பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:00

சி.பி.யு. மட்டும் இயக்கலாமா? என்ற கேள்விக்கு இன்னும் சற்று விரிவாக விளக்கமாக பதில் அளித்திருக்கலாம். இருப்பினும், இப்போதெல்லாம், மொத்த சிஸ்டத்தையும் ஆப் செய்தே வருகிறோம்.
ஆ. நீதிராஜன், சென்னை.

பாரா குறியீடு குறித்த பதில் என் பல மாத சந்தேகத்தினைப் போக்கியது. ஏதோ ஒரு கீயை அழுத்தி, அவை தெரிந்து கொண்டிருந்தன. எப்படி நீக்குவது என்று தெரியாமல் இருந்த எனக்கு உங்கள் விளக்கமான பதில் வழி காட்டியது.
சி. நந்தன் பாலகுமார், கோவை.

எல்லாரும் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்த பல காரணங்களைச் சொல்லி தயங்கும் நேரத்தில், பாதுகாப்பின் அடிப்படையில் இதுவே சிறந்தது என்ற தங்களின் கட்டுரையும் அதில் தரப்பட்டுள்ள தகவல்களும் அருமை. இதைப் படித்த பின்னராவது விண்டோஸ் 8 சிஸ்டத்தை நம் வாசகர்கள் ஒதுக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.
என். பங்கஜ் குமார், திருநெல்வேலி.

கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் செக்யூர் பூட் தர வரையறை குறித்து இன்னும் கூடுதல் தகவல்களைத் தரவும்.
கா. சிவநேசன், மதுரை.

இ.எக்ஸ்.இ பைலில் செக் சம் அறிவது என்பது என்ன என்று சற்று விளக்கம் பெற ஆசைப்படுகிறேன். அடுத்த இதழில் இது பற்றி விரிவாகக் கூறவும்.
என். ரவீந்திரன், சாத்தூர்.

தங்களின் புளுடூத் பற்றிய கட்டுரை மிக விளக்கமாகவும், விரிவாகவும் உள்ளது. அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய நல்ல கட்டுரை. எழுதியவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கே. சம்பத் ராஜா, கணிப்பொறி ஆசிரியர், கோவை.

வைப்பர் ஓர் அருமையான மெசேஜிங் புரோகிராம். வாட்ஸ் அப் முன்னால் அவ்வளவாக எடுபடவில்லை என்றாலும், இதனைப் பயன் படுத்துவோர் எண்ணிக்கையும் மிக அதிகமே. விண் 8ல் இது தரப்படுவது, இதன் பயனாளர்கள் எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கும்.
கே.எஸ்.லதா ஸ்வராஜ், சென்னை.

அகம் காட்டும் முகம் என்பது போல, இணையம் நம் இந்திய தேர்தலை நன்கு எதிரொலித்துள்ளது என்பதனைத் தங்கள் தகவல்கள் நிரூபிக்கின்றன. நல்ல பார்வை இது.
ஆ. தமிழரசன், புதுக்கோட்டை.

தொடர்ந்து மாற்றங்களை மேற்கொள்வதும், புதிய வசதிகளைத் தருவதும், கூகுள் நிறுவனத்தின், குறிப்பாக ஜிமெயில் பிரிவின் வாடிக்கையாகும். புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதனைக் காண ஆவலுடன் இருக்கிறோம்.
கா. சுப்புராஜ், திருமங்கலம்.

இமெயில் ஹார்வெஸ்ட்டிங் என நீங்கள் போட்டுள்ள துண்டுச் செய்தி, இப்படியும் வியாபாரம் இருக்குமா என்று வியப்படையச் செய்துள்ளது.
எஸ். மாலதி, சென்னை.

நோக்கியா தொழிற்சாலை மூடப்படும் என்ற செய்தியுடன் தரப்பட்டுள்ள அதன் தொழில் வளாகப் படம், வியப்பினையும் வேதனையையும் தருகிறது. உலகின் முதல் இடத்தில் இயங்கி வந்த நிறுவனத்தின் தொழிற்சாலை முடங்கிப் போவது என்பது நம் முன்னேற்றத்தின் இழப்புதானே!
என். இராமச்சந்திரன், திருப்பூர்.

கேள்வி பதில் பகுதியில் தந்துள்ள வழி காட்டுதல்களின்படி, என் விண்டோஸ் 8 டெஸ்க்டாப்பில், படங்கள் அடுத்தடுத்து வருகிற மாதிரி செட் செய்துவிட்டேன். அனைவரும் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். வழிகாட்டிய குருவாகிய தங்களுக்கு நன்றி.
சீ. மதார் மைதீன், உத்தமபாளையம்.

பிங் செய்வது குறித்த தங்கள் விளக்கம் அருமை. சில எடுத்துக்காட்டுகள் தந்திருக்கலாம். பதில் நீளமாகிவிடும் என்றாலும், செயல்பாடு நன்றாக விளங்கி இருக்கும்.
தெ. மன்னன், திருப்பரங்குன்றம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X