கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2014
00:00

கேள்வி: என் நண்பர், மானிட்டரை மட்டும் ஆப் செய்துவிட்டு, சி.பி.யு.வினை இயங்கிய நிலையிலேயே விட்டுவிடுகிறார். இது பெர்சனல் கம்ப்யூட்டருக்கு உகந்ததா? இதனால் நன்மையா? தீமையா?
ஆர். தினேஷ் குமார், சென்னை.
பதில்:
உங்கள் கேள்வியைப் படித்தவுடன், நாயகன் திரைப்படத்தின் பிரபலமான வசனமான ""நீங்கள் நல்லவரா? கெட்டவரா?'' என்பது என் நினைவிற்கு வந்தது. சரி, கேள்விக்கு வருவோம். இதில் இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை. சில நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவனத் தகவல்களை நெட்வொர்க் அமைப்பில் அப்டேட் செய்து கொண்டே இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் உங்கள் நண்பர் பணியாற்றினால், கம்ப்யூட்டரைச் செயல்படுத்தாத நிலையில், மானிட்டரின் பயன்பாட்டினை நிறுத்தி, சி.பி.யு. மட்டும் இயங்கும் வகையில் அமைக்கலாம். இதனால், மானிட்டர் பயன்படுத்தும் மின் சக்தி மிச்சமாகும். மேலும், அதன் வாழ் நாள் நீடிக்கும். ஆனால், இப்போது வரும் மானிட்டர்கள் தாங்களாகவே, மின்சக்தி பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.
இன்றைய சூழ்நிலையில் இது தேவை இல்லை என்றுதான் கூறுவேன். நாம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், தானாகவே அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். எனவே, பயன்படுத்தாத சூழ்நிலையில், மொத்த கம்ப்யூட்டரையும் ஆப் செய்து வைப்பதே நல்லது. மின்சக்தி விரயமாகாது. ஹார்ட் டிஸ்க் சுழல்வது நிற்பதால், அதன் வாழ்நாள் அதிகமாகும்.
இல்லை கட்டாயம் இயங்க வேண்டும் என்று முடிவெடுத்தால், ஹைபர்னேட் நிலையில் வைக்கலாம்.

கேள்வி: எனக்கு என் கணவரின் உடல்நிலை குறித்த அறிக்கை வேர்ட் டாகுமெண்ட்டாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து இடங்களிலும் பாராகிராப் குறியீடு காட்டப்படுகிறது. இது டாகுமெண்ட்டினைப் படிப்பதில் இடையூறாக உள்ளது. அனுப்பியவர்களைக் கேட்டால், தாங்கள் சரியாக அனுப்பியதாகக் கூறுகின்றனர். எங்கு பிரச்னை? இதற்கான தீர்வு என்ன?
ஆர். பிரியா, திருப்பூர்.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் புரோகிராமில், ஒரு சிறிய கீ அழுத்தல் அல்லது மவுஸ் கிளிக் இந்த பிரச்னையை உங்களுக்குத் தருகிறது. மேலாக உள்ள ஹோம் மெனுவில் பாராகிராப் குறியீட்டு ஐகானத் தேடிக் காணவும். அதில் ஒரு கிளிக் செய்தால், டாகுமெண்ட்டில் பாரா அடையாளங்கள் அனைத்தும் மறைந்துவிடும். மீண்டும் அழுத்தினால் காட்டப்படும். அல்லது இதற்குப் பதிலாக, Ctrl + * என்ற கீகளை அழுத்தினால், பாரா குறியீடு காட்டப்படும் மற்றும் மறைக்கப்படும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 அல்டிமேட் இயங்குகிறது. இதில் சில நிமிடங்கள் கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலையில் வைக்க முடியவில்லை. மெனுவில் ஸ்லீப் கொடுக்கப்படுகிறது. அதில் கிளிக் செய்தால், உடனே அது மீண்டும் இயங்கத் தொடங்குகிறது. பவர் செட் செய்திடும் விண்டோவிலும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. எதில் பிரச்னை என்று காட்டவும்.
என். சுகவனம், கோவை.
பதில்:
உங்களின் விரிவான கடிதம் அனைத்து தகவல்களையும் தந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த புரோகிராம் ஒன்று இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்த புரோகிராம் தான் இயங்க, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடிலிருந்து உடனே, உடனே எழ வைக்கிறது. இது ஓர் யூகம் தான். எனவே கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
ஸ்டார்ட் மெனு சென்று, Control Panel செல்லவும். இங்கு Hardware and Sound என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power Options என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Change when the computer sleeps என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் Change advanced power settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பிரிவில், பாதிக்கும் மேலாகச் சென்றால் Sleep என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதில் ஒரு ப்ளஸ் அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்தால், இன்னும் சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இங்கு Allow wake timers என்று இருப்பதனை அடுத்துள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இங்கு Disable wake timers என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அநேகமாக இதில் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து சரியாகவில்லை என்றால், ஸ்டார்ட் மெனு சென்று, cmd என டைப் செய்து, கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியுடன் கூடிய கருப்பு கட்டம் பெறவும். இதில் powercfg lastwake என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது Wake History Count என்ற தலைப்பில் நிறைய தகவல்கள் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டரைத் தூங்க விடாமல் வைத்திருப்பவை எவை என இந்த பட்டியல் காட்டும். இதைக் கவனித்து, அந்த புரோகிராமினை ஸ்டார்ட் அப் பிரிவில், இயங்கா வண்ணம் முடக்கி வைக்கவும். இனி, உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லீப் மோடுக்குச் சென்று தூங்கும்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். (இந்த கம்ப்யூட்டரில் இணையம் செல்வதில்லை.) இதில் வேர்ட் ஸ்கேலில், அங்குலத்திற்குப் பதிலாக சென்டி மீட்டர் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு என்ன செய்திட வேண்டும்?
என். சிதம்பரம், மதுரை.
பதில்
: வேர்ட் மெனுவில் Tools கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இப்போது டேப்கள் பல கொண்ட விண்டோ ஒன்று காட்டப்படும். இதில் General என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், "Measurement Units” என்று இருப்பதன் அருகே கர்சரைக் கொண்டு சென்று, கிளிக் செய்து மெனுவினைப் பெறவும். இங்குள்ள மெனுவில், நீங்கள் எந்த அளவினை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதனை மேற்கொள்ளலாம். அதற்குரிய வகையில் Inches, Centimeters, Millimeters, Points, or Picas என்ற அளவுகள் கிடைக்கும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன். இதில் எக்ஸெல் புரோகிராமில், மாறா நிலையில், திறக்கும்போது, மூன்று ஒர்க் ஷீட்கள் கிடைக்கின்றன. கூடுதலாக, ஒர்க் ஷீட்டுகள் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
ஆ. இளம்பரிதி, சென்னை.
பதில்:
எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளவும். இங்கு முதலில் Tools மெனு செல்லவும். இந்த மெனுவில் உள்ள பிரிவுகளில், Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல், ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் உள்ள இரண்டாவது பிரிவில், முதலில் Sheets in New Workbook என்று ஒரு வரி காட்டப்படும். இதனைக் கவனித்தால், அதன் எதிரே சிறிய அளவில் 3 என்ற எண் இருக்கும். அதன் அருகே, மேலே, கீழே செல்லும் வகையில் அம்புக் குறிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை அழுத்தி, எண் மதிப்பை உயர்த்தலாம் மற்றும் குறைக்கலாம். இந்த எண் அளவிலேயே ஒர்க் ஷீட்கள், எக்ஸெல் திறக்கும்போது கிடைக்கும். உங்களுக்குத் தேவையான எண்ணிக்கைக்கான எண்ணை அமைத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி புதிய ஒர்க்புக் திறக்கப்படுகையில், நீங்கள் அமைத்த எண்ணுக்கேற்ற படி, ஒர்க் ஷீட்கள் தரப்படும்.

