கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
00:00

கேள்வி: என் நிறுவனப் பெயரை இதுவரை வேர்டில் ஆட்டோ கம்ப்ளீட் பயன்படுத்தி அமைத்து வந்தோம். என் நிறுவனப் பெயரை மாற்றியுள்ளேன். இதனை எப்படி ஆட்டோ கம்ப்ளீட் புரோகிராமில் இணைத்து, பழைய முறையை நீக்குவது என வழி காட்டவும்.
-எஸ்.என். பிரகாஷ், கோவை.
பதில்
: நீங்கள் குறிப்பிடும் மாற்றத்தை மேற்கொள்ளுமாறு வேர்ட் புரோகிராமினை செட் செய்திடலாம். முதலில், ஆட்டோ கம்ப்ளீட் (AutoComplete), ஆட்டோ டெக்ஸ்ட் (AutoText) அமைப்புடன் இணைந்து செயல்படுவதனை மனதில் கொள்ள வேண்டும். மாற்றங்களை மேற்கொள்ள, ஆட்டோ டெக்ஸ்ட்டில் உள்ளவற்றில் மாற்றங்களை அமைக்க வேண்டும். அதற்குக் கீழ்க்குறித்துள்ளவாறு செயல்படவும்.
1. முதலில் Insert மெனுவிலிருந்து AutoText தேர்ந்தெடுக்கவும். அல்லது, Tools மெனுவிலிருந்து AutoCorrect தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில், AutoText டேப்பில் கிளிக் செய்திடவும். எந்த வழியை மேற்கொண்டாலும், வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸின் ஆட்டோ டெக்ஸ்ட் டேப்பினைக் காட்டும். இங்கு கிடைக்கும் ஆட்டோ டெக்ஸ்ட் சொற்கள் மற்றும் சொல் தொகுதி பட்டியலில், உங்கள் நிறுவனத்தின் பழைய பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன் பின்னர், Delete என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Enter AutoText Entries Here என்ற பெட்டியில், புதிய நிறுவனத்தின் பெயரை அமைக்கவும்.
4. தொடர்ந்து Add என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து AutoCorrect டயலாக் பாக்ஸை மூடவும்.
நிறுவனப் பெயர் மட்டும் இன்றி, அதன் இலக்கு, கொள்கை விளக்க டெக்ஸ்ட் எனச் சற்று விரிவாக அமைக்க எண்ணினால், 3 ஆவது நிலை செயல்பாட்டினை முடித்த பின்பு, டாகுமெண்ட் ஒன்றில், நீங்கள் அமைக்க விரும்பும் விரிவான டெக்ஸ்ட்டை டைப் செய்திடவும். பின் அதனை தேர்ந்தெடுத்து காப்பி செய்திடவும்.
அடுத்து Alt+F3 என்ற கீகளை அழுத்தவும். வேர்ட் Create AutoText என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் அமைக்க விரும்பிய டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்து அமைக்கவும். இது AutoText ஆக அமையும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, புதியதாக நீங்கள் அமைத்த டெக்ஸ்ட், ஆட்டோ டெக்ஸ்ட்டாக அமையும்.

