய அஞ்சல்களை உங்கள் அஞ்சல் சேவை மையத்தின் சர்வர் அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் பல வழிகளிலும் இவை அடையாளம் காணப்படும். இவற்றை நீங்கள் தாராளமாகத் திறந்து படிக்கலாம். ஆனால், இணைப்புகள் இருந்தால், அதில் கிளிக் செய்திடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், வைரஸ்களை அல்லது மால்வேர்களை இந்த தளம் சென்றால் அனுமதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. சில நேரங்களில், உண்மையான நபர்களிடம் இருந்து வரும் அஞ்சல்களும் இது போல ஸ்பாம் மெயில் என அடையாளம் காணப்படுவது நடைபெறுவதால், இவற்றைத் திறந்து பார்த்து, நாம் அறியாதது எனில், அழித்து நீக்கிவிடலாம். புதிய நிறுவனங்களிடமிருந்து அல்லது நபர்களிடமிருந்து அஞ்சல் வரும்போது, அவை உண்மையானவையாக இருந்தாலும், இந்த போல்ட ருக்கு அனுப்பப்பட்டுவிடும். எனவே தான், அத்தகைய நிறுவனங்கள், நமக்கு அஞ்சல்களை அனுப்புகையில், வேறு கடிதத் தொடர்பின் போது, இன்பாக்ஸில் அஞ்சல் இல்லை எனில், ஸ்பேம் மெயில் பாக்ஸில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

கேள்வி: நான் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன். இதில் வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கும்போது, சில டெக்ஸ்ட் வரிகளை மறைத்து வைக்க விரும்புகிறேன். பின்னர், அவற்றைத் தேவைப்படும்போது காட்டப்பட வேண்டும். இதற்கான வசதி வேர்டில் உள்ளதா? என்னுடைய சிஸ்டம் எக்ஸ்பி.
சி.நல்லதம்பி, தேனி.
பதில்:
தாராளமாக மறைத்து பின்னர் வெளிப்படுத்தலாம். முதலில் எந்த டெக்ஸ்ட் பகுதி மறைக்கப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் மெனு பார் செல்லவும். அதில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. இதில் கிடைக்கும் புதிய விண்டோவில், Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன், டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

கேள்வி: கம்ப்யூட்டர் மானிட்டரை அதிக நேரம் பார்த்தவாறே வேலை செய்தால், கண் பார்வைக்கு சேதம் ஏற்படுமா? இதனைத் தடுக்க என்று பிரத்யேக கண் கண்ணாடி உள்ளதா? அல்லது வேறு வழிகளைக் கூறவும். நான் டி.டி.பி. மையம் ஒன்றில் வேலை பார்க்கிறேன்.
எஸ்.என்.வேல்ராஜன், சிவகாசி.
பதில்
: மானிட்டர் திரையை உற்றுப் பார்த்தால் கண்களுக்குப் பிரச்னை ஏற்படும் என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏனென்றால், டாகுமெண்ட் உருவாக்குகையில், கேம்ஸ் விளையாடுகையில், சரியாகப் புரிந்து கொள்ள, திரையில் தோன்றும் காட்சிகளை உற்றுப் பார்க்க வேண்டியதுள்ளது. இதனால், நாம் கண்களை சிமிட்ட மறந்துவிடுகிறோம். இந்த செயல்பாடே கண்களுக்கு சுமையை அளித்து, அதன் பார்வைத் தன்மையில் அல்லது கண்கள் இயக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதற்கென்று பிரத்யேக கண் கண்ணாடி எதுவும் இல்லை. ஆனால், வெளிநாட்டு அமைப்பு ஒன்று (Centers For Disease Control) தீர்வு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த தீர்வினை 20 20 20 என அழைக்கிறது. இது என்ன கூறுகிறதென்றால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரிலிருந்து கண்களை எடுத்து, உங்களுக்கு முன்னால் 20 அடி தூரத்தில் உள்ள பொருள் ஒன்றை 20 நொடிகள் பார்க்கவும். உங்கள் கண்கள் தாமாக சிமிட்டிக் கொள்ளும். பிரச்னையும் தீர்ந்துவிடும். இதனை 20 நிமிடத்திற்குக் குறைவான கால அவகாசத்திலும் மேற்கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X