அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2014
00:00

இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றும், 'நண்பி' ஒருவரை, சமீபத்தில் சந்தித்தேன். பரீட்சைகள் பல எழுதி, இளம் வயதிலேயே உயர் அதிகாரியானவர் அவர். மிகவும் நேர்மையானவர்; சுறுசுறுப்பானவர்; வாடிக்கையாளர்களே நம் முதலாளி என்ற எண்ணம் கொண்டு, அவர்களுக்கு சேவை செய்வதையே கடமையாகக் கொண்டவர்.
அவர் கூறினார்: ஜெர்மன் நாட்டுக்கு, 'விசா' வழங்குவதில், புதிய நடைமுறை ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர் போலுள்ளது... 'ஓவர்சீஸ் மெடிகிளைம்' பாலிசி எடுத்து வந்தால்தான், 'விசா' கொடுப்பதாக சொல்கின்றனர். (வெளி நாட்டிற்கு சென்று இருக்கும் போது, அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, விபத்து நேர்ந்தாலோ, 'ஓவர்சீஸ் மெடிகிளைம்' என்ற இன்சூரன்ஸ் எடுத்திருந்தால், மருத்துவச் செலவுகளை இன்சூரன்ஸ் கம்பெனி கொடுத்து விடும். நம்மூர் போல ஊசி போட, 50 ரூபாய், 'கன்சல்டேஷன்' 100 ரூபாய் விவகாரமெல்லாம், வெளிநாடுகளில் கிடையாது. கையைத் தொட்டுப் பார்த்தாலே அங்குள்ள டாக்டர்கள் ஆயிரக் கணக்கில் வாங்கி விடுவர்!)
மெடிகிளைம் பாலிசி எடுக்க வேண்டும் என்ற விவரம், அனேகம் பேருக்கு கடைசி நிமிடத்தில் தெரிவதால், ஒவ்வொரு, 'இன்சூரன்ஸ் கம்பெனியாக' தேடி ஓடுகின்றனர். அங்கெல்லாம், அவர்களுக்கு கிடைக்கும் பதில், 'குறைந்தபட்சம், நாலு நாள் ஆகுங்க...' என்பது தான்.
இந்த பதிலால், வெளிநாடு செல்ல திட்டமிட்டு, டிக்கெட் வாங்கி, தேதி நிர்ணயம் செய்த பயணிகள் பலரும், அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
பாலிசி எடுக்க காசையும் கொடுத்து, இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வருமானத்தையும் தரும் வாடிக்கையாளர்களை, புழுவைப் பார்ப்பது போல பார்க்கின்றனர், நடத்துகின்றனர் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்கள்.
எங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியைத் தேடி அவசரமாக, 'பாலிசி' எடுக்க ஓடி வந்தார் ஒரு பயணி. அவரது அவசரத்தையும், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அவர் மூலம் கிடைக்கப் போகும் வருமானத்தையும் மனதில் கொண்டு, வெகு வேகமாக செயல்பட்டு, 'பாலிசி' தயாரித்தேன். அதை, 'டைப்' செய்ய வேண்டும். அதில் தான் சிக்கல். அவர்களை துரிதப்படுத்த முடியாது. 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்மா... 20 வருஷ சர்வீஸ் எங்களுக்கு... புதுசா இப்போ வேலையிலே சேர்ந்துட்டு, என்னமோ உங்கப்பன் வீட்டு கம்பெனி போல எங்களை விரட்டுறியே...' என்பர்.
அப்படியே டைப் அடித்து கொடுத்தாலும், எக்கசக்க தப்புகள் இருக்கும். கேட்டால், 'தப்பு ஒண்ணும் இல்லியே...' என்பர். சில சமயங்களில், முக்கியமான வரியையே டைப் செய்யாமல் விட்டு இருப்பர்.
மேலதிகாரிகளிடம் புகார் செய்தால், 'அட்ஜஸ்ட் செய்துகிட்டுப் போம்மா... சத்தம் போட்டால், யூனியன் மூலமா, மேலதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம்மை மிரட்டுவர்...' என்ற பதில் தான் கிடைக்கும்.
பொறுக்க முடியாமல், ஒரு முறை டைப் செய்ய வேண்டியவைகளை எல்லாம், 'ஜாப் டைப்பிங்'கில் கொடுத்து, டைப் செய்து வாங்கி, 'பில்'லை மேலதிகாரிகளிடம் கொடுத்து விட்டேன்...