கேள்வி: என் நண்பர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவரின் கம்ப்யூட்டரில், வேர்ட் டாகுமெண்ட் உருவாக்கும் போது காட்டப்படும் யூசர் பெயரில், பட்டத்தினைச் சேர்த்து எழுத வேண்டும். இதனை எங்கு எப்படி அமைப்பது?
பேரா. சீ. அழகரசன், மதுரை.
பதில்:
வேர்ட் புரோகிராமினை முதன் முதலில் பதியும் போது, உங்கள் பெயர் மற்றும் சார்ந்த தகவல்களைக் கேட்டு வாங்கி, பதிவு செய்து கொண்டு, பயனாளர் தகவல்களாகக் காட்டும். இந்த தகவல்களை வேர்ட் பல இடங்களில் பயன்படுத்துகிறது. இதில் மாற்றம் செய்திட கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸை முதலில் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் Word Options பெறவும். ஆபீஸ் 2010ல், ரிப்பனில், File டேப் கிளிக் செய்து, Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது புறத்தில், Popular (Word 2007) அல்லது General (Word 2010) என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு யூசர் பெயர், இனிஷியல் மற்றும் நீங்கள் விரும்புவதனை மாற்றலாம்.
4. இங்கு இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
5. கீழாக General settings என்பது வரை செல்லவும்.
6. இங்கு மின் அஞ்சல் முகவரியினை மாற்றுவதற்கு வாய்ப்பு தரப்படும். மாற்ற எண்ணினால், மாற்றி அமைக்கலாம். எல்லாம் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: கம்ப்யூட்டரில் கேஷ் மெமரிக்கான இடம் ராம் மெமரியில் தான் இருக்குமா? இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடிவு செய்திடுமா?
எஸ்.கே.ராம லஷ்மணன்,தேவாரம்.
பதில்:
கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களும், ராம் மெமரியில் ஏற்றப்பட்டு, அதிலிருந்து தான் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம். பைல்கள் சேவ் செய்யப்படுகையில், அவை குறிப்பிட்ட டைரக்டரியில், போல்டர்களில் சேவ் செய்யப்படும். நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்கள் மற்றும் பைல்களை கம்ப்யூட்டர் புரிந்து கொண்டு அவற்றைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கிறது. இதற்கான இடமே கேஷ் மெமரி என அழைக்கப்படுகிறது. இது ராம் மெமரி அல்லது ஹார்ட் டிஸ்க்கின் ஒரு பகுதியில் அமையலாம். ராம் மெமரியில் அல்லாமல், கேஷ் மெமரி எனத் தனியே பிரித்துப் பதியப்படுவதால், அவற்றைத் தேடி எடுப்பது வேகமாக நடைபெறுகிறது. நமக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள ட்ரைவ்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இவை அனைத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. நாமாக எதுவும் மாற்ற வேண்டியதில்லை.

கேள்வி: புதிய லெனோவா டேப்ளட் பி.சி.யில், தமிழ் டைப் செய்திட செல்லினம் டவுண்லோட் செய்து அமைத்தேன். இதனை இருவர் பயன்படுத்துகையில், தமிழ்நெட் 99 மற்றும் அஞ்சல் கீ போர்ட்களை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனை எப்படி அமைப்பது?
என். தெய்வேந்திரன், கோவை.
பதில்:
நல்ல கேள்வி. புதிய அப்ளிகேஷன்களை, குறிப்பாக தமிழ் மொழிக்கான அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் தங்களைப் பாராட்டுகிறேன். உங்கள் கேள்விக்கான தீர்வு மிக எளிதுதான். லெனோவா டேப்ளட் பி.சி.யில், செட்டிங்ஸ் சென்று அதில் Language Input என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு Sellinam என்று இருப்பதனை இயக்கவும். இதற்கு இதன் எதிரே உள்ள பட்டனில் கிளிக் செய்தால், அது பச்சை நிறமாக மாறும். அடுத்து, டேப்ளட் பிசியில் புரோகிராம் ஐகான்களைப் பார்வையிடவும். இங்கு ""மு'' என்ற எழுத்துடன் கிடைக்கும் செல்லினம் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Sellinam Settings என்ற விண்டோவில், Keyboards என்னும் பிரிவு கிடைக்கும். இதன் கீழாக, முரசு அஞ்சல், தமிழ் 99 என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில் டிக் அடையாளம் செய்திடவும். இனி, நீங்கள் டெக்ஸ்ட் அமைக்கையில் தரப்படும் கீ போர்டில் இடது பக்கம் கீழாக கீ போர்டுக்கான கீ இருக்கும். இதனை அடுத்தடுத்து அழுத்தினால், ஆங்கில மொழி குவெர்ட்டி கீ போர்ட், தமிழ்நெட் 99 மற்றும் அஞ்சல் கீ போர்டுகள் கிடைக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். தேவைப்படும் ஒவ்வொரு முறையும் செட்டிங்ஸ் செல்லத் தேவையில்லை.

