மோட்டாரோலா நிறுவனம் தன் உயர் ரக மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. Flipkart இணைய தளம் வழியாக மட்டுமே முதலில் வாங்க முடிந்தது. பின்னர் இந்த போனின் பல வகைகள் வெளியிடப்பட்டன. மூங்கில் அமைப்பிலான தோற்றத்துடன் கூடிய பின்புற ஷெல் கொண்ட மோட்டோ எக்ஸ் மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது ரூ. 25,999 என விலையிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் சென்ற டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு மக்களின் ஆதரவினைப் பெற்றது.
இதன் திரை 4.7 அங்குல அகலத்தில் AMOLED டிஸ்பிளே தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால் காம் ஸ்நாப்ட்ரேகன் எஸ் 4 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட் கேட். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 10 எம்.பி. திறன் உடன் கூடிய கேமரா பின்புறாமகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளன. இந்த மொபைல் போனின் தடிமன் 10.4 மிமீ. எடை 130 கிராம். இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதன் பேட்டரி 2200 mAh திறன் கொண்டதாக உள்ளது.
இந்த மாடல் போன் வாங்குவோருக்கு Flipkart இணைய தளம் ரூ.1,000 தள்ளுபடி வழங்குகிறது. Active Display மற்றும் Touchless Controls போன்ற பல புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.