அலுவலகத்தில் மூன்று போன் இருக்கிறது. மூன்றிலுமே எப்போதும் ஊழியர்களே பேசிக் கொண்டிருப்பர்... 'உங்க வீட்ல என்ன கொழம்பு... ஆங்... வத்தக் கொழம்பா... நாக்கு ஊறுதே.. தொட்டுக்க என்ன...' என்பது போன்ற, அலுவலகத்திற்கு, 'மிக தேவையான' விஷயங்கள் குறித்து, தம் நண்பிகளுடன், போனில் பேசிக் கொண்டிருப்பர்.
இவர்கள், வாங்கும் சம்பளத்திற்கு, எட்டு மணி நேரத்தில், உண்மையாக அரை மணி நேரம் கூட உழைக்கத் தயாரில்லை. அரசாங்கப் பணம் தானே... நமக்கு என்ன என்பது போல என்னால் இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடிவதில்லை; வேறு வழியும் எனக்கு தெரியவில்லை... என்றார்.
யோசித்த போது தோன்றியது...
இந்த, 'ப்யூரோகிரட்டு'களுக்கு யார் மணி கட்டுவது?
ஒரே ஒருமுறை, இவர்கள் பயந்து பயந்து உண்மையாக வேலை செய்ததைக் கண்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம்...
அது, நாட்டில், 'எமர்ஜென்சி' - அவசர நிலை பிரகடனம் செய்த போது.
அதே நிலையை, எப்போதும் கடைபிடிக்க முடியுமா?
'பெஸ்ட் சொல்யூசன்' - வியாபாரி, தொழிலதிபர் என்ற நிலையில் இருந்து, அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்வதே!

'பீ இந்தியன்... பை இந்தியன்' - 'இந்தியனாக இரு... இந்தியப் பொருளையே வாங்கு' என்ற கோஷம், மறைந்த பிரதமர் இந்திரா காலத்தில், பலமாக ஒலித்துக் கொண்டிருந்ததாம்! இதே கோஷம், இப்போது அமெரிக்காவில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
ஜப்பானியப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. குண்டூசி முதல் கார் வரை, ஜப்பானியத் தயாரிப்புகளையே அமெரிக்கர்கள் வாங்குகின்றனர்.
இதனால், அமெரிக்க பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது. ஜப்பானியரின் போட்டி யால், அமெரிக்க தொழிற்சாலைகள் பல, 'கிடுகிடு'வென மூடப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கு பலியானது அமெரிக்காவின் மிகப்பெரிய கார் தொழிற்சாலையான, 'போர்டு' கார் கம்பெனி.
ஜப்பானியரின் வியாபார தந்திரம் மிக நுணுக்கமானது. தம் பங்கு, 'மார்க்கெட் ஷேர்' எவ்வளவு எனக் கணக்கிடுகின்றனர். போட்டியாளரின் வியாபாரம் என்ன என்பதையும் அறிகின்றனர். அதற்கு ஏற்ப, பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், உற்பத்தியாளருக்கு ஏற்படும் இழப்பை, ஜப்பானிய அரசு ஈடுசெய்து, ஊக்குவிக்கிறது.
உதாரணமாக, உங்கள் கிராம சோடா கம்பெனி ஒன்று, உங்கள் கிராமத்திற்கும், சுற்று வட்டாரத்தில் உள்ள, 20 கிராமங்களுக்கும் சோடா - கலர், 'சப்ளை' செய்கிறது என, கொள்வோம். சோடா கம்பெனியின் தினசரி விற்பனை, 100 பாட்டில்கள் என்றும், ஒரு சோடா ஒரு ரூபாய் என்றும் கொள்வோம்.
ஜப்பான் ஆசாமி இந்த வியாபாரத்தை பார்க்கிறார். அவரும், உங்கள் கிராமத்தி லேயே சோடா கம்பெனி போடுகிறார். உள்ளூர் சோடா ஒரு ரூபாய் என்றால், அதைவிட தரமான சோடா தயார் செய்து, 50 காசு என, விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.
மக்கள் எந்த சோடாவை வாங்குவர்?
