விண்டோஸ் 8.1 ஷட் டவுண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
00:00

விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்தவர்கள் தற்போது விண்டோஸ் 8.1 தொகுப்பிற்கு மாறியுள்ளனர். பல வாசகர்கள், இது குறித்து நமக்குப் பல சந்தேகங்களை எழுப்பி கேள்விகளை அனுப்பி உள்ளனர். அவற்றில் அதிகம் இடம் பெறுவது, சிஸ்டம் ஷட் டவுண் விஷயமே. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 8.1. சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வழிகளுக்கும் மேலாக, கூடுதலாகச் சில வழிகளையும் தந்துள்ளது.
விண்டோஸ் ஷட் டவுண்ட் செய்வதற்கான எளிய வழி, ஸ்டார்ட் பட்டனைப் பயன்படுத்துவது தான். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பாப் அப் மெனுவில், பல கட்டளைகளும், செயல்பாட்டு வசதிகளும் பட்டியலிடப்படும். இங்கு Shut down அல்லது sign out செய்திடலாம். தொடர்ந்து ஒரு சப் மெனு கிடைக்கும். இதில் Sign out, Sleep, Shut down, மற்றும் Restart ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும். Shut down என்பதில் கிளிக் செய்தால், சிஸ்டம் பவர் ஆப் ஆகும்.
இவற்றுடன், ஏற்கனவே விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தந்த வழிகளையும் கையாளலாம். இதில் சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.
நீங்கள் டெஸ்க்டாப் திரையில் இருந்தால், ஆல்ட் + எப் 4 கீகளை ஒரு சேர அழுத்தினால், ஷட் டவுண் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இங்கு Switch user, Sign out, Sleep, Shut down, மற்றும் Restart என்ற ஆப்ஷன்களைப் பார்க்கலாம். இங்கேயும், Shut down என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, சிஸ்டத்தை முழுமையாக மூடலாம்.
அடுத்த வழி, லாக் இன் திரையில் கிடைக்கும். ஸ்டார்ட் ஸ்கிரீனில், மேல் வலது மூலையில், உங்கள் அக்கவுண்ட் போட்டோவில் கிளிக் செய்திடவும். உங்கள் மவுஸைக் கிளிக் செய்திடுங்கள்; அல்லது ஏதேனும் ஒரு கீயை அழுத்தி, லாக் ஸ்கிரீனை விட்டு நகரவும். லாக் இன் ஸ்கிரீனில், கீழ் வலது மூலையில் உள்ள ஷட் டவுண் பட்டனில் கிளிக் செய்து வெளியேறலாம்.
நோட்புக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், பவர் பட்டனை அழுத்தி, விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஷட் டவுண் செய்திடலாம். அல்லது, கம்ப்யூட்டரின் திரைப் பாகத்தினை மூட, கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்திடப்படும்.
இன்னொரு வழியாக, சிஸ்டம் ட்ரேயில் உள்ள பேட்டரி ஐகானில் ரைட் கிளிக் செய்து, பவர் ஆப்ஷன்ஸ் (Power Options) கட்டளையில் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், On Battery, Plugged in ஆகிய பட்டன்கள் கிடைக்கும். இங்கு, ஆன் பேட்டரிக்கான செட்டிங்ஸ் மாற்றலாம். இங்கு பவர் பட்டன் அழுத்தப்பட்டாலோ, கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் பகுதி மூடப்பட்டாலோ, சிஸ்டம் ஷட் டவுண் செய்திட ஆப்ஷன் அமைக்கலாம்.
ஆப்ஷன் தேர்ந்தெடுத்து, சேவ் பட்டன் கிளிக் செய்து வெளியேறினால், நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஆப்ஷன் படி, நோட்புக் கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்யப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aravind - kodaikanal  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூன்-201416:22:34 IST Report Abuse
aravind alt+f4
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X