கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் 8 பயன்படுத்துகிறேன். இதில் என் வால் பேப்பர் படத்தினை ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு முறை மாறும்படி அமைக்க விரும்புகிறேன். இதில் முடியும் என்று வேறு ஒரு கம்ப்யூட்டரில் பார்த்தேன். ஆனால் வழி தெரியவில்லை. உதவவும்.
ஆ. சந்தனா, புதுச்சேரி.
பதில்:
தாராளமாக செட் செய்திடலாம். அதுவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது மிகவும் எளிது. உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், கீழாக உள்ள Personalize என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு Personalization திரை கிடைக்கும். இதில் பல தீம்கள் எனப்படும் காட்சிகள் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்தால், அது தானாக மாற்றப்படும். நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து, பைலாக பதிந்து வைத்திருக்கும் காட்சியினை அமைக்க விரும்பினால், டெஸ்க்டாப் பேக் கிரவுண்டில், திரையின் கீழாக கிளிக் செய்திடவும். பின்னர், நீங்கள் படம் வைத்துள்ள போல்டர் சென்று, அதில் உள்ள, நீங்கள் காட்டப்பட வேண்டும் என்று விரும்புகிற படங்களைக் கீழாக இழுக்கவும். இங்கு திரையின் கீழாகவே, இந்த படங்கள் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை மாறவேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். இதனை வரிசையாகவோ, அல்லது எந்த வரிசைப்படியும் இல்லாமலோ (randomly) வரும்படியும் அமைத்திடலாம். இனி, நீங்கள் அமைத்த கால இடைவெளியில், தேர்ந்தெடுத்த படங்கள் மாறி மாறிக் காட்டப்படும்.

கேள்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அவசரமாக வெளியிட்ட பாதுகாப்பிற்கான பேட்ச் பைல் குறித்து வெளியிட்ட தகவலுக்கு நன்றி. இந்த அப்டேட் பைல்களை எங்கு சென்று பெறுவது என்பதற்கான இணைய முகவரியினையும் தரவும்.
என். ரவீந்திரன், திருப்பூர்.
பதில்:
திரு ரவீந்திரன், விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் செய்வதற்கு இணைய முகவரி தேவையில்லை. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Windows update center மூலம் இதனை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் அழுத்தி, சர்ச் பாக்ஸ் பெற்று, அதில் Windows updates என டைப் செய்திடவும். நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால், கிடைக்கும் முடிவுகளில் Windows updates ஐகானில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.
உடன், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Windows updates என்னும் மையத்திற்கு வழி நடத்தப்படுவீர்கள். அங்கு உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவைப்படும் அப்டேட் ஏதேனும் உள்ளதா என்று காட்டப்படும். ஏதேனும் இருப்பின், அதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இங்கு View update history என்பதில் கிளிக் செய்தால், அண்மையில் அப்டேட் செய்யப்பட்டவற்றின் தகவல்கள் காட்டப்படும். இதன் மூலம் நீங்கள் இன்னும் அப்டேட் செய்யப்பட வேண்டியவற்றை அறிந்து கொண்டு, அவற்றை அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதனை கண்காணிக்க இயலவில்லை என்றால், தானாக அப்டேட் செய்திடுமாறு செட் செய்திடலாம். Change settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில் Important updates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில், install updates automatically என்பதில் கிளிக் செய்து அமைக்கவும். எப்போது அப்டேட் செய்திட வேண்டும் என்பதற்கு நாள் மற்றும் நேரத்தினையும் இதில் செட் செய்திடலாம். இவை அனைத்தையும் அமைத்துவிட்டு, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: ஐ.என்.எப். என்ற பின்னொட்டைக் கொண்ட பைல்கள் எத்தன்மையுடையவை? அவற்றின் பயன் என்ன? எந்த சாப்ட்வேர் புரோகிராமில் அவற்றை இயக்கலாம்?
எஸ். ஸ்ரீராமன், கோவை.
பதில்
: ஐ.என்.எப். பைல் என்பது INFormation Files என்பதன் சுருக்கமாகும். இவை எந்த பார்மட் வடிவமைப்பு இல்லாத டெக்ஸ்ட் பைல்கள். விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தும் இந்த பைல்களில், ட்ரைவர், புரோகிராம், சாப்ட்வேர் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்திடத் தேவையான தகவல்கள் இருக்கும். சாதாரணமான எந்த வேர்ட் ப்ராசசரிலும் இதனைத் திறந்து படிக்கலாம். ஆனால், இவற்றில் மாறுதல்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது.