இப்படியே, ஜப்பான்காரர் மார்க்கெட் பிடிப்பார்; உள்ளூர் ஆசாமி, நஷ்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், சோடா கம்பெனியை இழுத்து மூடுவார். எதிரியே இல்லாத நிலை உருவானதும், மெதுவாக தன் தயாரிப்பின் விலையை ஏற்றுவார் ஜப்பான்காரர். 'மொனோபாலி!' போட்டியே இல்லாத தனிக்காட்டு ராஜாவாகி விடுவர்.
இந்த நிலையை அவர் அடையும் வரை ஏற்படக் கூடிய நஷ்டத்தை, ஜப்பானிய அரசு ஈடு செய்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சிக்கலில் மாட்டி, தன் நடையைக் கட்டி விட்டது, 'போர்டு' மோட்டார் கம்பெனி!
இதனிடையே அமெரிக்க தொழிலாளர் பற்றி துடுக்காக ஒரு வார்த்தையை விட்டு விட்டார் ஜப்பானிய அரசியல் பிரமுகர் ஒருவர்...
'அமெரிக்க தொழிலாளர்கள் சொகுசுப் பேர்வழிகள்; ஜப்பானியர் போல முனைப்புடன் வேலை செய்து பழக்கமில்லாதவர்கள்...' என்று!
இந்த, 'துடுக்கு' வார்த்தை, அமெரிக்க தொழிலாளர்களிடையேயும், அமெரிக்க பொருட்களை விற்கும் வியாபாரிகளிடையேயும் மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தி விட்டது.
கார் விற்பனை செய்யும் அமெரிக்கர் ஒருவர், புத்தம் புது ஜப்பானிய கார் ஒன்றை தம், 'ஷோரூம்' முன் நிறுத்தி, ஜப்பானை கண்டிக்கும் விதத்தில் வாசகங்கள் எழுதி, 'ஒரு டாலர் பணத்தை, இந்த உண்டியலில் போட்டு விட்டு, அருகே உள்ள கம்பால், ஜப்பான் காரை ஒரு அடி, அடித்து விட்டுச் செல்லுங்கள்...' என, குறிப்பிட்டு இருந்தார்.
'அமெரிக்கனாக இரு; - அமெரிக்க பொருளையே வாங்கு!' என, கோஷமிடும் ஆசாமிகள், ஜப்பான் தயாரிப்பு காரை ஒவ்வொரு டாலராகப் போட்டு அடித்து, நொறுக்கி விட்டனர்.
விஷயம் இப்படி இருக்க, அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளும், சிப்பந்திகளும் எந்த நாட்டு கார்களை பயன்படுத்துகின்றனர் என, ஒரு, 'சர்வே' எடுத்தது அமெரிக்கப் பத்திரிகை ஒன்று. அந்த சர்வேயில், 75 சதவீத கார்கள், வெளிநாட்டு கார்கள் என்பதை கண்டறிந்து, 'ஷேம்' - வெட்கம் என, தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
'அமெரிக்கர்கள் என்ன அமெரிக்கர்கள்; எல்லாருக்கும் இக்கரைக்கு அக்கரை பச்சை... எல்லா நாட்டவரும், தம் நாட்டு தயாரிப்பை விட, மற்ற நாட்டுத் தயாரிப்பைத் தான் விரும்புவர்...' எனக் கூறுகிறீர்களா...
ஜப்பானியர் மட்டும் விதிவிலக்கு... ஜப்பானிய அரசாங்கம், ஜப்பானிய மக்களிடம், 'அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அப்போது தான் அமெரிக்காவிற்கும், நம் நாட்டிற்கும், 'டிரேடு - பாலன்ஸ்' சரி வரும்' என, தொண்டைத் தண்ணீர் வற்ற கத்துகிறது... நோ யூஸ்!
