ஜி.கே.டி. பி.டி.பி.ஜி.ஐஐ வீரிய ஒட்டு பருத்தி ரகத்தின் சாகுபடி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
ஜி.கே.டி. பி.டி.பி.ஜி.ஐஐ வீரிய ஒட்டு பருத்தி ரகத்தின் சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மே
2014
00:00

மண் வகைகள்: கரிசல் மண், செம்மண் மற்றும் வண்டல் நிலத்தில் இப்பருத்தியைப் பயிரிடலாம்.
நிலத்தை பண்படுத்தலும் அடியுரமும்: நிலத்தை நன்கு புழுதிபட உழவும், ஏக்கருக்கு 10 மெ.டன் தொழு உரமும், 200 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட்டு மண்ணுடன் நன்றாக கலக்கவும், அடியுரமாக பரிந்துரை செய்யப்பட்ட மணிச்சத்தையும், சாம்பல் சத்தையும் கடைசி உழவிற்கு முன் இடவும்.
உரமிடுதல்: தண்ணீர் வசதியுள்ள இடங்களில் பருத்திக்கு முன்பயிராக சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை அடர்த்தியாக வளர்த்து பின்னர் மண்ணில் மடக்கி உழவும், செயற்கை உரங்களை நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப இடுதல் நல்லது.
தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து (NPK) உரங்களை ஏக்கருக்கு 90:40:40 கிலோ என்ற விகிதத்தில் இடவும், பரிந்துரை செய்யப்பட்ட அளவில் அடியுரமாக அரைப்பங்கு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் அரைப்பங்கு சாம்பல் சத்தை இடவும், மீதமுள்ள தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை இருபகுதியாக பிரித்து நடவு செய்து 50வது நாள் மற்றும் 75வது நாள் இடவும், தழைச்சத்தை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடவும்.
அடியுரமாக நுண்ணூட்டசத்தை ஏக்கருக்கு 6 கிலோ என்ற அளவில் இடவும், செயற்கை உரங்களின் உபயோகத்தைக் குறைத்து மண்ணின் வளத்தைப் பெருக்க அசடோபேக்டர் (Azotobacter), அஸோஸ்பைரில்லம் (Azospirllum), மற்றும் பாஸ்போ பேக்டீரியா (Phosphobacteria) போன்ற நுண்ணுயிர் கலவைகளை அடியுரமாகவோ (ஏக்கருக்கு 4 பாக்கெட்டுகள்) அல்லது விதைநேர்த்தி (1 கிலோ விதைக்கு 20 கிராம்) செய்தோ பயன்படுத்தலாம்.
இடைவெளி: விதைக்கும்பொழுது வரிசைக்கு வரிசை 75 செமீ மற்றும் செடிக்கு செடி 45 செமீ இடைவெளி விட்டு பார்களில் விதைக்கவும் நீர்வளம் மிகுந்த கரிசல் நிலங்களில் சற்று அதிகமான இடைவெளி தேவைப்படும்.
விதைப்பு: ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவைப்படும். தரமான விதைகளை பஞ்சு நீக்கம் செய்து பாவிஸ்டின் (2கி) என்ற பூஞ்சாள மருந்துடனோ அல்லது டிரைகோடொர்மா விரிடி (5கி) (Trichoderma Viride) என்ற பூஞ்சாள நுண்ணுயிரிடனோ கலந்து விதைக்கவும்.
நடவு செய்யும்போது பார்களின் சரிவில் தகுந்த இடைவெளி விட்டு குழிக்கு 2 விதைகள் வீதம் நடவு செய்யவும், விதைகள் விதைத்து மூன்று வாரங்கள் கழித்து, குழிக்கு ஒரு செடிகள் விட்டு மற்றவைகளைக் களைந்து விடவும்.
களை நிர்வாகம்: பருத்தி விதைத்தவுடன் பாஸலின் அல்லது ஸ்டாம்ப் களைக்கொல்லி மருந்துகளில் (750-1000 மிலி ஏக்கருக்கு) ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்தவுடன் நீர் பாய்ச்சவும், களைக்கொல்லி தெளிக்காத வயல்களில் பருத்தி விதைத்த 20வது மற்றும் 40வது நாட்களில் கை களை எடுத்தல் அவசியம்.
இலைவழி உரமிடுதல்: அதிகமாக காய்ப்பிடிக்கும் நேரத்தில் ஏற்படும் உரப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்களை செடியின் மீது தெளித்து கூடுதல் மகசூல் பெறலாம். யூரியா 1% அல்லது டி.ஏ.பி. 1% மற்றும் பொட்டாஷ் 0.5% உரங்களை விசைத்தெளிப்பான் மூலம் இலையின் மீது 85வது நாள் முதல் 15 நாள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கவும்.
நுனி கிள்ளுதல்: விதைத்த 90 நாட்களுக்கு பின் செடிக்கு 15 முதல் 20 கிளைகளும், கிளைக்கு நான்கு அல்லது ஐந்து காய்கள் இருக்கும் தருணத்தில் நுனியை கிள்ளி விடுதல் நல்லது. இதனால் பயிரின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, காய்கள் பெரிதாக வளர வாய்ப்புண்டு.
பூச்சி மற்றும் நோய் பராமரிப்பு: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியம். செடிகளின் வளர்ச்சி, வயது மற்றும் பூச்சிகளின் தாக்குதலை கருத்தில் கொண்டு, பொருளாதார சேதத்தைக் கணக்கிட்டு சரியான மருந்தினை தெளித்தல் அவசியம்.
பருத்தியை தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்:
1. அசுவினி - கான்பீடார் (Confidor) 200 SL (40 50 ml) / ஏக்கருக்கு
2. இலைப்பேன் - பிரைடு 120 SP அல்லது
3. தத்துப்பூச்சி - 40கி tank ஏதாவது ஒன்றை தெளிக்கவும்.
மாறுபட்ட குணங்களுடைய ஜி.கே.டி 1 Bt BG II சிறப்பியல்புகள்
வயது - 155- 160 (நாட்கள்)
அறவைத்திறன் - 35% - 38% (சதம்)
இழை நீளம் - 30.0-31.2 mm
வெடித்தகாயின் எடை - 6.0 - 8.5 (வெடித்தது -கி)
மகசூல் - 3100 - 3150 (கி எக்டேர்)
பருவம் - குளிர் / கோடைப்பருவம், நெல் தரிசு நிலம்
தகவல்: டாக்டர். கே.செல்வராஜ்
எம்.ஆஷாராணி, வி.முத்துசாமி
சிமா பருத்தி அபிவிருத்தி மற்றும்
ஆராய்ச்சிக்கழகம், கோவை-18.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X