மாயையிலிருந்து விடுபடமுடியுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2014
00:00

மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று...
மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார்.
நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை. 'பரந்தாமா... என்ன இது! நான் பொறி, புலன்களையும், ஆசை, கோபம் போன்ற மாயைகளை வென்றவன்; அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, லட்சுமிதேவி ஏன் வெட்கப்பட்டு மறைய வேண்டும்...' என்றார்.
நாரதரின் கர்வம் கண்டு, நாராயணன் சிரித்தபடியே, 'நாரதா... மாயையை, யாராலும் வெல்ல முடியாது; வென்றவர்கள், இப்படி வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். உருவமில்லாத காலமும், மாயைக்கு உருவமாக இருக்கிறது. காலமும், மாயையும் சேர்ந்து செய்யும் விளையாட்டை, அறியவோ, வெல்லவோ முடியாது...' என்றார்.
நாரதர் விடவில்லை. 'மாயையைப் பற்றி, ஆழமாக அறிய ஆசைப்படுகிறேன்; மாயையை எனக்குக் காட்டுங்கள்...' என்றார்.
'சரி, வா...' என்று கூறி, நாரதரை ஓர் அழகான குளத்திற்கு அழைத்துச் சென்ற மகாவிஷ்ணு, 'இக்குளத்தில் நீராடி விட்டு வா...' என்றார்.
அதன்படியே, குளித்து, கரையேறிய போது, பெண்ணாக உருமாறியிருந்தார் நாரதர்.
பெண்ணாக மாறியிருந்த நாரதரை, காலத்வஜன் என்ற மன்னன், மணந்து கொண்டான். நாரதருக்கு பழைய நினைவுகள் ஏதுவும் நினைவில் இல்லை. இத்தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வீரவர்மன் என்று பெயர் சூட்டினர். அப்படியே, 12 பிள்ளைகள் பிறக்க, பேரன், பேத்திகள் என, குடும்பம் பெரிதானது. அரச போகத்துடன், இல்லற வாழ்க்கையில் திளைத்திருந்தார் நாரதர்.
திடீரென்று போர் மூண்டது; கணவன், பிள்ளைகள், பேரன்கள் என, அனைவரும் மடிந்தனர். அப்போது, மகாவிஷ்ணு கிழ வேதியராக வந்து, 'பெண்ணே... இறந்தவர்களுக்கான கர்மாவைச் செய்ய வேண்டும்; அதற்காக, குளத்தில் மூழ்கி எழ வேண்டும்...' என்று கூறி, பெண்ணாக இருந்த நாரதரை அழைத்துக் கொண்டு, புருஷ தீர்த்தம் எனும் தடாகத்திற்குச் சென்றார். அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தவுடன், பழைய உருவத்திற்கு மாறியிருந்தார் நாரதர்.
எதிரில் இருந்த கிழவேதியர் மறைந்து, அங்கே மகாவிஷ்ணு இருந்தார். 'நாரதா... மாயை குறித்து இப்போது அறிந்து கொண்டாயா...' என்றார்.
வேத, வேதாந்தங்கள் அறிந்து, பொறி, புலன்களை வென்று, ஆசை, கோபம், மாயைகளை அடக்கியதாகப் பெருமை பாராட்டிய நாரதர், வாய் மூடி, மகா விஷ்ணுவை பின் தொடர்ந்தார்.
உயிர்களின் தோற்றமே மாயை எனும், பிம்பங்களால் ஆனாது; இதில், அனைத்தையும் அறிந்து விட்டோம் என்று நமக்குள் எழும் ஆணவம் கூட, மாயை தான் என்பதை, அறிந்து தெளிய வேண்டும். அனைத்தும் மாயையின் சொரூபம் என்பது தெரிந்து விட்டால், நம்மிடம் இருக்கும், ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் மறைந்து, சக மனிதரை நேசிக்கும் பண்பு நமக்குள் ஏற்படும்.

