எல்..ஜி. நிறுவனம் L Series III என்ற வரிசையில், L40, L70 and L90 ஆகிய மொபைல் போன்களைச் சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. சில வாரங்களுக்கு முன்னால், இந்தியாவில், எல் 70 மற்றும் எல் 90 டூயல் மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது எல் 80 டூயல் மொபைல் போன், அதிக பட்ச விலை ரூ.17,500 என குறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசரால் இயக்கப்படுகிறது. இரண்டு சிம்களை இந்த போனில் பயன்படுத்தலாம். சிம்களை மாற்றிப் பயன்படுத்த அதற்கான கீ தரப்பட்டுள்ளது. இதன் திரை 5 அங்குல அகலத்தில் ஐககு டிஸ்பிளே தருகிறது. ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர் இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.4. கிட் கேட். எல்.இ.டி.ப்ளாஷ் கொண்ட 5 எம்.பி. திறன் உடைய கேமரா தரப்பட்டுள்ளது. இணைய உரையாடலுக்கு 0.3 எம்.பி. திறன் உள்ள கேமரா முன்புறமாக இயங்குகிறது. இதன் பேட்டரி 2,540 mAh திறன் கொண்டது. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி தரப்பட்டுள்ளது. இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வந்துள்ள இவற்றின் அதிகபட்ச விலை ரூ.17,500. சந்தையில் இன்னும் சற்று குறைவான விலையில் இது விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.