கேள்வி: +2 படிக்கும் என் மகள் எப்போதும் பேஸ்புக்கில் நேரத்தைச் செலவழிக்கிறாள். தவிர்க்கச் சொன்னால், அக்கவுண்ட் ஆரம்பித்துவிட்டேன், இனி நீக்க முடியாது என்று கூறுகிறாள். நீக்குவதற்கான வழிகளே இல்லையா?
என். ஷண்முக சுந்தரம், திருப்பூர்.
பதில்
: இரு வழிகள் உள்ளன. தற்காலிகமாக நிறுத்தி வைப்பது. நிரந்தரமாக மூடுவது. முதலில் deactivation என்னும் பக்கத்திற்குச் செல்லவும். இனிமேல் பேஸ்புக் தொடர்புகளை விட்டுவிட வேண்டும். நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியாது என்ற செய்தி கிடைக்கும். ஏன் விலக எண்ணுகிறீர்கள் என்ற காரணத்தைக் கட்டாயமாகப் பதிய வேண்டும். இவற்றை முடித்த பின்னர், Confirm என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். மீண்டும் இந்த அக்கவுண்ட்டினைப் புதுப்பித்தால் மட்டுமே, அக்கவுண்ட் வைத்திருப்பவர் தன் நண்பர்களுடன் தொடர்பினைப் புதுப்பிக்க முடியும். புதுப்பிக்க வழக்கம்போல லாக் இன் செய்து தொடரலாம்.
இனி இந்த தளத் தொடர்பே வேண்டாம் என எண்ணினால், account removal பக்கத்திற்குச் செல்லவும். இங்கு கிடைக்கும் Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு முறை உங்கள் பாஸ்வேர்ட் அமைக்க வேண்டியதிருக்கும். கூடவே, ஒரு கேப்சா சோதனை தரப்படும். அதனையும் நிறைவேற்ற வேண்டும்.
இனி, உங்கள் அக்கவுண்ட் இரு வாரங்களுக்கு இருக்கும். அந்த காலத்திலும், அக்கவுண்ட்டினைப் புதுப்பிக்கலாம். இல்லை எனில், நிரந்தரமாக மூடப்படும்.

கேள்வி: இந்தக் கேள்வி மிக அடிப்படைக் கேள்வியாக உங்களுக்குத் தோன்றும். தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வேர்ட் பயன்படுத்துகையில், மெனு ஒன்றைத் திறந்த பின்னர், அதிலிருந்து விடுபட என்ன வழி?
எல். லட்சுமி, திருநெல்வேலி.
பதில்:
எந்த சந்தேகத்தினையும் நிவர்த்தி செய்து கொள்வதில் தவறே இல்லை. மெனுவிலிருந்து விலக மூன்று வழிகள் உள்ளன. 1. குறிப்பிட்ட மெனு மீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால், மெனு மறையும். 2. இரண்டு முறை எஸ்கேப் கீயை அழுத்தவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால், கர்சர் தொடர்ந்து அங்கேயே இருக்கும். இரண்டாவது முறை அழுத்துகையில், கர்சர் நீங்கள் டாகுமெண்ட்டில் எங்கு இருந்தீர்களோ, அங்கு இருக்கும். அடுத்து இன்னும் ஒரு வழி உள்ளது. மெனுவிற்கு வெளியே, எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும். உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும், தாராளமாக எழுதிக் கேட்கலாம். தயங்க வேண்டாம்.

கேள்வி: எம்.எஸ்.ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். இதில் வேர்டில், நம் இஷ்டப்பட்ட டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க் ஆக அமைக்க விரும்புகிறேன். அதற்கான வழி என்ன?
கா. நிரஞ்சனா, மதுரை.
பதில்:மெனுவில் வாட்டர் மார்க் அமைக்கும் மெனுவிற்குச் செல்லவும். படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், "Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, "Scale” என்பதில் கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். "Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X