'ஜப்பானியராகவே இருப்போம், ஜப்பானிய பொருட்களையே வாங்குவோம்!' என்ற கொள்கையில் உள்ளனர் ஜப்பானியர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirusen - San Diego,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-201421:07:17 IST Report Abuse
mirusen அந்து, இந்த காலகட்டத்திற்கு, "ஜப்பான்" என்பதை, "சீனா" என்று மாற்றி போட்டு படியுங்கள், மிகச்சரியாக இருக்கும். அமெரிக்கர்கள், மிகவும் கவலை கொண்டு இருப்பது தரமற்ற சீன தயாரிப்புகளைப் பற்றியே
Rate this:
Share this comment
Cancel
vazhi pOkkan - madurai ,இந்தியா
08-ஜூன்-201402:56:09 IST Report Abuse
vazhi pOkkan அந்துமணி - கொஞ்சம் 1970-80 ஐ விட்டு வெளியில் வரவும். இன்று ஜப்பானிய கம்பெனிகள் மோசம். நீங்கள் சொன்ன போர்ட் கார் தூள் கிளப்புகிறது. (ஐரோப்பாவில் அதன் ஆட்டம் பார்க்கவும்). கொரியர்கள் இன்று ஜப்பானை விட அதிகம் முன்னேறி விட்டனர். சோனி காணாமல் போய் நிரம்ப நாள் ஆகிறது. Toyota வின் தரம் என்ன ஆயிற்று இந்த நூற்றாண்டில் இருந்தால் தெரியும். Honda புதசாக கார் தந்து நிரம்ப நாள் ஆகிறது. சரி செல்போன் எடுத்தால் Samsung கொரியன் கம்பேனி. ஜப்பானியர் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இன்று நமது இந்திய பொருளாதாரம் தான் சிறந்து விளங்க வாய்ப்பு இருக்கீறது. கொஞ்சம் மத்தவங்களை பாருங்க. அமெரிக்கர்கள் ஒரு பெரிய பகாசுரன். அவனுக்கு சாப்பாடு போட்டே சீனா பணக்காரன் ஆனது, அது போலவே இந்தியா, அது போலவே ஜப்பான். ஜப்பான் செய்ததை - இன்று செய்ய முடியாது. WTO இது போல செய்வதை dumping என்று சொல்லி தடுக்க வழி வகுத்து இருக்கீறது. சீனா நம் நாட்டில் வீடு இயந்திரங்களை கட்டவழித்து விட்டதை போல செய்தால் - இந்திய அரசு கடும் வரி விதிக்கும். அதனை இந்தியாவிற்கு அமெரிக்க செய்து இருக்கிறது.
Rate this:
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
12-ஜூன்-201420:09:25 IST Report Abuse
Kunjumaniஅந்துமணி 'மொனோபாலி' என்று பெரிய வார்தைகளை போடுகிறார்... ஜப்பான் நாட்டிலேயே டொயோட்டா, ஹோண்டா, சுசுகி, மிட்சுபிஷி போன்று பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கும் பொழுது எங்கிருந்து வந்தது 'மொனோபாலி' ?...
Rate this:
Share this comment
Cancel
vazhi pOkkan - madurai ,இந்தியா
08-ஜூன்-201402:46:38 IST Report Abuse
vazhi pOkkan என்ன ஐயா இந்த அம்மா (நண்பி) காது குத்தறாங்க. இன்னைக்கு யார் டைப் பண்ணி தராங்க. எல்லாமே Microsoft வோர்ட் . இந்த அம்மையாருக்கு (கஸ்டமர் முக்கியம் என்பவர்) அதை fill up பண்ண தெரியாதா என்ன? பொய் சொல்ல, குத்தம் சொல்ல ஒரு லெவல் வேணும். யூனியன் அப்படின்னு அப்படியே கீழே வேலை செய்யறவங்க தப்பு - இவங்கதான் கம்பெனியை தாங்குறவங்க என்ற அகங்காரம். Emergency போது நிஜமாகவே டைப் ரைட்டர் இருந்து இருக்கும். இன்னைக்கு அது காயலான் கடையில் கூட கிடைக்காது (மியூசியத்தில் இருக்கும்). முதல்ல அந்த நண்பி யை அவங்க அகங்காரத்தை குறைக்க சொல்லுங்க. அப்படியே மேல்தட்டு அகங்காரம் தெரிகிறது.
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
09-ஜூன்-201416:01:06 IST Report Abuse
pattikkaattaan அய்யா வழி போக்கன் அவர்களே, // இன்னைக்கு யார் டைப் பண்ணி தராங்க. எல்லாமே Microsoft வோர்ட்// ..இருந்தாலும் அது தானா எதுவும் செய்யாது ... நாம்தான் டைப் செய்யணும் ... நான் இரண்டு மாதம் முன்பு 10 இன்சுரன்ஸ் பாரம் கொடுத்தேன் ... 5 பாரம் அட்ரஸ் தப்பாக அடித்து கொடுத்தார்கள் ... தலைவிதி ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X