கம்ப்யூட்டருக்குப் புதியவரா! கூகுள் தேடல்கள் - சில வரையறைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:00

கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் மனப்பாடம் செய்து இயக்க வேண்டிய அவசியமில்லை. தேடல் வரையறைகள் நினைவிற்கு வர இயலாத சூழ்நிலையில் http://support.google.com/websearch/bin/answer.py?answer=35890 என்ற தளம் சென்று இவற்றை அறிந்து கொள்ளலாம்.
1. குறிப்பிட்ட சொல் மட்டும்: நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் தேடலில் அவை எந்த வரிசையில் இருந்தாலும், அந்த டெக்ஸ்ட் உள்ள தளம் காட்டப்படும். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட வரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே தேவை எனில் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக்காட்டாக, "nor custom stale her infinite variety” என்ற வரிசையில் உள்ள ஷேக்ஸ்பியர் வரியினைக் கொண்டுள்ள டெக்ஸ்ட் உள்ள பக்கம் மட்டுமே வேண்டும் எனில், இந்த சொற்களை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். அப்படிக் கொடுக்கையில், இந்த வரிசையில் உள்ள சொற்றொடர்கள் உள்ள பக்கங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.
எனவே, இது போன்ற கட்டாயமான தேவை இருந்தால் மட்டுமே மேற்கோள் குறிகளுக்குள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். சாதாரணத் தேடலில் அமைத்தால், பல முக்கிய தளங்களை நாம் காணாமல் இழக்க வேண்டியதிருக்கும்.
2. சொல்லை விலக்கி அளிக்க: குறிப்பிட்ட ஒரு சொல்லுடன், இன்னொரு குறிப்பிட்ட சொல் இல்லாதவை மட்டுமே நமக்குத் தேவையாய் இருக்கும். எடுத்துக்காட்டாக, மெட்ரோ நகரங்களைப் (metro cities) பற்றி தேடுகிறீர்கள். இப்போது வந்திருக்கும் விண்டோஸ் 8 தொகுப்பில் மெட்ரோ என்ற யூசர் இன்டர்பேஸ் முதலில் தரப்பட்டது. எனவே நீங்கள் metro cities என்று அளிக்கையில், விண்டோஸ் 8 குறித்த தளங்களும் காட்டப்படும். இதனைத் தவிர்த்து நகரங்களை மட்டும் பெற, Metro Cities windows என ஒரு சிறிய டேஷ் அடையாளத்தை (மைனஸ்) தேவையற்ற சொல்லுடன் இணைக்க வேண்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள எதுவும் வேண்டாம் என்றால், அந்த தளத்தின் பெயருக்கு முன்னால், site: எனக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, tamil kings site: wikipedia.org எனக் கொடுக்கலாம்.
3. இணைச் சொற்களுடன் தகவல்: மேலே காட்டப்பட்டதற்கு எதிராக, ஒரு சொல்லைப் போன்றே பொருள் உள்ள இணைச் சொற்களும் (Synonyms) காட்டப்பட வேண்டும் எனில், (~) குறியீட்டினைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ~food facts எனக் கொடுத்தால், நல்ல உணவிற்கான பிற சொற்களுடன் தேடல் தகவல்கள் தரப்படும்.
4. குறிப்பிட்ட தளத்தினுள் மட்டும்: உங்களுக்கான தேடல் குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனில், சொல்லுக்குப் பின்னால் site: என்ற சொல்லுடன், அந்த தளத்தின் யு.ஆர்.எல். தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, chrome site:support.google.com எனக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கையில் chrome என்ற சொல் support.google.com என்ற தளத்தில் இடம் பெறும் இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
5. எந்த சொல்லானாலும் சரி: குறிப்பிட்ட தேடல் சொல் தொகுதியில் ஓர் இடத்தில், எந்த சொல் வந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால், தேடலுக்கான சொல் தொடரில், அந்த இடத்தில் ஆஸ்டெரிஸ்க் குறியீட்டைத் தரலாம். எடுத்துக் காட்டாக "a * saved is a * earned” என அமைக்கலாம்.
6.எந்த சொல்லுக்கான விடையும் வேண்டும்: சில சொற்களைக் கொடுத்துத் தேடச் சொல்கையில், அவற்றில் இரண்டில் எந்த சொல் இருந்தாலும் வேண்டும் என எண்ணினால், அந்த இரண்டு சொற்களுக்கிடையில் "OR” எனப் பெரிய எழுத்துக்களில் தர வேண்டும். எடுத்துக்காட்டாக olympics location 2014 OR 2018 எனத் தரலாம். இவ்வாறு தருகையில், ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம் 2014 ஆம் ஆண்டு அல்லது 2018 ஆம் ஆண்டு என இரண்டு ஆண்டுகளுக்குமான தேடல் நடைபெற்று விடை கிடைக்கும். இந்த குறியீடு இல்லை என்றால், இரண்டு சொற்களும் இடம் பெறும் தள விடைகள் மட்டுமே கிடைக்கும். இந்த தேடல் குறியீட்டில் என்பதற்குப் பதிலாக "|” என்ற குறியீட்டினையும் அமைக்கலாம்.
7. ரேஞ்ச் அமைக்க: விலை, ஆண்டு, நேரம், காலம் குறிப்பிடுகையில், இதிலிருந்து இது வரையிலானது வரை தேடுக என்று நாம் அமைக்க விரும்புவோம். அப்போது ரேஞ்ச் அமைப்பில் உள்ள இரண்டுக்கும் இடையே இரு புள்ளிகளை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலான விலை ரேஞ்சில் உள்ள கேமராக்கள் குறித்து அறிய camera Rs.50..Rs.100 என அமைக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X