மோட்டாரோலா போன்கள் மிகவும் அற்புதமாகச் செயல்பட்டன. தடிமன் குறைவாக வடிவமைப்பதில் சாதனை ஏற்படுத்தின. இப்போது அதிக விலையில் அவை மீண்டும் வருகின்றன. தொடக்க நிலை போன்கள் வந்தால், இந்நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.
என். பால கிருஷ்ணன், சென்னை.
ஒரே எண் பல செல்களில் அமைப்பதற்கான டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.
என். கார்த்தி, விழுப்புரம்.
தினமலர் ஆசிரியர் குழுவிலிருந்து ஆப்பிள் நிறுவனக் கருத்தரங்கிற்குச் சென்றவர், ஐ.ஓ.எஸ். 8 குறித்து தகவல்களை மிகச் சிறப்பாகத் தந்துள்ளார். சொல்லப்படாத தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதுவரை எந்த பத்திரிக்கைகளிலும் தரப்படாத தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
பா. வள்ளிராஜ பாண்டியன், மதுரை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் பயன்பாடுகளில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பல புதிய வசதிகளை இப்போதுதான் தருகிறது ஆப்பிள். தன் சாதனங்களின் விலையை மட்டும் குறைத்துவிட்டால், ஆப்பிள் சாதனங்கள் மார்க்கட்டில் முதல் இடம் பிடிக்கும்.
என். தெய்வேந்திரன், திருப்பூர்.
விண்டோஸ் சிஸ்டத்தை விட்டால், லினக்ஸ் தான் சிஸ்டம் என்று இருந்தேன். இத்தனை சிஸ்டங்களா என வியக்கும் அளவிற்கு, தேடிப்பிடித்து, அவை குறித்து தகவல்கள் தந்தது மிக அருமை. கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த கட்டுரை அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.
பேரா. எஸ். திரவியம், புதுச்சேரி.
மக்கள் மனங்கவர்ந்த சிஸ்டமாக, எளிமையான பல வசதிகள் கொண்ட சிஸ்டமாக, விண்டோஸ் 7 இடம் பெற்றுள்ளது. இதனை
உங்கள் கட்டுரை உறுதி செய்கிறது. பயன்படுத்துபவர்களுக்கு, அதிக நம்பிக்கை தருகிறது.
என். காஞ்சனா, மதுரை.
இணையத் தொடர்பு இல்லாமல், பேஸ்புக் இணைப்பு கிடைப்பது, தொழில் நுட்பத்தின் சிறப்பைக் காட்டுகிறது. பி.எஸ்.என்.எல். இது போல திட்டமிட தொடங்கினால், மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும்.
எஸ். சேகர் மாறன், திருவண்ணாமலை.
இனி தொடக்க நிலை மொபைல் போனே, ஸ்மார்ட் போன் என்ற நிலைக்கு, மொபைல் போன் சந்தை இயங்கத் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. உங்கள் தகவல்கள் இந்த இலக்கை உறுதி செய்கின்றன.
என். கண்ணதாசன், கோவை.
ஓர் இணைய தளத்திற்கு மட்டும் பிரைவேட் மோட் கொண்டு வரலாம் என்பது, மற்றவர்கள் எண்ணிப் பார்க்காத சிறப்பான வசதி. ஐ.ஓ.எஸ். 8ல் இது தான் சூப்பர் வசதி. இனி மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் இதனைப் பின்பற்றும் என எதிர்பார்க்கலாம்.
என். பாக்யலட்சுமி, பழநி.
ஆண்ட்ராய்ட் சிஸ்டம், லினக்ஸ் சிஸ்டத்தினையே அடிப்படையாகக் கொண்டது என்பது புதிய தகவல். இதுவரை எங்கள் கல்லூரியில் பாடம் நடத்தும் யாரும் இதனைக் கூறவில்லை. நன்றி.
என். இளந்தென்றல், சிவகாசி.
கூகுள் தரும் பொருளாதார முன்னேற்றம் என்ற கட்டுரை, மிகச் சிறப்பான, நாட்டிற்கு வளம் சேர்க்கும் வழியைச் சுட்டிக் காட்டியுள்ளது. மாணவர்கள் இது குறித்து தொடர்ந்து சிந்தித்தால், நல்ல பயனை இந்நாட்டிற்குத் தரலாம்.
பேரா. எஸ். மருதநாயகம், மதுரை.
விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றான இயக்க முறைமைகளில், மேக் குறித்து இன்னும் சற்று கூடுதலாக எழுதி இருக்கலாம். இது குறித்த தனிக் கட்டுரை ஒன்றில் இதன் எழுச்சி, சிறப்பான பயன்கள் குறித்து தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-என். ஆனந்த் குமார், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் சார்பாக, தேனி.