கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

கேள்வி: கீ போர்டு மூலம், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைத்திட ப்ளஸ்  அடையாளம் மற்றும் டேஷ் அடையாளம் அமைத்து உருவாக்கி வந்தேன். இப்போது அவ்வாறு வர மறுக்கிறது. இது எதனால்? மீண்டும் இந்த வசதியினை எப்படிக் கொண்டு வருவது?  எஸ்.கே.புஷ்பராஜன், திண்டிவனம்.
பதில்: மவுஸ் பயன்படுத்தாமல், கீ போர்டு மூலம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதி சிறப்பான ஒன்றாகும். இது உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கவில்லை என்றால், அதற்குக் கீழ்க்கண்டவை காரணமாக இருக்கலாம்.  அண்மைக் காலத்தில் வந்த வேர்ட் தொகுப்புகளில் ப்ளஸ் அடையாளம் அமைத்த பின்னர் ஒரு ஸ்பேஸ் விட்டால் மட்டுமே டேபிள் உருவாகும் வகையில் அமைத்துள்ளனர். எனவே இவ்வாறு ஸ்பேஸ் அமைத்துப் பார்த்து டேபிள் உருவாக்கிப் பார்க்கவும். இதன் பின்னரும் டேபிள் உருவாகவில்லை என்றால், இந்த வசதி உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் இயக்கப்படவில்லை என்று பொருள். இதனை இயக்கக் கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ் அமைக்கவும்.
வேர்ட் 2007க்கு முன் உள்ள தொகுப்பினை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால்:
1. வேர்ட் தொகுப்பில்  Tools  மெனு கிளிக் செய்து அதில்  AutoCorrect அல்லது AutoCorrect Options    தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த விண்டோவில் AutoFormat As You Type   என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் Tables  என்ற செக்பாக்ஸ் டிக் அடையாளம் கொண்டு இருப்பதனை உறுதி செய்திடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்:
1.Office  பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options  என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், Word Options  என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள  Proofing   என்பதில் கிளிக் செய்து, பின்னர், AutoCorrect Options  என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இந்த விண்டோவில்  AutoFormat As You Type  என்ற டேப் தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்திடவும்.
4.இதில் Tables  என்ற செக்பாக்ஸ் டிக் அடையாளம் கொண்டு இருப்பதனை உறுதி செய்திடவும்.
5.  அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.  

கேள்வி: வேர்ட்  2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் டாகுமெண்ட்களில் நீள் சதுரமாக, நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் செலக்ட் செய்வது எப்படி? டெக்ஸ்ட் செலக்ட் ஆனால் அதில் சொற்களை நீக்கலாமா? பார்மட்டிங் மாற்றலாமா? சி.ரங்கசாமி,பொள்ளாச்சி.
பதில்: இந்த தொகுப்பிற்கு முன் வந்தவற்றில் பயன்படுத்தி வந்த அதே கீகளை, இப்போதும் பயன்படுத்தலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த சொல்லில் இருந்து தொடங்க வேண்டுமோ, அங்கு மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு கர்சரை வலது பக்கமாகவோ, கீழாகவோ நகற்றினால், நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுத்த பின்னர், இதனை வழக்கம்போல மற்ற டெக்ஸ்ட்களில் மாற்றம் மேற்கொள்வதனைப் போல் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை, வேறு ஒரு இடத்தில், காப்பி செய்திடலாம்; வெட்டி ஒட்டலாம்.