கேள்வி: கம்ப்யூட்டரில் ஹார்ட் ட்ரைவால் எப்படி பிரச்னை ஏற்பட்டு, சிஸ்டம் செயல்பாட்டினை இழக்கும்? பிரச்னை ஏற்படும் என்றால் தீர்வு என்ன? சற்று விளக்கமாகக் கூறவும்.
ஆ. சூர்யப் பிரபா, உசிலம்பட்டி.
பதில்:
ஹார்ட் ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால், விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில், இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும். பொதுவாக, இவற்றில் பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான், ஹார்ட் ட்ரைவில் பிரச்னை இருப்பது தெரியவரும். இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும் புரோகிராம்கள், இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சோதனை செய்து, கிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால், உங்கள் ஹார்ட் ட்ரைவ் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள். எப்படியாவது சரி செய்து, அதில் உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டு, ட்ரைவினை அழித்துவிடுவதே நல்லது. அதற்கு முன், அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து, இயக்கிப் பார்க்கலாம். அதில் சரியாக இயங்கினால், மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம். ட்ரைவ் சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால், பிரச்னை கம்ப்யூட்டரின் பிற பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

கேள்வி: சில நூல்களில் குறிப்பிட்ட ஐ.பி. முகவரிக்கு பிங் செய்து பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த செயல்பாடு எதனைக் குறிக் கிறது? எப்படி இதனைக் கையாள வேண்டும்?
ஆர். மோகன், மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. இணையம் பயன்படுத்தும் அனைவரும் கட்டாயம் இதனை விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இது ஓர் அருமையான பயன்பாடு தரும் டூல். இணைய இணைப்பில், (Internet Protocol IP) நாம் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் கம்ப்யூட்டரை, இணைய தளம் கொண்டுள்ள சர்வரை நாம் அணுக முடிகிறதா என்ற சோதனையை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இணைப்பிற்கு இலக்கு வைக்கும் தளம் கொண்டுள்ள சர்வரிடமிருந்து பதில் கிடைக்கிறதா என்பதையும் இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நாம் அனுப்பும் வேண்டுகோளினை Echo Request எனக் கூறுவார்கள். அதாவது, நம் வேண்டுகோள் சென்று, எதிரொலியாக பதில் அல்லது இயலவில்லை என்ற செய்தி நமக்குக் கிடைக்கும். பதில் வர எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற தகவலும் நமக்குத் தரப்படும்.

கேள்வி: நான் அமைத்துள்ள ஒர்க் ஷீட்டில், ரோ மற்றும் காலம் வரிசையில் கடைசியாக அமைக்கப்பட்டுள்ள செல் வரை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், என்ன ஷார்ட் கட் கீ பயன்படுத்த வேண்டும்?
எஸ். பரமசிவம், திண்டுக்கல்.
பதில்:
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். நெட்டு வரிசை, படுக்கை வரிசையின் அடிப்படையில் ஆரோ கீயினை மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: அண்மைக் களத் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் என NFC யை விளக்குகிறீர்கள். இனி, வாங்கிய பொருட்களுக்கு மொபைல் போன் அசைப்பதன் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் எழுதியுள்ளீர்கள். இந்த தொழில் நுட்பம் எப்படி செயல்படுகிறது?
என். ஷ்யாம் சுந்தர், சென்னை.
பதில்
: நல்ல கேள்வி. எதிர்காலத்தில் நாம் அனைவரும் இயக்க இருக்கும் இந்த தொழில் நுட்பம், வர்த்தகப் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தினையும் நம் பணத்திற்குப் பாதுகாப்பினையும் தர உள்ளது. அது குறித்து இங்கு சற்று விரிவாகவே கூறுகிறேன். Near Field Communication (NFC) என்பதுஇரண்டு ஸ்மார்ட் போன்கள் அல்லது அதே போன்ற மொபைல் எலக்ட்ரானிக் சாதனங்கள் அருகருகே இயங்கும் போது, எந்தவித வயர் இணைப்பின்றி தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு வழி செய்திடும் தொழில் நுட்பமாகும். தற்போது புழக்கத்தில் உள்ள Radio Frequency Identification (RFID) என்னும் தொழில் நுட்ப கட்டமைப்பில் விரிவாக இருவழி தகவல் பரிமாற்றத்துடன் என்.எப்.சி. வடிவமைக்கப் பட்டுள்ளது. கூகுள் வாலட் போன்ற சாதனக் கட்டமைப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த கட்டமைப்பில், நம் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தி, நம் ஸ்மார்ட் போனை இதற்கென விற்பனை நிலையங்களில் உள்ள சாதனங்கள் முன்னர், இவற்றை அசைத்து, பணம் செலுத்தலாம். பல நாடுகளில் கடன் அட்டை போன்றவற்றில் பணம் செலுத்தி, அவற்றை வாகனங்களில் வைத்து, சாலைகளில் பயணிக்கும் போது, தானாக பணம் செலுத்தப்படும் வசதி என்.எப்.சி. மூலம் இயக்கப்படுகிறது. இது பாதுகாப்பானது. குறுகிய வட்டத்திற்குள் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி இது இயங்குவதால், அனுப்பப்படும் தகவல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X