கேள்வி: எம்.எஸ்.ஆபீஸ் 2007 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இதில் வேர்ட் டாகுமெண்ட்டில், வரிகளுக்கிடையாயான இடை வெளியினை எப்படி சரியாக ஒரு ஸ்பேஸ் வரும்படி அமைக்க முடியவில்லை. சற்று கூடுதலாகவே அமைகிறது. செட் செய்திடும் வழிகளைக் காட்டவும்.
என். சுகுணா ரவீந்திரன், சிவகாசி.
பதில்:
வேர்ட் 2007ல் வரிகளுக்கான இடைவெளி அமைப்பதில் சில மாற்றங்களை முன்பிருந்த புரோகிராம்களிலிருந்து மாற்றத்துடன் அமைத்துள்ளது. இதில் இந்த இடைவெளியை, Line spacing என்ற டூல் கையாள்கிறது. இதனைப் பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில், இடைவெளியை மாற்றலாம். குறிப்பிட்ட டாகுமெண்ட் டினைத் திறந்து, பின்னர் ஹோம் பட்டனில் கிளிக் செய்திடவும். பின், பாராகிராப் என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு உள்ள ஐகான்களில், கர்சரை மெல்ல உலாவ விடவும். ஒன்றின் மீது செல்கையில் Line spacing என்ற சிறிய பலூன் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு விரியும் மெனுவில், பல அளவுகளில் லைன் ஸ்பேசிங் கிடைக்கும். நீங்கள் விரும்பும் அளவினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின் மீண்டும் அதே மெனுவினைப் பெற்று Remove space after paragraph என்பதில் கிளிக் செய்திடவும். எந்த இடங்களில் எல்லாம், வரிகளுக்கான இடைவெளியை குறைக்க வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுத்து, இவ்வாறு அமைக்கலாம்.
இனிமேல் உருவாக்கப்படும் அனைத்து டாகுமெண்ட்களிலும், நீங்கள் விரும்பும் வகையில் மாறா நிலையில், வரிகளுக்கான இடைவெளியினை அமைக்க கீழே தந்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
ஹோம் டேப்பில், வலது கீழ் மூலையில், ஸ்டைல் பிரிவில், உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால், ஸ்டைல்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கீழாக மூன்று சிறிய பட்டன்கள் கிடைக்கும். கர்சரை இவற்றின் மீது கொண்டு சென்றால், வலது புறம் இருக்கும் ஐகான் Manage Styles என்பதற்கானது எனத் தெரிய வரும். இந்த Manage Styles டயலாக் பாக்ஸில், Set Defaults என்று ஒரு டேப் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், இங்கு டேப் அகலம், எழுத்துருவின் ஸ்டைல் மற்றும் அளவினை மாற்றி அமைக்கலாம். இங்கேயே, பாராகிராப் மற்றும் லைன் ஸ்பேசிங் அளவுகளையும் மாற்றி அமைக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X