கேள்வி: பழைய ஆபீஸ் (ஆபீஸ் 2003) தொகுப்புகளில் உருவாக்கிய  பைல்களின் பார்மட்டை மாற்றித்தான் ஆபீஸ் 2007ல் பயன்படுத்த வேண்டுமா? அப்படியே பயன்படுத்த முடியாதா? மாற்றினால் கூடுதல் பயன் கிடைக்குமா?  ஆர்.கே.லதா நாகராஜன், சிவகாசி.
பதில்: ஆபீஸ் 2007 தொகுப்பு, அதற்கு முந்தைய ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்பட்ட பைல்களை அப்படியே திறந்து பயன்படுத்த வழி வகுக்கும். இந்த வகைத் திறப்பினை ஆங்கிலத்தில் Compatibility Mode  என்று கூறுவார்கள். ஆனால், புதிய தொகுப்பின் புதிய வசதிகளைப் பயன்படுத்த, பழைய பதிப்பின் டாகுமெண்ட்களை ஆபீஸ் 2007 பார்மட்டிற்கு மாற்றுவது நல்லது. எடுத்துக்காட்டாக, எக்ஸெல் 2007 தொகுப்பில் 11 லட்சம் படுக்கை வரிசைகள் உண்டு. பழைய பதிப்புகளில் 65 ஆயிரம் தான் உண்டு. கூடுதல் பயன் பெற புதிய பார்மட்டுக்கு மாறியாக வேண்டும். பார்மட் மாற்றுவது ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களுக்கும் ஒரே வகை தான். எடுத்துக்காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை எப்படி பார்மட் மாற்றுவது என்று கூறுகிறேன். பழைய டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட்  2007ல் திறந்து கொள்ளவும். திறக்கும்போதே, பைல் பெயருடன் [Compatibility Mode]  என்று காட்டப்படும். இதன் பின்னர், பார்மட் மாற்ற கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
டாகுமெண்ட்டைத் திறந்தவுடன், இடது பக்கம் மேலாக உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் பட்டனை அழுத்தவும். மெனுவின் இடது பக்கம் உள்ள  Convert  என்பதில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் வேர்ட் ஆபீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்திடவும். ஓகே கிளிக் செய்தவுடன், டாகுமெண்ட் தானாகவே, ஆபீஸ் 2007 தொகுப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றப்படும். இங்கு வேர்ட் 2007 அப்ளிகேஷனுக் கேற்றபடி மாறும். மாறியவுடனேயே, மேலே தலைப்பில், பைலின் தலைப்பில் ஏற்கனவே ஒட்டிக் கொண்டிருந்த [Compatibility Mode] என்பது விலக்கப் பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: தேதி, எண், நேரம் ஆகியவற்றிற்கான பார்மட்டிங் வேலையை, எக்ஸெல் தொகுப்பில் எந்த ஷார்ட் கட் கீகள் மூலம் மேற்கொள்ள முடியும். எடுத்துக் காட்டுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தி.அசோக்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, மேலூர்.
பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் செல்களை பார்மட் செய்வதில் பல சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. வழக்கமாக, செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், பார்மட் மெனு சென்று, தேவையான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மேற்கொள்வோம். இதனையே, ஒரு சில கீகளை அழுத்துவதன் மூலமும் மேற்கொள்ளலாம். இதனைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.  
Date: [Ctrl] + #
Number: [Ctrl] + !
Time: [Ctrl] + :
General: [Ctrl] +
இவற்றை முதலில் சோதனை செய்து பார்த்து, இவை தரும் விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள். செல் ஒன்றில் 123 என உள்ளீடு செய்திடவும். பின்னர், அந்த செல்லை செலக்ட் செய்து கொள்ளுங்கள். முதலில் [Ctrl]+# கீகளை அழுத்துங்கள். இவற்றை மட்டுமே அழுத்துங்கள். என்டர் அழுத்தக் கூடாது. இப்போது  செல்லில் உள்ள உள்ளீடு தேதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு 2-May-00  எனக் காட்டப்படும். அடுத்து [Ctrl]+!   என்ற கீகளை அழுத்தினால், எக்ஸெல் அதனை எண் மதிப்பில் எடுத்துக் கொண்டு, இரண்டு தசம ஸ்தானங்களுக்கு 123.00 என மதிப்பைக் காட்டும்.  [Ctrl]+:   ஆகிய கீகளை அழுத்தினால், எக்ஸெல் இதனை நேர மதிப்பாகக் கொண்டு, அப்போதைய சிஸ்டம் மதிப்பினைக் காட்டும். இதன் மூலம் பெரிய அளவில் நம் நேரம் மிச்சமாகாது என்றாலும், கீ போர்டின் மூலமே சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் துணையாக இருக்கும்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள டேபிளில், அதன் தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் கிடைக்க வழி தரப்பட்டுள்ளது. இதே போல எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் கிடைக்க என்ன கட்டளை தர வேண்டும்? கா.பழனிவேல்,சின்னமனூர்.
பதில்: நெட்டு மற்றும் படுக்கை வரிசை இரண்டிற்கான தலைப்புகளையும், ஒவ்வொரு பக்கத்திலும் அமைக்கும் வசதியை எக்ஸெல் தருகிறது. முதலில் ஒர்க்ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர்,
1. “File”  என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Page Setup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.  2. பல டேப்கள் கொண்ட “Page Setup” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும். இதில்“Sheet” என்ற டேபைக் கிளிக் செய்திடவும். 3. ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு உள்ள படுக்கை வரிசை அச்சிடப்பட வேண்டும் என்றால் “Rows to repeat at top” என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்ப்ரட்ஷீட்டின் மீது கிளிக் செய்திடவும்.“Page Setup - Rows to repeat at top”  என்னும் புளோட்டிங் டூல் பார் கிடைக்கும். எந்த படுக்கை வரிசையில் உள்ள தலைப்புகள் அச்சிடப்பட வேண்டுமோ அந்த வரிசையினைத் தேர்ந்தெடுக்கவும். வரிசையினைத் தேர்ந்தெடுத்து முடித்த பின்னர் டூல்பாரின் இறுதியில் உள்ள பட்டனைக் கிளிக் செய்திடவும். இதன் பின் அந்த வரிசை டயலாக் பாக்ஸில் தெரியும். 4. இதே போல நெட்டு வரிசையில் உள்ள தலைப்புகளும் அச்சிடப்பட வேண்டும் என்றால் மீண்டும்   ஸ்ப்ரட் ஷீட்டைப் பெற்று அதில் “Columns to repeat at left” என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்பிரட்ஷீட்டின் மீது கிளிக் செய்து முன்பு செய்தது போலவே தேர்ந்தெடுத்து அமைத்திடவும். இதில் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நெட்டு வரிசை (column)  மற்றும் படுக்கை வரிசை ( row) ஆகிய இரண்டினையும் கட்டாயம் அமைத்திட வேண்டும் என்பதில்லை. எது ஒன்று வேண்டும் என்றாலும் அதனை மட்டும் அமைத்திடலாம். 5. இவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் தேர்ந்தெடுத்தபடி ஒர்க் ஷீட் அச்சிடப்படும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
EGAMURTHY - Coimbatore,இந்தியா
11-அக்-201009:19:26 IST Report Abuse
EGAMURTHY நான் எம்.எஸ்.வேர்ட் 2007 பதிப்பை உபயோகித்து வருகிறேன். அதில் அன்றைய தேதியை ஷார்ட் கட் மூலம் (ALt+shift+d) அமைத்தால் ஒவ்வொரு நாளும் அன்றைய தேதிக்கு auto update ஆகிவிடுகிறது. இதை எப்படி சரி செய்வது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X