சில வாரங்களுக்கு முன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. இயக்கத்தில் இயங்கும் யுனைட் 2 ஏ 106 மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தொடக்க நிலை ஆண்ட்ராய்ட் போனாக கேன்வாஸ் எங்கேஜ் ஏ 091 மொபைல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. தற்போது இணைய தளம் வழியாக, தன் கேன்வாஸ் ஏ 105 மொபைல் போனை விற் பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் 5 அங்குல அகலத்தில் திரை WVGA டிஸ்பிளே தருகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல்திறன் கொண்ட கேமரா, முன்புறமாக ஒரு வி.ஜி.ஏ. கேமரா, 512 எம்.பி. ராம் மெமரி, அதிகப்படுத்தும் வசதியுடன் 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. இதன் தடிமன் 10 மிமீ. எடை 180 கிராம். இரண்டு சிம்களை இதில் இயக்க முடியும். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்.ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 1,900 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.6,999.