பி.என்.பரசுராமன்

விதுர நீதி!: கோபக்காரனை பார்த்து, அதிர்ஷ்டம் புன்னகைக்காது. கெட்ட நோக்கம் உள்ளவர்களுக்கு, நண்பர்கள் உதவ மாட்டார்கள். சோம்பேறிக்கு வாழ்க்கை வசதி கிடைக்காது. மனவுறுதியுடன் செயல்படாதவன், எதையுமே சாதிக்க முடியாது.
என்.ஸ்ரீதரன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - Mangaf,குவைத்
19-ஜூன்-201420:39:07 IST Report Abuse
Shankar ஹே விஷ்ணு........ ஹே நாராயண......ஹேபரந்தாமா....... ஹே கிருஷ்ணா....... என் உள்ளும் வெளியும் நிறைந்தவனே......நான் காணும் எல்லாம் மாயையான நீயே......... எனக்கு நீயே சுகம்..... உன்னையே நான் எப்போதும் ச்பரிசிக்கிரேன்........ஹே கிருஷ்ணா ஹே வாசுதேவா உன் கமல பாதத்தை எப்போதுமே இந்த மனதில் வைக்கவேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
Parthiban Sekar - Mamallapuram,இந்தியா
17-ஜூன்-201401:26:51 IST Report Abuse
Parthiban Sekar "ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் மறைந்து, சக மனிதரை நேசிக்கும் பண்பு நமக்குள் ஏற்படும்" என்றீர்கள் அப்படி பார்த்தால் நேசிக்கும் பண்பும் மாயை தானே...?
Rate this:
Share this comment
Ramesh - NJ,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201407:44:44 IST Report Abuse
Rameshஅனைத்தும் ஒன்றிலிருந்து உருவாகி உள்ளது அந்த ஒன்றிலயே அவை அனைத்தும் வீழ்ந்து போகும். அந்த ஒன்றையே பற்றி அந்த ஒன்றாக இருப்பது தான் மாயையிலிருந்து விடுபட வழி. அப்பொழுதும் மாயை தெரியும். ஆனால், அது கானல் நீராக தெரியும். கானல் நீர் போன்று தான் இந்த மாயை என்று தெள்ள தெளிவாக தெரிந்தால் அதில் ஏமாந்து போகமாட்டோம். அந்த ஒன்று எல்லா பொருள்களுக்குள்ளும் அஸ்திவாரமாக (மூலமாக) இருக்கிறது. நான் யாரென்று தீர விசாரித்து தனக்குள்ளே தேடி பார்த்தால், எல்லாம் மறைந்து அந்த மூலம் மட்டும் தனித்து நிற்கும். தான்தான் அந்த மூலம் என்று தெளிந்து மாற்றவை அனைத்தும் - உடம்பு, மனம், உலகம் அந்த மூலத்தில் உதித்து அடங்கும் என்று தெளிவாக தெரிந்தால் இந்த மாயை கானல் நீர் என்று தெளிவு பெறுவோம். அந்த மூலம் தான் கடவுள் என்றும் அன்பு என்றும் அழைக்கபடுகிறது. அந்த அன்பில் ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் அற்று போகும். திருமூலரின் வாக்குப்படி அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார் அன்பே சிவம் ஆவது ஆறும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது ஆறும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே ஆனால், ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உடம்பு கர்மங்களில் இருந்து விடுபட முடியாது. நாம் தான் இந்த உடம்பு என்று நம்பி இருக்கும் வரை மாயையிலிருந்து விடுபட முடியாது. நாம் அந்த ஒன்றை பற்றி இருந்து அந்த ஒன்றாக இருப்பதே ஒரே வழி. இல்லையேல், லக்ஷ்மியை போல் இந்த மாயையில் பல பொருட்கள் பல வித மாயாஜாலம் காட்டும். நாரதர் தான் ஒரு ஆண் என்று நினைத்ததால், லக்ஷ்மியின் நாணம் அவருக்கு தெரிந்தது. தான் தான் அந்த மூலம், இந்த ஆண் என்ற எண்ணம், லக்ஷ்மியின் நாணம் எல்லாம் இந்த மூலத்தில் உதித்து அடங்கும் என்று தெளிவாக தெரிந்தால் லக்ஷ்மியின் நாணத்தை மாயாஜாலமாக பார்த்து அதில் வீழ்ந்து போகாமல் இருக்கலாம். ஆக, கர்மம் தொடரும் ஆனால் பந்தபட மாட்டோம். அந்த மூலம் தான் அன்பு என்பதால், அந்த அன்பே தான் என்பதால் ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் மறைந்து, அன்பு என்னும் பண்பு வெளிப்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X